Periyava Golden Quotes-513

மேல்நிலையில் உள்ளவன் – “ச்ரேஷ்டன்” என்று சொல்லப்பட்டவன் – ஸாதாரண ஜீவனைக் காம்யமாகவாவது சாஸ்திர ஆசாரங்களுக்குக் கட்டுப்பட்டு கர்மா பண்ண வைப்பதற்காகத்தான் அவற்றைத் தானும் நிஷ்காம்யமாகப் பண்ணி வழிகாட்ட வேண்டும் என்று பகவான் உத்தரவு போடுகிறார். பாமர ஜனங்கள் ‘ஸக்தர்’களாகப் பண்ணுவது என்று அவர் சொன்னதே காம்யம்; அதை வித்வான் ‘அஸக்த’னாகப் பண்ண வேண்டுமென்பதே நிஷ்காம்யம்.

வித்வான் பண்ணிக் காட்டாவிட்டாலும் பொது ஜனங்கள் ஏதாவது கர்மா பண்ணிக் கொண்டேதான் இருப்பார்கள் – காம்யமாக, “அது வேணும், இது வேணும்” என்று எதையாவது கார்யத்தைப் பண்ணிக் கொண்டிருக்காமல் எவனும் க்ஷணங்கூடச் சும்மா இருப்பதில்லை; ந ஹி கச்சித் க்ஷணமபி ஜாது திஷ்டத்-யகர்மக்ருத். ஏனென்றால் பிரகிருதி என்ற மாயை இப்படித்தான் ஸத்வ-ரஜோ-தமோ குணங்களால் ஜீவனைக் கட்டி அவனறியாமலே எதையாவது பண்ணிக் கொண்டிருக்கும்படி ஆட்டி வைக்கிறது: கார்யதே ஹ்யவச: கர்ம ஸர்வ: ப்ரக்ருதிஜைர் குணை: (3.5).

ஆதலால் வித்வான் என்கிற ச்ரேஷ்டன் முன்னுதாரணமாகச் செய்து காட்டாவிட்டாலுங்கூட ஸாதாரண ஜனங்கள் தாங்களாகவே ஆசைப் பூர்த்திக்காக எதையாவது செய்து கொண்டுதானிருப்பார்கள். இதையேதான் இவர்கள் சாஸ்திரத்துக்குக் கட்டுப்பட்டுச் செய்யுமாறு வித்வான் தன் எக்ஸாம்பிளால் தூண்டுதல் தருகிறான். காம்ய கர்மாதான் ‘ஆப்ஜெக்டிவ்’, அதாவது லக்ஷ்யம் என்றாலும்கூட அதற்குப் போகிற வழி, means, தன்னிஷ்டப்படியில்லாமல் சாஸ்திரோக்தமாக மாற்றி அமைக்கப்படும்போது அதன் தன்மையே அடியோடு மாறிப் போகிறது! மட்டமாக இருப்பதே உத்தமமாக மாற்றப்படுகிறது. இச்சா பூர்த்திக்காகவே பண்ணுவதென்கிற போதும் சாஸ்திர கர்மா என்றால், “இத்தனை மணிக்கு எழுந்திருக்க வேண்டும், ஸ்நானம் பண்ண வேண்டும், ஸத்வமாக இன்ன ஆஹாரந்தான் இத்தனை மணிக்கு அப்புறம் சாப்பிட வேண்டும், வேர்க்க விறுவிறுக்க ஹோமம் பண்ண வேண்டும், மணியடிக்க வேண்டும்” என்றெல்லாம் எத்தனை கட்டுப்பாடுகள் இருக்கின்றன? இதெல்லாம் சாஸ்திரோக்தமாகயில்லாமல் தன்னிஷ்டப்படி செய்யும் போது இல்லை அல்லவா? நெறியில்லாமல் செய்வதாலேயே ஆசையும் அழுக்கும் அதிகமாகின்றன. அதையே நெறியோடு செய்தால் சாந்தியும், சுத்தியும் ஏற்பட ஆரம்பிக்கின்றன. தன்னிஷ்டப்படியே செய்யும்போது அஹங்காரந்தான் அதிகமாகிறது; பயபக்திக்கு அங்கே இடமேயில்லை. சாஸ்திர கர்மாவினால் இஷ்ட பலனைத் தருபவனும் ஒரு ஈஸ்வரன்தான் என்று காட்டி, அவனைப் பிரார்த்தித்து அவனுக்கு அடங்கியே காம்யமானதைக் கேட்டுப் பெறச் சொல்லும்போது பயபக்தி உண்டாகி இவனை சுத்தி செய்கிறது. – ஜகத்குரு ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் அருள்மொழிகள்

The person who is spiritually superior to the rest, the noble one should perform the Karmas prescribed by the Sastraas without any desire in order to induce the common people to perform these Karmaas at least with certain desires in mind. When Bhagawan says the ordinary persons should perform these rituals as ‘Sakthaha’ it is ‘Kaamyam’; when he says the noble one should perform them as ‘Asaktaha’, it is ‘Nishkaamyam’.

Even if the Vidhwan or the learned one does not show the way, the common people will be going on performing certain actions. Nobody rests without performing some actions to achieve certain goals.  ‘Na hi kaschit…. karmakrut’. It is because the illusion or Maya of Prakruthi binds the soul with three qualities of Satva. Rajas and Tamas and goads him to continue doing one thing or other involuntarily. ‘Kaaryate…Gunaihi’ (3.5)

Hence even if the enlightened, learned one does not set an example, the others will be doing some action or other in order to fulfill their desires. The Vidwan induces them to perform these actions according to the rules and regulations laid down by the sastras. Even if the action is motivated by the objective to achieve certain benefits, if it is performed according to the scriptures, the very means changes the fundamental nature of the action. What is lowly is transformed into the sublime. Even if the action is done for the accretion of certain worldly benefits, a certain discipline is imposed by the restrictions – one has to get up at a certain time, have a bath, eat only certain types of saatvik (mild) food, perform homams sweating it out, ring the bell, and so on. These restrictions are not there when the actions are performed according to one’s own methods and not regulated by the rules of the sastraas. Lack of discipline increases the desires and the impurities. But discipline leads to purity of mind and peace. When one acts according to his wishes only the ego gets bloated. There is no humility. When it is pointed out that it is the Eswara who grants the desires sought by the performance of rituals, a direction is given to pray to Him and submit oneself to Him to get these desires fulfilled, one’s devotion and humility grows and the mind gets purified.Jagadguru Sri Chandrasekharendra Saraswathi Swamigal



Categories: Deivathin Kural, Golden Quotes

Tags:

Leave a Reply

%d bloggers like this: