Maha Periyava’s awesome explanation of Malaiappa!

Murugan_Periyava

Jaya Jaya Sankara Hara Hara Sankara – An awesome explanation by Sri Periyava on whether Thirumalai Thirupathi is Perumal or Murugan Kshethram. Many Jaya Jaya Sankara to Smt. Sunitha Madhavan for sharing this great incident as well doing the translation. Ram Ram

பரம முருக பக்தரான கி.வா.ஜ., ஒருமுறை பெரியவரைச் சந்திக்க நேர்ந்தது. நல்ல சொற்பொழிவாளரான அவரிடம் பெரியவர் மிக விஸ்ராந்தியாகவே பேசுவார். அப்படித்தான் அன்றும் பேசினார்:

‘திருப்பதி முருகன் தலமா? திருமாலின் தலமா?’ என்பதுதான் அன்று பெரியவர் கி.வா.ஜ.விடம் கேட்ட கேள்வி.

‘இரண்டுக்குமே அங்கே ஆதாரம் உண்டு’ என்றார் கி.வா.ஜ.’

‘எப்படி?’ என்று கேட்டார் பெரியவர்.

‘வடநாட்டார் பாலாஜி என்று அந்த ஆண்டவனை அழைக்கிறார்கள். பாலனாக இருப்பவன் முருகன் தான். அடுத்து, வெள்ளிதோறும் திருமலையில் இன்றும் வில்வத்தால் அர்ச்சனை நடக்கிறது. மேலும், மலைகளுக்கெல்லாம் தலைவன் முருகன்தான் என்பது வழக்கு. அவன் குறிஞ்சி நிலக் கடவுளல்லவா?’என்றார் கி.வா.ஜ.

‘சரி! இதில் உன்னுடைய கருத்து என்ன?’ – என்று கேட்டார் பெரியவர். ‘பழங்காலத்தில் அங்கே முருகன் கோயிலும், திருமால் கோயிலும் இருந்திருக்க வேண்டும். திருமால் கோயிலுக்கு சிறப்பு வரவர, முருகன் கோயில் மறைந்திருக்க வேண்டும். இதுதான் என் கருத்து’ என்றார் கி.வா.ஜ.

ஆனால், பெரியவர் தன் கருத்தாகச் சொன்னது என்ன தெரியுமா?

‘ஏதோ ஒரு புராணத்தில் அங்கே இரண்டு சக்திகள் இருப்பதாகப் படித்திருக்கிறேன். ஒன்று கௌமாரி; இன்னொன்று வைஷ்ணவி.

அதனால்தான் அந்த கோயில் மதில்சுவரில் சிங்க வாகனம் உள்ளது!

திருமால் ஆலயம்தான் என்றால் கருட வாகனம் இருக்கும். முருகன் கோயிலாக இருந்தால் மயில் வாகனம் இருக்கும். ஆனால், சக்திக்கு வாகனமான சிம்மம்தான் அங்கே உள்ளது. தொண்டை மண்டலத்தில், சக்தி க்ஷேத்திரத்தில் சிம்மம்தான் இருக்கும்.

ஒரு காலத்தில் திருப்பதி, தமிழ்நாட்டின் தொண்டை மண்டலத்தோடுதான் சேர்ந்திருந்தது. பின், அரசியல் காரணங்களால் மொழிவாரியாக மாநிலம் பிரிக்கப்பட்டதில் ஆந்திராவோடு சேர்ந்து விட்டது. இரண்டு சக்திகளுக்கான கோயிலாக அது இருப்பதனால் – முருகன் கோயில் என்றும், திருமால் கோயில் என்றும் சொல்வது பொருந்துகிறது’ என்றார்.

பிறகு அங்கு இருக்கும் மடத்துச் சிப்பந்தியிடம் ‘எனக்கு திருப்பதியில் கொடுத்த பரிவட்டம் உள்ளே இருக்கிறது. அதைக் கொண்டுவா’ என்று பணித்தார். அவரும் அந்த பரிவட்ட ஆடையைக் கொண்டு வந்தார். அதை கி.வா.ஜ.விடம் கொடுத்து அளக்கச் சொன்னார்.

கி.வா.ஜ.வுக்கோ ஒரே பரவசம்.

ஏனென்றால், அந்த பரிவட்டம் திருப்பதி பெருமாளுக்கு சாத்தியபின் பெரியவருக்கும் சாத்தப்பட்டது. இப்படி இருவர் திருமேனியைத் தழுவியதை அவர் தழுவும்போது சிலிர்ப்பு ஏற்படத்தானே செய்யும்?

கி.வா.ஜ.வும் அதை அளந்து பார்த்தார். சரியாக முப்பத்தி ஆறு முழங்கள் இருந்தது. இதுபோன்ற பரிவட்ட ஆடைகளை திருப்பதி தேவஸ்தானத்துக்கென்றே பிரத்யேகமாக தறிபோட்டு நெய்வது வழக்கம். இதற்கென்றே நெசவாள கிராமம் ஒன்று உள்ளது.

அவர்களுக்கும் காலம் காலமாக முப்பத்தாறு முழம்தான் கணக்கு. கி.வா.ஜ.வும் முப்பத்தாறு முழம் இருப்பதைக் கூறினார்.

உடனேயே பெரியவர், ‘நம்மவர்களில் பெண்கள் பதினெட்டு முழம் கட்டுகிறார்கள். இரண்டு பெண்களுக்கு என்றால் முப்பத்தி ஆறு தானே?’ என்று கேட்டார். அதாவது வைஷ்ணவி, கௌமாரி என்னும் கணக்கில்… சமத்காரமான அந்த கருத்தும் கேள்வியும் கி.வா.ஜ.வுக்கு பிறகே புரிந்தது. அதேசமயம் திருமலை எப்படி திருமாலின் கோயிலாக பெரும்புகழை அடைந்தது, ஏன் சக்தி தலமாக தொடரவில்லை என்கிற கேள்வியும் எழுந்தது. பெரியவர் அதற்கும் பதிலைச் சொன்னார்:

‘இன்றும் இரண்டு சக்திகளின் செயல்பாடுகளும் அங்கே அனுக்கிரகமாக மாறி வெளிப்பட்டபடிதான் உள்ளது. கௌமார சக்திக்கு முருகனையும், வைஷ்ண விக்கு திருமாலையும் அடிப்படையாகச் சொல்வார்கள். இதில் இருவருக்கும் மாமன் மருமகன் உறவு முறை உண்டு. அவ்வகையில் மாமனே பெரியவர் என்பதால், மருமகன் மாமனுக்குள் ஐக்கியமாகி விட்டார் எனலாம். இது ஒரு கோணம்.

அடுத்து, காத்து ரட்சிப்பதில் திருமாலே முன் நிற்பவர். ‘சர்வம் விஷ்ணுமயம் ஜகத்’ என்பது வழக்கு. சித்தாந்தப்படி அவனே எல்லாமுமானவன்.

அவனுக்குள் எல்லாமே அடக்கம். அடுத்து, அது ஏழாவதாக உள்ள மலைமேல் உள்ள ஆலயம்! அதில் ஆறு சுடர்களில் மலர்ந்த ஆறுமுகன் அடங்கிவிடுகிறான் என்றும் எடுத்துக் கொள்ளலாம்.

Maha Periyava’s conversation with Ki.Va.Ja. (K. V.Jagannathan)
Ki.Va.Ja.was a great devotee of Lord Muruga. He was a Tamil scholar and an eloquent speaker. He would talk with Periyava and Periyava would  meticulously provide all details pertaining to the subject conversed.

On one such occasion when Ki.Va.Ja. met Maha Periyava, the topic was Thirupathi. On that day, Periyava put a question to him.

”Is  Thirupathi Murugan’s place of pilgrimage or is it Thirumal’s abode?”

Ki.Va.Ja. Replied ” There is proof to establish that the place belongs to both deities.”

“How?” asked Periyava.

North Indians call the Lord, Balaji. Murugan only is a little boy, balan. Besides till now every Friday in Thirumala, archana is performed with Bilva leaves. Furthermore, Murugan is the Lord of all hills. Is He not the deity of the hilly regions?” said Ki.Va.Ja.

“Okay! Now what is your opinion on the matter?” asked Periyava.

“In ancient times there must have been a Murugan temple and a Thirumal temple. As Thirumal temple got more and more famous, Murugan temple might have disappeared. This is my view” said Ki.Va.Ja.

But what was the opinion voiced by Periyava? Let us listen to the Voice  of  God.

“I have read in one of the Puranas that there had been two Sakthi deities. One, Kaumari, and the other Vaishnavi. That is why on the ramparts of the temple  lion vahana is present.”

“If it was a Thirumal temple, Garuda vahanam will be present. Had it been Murugan temple peacock vahanam would be there. But only  lion , the vahanam( vehicle ) of Sakthi is there. In Thondai Mandalam region, in the places of Sakthi worship, only lion will be present.

Once upon a time, Thirupathi was part of Tamilnadu’s Thondai Mandala region. Later, due to political reasons when the States were reorganized on a linguistic basis, it became a part of Andhra.

Since it was the temple for two Sakthi deities, it is appropriate to refer to it as Murugan temple or call it as Thirumala temple”, He said.

Afterwards He instructed the person serving Sri Matam thus:

” The parivattam ( the cloth that adorned the deity)  given to me in Thirupathi is kept inside. Bring it here”. The person brought the parivattam that draped the Lord. Periyava gave it to Ki.Va.Ja. and told him to measure its length.

Ki.Va.Ja. was greatly thrilled. That cloth material which was on Thirupathi Perumal had been presented to drape Maha Periyava’s auspicious physical frame. Will not the divinity present in the sacred cloth send one to raptures?!

Ki.Va.Ja measured the cloth. It was exactly 18 yards ( 36 muzhams; 2 muzhams make 1 yard). Such specific  parivattam cloth meant only for Thirupathi Devasthanam is woven in special looms  by weavers who reside in a village  purposely meant  for them.

For ages they have been adhering to 18 yards, (36muzhams)length measurement in weaving this dress material for the Lord. Ki.Va.Ja. also confirmed that the parivattam cloth was of 36 muzhams in length.

Immediately, Periyava asked “In our tradition, ladies wear 18 muzhams( 9 yards) saree. For two ladies will it not be 36 muzham?”

It dawned on Ki.Va.Ja., that this explanation was to drive home  a point. If we take into account Vaishnavi and Kaumari, the total woven length will be 36 muzhams ( i.e. 18 yards).

At the same time, how come Thirumalai attained great fame as Thirumala temple? Why did it not continue to remain as a place for Sakthi worship?

To answer these queries also, Periyava said:

“Till this day the two energies of the two Sakthis continue to give us benediction. They say that the power of Kaumari is Muruga and for Vaishnavi, it is Thirumal. Between these two, there is an uncle-nephew relationship. Thus considered, of the two uncle being elderly, we can say the nephew joined Him.

This is one view.

Besides Thirumal is known for providing protection and sustenance . The saying goes “and This phenomenal Universe is Vishnu’s expansion”. According to spiritual philosophy also He permeates everything. All take refuge in Him.  Since the temple is nestled in the seventh hill we can take it that this implies, the six sparks from Siva’s third eye blossomed here to become Arumugan, the Lord with six faces.



Categories: Devotee Experiences

8 replies

  1. Jai Ma

    Through the infinite anugraha of Parmacharya Parabrahma, the moment His Words were seen, “Kaumari, Vaishanvi shakti-s” like a flash so many things resolved themselves within.

    Mahaperiyava has spoken of SriSriSwaminthan as the Voidness in the Heart, the intersection of Hara-Parvati. indeed, the very term “Parvati” is significant in 2 ways, as ‘granthi”, parvata, and as “mountain”. SriSri Mahaswami earlier has spoken of SriMuruga as the ‘aspect” that allows or leads to the aspirant discovering the conjoined, void nature of Shiva-Shivaa, Hara-Gauri, within the Heart.

    Vaishnavi shakti:

    tvam vaiSNavii shaktir anantaviiryA vishvasya biijam paramA’si mAyA … tvam vai prasannA bhuvi muktihetuH

    svamAtA nirmANam ApAdayati unmeSa phase

    KaumArii shakti : shaktitamA UmA kumArii nimeSa phase

    Yes, indeed, the most Holy Vaishnavi and Kaumari Shaktis are the 2 phases, one moving outward, ‘creating” the universe of vRtti, vRttirUpeNa samsthitA, Vishnu = to pervade

    The other is the nimeSa phase, the pulling inwards, laya into the Lingam,. This is the prasada of the Kaumari Shakti, which allows the inward movement into the void nature of SAmbA-Shiva.

    Holy Paramacharya’s teachings contain indications of the above, in his various teachings on SriMuruga, etc.

    SriSri Guru krpahi kevalam

  2. There is an incident associated with Swami Brahmananda, direct disciple of Sri Ramakrishna. When he visited Tirupati Hill temple in 1911, he had darshan of Ambal, and not Balaji. He was baffled and when he made enquiries, he was told that it was originally Ambal temple, converted into Vishnu temple by Sri Ramanuja later. This was confirmed by the temple priests too. This is recorded in the book ” Swami Brahmananda As We Saw Him “.

    There is another clue. The extent of the Tamil speaking land was indicated in the ancient Tamil literature as ‘ ‘ the area between Venkata in the North and Kumari in the South.’ [ ” வட வேங்கடத் தென் குமரி ஆயிடைத் தமிழ் கூறு நல்லுலகம்”] As Kumari ( Kanyakumari) or Cape Comorin is known for Mother’s temple, it seems reasonable to assume that in the North too was a temple of the Mother as the guardian of the land.

    Sri Arunagirinatha visited nearly 200 kshetras which had Subrahmanya temples and sang Tiruppugazh hymns there. He visited Tirupati hills too and has sung 4 hymns ( 245-248 in Va.Su.Che, edition.) In his time
    ( 14-15 th Century) there was a Subrahmanya temple too here. This is evident from the following:

    சிறுத்தசெலு வதனு ளிருந்து
    பெருத்ததிரை யுததி கரந்து
    செறித்தமறை கொணர நிவந்த ஜெயமாலே

    செறித்தவளை கடலில் வரம்பு
    புதுக்கியிளை யவனோ டறிந்து
    செயிர்த்தஅநு மனையு முகந்து படையோடி

    மறப்புரிசை வளையு மிலங்கை
    யரக்கனொரு பதுமுடி சிந்த
    வளைத்தசிலை விஜய முகுந்தன் மருகோனே

    மலர்க்கமல வடிவுள செங்கை
    அயிற்குமர குகைவழி வந்த
    மலைச்சிகர வடமலை நின்ற பெருமாளே.

    (hymn 245)
    [ The first line refers to Vishnu’s Matsya avatara when He rescued the Veda. The next two lines refer to Ramavatara. The last line states that Lord Subrahmanya stands on the Hills. It is stated here that Lord Subrahmanya reached Tirupati Hills through a tunnel! ( குகை வழி வந்த) . This incident is recorded in the Tamil “Kanda Puranam” by Kachiappa Sivacharya.

  3. Reblogged this on Sage of Kanchi and commented:

    Thai Poosam Special!!! Vel Vel Murgua…..

  4. All knowing Maha Peryiavaa has made it known to people like us

    Maha Peryiavaa is God in human form and we are all gifted to know all this which would not have been possible without his divine presence

    Maha Peryiavaa Saranam

  5. This explanation is not just for ki.va.ja. It is for all the
    bhaktha kotis. Who else can explain in such a way other than our mahaperiyavaa.

  6. What an explanation! Other than Maha Periva, no one can give such precise reasoning…… HE did not enlighten the KiVaJa alone but thousands of devotee like us also. Charanam Sharanam!

  7. The explanation and Sanctity for Thirupathi, Sapthagri with the rider on whether Kaumari and Vaishnavi by the Maheswaran our MahaPerivaa most Thrilled And Divinic derived one. The discussion happened with Shri Ki.Va.Jagannathan , the Lord Muruga’s staunch Devotee. The mergence of both Both Thriumal and Marugan (Murugan), the Uncle and nephewe explanation only our Maha Guru alone the authority who knows the theory of the Shethram.

  8. மகா பெரியவாளின் explanation மலைக்க வைக்கிறது. திரு கி வா ஜா விற்கு எப்பேர்ப்பட்ட புண்ணியம். திருப்பதி பெருமாளுக்கும், பெரியவாளுக்கும் சாத்திய பரிவட்டம் அவர் மேனியை தழுவி உள்ளது. தெரியாத தகவலை மகா பெரியவா மூலம் தெரிந்து கொண்டேன்.

    லோகா சமஸ்தா சுகினோ பவந்து
    ராம் ராம் ராம்

Leave a Reply

%d bloggers like this: