இப்போது சில சீர்திருத்தக்காரர்கள் சொல்வது பாமர ஜனங்கள் உள்பட எவருமே சாஸ்திரோக்த கர்மாக்களைப் பண்ணாமல் ஞானி மாதிரி தத்வ விசாரம் பண்ணிக் கொண்டிருக்க வேண்டுமென்பது; பகவானும் சாஸ்திரங்களும் சொல்வதோ, ஞானி கூடப் பாமரன் மாதிரி சாஸ்திர கர்மாவைப் பண்ணி ஆசார அநுஷ்டானாதிகளை நடத்திக் காட்ட வேண்டுமென்பது. எது ஸரி என்பதற்கு ஹிஸ்டரியையும், யதார்த்தத்தையும் பார்த்தால் போதும். பகவான் சொன்னபடி செய்து கொண்டிருந்தவரையில் நம் தேசம் லோகத்துக்கே மாடலாக ஸத்ய தர்மங்களிலும், பக்தியிலும் ஞானத்திலும், கலாசார நாகரிகத்திலும், ஸமூஹம் பூராவின் சீரான ஒழுங்கிலும் தலைசிறந்து இருந்திருப்பதை ஹிஸ்டரி காட்டுகிறது. இப்போது ரிஃபார்மர்கள் அபிப்ராயப்படி செய்ய ஆரம்பித்தபின் எப்படியிருக்கிறோம் என்பது தெரிந்ததே. கீதை சொன்னபடி மேலே இருந்தவனும் கீழே இருக்கிறவனைப் போலச் செய்து காட்டிக் கொண்டிருந்த வரையில் எல்லாரும் மேலே போனார்கள்; இப்போது கீழே இருக்கிறவனும் மேலே போய் விட்ட மாதிரி பாவித்துக் கொண்டிருப்பதில் எல்லாரும் அதல பாதாளத்திற்குப் போய்க் கொண்டிருக்கிறோம்! – ஜகத்குரு ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் அருள்மொழிகள்
Now some of the reformers say that the common populace should also give up performance of the traditional rituals prescribed by our saastras and indulge in philosophical discussions like the enlightened ones. On the other hand, Bhagawan and our saastras say that even the Gnanis or the enlightened ones should perform the traditional rituals like the common man in order to set an example to the latter. It is enough to study our history and reality in order to determine which of the above stances is correct. When the dictates of Bhagawan was followed, our country was a role model to the rest of the world following the ideals of Truth, Virtues, Devotion, Knowledge, Culture, and Social cohesion. This is revealed by history. We are all aware what has happened after people have started following the reformers. As long as the dictates of Bhagawad Gita was followed and the enlightened ones were setting an example to the common populace, the inferior people were also becoming superior and reaching a higher level. But when people of lower caliber start pretending to be superior, everybody including the person of higher caliber is dragged down to the deepest of depths. – Jagadguru Sri Chandrasekharendra Saraswathi Swamigal
Categories: Deivathin Kural, Golden Quotes
Please .’of’ instead of ‘to’ in line three and dictates were instead of dictates was in line 14.
No one has posted any comment on Sri Ganesan’s performance on stage as Sri Maha Periyava (during Sivan Sar’s Aaradhanai)??? This turned out to be a heated debate a few days ago.