Periyava Golden Quotes-512


ஞானி எதற்காக சாஸ்திர கர்மாக்களைச் செய்ய வேண்டும்?

இவனை லோகம் ச்ரேஷ்டன் என்று நினைக்கிறது. இவனைப்போல உயர்ந்த ஸ்தானத்திலிருக்கிறவர்கள் எப்படி நடக்கிறார்களோ அப்படி நடந்து பார்க்க வேண்டுமென்று ஜனங்களுக்கு உள்ளூர ஒரு ஆசையுண்டு.

யத் யத் ஆசரதி ச்ரேஷ்ட: தத் தத் ஏவ இதரோ ஜந: | (3.21)

ஆசை உண்டே தவிர, ச்ரேஷ்டர்கள் நடப்பது ரொம்பவும் உயர்ந்த மாதிரி இருந்தால், இவர்களால் பின்பற்ற முடியாமல், அதை அநுஸரிக்க முடியாமல் தோற்றுப் போவார்கள்; தோற்றுப் போவது தெரியக்கூடாது என்று போலியாக வேஷம் போடுவார்கள். அதனால் ச்ரேஷ்டனாயிருக்கப்பட்டவனே ஸாதாரண ஜனங்கள் இருக்க வேண்டிய, இருக்கக்கூடிய கீழ் லெவலுக்கு வந்து, அந்த லெவலின் ஒழுங்குகளை நடத்திக் காட்டுகிறான். ஞானிக்கு அது கீழ் லெவல் என்றாலும் ஸாதாரண மநுஷ்யனுக்கு அவனால் முடியக் கூடியதான சற்று உயர்ந்த லெவல்தான். சாஸ்த்ரோக்த கர்மா என்ற இந்த லெவலை விட்டால்தான் அவன் இன்னம் கீழ் லெவலில் பாழாய் விடுவான். இந்திரியம் இழுத்தபடிச் சிற்றின்பக் காரியங்களை மட்டுமே செய்தால் பாமர ஜனங்கள் அந்தச் சேற்றிலேயே புதைந்து போய், அப்புறம் ச்ரேஷ்டனாலுங் கூட அவர்களைத் தூக்கிவிட முடியாமல் போய்விடும். அதனால் சின்ன லாபங்களையே ஒரு நிலையில் தருவதாயிருந்தாலும், இதற்காக இந்திரியங்களை தறிகெட்டுப் போகவிடாமல் அவற்றுக்கு இஷ்டமான பலன்களை ஒரு பக்கம் கட்டுப்படுத்தி சுத்தி பண்ணிக் கொண்டுமிருப்பதான சாஸ்திர கர்மாக்களை ச்ரேஷ்டன் பற்றில்லாமல், பட்டுக் கொள்ளாமல் அநுஷ்டித்துக் காட்ட வேண்டும். இவனைப் பார்த்து இவன் மாதிரியே பண்ண விரும்பும் ஜனங்களாலும் இவற்றை அநுஸரிக்க முடியும். த்யானம், ஆத்ம விசாரணை பண்ண முடியாது என்கிற மாதிரிக் கர்மாக்களைப் பண்ண முடியாது என்று இல்லை. எல்லாரும் பண்ணுவார்கள். அதற்கு goal-ம் மோக்ஷம், ஸம்ஸார நிவிருத்தி என்பது போல் அவர்களுக்கு அப்பீலாகாத ஏதோ ஒன்றாயில்லாமல், அவர்கள் ஆசைப்படும் லாபங்களாகவே இருப்பதால் இந்தக் கர்மாக்களைப் பண்ணுவதில் ச்ரமங்கள் நியமங்கள் இருந்தாலுங்கூடப் பொறுத்துக் கொண்டு பண்ணுவார்கள். இப்படி ச்ரமப்பட்டும், நியமத்துக்குக் கட்டுப்பட்டும் பண்ணுவதாலேயே கர்மாவானது இவர்கள் உத்தேசித்த பலனைத் தருவதோடு, உத்தேசிக்காத பலனாக இவர்களுடைய உள்ளத்தின் அழுக்குகளை அலம்பி, இவர்களுடைய ஆசைப்பற்றுக்களையும் குறைக்க ஆரம்பிக்கும். அப்புறம் ஐஹிகமான [இஹலோகத்து] பலனுக்காக இல்லாமல், ஸமூஹம் ஒரு ஒழுங்கில் நடக்க வேண்டும், குடும்பம் ஒரு ஒழுங்கில் நடக்க வேண்டும், தனி ஆள் ஒரு கட்டுப்பாட்டில் சீராக அபிவிருத்தியாக வேண்டும் என்பதற்காகவே சாஸ்திர கர்மாக்களைத் தொடர்ந்து பண்ணிக் கொண்டிருப்பார்கள். நிஷ்காம்யகர்மா என்பது இதுதான். அதற்கு போவதற்கு வழி காம்யமாக சாஸ்திர கர்மா பண்ணுவதுதான். பலனில் ஆசையோடு பண்ணுவதே காம்யம். – ஜகத்குரு ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் அருள்மொழிகள்

Why the enlightened one performs the rituals prescribed by the sastraas? The world holds him in high regard as a noble being. The people always desire to act like these noble men. Though this desire may be there, if the Gnani’s ideals are indeed very high, people may not be able to follow them and they may be defeated in their purpose. They may try to hide their defeat by pretence. So the noble being comes down to the level of common man and shows the path of discipline they have to follow. Though it is a lower level for the noble being, for the common man it is still a slightly higher level which can be achieved by him. If he gives up this path of ‘saastroktha karma’ (the rituals and actions prescribed by the sastras) he will slide down to a level of destruction. If he follows the dictates of the senses and indulges only in sensual pleasures, he will be caught in such a quagmire from which it will be difficult even for the noble soul to retrieve him. So the Gnani should set an example by performing those rituals, without getting attached to them, so that even if small worldly benefits are accrued to the unenlightened ones, it is done so with a certain control as the mind gets purified by these rituals. The common man who desires to follow the Gnani will also be able to do so. It is not as difficult to perform these rituals as to go in for meditation or soul searching self examination. Since the fruits for these rituals are like liberation or dissolution of the worldly bondage which are unappealing, people will perform these rituals if the results are desires from their own heart. They will do it even if there are some rules to be followed and difficulties to be overcome. Since a discipline is adhered to even with a certain difficulty, not only their immediate desires are fulfilled but without any conscious effort on their part, the impurities of the mind start getting cleansed and the desires start getting reduced. Afterwards, they will continue to perform these karmas not with a worldly desire but with the intentions of social, familial, and individual discipline. This is ‘Nishkaamya Karma’ – action without any selfish motive and an initial step to the same is kaamya karma, the performance of rituals with certain immediate benefits in mind.Jagadguru Sri Chandrasekharendra Saraswathi Swamigal



Categories: Deivathin Kural, Golden Quotes

Tags:

1 reply

  1. Please….The word ‘or’ had been left out in line 33 from top. It should be meditation or soul searching self examination .

Leave a Reply

%d