Periyava Golden Quotes-504

album1_143

போலி இருக்கலாம் என்பதற்காக, எல்லாம் போலி என்று சொல்லிவிட முடியாது. வேறே எது போலியோ இல்லையோ, ஒரு ஸ்வாமிஜியிடம் போகிறான், ஏதோ ஒரு கஷ்டம் தீர்கிறது என்றால், வாஸ்தவத்தில் அவர் அதைத் தீர்த்து வைக்காவிட்டால்கூட, இவனுக்கு ஒரு தாப சாந்தி உண்டாவது போலியில்லையே? நிஜந்தானே? பிரஸங்கம் பண்ணுகிறபடி அவர் [சொந்த வாழ்க்கையில்] இல்லாவிட்டாலும் போகட்டும், அதைக் கேட்டதில் இவனுக்கு ஒரு தெளிவு வந்தது நிஜந்தானே? அவர் எப்படி வேண்டுமானாலும் இருந்துவிட்டுப் போகட்டும் – இவன் நல்லது என்று நினைத்துப் போனான், தன் அஹங்கார மமகாரங்களை விட்டு நமஸ்காரம் பண்ணினான். ஏதோ நல்லதையும் அடைந்தான். முடிவில் கொஞ்சமாவது தெய்வ பக்தி பெற்று ஏதோ கொஞ்சம் மதாநுஷ்டானத்தையும் எடுத்துக் கொள்கிறான். இந்த மட்டில் நல்லதுதான்.

ஆனாலும் ‘ஸமயாசாரம்’ என்று பார்க்கும்போது என்ன ஆகிறது? இந்த ஸ்வாமிஜிக்கள் அநேகமாக சாஸ்திர ஆசாரங்களில் பெரும்பாலானவற்றைக் கழித்துக் கட்டி விடுகிறார்கள். இவர்களில் முக்காலே மூணுவீசம் பேரும் அதிகார பேதத்தை ஆதரிக்காதவர்கள்தான். வேறு பல ஆசார அநுஷ்டானங்களையும் காலத்துக்குப் பொருந்தாது என்று எடுத்துப் போட்டுவிட்டார்கள்தான். சாறு – சக்கை, தானியம் – உமி என்று சொல்லிக் கொண்டு, ஸமயாசார அநுஷ்டானங்களில் அவரவருக்கு எது ஸரியென்று தோன்றுகிறதோ, எது இஷ்டமாயிருக்கிறதோ, ஸெளகரியமாயிருக்கிறதோ அது மட்டுமே சாறு, அதுதான் தானியம் என்று வைத்துக் கொண்டு பாக்கியெல்லாமே சக்கை, உமி என்று விட்டு விடுகிறார்கள். எங்களைப் போன்ற ஸநாதனிகள் ஆசாரம் ஆசாரம் என்று சொல்லிக் கொண்டு, ஸ்பிரிட்டை [உயிரை] விட்டு விட்டு ஸ்கெலிடனை [எலும்புக் கூட்டை] மட்டும் பிடித்து வைத்துக் கொண்டிருக்கிறோம் என்று இவர்கள் சொல்லி, ட்ரெடிஷனல் மதத்தில் தொண்ணூறு பெர்ஸென்டாக இருக்கும் ஆசார அநுஷ்டானாதிகளை விட்டு விட்டிருக்கிறார்கள். ஆனாலும் ஹிந்துமத parent body -யிலிருந்து வெளியேறித் தனியான சீர்திருத்த இயக்கமாகவும் இல்லாமல் இதிலேயே இருந்து கொண்டு, இவர்கள் அநுஷ்டிப்பதுதான் ஸரியான ஹிந்து மதம் என்று ஜனங்கள் பிரமை கொள்ளும்படிப் பண்ணுகிறார்கள். இந்த இடத்திலேதான் நான் பிரிந்து போகிற சீர்திருத்த இயக்கங்களே தேவலையென்று நினைக்கிறேன். – ஜகத்குரு ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் அருள்மொழிகள்

Because there are many duplicates, all God men cannot be dismissed so. The God man may be genuine or not, but the fact that the devotee gets some kind of peace of mind cannot be denied, even if the God man has not offered a direct solution. Even if the God man does not follow what he preaches has not the devotee got some clarity of thought?  However the God man may be, the devotee approaches him with conviction, negating his ego, pays obeisance to him, and in the process gains some good, acquires some faith in God, and starts following some religious practices – so far so good.

But what happens to the rules and regulations prescribed by our scriptures? Most of these new fangled God men are against the distinction of duties dictated by our Saastraas and have given up most of the practices prescribed by our sastras.  Claiming to make a distinction between the essence and the husk, they choose to accept what is convenient to hem as the essential essence and discard what is inconvenient for them as the non essential husk. They accuse traditionalists like me of ignoring the spirit of the religion and clinging to the skeleton and give up ninety percent of our religious traditions. Without weaning away from the parent body like the reformist movements, these God men create an illusion that the Hinduism they follow is the right one and thus mislead the public. In this aspect, I think the reformist movements who separate themselves from the traditional religion are better than these people. – Jagadguru Sri Chandrasekharendra Saraswathi SwamigalCategories: Deivathin Kural, Golden Quotes

Tags:

2 replies

  1. MAHAPERIYAVA SONNATHU SATHYAM,,, NAMMAL KADAI PIDIKKA VENDIYA ONRU KADAI PIDIKKA MUDIYATHU POKALAM, ANAL SARI ENBATHU ETHUVO SARI,,, NAAM KADAI PIDIKKAATHATHU SARI ENRU VATHIDAKKODATHU

  2. Well narrated by Our Guru Shsmbo Mahadevaa MahaPerivaa. We have to read several times, the legendary showed the living with simplicity,, givviing us lesson how to follow his foot path, as well our generation, we have preach, with our Nithya Karmanushtam, which would last long another 1500 years.
    MahaPerivaa Perivaa Padara Kamalam Saranam.

Leave a Reply

%d bloggers like this: