Periyava Golden Quotes-507

album1_146

வெளியிலே பெரிய ஃபிலாஸபர், தத்வ ஞானி, ரிஷி என்றேகூட (இப்போது பத்திரிகைகள் நிறைய ஏற்பட்டபின் எல்லாவற்றுக்கும் அதிசயோக்தி தான்!) பெத்தப் பெயர் இருந்தாலும், லெக்சரிலும் புஸ்தகத்திலும் இவன் எவ்வளவு சோபித்தாலும், இப்படி மனஸிலே அழுக்கை வைத்துக் கொண்டிருப்பவனை பகவான் விமூடாத்மா – ‘மஹா மூடன்’ என்றுதான் சொல்கிறார். ‘மூளையில்லாமல் காரியங்களைக் கட்டிக் கொண்டு அழச் சொல்கிறவர்களிடமிருந்து நம்மையும் நம் மதத்தையுமே ரக்ஷிக்கிற இவர்தான் மஹா புத்திமான்’ என்று லோகத்தார் எவரைக் கொண்டாடுகிறார்களோ, அவரையே பகவான் “விமூடாத்மா” என்கிறார். அதற்கும் மேலே இன்னொரு வார்த்தை சொல்கிறார்.

மித்யாசார: –

மித்யா என்றால் நிஜம் போல இருந்து கொண்டே பொய்யாகப் போகிற வேஷம் என்று அர்த்தம். ஆசாரமே வேண்டாமென்று இருக்கிற வாய் வேதாந்தியை ‘மித்யாசாரன்’ என்கிறார். இவன் கர்மாவை விட்டு விட்டான். ‘மனஸ் சுத்தம்தானே எல்லாம்?’ என்கிறான். ஆனாலும் இவன் மனஸ் அழுக்கிலேயே கிடக்கிறது. வெளியே வேதாந்தி போல வேஷம் போடுகிறான். இப்படி வெளியே ஒன்றாகவும் உள்ளே வேறாகவும், உயர்ந்த லக்ஷ்யத்தைப் பேசிக் கொண்டும் கீழான ஒழக்கத்தில் போய்க் கொண்டும் இருப்பதால் ‘மித்யாசாரன்’ என்கிறார். ‘மித்யாசாரன்’ என்பதற்கு ஸரியான வார்த்தை hypocrite. காரியம் பண்ணப் பிடிக்காத சோம்பேறித்தனம், ஒரு ஒழுக்கத்தில் கட்டுப்பட்டிருக்கப் பிரியமில்லாமை – இதற்காகவேதான் “Vedanta, Vedanta” என்று சாஸ்திர கர்மாவிலிருந்து பிரித்துப் பேசுகிறார்கள். உள்ளே பார்த்தால் – இதைச் சொல்ல ரொம்ப வருத்தமாயிருக்கிறது – எந்தக் கட்டுப்பாட்டிலும் இல்லாமல் இவர்கள் போயிருப்பதால் அநேக lapses இருப்பது தெரிகிறது. ஆசாரக்காரர்கள் மூடர்களாயிருக்கட்டும், ஸ்வயநலக் கும்பலாயிருக்கட்டும், இரக்கமேயில்லாத துஷ்டர்களாகத்தான் இருக்கட்டும். ஆனால் அவர்களிடம் இப்படிப்பட்ட lapses இருப்பதில்லையல்லவா? அதுதான் discipline (நெறி) என்பதன் சக்தி. – ஜகத்குரு ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் அருள்மொழிகள்

A person may be a great philosopher or a holy man-rishi (in these days of numerous magazines, hyperbole has become the order of the day) excelling in writing books and lecturing but if he still is of impure mind, Lord Krishna dubs him as ‘Vimoodaathma’. The person whom the common man extols as the intellectual who has come to rescue him and the religion from the drudgery of action is condemned as ‘Vimoodaathma’ by Lord Krishna – a slur on his intellectual capacity. The Lord does not rest with this. Such a person is also accused of being ‘Mithyaachaaraha’ by Bhagawan.

Mithya is hypocrisy – an assumption of truth by the person while the reality is something different – far away from the truth – sheer acting by the person. The oral philosopher who questions the need for action is called ‘Mithyaachaara’ by the Lord.  This philosopher has given up action. He extols the importance of the purity of mind. But his mind itself is polluted by impurity. He dons the role of a philosopher outwardly. There is a dichotomy between the words and the deed. Apparently his goal is noble, but practically his conduct is ignoble – he is called ‘Mithyaachaara’ by Lord Krishna.  The equivalent word is ‘hypocrite’. Such people have lethargy towards action and an unwillingness to subject themselves to discipline. This is the reason they eulogize philosophy. But when one studies them one is very sorry to find so many lapses in them, due to the lack of any discipline. The traditionalists may be intellectually inferior, self centered, and even pitiless people. But one cannot find such lapses in them. That is the power conferred by discipline.Jagadguru Sri Chandrasekharendra Saraswathi Swamigal



Categories: Deivathin Kural, Golden Quotes

Tags:

Leave a Reply

%d bloggers like this: