Periyava Golden Quotes-498

album1_137

ஸோஷல் ரிஃபார்ம் கார்யம், சாஸ்திரத்தில் பிள்ளை பிறப்பதற்கும் பண ஸம்பாதனைக்கும் சொன்னதும் கார்யம்தான் என்றாலும் இரண்டையும் செய்வதிலே எத்தனை வித்யாஸமிருக்கிறது? இரண்டுக்கும் லக்ஷ்யம் லௌகிகம்தான். இருக்கட்டும். ஆனாலும் மதத்திலே ஒரு கார்யத்தைச் சொல்லியிருக்கும்போது அதை தெய்வ பரமான லக்ஷ்யமாக இல்லாமல் வாழ்க்கை முன்னேற்றத்திற்காகவே பண்ணும்போதுகூட தெய்வத்தின் நினைப்பு இருக்கிற விதத்திலேயே செய்திருக்கிறது. ஈஸ்வரனுக்கு, தேவதைகளுக்கு, சாஸ்திரங்களுக்கு, பெரியவர்களுக்கு அடங்கி பக்தியுடனே, ‘நாம் வேண்டுகிற வாழ்க்கை நலத்தை நம்மைவிடப் பெரிய ஒரு சக்திதான் தருகிறது’ என்ற நம்பிக்கையில்தான் இந்தக் கார்யங்களைப் பண்ணுகிறோம். அதாவது, … கொஞ்சம் விசித்திரமாகத் தான் இருக்கிறது . உலக ஸம்பந்தமான உபாயங்களைக் கொண்டே உலகுக்கு அப்பாற்பட்ட சக்தியைப் பிடிப்பதற்குத்தான் மதாசாரம் என்பது ஒரு பக்கம் உண்மையென்றால், இங்கேயோ ஒருவிதத்தில் அந்த ஈஸ்வர சக்தியை உபாயமாக வைத்துக் கொண்டு, உலக வாழ்க்கையிலே நன்மை பெறக் கார்யங்களைப் பண்ணுகிறோம்! இப்படிப்பட்ட கட்டுத் திட்டங்களுக்கு உட்பட்டுப் பண்ணு என்று சாஸ்திரம் சொல்கிறபடி கட்டுப்பட்டு ஒழுங்கோடு பண்ணுகிறோம். இப்படி இதிலே தொக்கி நிற்கிற தெய்வ பக்தி, நம்பிக்கை ஆகியவற்றாலும், side effect-ஆக உண்டாகிற அடக்கம், ஒழுங்குமுறை இவற்றினாலும், நாம் கேட்காமலே நமக்குக் கொஞ்சம் இவற்றினாலும், நாம் கேட்காமலே நமக்குக் கொஞ்சம் கொஞ்சமாகச் சித்த சுத்தியும் உண்டாக ஆரம்பிக்கிறது. அதிலே மேலே மேலே தேறிப் போகிறபோதுதான் தன்னாலே இதுபோன்ற அல்ப பலன்களுக்காக இல்லாமல் ஈஸ்வரனுக்காகவே மதாநுஷ்டானங்கள் பண்ண வேண்டும் என்ற பக்வம் உண்டாகிறது. இப்படி ஏதோ ஒரு விதத்தில் தெய்வ சிந்தனை, பூர்விக ஆசாரத்தில் ஒரு சிரத்தை இவற்றோடு கார்யம் பண்ணுவதற்கும், அடிமுதல் நுனிவரை எங்கேயும் தெய்வத்திற்கோ, ட்ரெடிஷனுக்கோ கட்டுப்படாமல், முழுக்க லௌகிகமாக தற்குறியாக, தறிகெட்டுக் கார்யம் பண்ணுவதற்கும் ரொம்ப வித்தியாஸமிருக்கிறது. அதனால் தான் லோக வாழ்க்கைக்கானதையே பண்ணும்போதுகூட, மத ஸம்பந்தமானவை ஒருத்தனுக்கு சித்த சுத்தியைக் கொடுக்க ஆரம்பிக்கிறதென்றால், வேறு விதமாகச் செய்வது சித்தத்தில் மேலும் அழுக்கையேற்றி அஹங்காரத் தடிப்பை ஜாஸ்தி பண்ணுகிறது. – ஜகத்குரு ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் அருள்மொழிகள்

Social reforms are also ‘actions’ and the practices prescribed by the scriptures to earn money or get progeny are also ‘actions’. But there is a vast difference between the two. The actions prescribed by the scriptures compel us to concentrate our mind on the Divine, even while performing these practices for worldly benefits. We bow down to the divine, the Devathas or heavenly beings, the Sastras, our elders, and perform these practices with the humble knowledge that there is a Superior Force above us who alone can confer these worldly benefits upon us. It is a little peculiar. If the religious practices make us seek the other Worldly Divine with the help of worldly instruments, here we are seeking divine help to realize our materialistic needs. When we conform to the rules and regulations prescribed by the scriptures, perform these rituals we develop some kind of humility and discipline. Due to this devotion and belief, gradually, as a side effect, this discipline we adhere starts cleansing our mind and after some time we start feeling that these rituals should be performed not for our own benefits but as offerings to the Divine Power. So there is a distinction between performing certain actions with a respect for the religion/traditions versus performing actions without an iota of belief in all these rules and regulations. So even if the aim is worldly benefit, the former practice gradually leads to a cleansing of the mind while the latter ends up in bloating the ego and corrupting the mind.  – Jagadguru Sri Chandrasekharendra Saraswathi Swamigal



Categories: Deivathin Kural, Golden Quotes

Tags:

Leave a Reply

%d