Periyava Golden Quotes-514


காம்ய பலனுக்காவே சாஸ்திர கர்மாவைக் காட்டி ஜீவனை நல்ல வழியில் ‘தாஜா’ பண்ணிக் கொண்டு வருவதற்கு sugar-coated pills-ஐ [சர்க்கரை தடவிய மாத்திரையை] உதாரணமாகச் சொல்லலாம். இஷ்ட பலன்தான் சர்க்கரை மாதிரி ஜீவனுக்குத் தித்திக்கிறது. அவன் குழந்தையைப் போல அறியாதவனாயிருக்கிறான். சர்க்கரை உடம்புக்குச் சூடு என்று குழந்தைக்குத் தெரியாததுபோல இந்த ஐஹிக ஸெளக்யங்கள் ஆத்மாவுக்குக் கெடுதி என்று அவனுக்குத் தெரியவில்லை. சாஸ்திரகாரர்களான ரிஷிகளுக்கு இந்தக் குழந்தையிடமும் கருணை. அதனால் அது கேட்கிற பெப்பர்மின்டைக் கொடுக்க நினைக்கிறார்கள். குழந்தை பெப்பர்மின்ட் என்றே நினைத்தாலும் அது உள்ளுக்குள்ளே மருந்து. உள்ளே மருந்தை வைத்து மேலே சர்க்கரையைப் பூசியிருக்கிறது. சூட்டைத் தணிக்கிற மருந்துச் சரக்கு உள்ளே நிறைய இருக்கிறது; மேலே மட்டும் கொஞ்சூண்டு சூடு பண்ணும் சர்க்கரை தடவியிருக்கிறது. இதுதான் சாஸ்திரோக்த கர்மா. இஷ்ட பூர்த்தி என்று வெளியிலே தித்திப்பாகத் தெரிகிறது. உள்ளே இந்த இஷ்டமெல்லாம் கஷ்டம்தான் என்று புரியவைத்து இஷ்டப்படி செய்யாமல் நல்ல நெறியில் கட்டுப்படுத்துகிற விவேக மருந்து இருக்கிறது. மருந்து இருப்பது தெரியாமலேதான் குழந்தை சாப்பிடுகிறது. ஆனால் அது பலிக்காமல் போய் விடுமா என்ன? – ஜகத்குரு ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் அருள்மொழிகள்


A sugar coated pill can be as an example to illustrate the method of influencing a person to perform the rituals prescribed by the saastras and thus guide him in the right direction by offering him the inducement of worldly desires.  The attainment of these worldly desires is akin to the sugar coating of the pill. As a child is ignorant that the sugar will increase its body heat, so the unenlightened man is ignorant that these worldly comforts only harm the soul. The rishis or the enlightened men who structures our Saastras have taken compassion on such children – the ignorant people. They seek to give them the peppermint these people desire. But the apparently sweet peppermint contains the bitter pill inside- the ‘child’ is not aware of it.  The medicine inside can reduce the heat and the sugar coating on the pill will increase the heat slightly. This sugar coating is the fulfillment of desires through performance of the prescribed actions. The bitter pill inside creates the awareness that performance of actions to achieve certain desires will only lead to more difficulties and guides one in the right direction paving the way for  discriminatory knowledge or Vivekam. The child does not know that there is a pill inside. But this does not in any way undermine the benefits of the medicine.Jagadguru Sri Chandrasekharendra Saraswathi Swamigal



Categories: Deivathin Kural

Tags:

2 replies

  1. We are glad to proudly announce that our new venture S.N.HOMAM & POOJA SERVICE is the first and only homam service which has been registered under (service act)…Striving to provide homam and pooja services with unmatched traditional excellence.

  2. We are glad to proudly announce that our new venture S.N.HOMAM & POOJA SERVICE is the first and only homam service which has been registered under (service act)…Striving to provide homam and pooja services with unmatched traditional excellence.
    For more details ; http://www.shastrigal.net

What do you think?

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: