பிராசீனமான தர்ம பீடங்களில் இல்லாமல் தனியாகத் தோன்றியிருக்கிற ஸ்வாமியார்களாலும் மதத்துக்கு நல்லது நடந்துதான் வருகிறது. மனஸ் விட்டுச் சொன்னேனானால், எங்களைப் போன்ற ஸநாதன ஆசார பீடங்களைக் கட்டுப்பெட்டி என்று படிப்பாளிகளும், தேசத் தலைவர்களும் திருப்பித் திருப்பிச் சொல்லி, புது ஜெனரேஷன்களுக்கு ஒரு ப்ரெஜூடிஸே உண்டாக்கியிருந்த ஸந்தர்ப்பத்தில், ஜனங்கள் அடி நாஸ்திகமாகப் போகாமல் ஏதோ கொஞ்சமாவது மத விஸ்வாஸம் பெற்றதற்குக் காரணமே இந்தத் தனி ஸ்வாமிஜிகள்தான் என்று கூடச் சொல்லலாம். சித்தாகத்தான் இருக்கட்டும், வேறு ஏதோ சக்தியாகத்தான் இருக்கட்டும்; நாலு பேருக்கு கஷ்டத்தைப் போக்குகிறார்கள், அதோடு அவர்களைக் கொஞ்சம் பயபக்தியில் தூண்டிவிடுகிறார்கள், ஆத்ம விஷயங்களைப் பேசியும் எழுதியும் பிரசாரம் பண்ணுகிறார்களென்பதற்காக இவர்களைப் பற்றி நல்லதாகத்தான் நினைக்க வேண்டும்.
இது ஒரு நல்ல தொழிலாயிருக்கிறதே என்று போலிகளும் கிளம்பியிருக்கலாம் ஜனங்கள் அவர்களிடம் ஏமாந்தும் போகலாம். தடுக்கி விழுந்த இடமெல்லாம் ஒரு Divine Messenger [திவ்ய தூதர்], Messiah [இறைவன் அனுப்பி வைத்த லோக ரக்ஷகர்], தெய்வாம்சமே பெற்றவர் என்று ஏதாவதொன்று சொல்லிக் கொண்டு பலபேர் இருந்தால் genuine -ஆக இருக்க முடியுமா என்று ஜனங்களுக்கும் கலக்கம். ஆனாலும் ‘எத்தைத் தின்றால் பித்தம் தெளியும்?’ என்று பாவம், அங்கேயும் ஓடுகிறார்கள். இப்படியே ஒரு பக்கம் வெளி தேசத்தவர்களும் Gurudom, Swamidom என்று கேலி பண்ணிக் கொண்டே, இன்னொரு பக்கம் கூட்டம் கூட்டமாக இவர்களிடம் வந்து சிஷ்யர்களாகிறார்கள். – ஜகத்குரு ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் அருள்மொழிகள்
Not only the traditional seats of religion but also these God men are doing some good to the religion. To be frank, the political leaders and intellectuals have created a prejudice in the mind of an entire generation against traditionalists like us calling us retrograde. Under these circumstances, these God men have been responsible for at least a little religious loyalty in the minds of the people who have not turned complete agnostics or atheists. They may possess some kind of power but they solve the problems of people, create humility in them, and propagate spiritual matters – so one should think good of such God men.
Many duplicates might have also appeared on the scene with the belief that this is a profitable profession. The public may also get cheated by them. If one comes across Messiahs wherever one turns around, carrying the Divine message of God, claiming to be Godly in aspect, people do get confused about the genuineness of all these people. But still, desperate for a remedy, they seek solace and solutions from these God men. Westerners too, in spite of mocking about Gurudom and Swamidom swarm to these God men as disciples. – Jagadguru Sri Chandrasekharendra Saraswathi Swamigal
Categories: Deivathin Kural, Golden Quotes
Maha Periyava Thiruvadi Charanam