Periyava Golden Quotes-494


album1_133
ஜனங்கள் பொதுவாக “கர்மஸங்கி”களே. அதாவது கார்யத்தில்தான் கட்டுப்பட்டிருப்பவர்கள். அவர்களிடம் வெறுமனே ஆத்மா, த்யானம் என்று ஐடியல் நிலையைச் சொல்லிப் பிரயோஜனமில்லை. சாஸ்திரங்களில் அவர்களுக்கு அநேகக் காரியங்களைக் கொடுத்து அதற்கு த்ருஷ்டமாகவோ அத்ருஷ்டமாகவோ இன்னின்ன பலன் என்று சொல்லியிருக்கிறது. வேதத்தில் சொல்லியிருக்கப்பட்ட அநேக யாக யஜ்ஞங்களுக்கு இப்படிப்பட்ட பலன்களைத்தான் சொல்லியிருக்கிறது. இந்த தேசத்திலேயே மழை பெய்து தான்யஸம்ருத்தி உண்டாகும்; அல்லது மேதாவிலாஸம், ஸதஸில் வாக் விலாஸம் உண்டாகும்; முடிவாக ஸ்வர்க்கவாஸம் கிடைக்கும் என்றே சொல்லியிருக்கும். இந்திரியங்களால் இன்பங்களை அடையும் ஸ்வர்க்க வாஸத்தைத்தான் சொல்லியிருக்குமே தவிர, இந்திரிய பந்தமெல்லாம் தெறித்துப்போன மோக்ஷமான ஜீவ-ப்ரம்ம ஐக்கியத்தைக் கர்மாவுக்குப் பலனாக சொல்லியிருக்கவில்லை. ஏனென்றால் முதலிலேயே மோக்ஷம் என்றால் யாரும் அதை நாடமாட்டார்கள் என்று அதற்குக் கீழ்ப்பட்ட ஸ்வர்காதி ஸெளக்கியங்களுக்காகவே கர்மாவைக் கொடுத்து அந்தக் கர்மாவினால் இவனுக்கு உண்டாகிற கட்டுப்பாட்டிலிருந்து, இவனறியாமலும், உத்தேசிக்காமலும், விரும்பாமலுமேகூட இவனுக்குச் சித்தசுத்தி தந்து இவனைப் பாரமார்த்திகமாகத் திருப்பத்தான் இப்படிச் செய்திருக்கிறது.   – ஜகத்குரு ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் அருள்மொழிகள்

The general public is duty oriented.  There is no point in talking to them about esoteric things like the soul and the meditation. The scriptures have prescribed certain rituals for them and also enumerated certain visible or invisible results on performance of the same. Most of the Yagas and yagnas elaborated in the Vedas have such results. One yaga may lead to plentiful rains and a substantial harvest other may lead to victory in debates or facility in arguments and so on.  Eventually, a life in the heavens is promised.  Such a life has been promised as the ultimate culmination of ritualistic practices, where a fulfillment of the senses can be had. Nowhere the confluence of the individual soul and the Divine (jeeva brahma aikkyaa) has been promised as a fruit of the proper observance of the rituals. Nobody will observe the religious practices if liberation of the soul is the immediate aim. So lesser pleasures including a life in heavens are promised so that that a person gets interested in the performance of these duties and unknowingly, during the course of this practice, turns towards higher ideals because of the cleansing of his mind.Jagadguru Sri Chandrasekharendra Saraswathi Swamigal



Categories: Deivathin Kural

Tags:

What do you think?

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: