ஜனங்கள் ‘கர்ம ஸங்கிகள்’ தான் – பலனில் ஆசை வைத்து கர்மாக்களைப் பண்ணுவதில் ஈடுபாடு கொண்டவர்கள் தான். நிஷ்காம்யம், நைஷ்கர்ம்யம், த்யானம், ஞானம் என்றால், அவர்கள் இருக்கிற நிலையில் எடுபடாது என்று பகவான் கூறுகிறார். இவர்களை நல்லறிவு பெறாத ‘அவித்வாம்ஸ:’ என்றும் கூறுகிறார்.
ஸரி, நல்லறிவு பெற்ற ‘வித்வான்’ என்ன பண்ண வேண்டும்? இப்போது சீர்திருத்தக்காரர்கள் பண்ணுகிற மாதிரி காரியங்களைக் குறைத்து ஈஸியாக்கித்தர வேண்டுமா? “கர்மா எல்லாம் யூஸ்லெஸ்; மனஸின் purity தான் முக்கியம்; அதனால் ஞானத்துக்கு வாருங்கள்” என்று உபதேசிக்க வேண்டுமா? முடிவிலே பகவான் இப்படித்தான் கர்ம ஸந்நியாஸத்தை உபதேசித்து, ஞானத்தில் எல்லாக் கர்மாவையும் பஸ்மீகரமாக்கச் சொல்கிறார். ஆனால் முடிவிலேதான்; ஆரம்பத்திலே அல்ல. ஆரம்பத்தில் வித்வான் என்ன பண்ண வேண்டுமென்கிறார்?
… அவித்வாம்ஸோ யதா குர்வந்தி பாரத குர்யாத் வித்வாம்-ஸ்ததா…
“பாரத!” என்று அர்ஜுனனைக் கூப்பிட்டு, “யதா அவித்வாம்ஸ: குர்வந்தி ததா வித்வான் குர்யாத்” என்கிறார். ரொம்ப விசித்ரமாகச் சொல்கிறார். வித்வான் – அதாவது விஷயம் தெரிந்த ஞானி – எப்படிப் பண்ணுகிறானோ அந்த வழியிலேயே அவித்வானான அஞ்ஞானியும் பண்ணிப் பார்க்க வேண்டுமென்றுதான் பொதுவாக லோகமெல்லாம் சொல்வது. ஆனால் பகவான் சொல்வதற்கு அர்த்தமோ இதற்கு அப்படியே நேர்மாறாக இருக்கிறது; யதா – எவ்வாறு, அவித்வாம்ஸ: – அஞ்ஞானிகளான பொது ஜனங்கள், குர்வந்தி – செய்கிறார்களோ, ததா – அவ்வாறே, வித்வான் – ஞானியும், குர்யாத் – செய்ய வேண்டும்.
அஞ்ஞானி பண்ணுகிற மாதிரிதான் ஞானியும் பண்ண வேண்டும் என்று ஸ்பஷ்டமாகச் சொல்கிறார்!
அஞ்ஞானிக்கு இச்சா லாபத்திலேயே பற்று; அதற்காகவே சாஸ்திர கர்மாக்களைச் செய்கிறான். “அந்த சாஸ்திர கர்மங்களையே ஞானியும் பண்ணணுமப்பா” என்கிறார். “ஞானிக்கு இப்படிப்பட்ட இச்சை, ஆசைப்பற்று இருக்கலாமா? அதுதானே நரக த்வாரத்துக்கு வழி?” என்று கேட்டால், “நான் அப்படிச் சொன்னேனா? ஞானியும் கர்மா பண்ணணும் என்றேனே தவிர, தன்னுடைய இச்சா பூர்த்திக்காப் பண்ணணும் என்று சொல்லவில்லையே! ஸந்தேஹமிருந்தால் இப்போதே qualifying clause போட்டு விடுகிறேன்:
“குர்யாத் வித்வான் ததா அஸக்த:”
என்று ‘அஸக்த:’ வைச் சேர்க்கிறார். “அஸ்கத:” என்றால் ‘பற்றில்லாதவனாக’ என்று அர்த்தம். முதலில் அஞ்ஞானியைச் சொல்லும்போது முதல் வார்த்தையாகவே “ஸக்தா:” என்றார். “பற்றுள்ளவர்களான” என்று ஆரம்பித்தார். சிறியதான இந்திரிய இன்பப் பயன்களில் பற்றுக் கொண்டவர்களாக அவித்வான்கள் எந்தெந்த கர்மாக்களைச் செய்கிறார்களோ அவற்றையே வித்வானும் இப்படிப்பட்ட பற்று இல்லாமல் செய்ய வேண்டும் என்கிறார்.
“எதற்காக? ஞானி என்றால் ஞானம் அடைந்து விட்டவன் என்று அர்த்தம். ஞானத்துக்கு அப்புறம் அவன் அடைய வேண்டியது எதுவுமில்லை. அவனுக்கு எந்தப் பலனும் தேவைப்படாதபோது இந்தக் கர்மாக்கள் எதற்காக?”
“அதுவா? அவன் தனக்காக இப்படிச் செய்ய வேண்டும் என்று நான் சொன்னேனா என்ன? பின்னே ஏன் செய்ய வேண்டுமென்றால் –
சிகீர்ஷு: லோக ஸங்க்ரஹம்”.
“ஸங்க்ரஹம்” என்றால் நன்றாகப் பிடித்துக் கொள்வது; அதாவது கட்டிப் பிடித்துக் காப்பாற்றுவது. “லோக ஸங்க்ரஹம்” என்றால் லோகத்தை இப்படிப் பரம அன்போடு கட்டிக் காப்பது – நல்வழிப்படுத்துவது. லோகம் என்றால் அஞ்ஞானிகள்தான். ஞானி லோகத்துக்கு மேலே போனவன்.
“சிகீர்ஷு:” — விரும்பி; “லோகஸங்க்ரஹம் சிகீர்ஷு:” — உலகத்தை உயர்ந்த மார்க்கத்தில் கொண்டு போக வேண்டுமென்று விரும்பி. – ஜகத்குரு ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் அருள்மொழிகள்
The common populace is action oriented. They perform actions desiring certain fruits. Lord Krishna states that when we advise them to perform actions without expecting any results and advocate meditation and enlightenment to these people, it will not be effective. He calls such people ‘avidwamsa’- those who have not yet attained the true knowledge.
Then what is the duty of Vidwans or those who are the repositories of true knowledge? Should they reduce the number of ritualistic practices prescribed by our sastras, thus rendering them easy for the people to follow? Should they advise the superiority of knowledge over actions and advise people to give up action? Bhagwan Himself eventually advocates the giving up of all action, the burning of action in the Fire of Knowledge. But this is at the very last stage and not at the initial stages. Then what should a Vidwan do in the beginning? The Lord calls Arjuna ‘Bharatha’ and advises something peculiar. Generally, people advise the less knowledgeable to follow the path set by the knowledgeable- that is the worldly advice – the Vidwan sets the example and he should be followed. But here the Lord says something opposite – that the Vidwan should try to do like the Avidwan or the one without the knowledge! Lord Krishna is very clear in this matter.
The ignorant or the unenlightened is interested only in the attainment of his worldly desires. He performs the rituals prescribed by the scriptures only with this goal in mind. The Lord instructs the enlightened ones also to perform these identical rituals. Naturally the question arises as to whether the enlightened ones should also have such an attachment to worldly desires – is it not the pathway to hell? Bhagawan adds a qualifying clause – “I am instructing the enlightened ones to perform these Karmas not with an eye to the worldly desires” – He adds the word ‘Asaktaha’. ‘Asaktaha’ means without any attachment. When He talks about the unenlightened ones the very first word He uses is the word ‘saktaha’- the one who is attached to worldly desires. He instructs the enlightened ones to perform the very same rituals which the unenlightened ones perform with a desire to enjoy minor worldly desires. Why? Gnani is one who has attained true knowledge. He does not have anything further to attain. So why should he perform these actions, if he has nothing to achieve? It is not for any selfish motive. It is for ‘Sikeershu loka Sangraham’.
‘Sangraham’ means to hold on tightly – to save somebody by holding on to him strongly. Loka Sangraham means to save the world with supreme love and guide it in the right direction. The world comprises only of the unenlightened ones. The enlightened one has sublimated the world. ‘Sikeershu’ means ‘to desire’ – here the desire of the enlightened one should be to guide the world towards a higher path. – Jagadguru Sri Chandrasekharendra Saraswathi Swamigal
Categories: Deivathin Kural, Golden Quotes
Leave a Reply