Jaya Jaya Sankara Hara Hara Sankara – A great incident depicted by Sri Periyava on the importance of Anna Dhanam and Siva Naama from Shri Ramani Anna’s book ‘Maha Periyavar’. This incident happens on a grand Maha Sivarathri day and what blessed souls those Chettiyar couple are!!
Many Jaya Jaya Sankara to our sathsang seva volunteer Shri.M. Venkataraman for the translation. Ram Ram.
ஜெய ஜெய சங்கர ஹர ஹர சங்கர !
மஹா பெரியவர் – (தொகுப்பு – ஸ்ரீ எஸ். ரமணி அண்ணா)
அன்னதான சிறப்புக்கு மஹா பெரியவர் சொன்ன கதை
பல வருடங்களுக்கு முன்பு, காஞ்சி மஹா ஸ்வாமிகள் கலவையில் தங்கியிருந்த நேரம். அன்று ஞாயிற்றுக் கிழமை. தரிசனத்துக்கு ஏகக் கூட்டம். ஒவ்வொருவராக நமஸ்கரித்து ஸ்வாமிகளிடம் ஆசி பெற்று நகர்ந்தனர். ஒரு நடுத்தர வயதுத் தம்பதி, ஆச்சார்யாளை நமஸ்கரித்து எழுந்து, கை கூப்பி நின்றனர். அவர்களைக் கூர்ந்து நோக்கிய ஸ்வாமிகள், “அடடே…யாரு…பாலூர் கோபாலனா ! ஒரு வருஷத்துக்கு முன்னாலே வந்திருந்தே. அப்போ….என்னமோ கஷ்டத்தையெல்லாம் சொல்லிண்டு வந்தயே…இப்ப சௌக்கியமா இருக்கியோல்லியோ ?” என்று சிரித்துக் கொண்டே வினவினார்.
உடனே அந்த பாலூர் கோபாலன், “பரம சௌக்கியமா இருக்கோம் பெரியவா. நீங்க உத்தரவு பண்ணபடியே நித்யம் மத்யான வேளைல ஒரு ‘அதிதி’ க்கு (எதிர்பாரா விருந்தாளி என்று சொல்லலாம்) சாப்பாடு போடா ஆரம்பிச்சதுலேர்ந்து நல்லதே நடந்துண்டு வர்றது பெரியவா !
வயல்கல்லே விளைச்சல் நன்னா ஆறது….முன்ன மாதிரி பசு மாடுகள் மறிச்சுப் போறதில்லை! பிடிபடாம செலவாயிண்டிருந்த பணம் இப்போல்லாம் கைல தங்கறது. எல்லாம் நீங்க அநுக்கிரகம் பண்ணி செய்யச் சொன்ன அதிதி போஜன மகிமை தான் பெரியவா….தினமும் செஞ்சுண்டிருக்கேன். வேற ஒண்ணும் இல்லே ” என்று கண்களில் நீர் மல்கக் கூறினார்.
அருகில் நின்றிருந்த அவர் மனைவியிடமும் ஆனந்தக் கண்ணீர். உடனே ஆச்சார்யாள், “பேஷ்…பேஷ். அதிதி போஜனம் பண்ணி வெக்கறதாலே நல்லது உண்டாறதுங்கறதை புரிஞ்சுண்டா சரி தான்…அது சரி. இன்னிக்கு நீங்க ரெண்டு பெரும் கெளம்பி இங்கே வந்துட்டேளே…அங்க பாலூர்ல யார் அதிதி போஜனம் பண்ணி வெப்பா ?” என்று கவலையுடன் விசாரித்தார்.
உடனே கோபாலனின் மனைவி பரபரப்போடு, “அதுக்கெல்லாம் மாத்து ஏற்பாடு பண்ணி வெச்சுட்டுத் தான் பெரியவா வந்திருக்கோம். ஒரு நாள் கூட அதிதி போஜனம் விட்டுப் போகாது !” என்றாள்.
இதைக் கேட்டவுடன் மஹா ஸ்வாமிகளுக்குப் பரம சந்தோஷம். “அப்படித் தான் பண்ணனும். பசிக்கிறவாளுக்கு சாப்பாடு பண்ணி வெக்கறதுலே ஒரு வைராக்கியம் வேணும். அதிதிக்கு உபசாரம் பண்றது, அப்டி ஒரு அநுக்கிரகத்தைப் பண்ணிக் குடும்பத்தைக் காப்பாத்தும்!
ஒரு நாள் சாட்சாத் பரமேஸ்வரனே அதிதி ரூபத்துலே வந்து ஒக்காந்து சாப்பிடுவார், தெரியுமா ?” – குதூகலத்துடன் பேசினார் ஸ்வாமிகள். இந்த அநுக்கிரக வார்த்தைகளை கேட்டு மகிழ, கியயூவில் நின்றிருந்த அனைவரும் விரைந்து வந்து ஸ்வாமிகளைச் சூழ்ந்து நின்று கொண்டனர். அனைவரையும் கீழே அமரச் சொல்லி ஜாடை காட்டினார் ஆச்சார்யாள். பக்தர் கூட்டம் கீழே அமர்ந்தது.
ஒரு பக்தர், ஸ்வாமிகளைப் பார்த்துக் கேட்டார்: “அதிதி போஜனம் பண்ணி வெக்கறதுலே அவ்வளவு மகிமை இருக்கா ஸ்வாமி ?”
உடனே ஸ்வாமிகள், “ஆமாமா! மோட்ஷத்துக்கே அழச்சுண்டு போகக் கூடிய மகா புண்ணிய தர்மம் அது ! ரொம்பப் பேருக்கு அனுகூலம் பண்ணி இருக்கு ! இத இந்த கோபாலன் மாதிரி அனுபவிச்சவாள் கிட்டே கேட்டாத் தான் சொல்லுவா. அப்பேற்ப்பட்ட ஒசந்த தர்மம் இது!” என்று உருக்கத்துடன் சொல்லி முடித்தார்.
ஒரு பக்தர் எழுந்து ஸ்வாமிகளை நமஸ்கரித்து விட்டுப் பவ்யமாக, “எம் பேரு ராமசேது. திருவண்ணாமலை சொந்த ஊர். ஆச்சார்யாளை நாங்க அத்தனை பேருமா சேர்ந்து பிரார்த்தனை பண்ணறோம்…இந்த அதிதி போஜன மகிமையைப் பத்தி இன்னும் கொஞ்சம் விஸ்தாரமா…நாங்கெல்லாம் நன்னா புரிஞ்சுக்கறாப்லே கேக்க ஆசைப்படறோம். பெரியவா கிருபை பண்ணனும் !” என்றார்.
அவரை அமரச் சொன்னார் ஸ்வாமிகள். பக்தர் அமர்ந்தார். அனைவரும் அமைதியுடன் அந்த நடமாடும் தெய்வத்தையே பார்த்துக் கொண்டிருந்தனர். சிறிது நேரத்துக்குப் பிறகு அந்த பரப்பிரம்மம் பேச ஆரம்பித்தது:
“ஆயிரத்துத் தொள்ளாயிரத்து முப்பதெட்டு..முப்பத்தொம்போதாம் வருஷம்னு ஞாபகம். ஸ்ரீ சங்கர மடம் கும்மாணத்லே (கும்பகோணம்) நிர்வாகம் பண்ணிண்டிருந்தது. அப்போ நடந்த ஒரு சம்பவந்தான் இப்போ நா சொல்லப் போறேன். அத நீங்கள்ளாம் சிரத்தையா கேட்டுட்டாலே இதுல இருக்கிற மகிமை நன்னா புரியும் ! சொல்லறேன், கேளுங்கோ. ” – சற்று நிறுத்தி விட்டு மீண்டும் தொடர்ந்தார் ஸ்வாமிகள்:
“கும்மாணம் மாமாங்கக் குளத்தின் மேலண்டக் கரைலே ஒரு பெரிய வீடு உண்டு. அதுலே குமரேசன் செட்டியார்னு பலசரக்குக் கடை வியாபாரி ஒருத்தர் குடியிருந்தார். நேக்கு நன்னா ஞாபகமிருக்கு…அவரோட தர்ம பத்தினி பேரு சிவகாமி ஆச்சி ! அவா காரைக்குடி பக்கத்துலே பள்ளத்துரச் சேர்ந்தவா. அந்தத் தம்பதிக்கு கொழந்த குட்டி கெடையாது. கடைத்தெரு மளிகைக் கடைய பாத்துக்கறதுக்கு அவா ஊர்லேர்ந்தே நம்பகமா ஒரு செட்டியார் பையனை அழச்சுண்டு வந்து வீட்டோட வெச்சுண்டிருந்தா.
குமரேசன் செட்டியாருக்கு அப்போ, அம்பது, அம்பத்தஞ்சு வயசு இருக்கலாம்……..அந்த ஆச்சிக்கு அம்பதுக்குள்ளதான் இருக்கும். சதா சர்வ காலமும் அவா ரெண்டு பேரோட வாய்லேர்ந்தும் “சிவ சிவ சிவ சிவ” ங்கற நாமஸ்மரணம் தான் வந்துண்டு இருக்கும். வேற பேச்சே கெடையாது ! செட்டியார் வீட்ல ஒரு ஒத்தை மாட்டுவண்டி இருந்துது. அதுல ஆச்சிய ஒக்கார வெச்சுண்டு செட்டியாரே ஒட்டிண்டு போவார் ! நித்யம் காலங்கார்த்தால ரெண்டு பேரும் வண்டில காவிரிக்கு ஸ்நானம் பண்ண வருவா….ஸ்நானத்த முடிச்சுண்டு அப்டியே நம்ம மடத்துக்கும் வந்து நமஸ்காரம் பண்ணிப்ட்டு ஆசீர்வாதம் வாங்கிண்டு போவா . அப்பிடி ஒரு அன்யோன்ய தம்பதியா அவா இருந்தா. அவாளப் பத்தி, இதையெல்லாம் விட தூக்கியடிக்கக் கூடிய ஒரு சமாச்சாரம் சொல்லப் போறேன், பாருங்கோ…”
– சொல்லி விட்டு சஸ்பென்சாக கொஞ்ச நாழிகை மௌனம் மேற்கொண்டார் ஸ்வாமிகள். சுவாரசியமாகக் கேட்டுக் கொண்டிருந்த பக்தர்கள், ஸ்வாமிகள் என்ன சொல்லப் போகிறாரோ என ஆர்வத்துடன் காத்திருந்தனர். ஆச்சார்யாள் மீண்டும் பேசத் தொடங்கினார்: “பல வருஷங்களா அந்தத் தம்பதி என்ன காரியம் பண்ணிண்டு வந்திருக்கா தெரியுமா ? அதிதிகளுக்கு உபச்சாரம் பண்றது! ஆச்சர்யப்படாதீங்கோ ! அந்த தம்பதிகள் பல வருஷங்களா அதிதி போஜனம் பண்ணிண்டு இருந்தா ! பிரதி தினமும் மத்தியானம் எத்தனை சிவனடியார்கள் வந்தாலும், அவாளுக்கு எல்லாம் முகம் கோணாம வீட்டுக் கூடத்திலே ஒக்காத்தி வெச்சு போஜனம் பண்ணி வெப்பா. சிவனடியார்களை வாசத் திண்ணையில் ஒக்கார வெச்சு ரெண்டு பெறுமா சேர்ந்து கை கால் அலம்பி விட்டு, வஸ்திரத்தாலே தொடச்சு விட்டு…சந்தனம் – குங்குமம் இட்டு கூடத்துக்கு அழச்சுண்டு போய் ஒக்காத்துவா.
அவா க்ருஹத்திலே சமையல்காரா ஒத்தரையும் வெச்சுக்கலே ! எத்தனை அதிதி வந்தாலும் அந்தம்மாவே தன் கையாலே சமைச்சுப் போடுவா! அதுலேயும் இன்னொரு முக்கியமான விஷயம் என்னன்னு கேட்டேள்னா, வந்துருக்கற சிவனடியார்களுக்கு என்னென்ன காய்கறிகள், பதார்த்தங்கள் புடிக்குமோ அதை அவா கிட்டேயே கேட்டுண்டு போய், வாங்கிண்டு வந்து பண்ணிப் போடுவா ! அப்டி ஒரு ஒசந்த மனசு! இதெல்லாம் ஸ்வாமிகளுக்கு எப்படித் தெரியும்னு யோசிக்கறேளா…அது வேற ஒரு ரகசியமும் இல்லே. மடத்துக்கு ரொம்ப வேண்டிய சுந்தரமைய்யர்ங்கறவர் குமரேசன் செட்டியாரோட கணக்கு வழக்குகளைப் பார்த்துண்டு இருந்தார். அவர் தான் சாவகசமா இருக்கறச்சே இதை எல்லாம் வந்து சொல்லுவார்! இப்ப புரிஞ்சுதா? ”
சற்று நிறுத்தி தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டார், ஆச்சார்யாள். அமர்ந்திருந்த ஒருவரும் இப்படி அப்படி அசையவில்லை. மஹா ஸ்வாமிகளையே வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தனர். அந்த நடமாடும் தெய்வம் தொடர்ந்தது: ” ஒரு நாள் நல்ல மழை பேஞ்சுண்டிருந்தது. உச்சி வேளை. ஒரு அதிதியக் கூடக் காணோம்! கொடையப் புடிச்சுண்டு மஹாமகப் கொளத்துப் படிகள்ளே எறங்கிப் பார்த்தார் செட்டியார். அங்க ஒரு சின்ன மண்டபத்துலே சிவனடியார் ஒருத்தர் ஸ்நானமெல்லாம் பண்ணி விபூதி எல்லாம் பூசிண்டு ஒக்காந்திருந்தார். அவரைப் பிரார்த்திச்சு போஜனத்துக்கு அழைச்சுண்டு வந்தார் செட்டியார். அவர் கொஞ்சம் நன்னா வாசிச்ச சிவனடியார் போலிருக்கு. தேவாரமெல்லாம் பாடிண்டே வந்தார். கால் அலம்பி விட்டுக் கூடத்துக்கு அவரை அழைச்சுண்டு போய் ஒக்கார வெச்சார் செட்டியார். சிவனடியாரை நமஸ்காரம் பண்ணியது அந்தத் தம்பதி. செட்டியாரின் தர்ம பத்தினி சிவனடியார் கிட்டே போய், “ஸ்வாமிக்கு என்ன காய்கறி புடிக்கும் ? சொல்லுங்கோ. கடைக்குப் போய் வாங்கிண்டு வந்து சமைச்சுப் போட்டுடறேன்’ என்று கேட்டார்.
சிவனடியார்க்கோ நல்ல பசி போல. அவர் எழுந்திருந்து கொல்லப் பக்கம் போய்ப் பார்த்தார். கொள்ளையிலே நிறைய முளைக் கீரை மொளைச்சிருந்ததைப் பார்த்தார். உள்ளே வந்தார். அந்த அம்மாவைக் கூப்பிட்டு, தனக்கு ‘வேற ஒண்ணும் வேண்டாம். மொளக்கீர கூட்டும், கீரத் தண்டு சாம்பாரும் பண்ணாப் போறும்’ னார். கைல ஒரு மூங்கில் தட்டோட கீரை பறிக்கப் போனார் செட்டியார். அப்போ மழையும் விட்டுடுத்து. நாழி ஆயிண்டே போச்சு. சிவனடியார்க்கோ நல்ல பசி. கீரைய நாமும் சேர்ந்து பறிச்சா சீக்கிரமா முடியுமேங்கற எண்ணத்துலே, தானும் ஒரு மூங்கில் தட்ட வாங்கிண்டு கீரை பறிக்கப் போனார் சிவனடியார்.
இவா ரெண்டு பேரும் கீரை பறிக்கறத சிவகாமி ஆச்சி கொல்லை வாசப்படியிலே நின்னு பாத்துண்டிருந்தா. பறிச்சப்பறம் ரெண்டு பேரும் கீரைத் தட்டைக் கொண்டு வந்து உள்ளே வந்து வெச்சா ! அந்தம்மா ஒடனே என்ன பண்ணா தெரியுமா ? ரெண்டு தட்டுக் கீரையையும் தனித்தனியா அலம்பினா. ரெண்டு அடுப்பைத் தனித்தனியா மூட்டினா. ரெண்டு தனித்தனி வாணலியிலே கீரையைப் போட்டு…அடுப்புலே ஏத்தி சமைக்க ஆரம்பிச்சா. அதைப் பார்த்துண்டிருந்த சிவனடியார்க்கு ரொம்ப ஆச்சர்யம் ! ‘என்னடா இது..ரெண்டும் ஒரே மொளக் கீரை தானே. ஒரே பாத்திரத்துலே போட்டு சமைக்காம இப்படி தனித் தனியா அடுப்பு மூட்டி இந்தம்மா பண்றாளே’ னு கொழம்பினார்.
சித்த நாழி கழிச்சு, கீர வாணலி இரண்டையும் கீழே எறக்கி வெச்ச அந்தம்மா, சிவனடியாரோட கீரைய மாத்திரம் தனியா எடுத்துண்டு போய் பூஜை ‘ரூம்’லே ஸ்வாமிக்கு நிவேதனம் பண்ணினா. இதைப் பார்த்துண்டு இருந்த சிவனடியாருக்கு பெருமை பிடிபடல்லே ! அவர் என்ன நெனச்சுண்டுண்டார் தெரியுமா ?’ நாம ஒரு பெரிய சிவ பக்தன்…சந்யாசி. அதனாலே நாம பறிச்ச கீரையைத் தான் சிவபெருமான் ஏத்துப்பார்’ ங்கறதை இந்தம்மா புரிஞ்சுண்டு, நிவேதனம் பண்ணறா’ னு தீர்மானிச்சுண்டுட்டார். இருந்தாலும் போஜனம் பண்ணப்றம் இந்த நிவேதன விஷயத்தை அந்தம்மாகிட்டவே கேட்டுடணம்னு தீர்மானம் பண்ணிண்டார்.”
– இங்கு சற்று நிறுத்தி எதிரில் இருந்த பக்தர்களைப் பார்த்தார் ஸ்வாமிகள். ஒருவரும் வாய் திறக்கவில்லை. மீண்டும் பேச ஆரம்பித்தார்: “போஜனம் முடிஞ்சு வந்து ஒக்காந்த சிவனடியார் தன் சந்தேகத்தை அந்த அந்த ஆச்சிகிட்டே கேட்டுட்டார். ஆச்சி என்ன பதில் சொன்னா தெரியுமா ? ‘ஐயா கொல்லைல கீரை பறிக்கறச்சே நா பாத்துண்டே இருக்கேன். என் பர்த்தா ‘சிவ..சிவ’ னு சிவ நாமத்தை சொல்லிண்டே பறிச்சார். அது, அப்பவே சிவார்ப்பணம் ஆயிடுத்து.
திரும்ப நிவேதிக்க வேண்டிய அவசியம் இல்லே. நீங்க ஒண்ணுமே சொல்லாம பறிச்சேள். அதனாலே தான் தனியா அடுப்பு மூட்டி ஒங்க கீரையை மட்டும் கொண்டு வெச்சு ஸ்வாமிக்கு அர்ப்பணம் பண்ணினேன்’ னு சொன்னா. இதை கேட்ட ஒடனே அந்த சிவனடியாருக்கு என்னமோ மாதிரி ஆயிடுத்து. ரொம்ப சங்கோஜப் பட்டுண்டார். தம்பதி ரெண்டு பேரும் சிவனடியாரை நமஸ்காரம் பண்ணினா. ஆசீர்வாதம் பண்ணிப்டு, அந்த ஆச்சியோட பக்தியையும், புத்திசாலித்தனத்தையும் பாராட்டிப் புறப்பட்டார்! அப்டி அன்னம் (சாப்பாடு) போட்ட ஒரு தம்பதி அவா…”
நிறுத்தினார் ஆச்சார்யாள். பக்தர் கூட்டம் பிரமிப்புடன் அமர்ந்திருந்தது. ஒருவரும் வாய் திறக்கவில்லை. ஸ்வாமிகள் தொடர்ந்தார்: “இப்படி விடாம அதிதி போஜனத்தை பிரதி தினமும் பண்ணி வெச்சுண்டிருந்த அவாளுக்கு கெடச்ச ‘பல ப்ராப்தி’ (பிரயோஜனம்) என்ன தெரியுமா ? சில வருஷங்கள் கழிச்சு ‘சஷ்டியப்த பூர்த்தி’ (60 வயது பூர்த்தி) எல்லாம் அவா பண்ணிண்டா. ஒரு மஹா சிவராத்திரி அன்னிக்கு கும்பேஸ்வர ஸ்வாமி கோயில்லே நாலு கால பூஜைல ஒக்காந்து தரிசனம் பண்ணா. வீட்டுக்குத் திரும்பின அந்த அம்மா தனக்கு ‘ஓச்சலா இருக்கு’ னு சொல்லிப்டு பூஜை ரூம்லே ஒக்காந்தவ அப்படியே கீழே சாஞ்சுட்டா. பதறிப் போய்…சிவகாமினு கத்திண்டே உள்ளே போன செட்டியாரும், அந்தம்மா பக்கத்துலேயே சாஞ்சுட்டார். அவ்வளவு தான். அந்த மஹா சிவராத்திரி அன்னிக்கே ரெண்டு பேரும் ஜோடியா ‘சிவ சாயுஜ்ய’ த்த அடஞ்சுட்டா. அதிதி போஜனம் விடாம பண்ணி வெச்சதுக்கு அந்த தம்பதிக்குக் கெடச்ச ‘பதவி’ யப் பார்த்தேளா ? இப்பவும் ஒவ்வொரு மஹா சிவராத்ரி அன்னிக்கும் அந்த தம்பதிய நெனச்சுப்பேன். அப்படி அன்னம் போட்ட ஒரு தம்பதி அவா…”
முடித்தார் ஆச்சார்யாள்! கேட்டுக் கொண்டிருந்த அனைவரின் கண்களிலும் நீர் கசிந்தது. இடத்தை விட்டு எழுந்த அந்த நடமாடும் தெய்வம், “மணி கிட்டதிட்ட ரெண்டு ஆயிடுத்து போலிருக்கு. எல்லோருக்கும் பசிக்கும். போங்கோ…உள்ளே போய் நன்னா சாப்பிடுங்கோ” எனக் கருணையுடன் அனுப்பி வைத்தது.
The Significance of Annadhaana told by Maha Periyavar
Maha Periyavar – Complied by Sri S Ramani Anna
This incident took place several years ago when Kanchi Maha Swamigal was staying at Kalavai. On a Sunday, a large crowd was waiting for darshan of Swamigal. One by one devotees were doing namaskaaram to Swamigal and getting his blessings. One middle aged couple did namaskaaram to Swamigal and stood with folded hands. Swamigal peered at them and said with a smile “Is it Paalur Gopalan? One year ago you came and told me about your difficulties. Are you doing fine now?”
With tears Paalur Gopalan said “We are very fine Periyavaa. As instructed by you, we have been feeding one guest every afternoon. From that time our fortunes have been good. Our lands give good harvest. Cows don’t die as in the past. Expenses which used to be abnormal have come under control. All these are blessings of Athithi bhojanam Periyavaa. I am doing it daily and that is all.”
His wife was also shedding tears of joy. Periyavar asked with concern “Good, I am glad that you have understood the benefits of Athithi bhojanam. But today you are here and who will do Athithi bhojanam in Paalur?”
With excitement, Gopalan’s wife said “Periyavaa, we have made arrangement to organize Athithi bhojanam and then only we have come here. Athithi bhojanam will not be stopped on any day.”
Maha Swamigal was very happy to hear this information. He said “That is what you must do. You must have firm commitment to feed at least one person who is hungry every day. Athithi bhojanam will give so much punyam that it will protect your entire family! Do you know that one day sakshaath Parameswaran himself will come as an Athithi and eat in your home?” Periyavar was speaking with lot of joy. All devotees who were in the queue gathered around Swamigal to listen to his discourse. Periyavar asked all to sit down.
One devotee asked “Swami, is Athithi bhojanam so beneficial?” Periyavar said with compassion “Yes. It is such a great dharmam that it can take one to moksham! Several people have enjoyed the blessings of Athithi bhojanam. If you ask people like Gopalan, who have benefitted from this dharmam, you can understand its greatness.”
One bakthar did namaskaaram to Swamigal and said “I am Ramasethu from Thiruvannaamalai. We all pray to Periyavaa to explain the greatness of Athithi bhojanam in such a way that we all can understand. Periyavaa should oblige.”
Periyavar asked him to sit down and all devotees were quietly looking at Swamigal. After some time Swamigal started talking. “I will tell you about an incident that happened in 1938 or 1939. If you listen attentively you will understand the greatness of Athithi bhojanam. Sri Sankara Mutt was established in Kumbakonam then. On the western side of Mahaamaha kulam there was a large house. Kumaresan chettiar, who owned a provision store, used to live in that house. I remember that his wife’s name was Sivakami Aachi. They did not have children. They brought a young chettiar boy and made him stay with them to manage the shop. Chettiar and his wife were about 50 years old. Always they will be chanting “Siva, Siva, Siva”. They never indulged in any other talk. He had a bullock cart. Every day he and his wife used to go to Cauvery in this cart to do snanam. Then they will come to Sri Matam to do namaskaaram. They were such a compatible couple and I am going to narrate a wonderful event.”
Swamigal remained silent for some time and all devotees were very curious to know what event Periyavar is going to talk about. Periyavar resumed his discourse and said “For several years this couple have been doing Athithi bhojanam. Don’t be surprised. Every afternoon they will feed any number of Siva devotees who come to their house. Outside the house they used to receive the Siva devotees, wash their feet, wipe them with a towel, apply sandalwood paste and kumkumam and then escort them into the house.
They did not employ a cook in their house. Sivakami Aachi used to cook for all Athithis. Thy used to ask the Athithis what they like and then buy those vegetables, provisions and then cook food of their choice. They were so large hearted. You must be wondering how Swamigal came to know these details. Sundaram Iyer, who is a staunch devotee of Kanchi Mutt, used to manage the accounts of Kumaresan Chettiar. He used to tell these details to Swamigal.”
Swamigal stopped for a while and the devotees were all looking at him with concentration. Periyavar continued to say “One day it was raining heavily. At lunch time no Athithi had come to Chettiar’s house. With an umbrella, Chettiar went around the kulam in search of Siva devotees. In a small Mandapam he saw a Siva devotee sitting after bath. Chettiar invited him to his house for bhojanam. The devotee appeared to be a scholar. While coming he sang Thevaram. After washing his feet, Chettiar made the devotee to sit inside his house. Chettiar’s wife did namaskaaram to the Athithi and asked “Swami, what vegetables do you like? Please tell me so that I can buy them to cook food.”
The Sivanadiar seemed to be hungry. He went to the backyard and saw plenty of Mulai keerai was grown there. He told Mrs. Chettiar that he will be happy with Keerai Kuutu and Keerai thandu sambar. Chettiar went with a basket to pluck keerai. Since Sivanadiar was hungry he went with another basket to help Chettiar to pluck keerai so that it can be completed fast. Sivakami Aachi noticed that both of them were plucking keerai.
Once they finished the job, Aachi washed both bunches of keerai separately and started cooking them in two separate stoves. Sivanadiar was wondering why Aachi is cooking same keerai in two different vessels. After cooking, Aachi took the keerai plucked by Sivanadiar and offered to God as naivedhyam. Sivanadiar felt very happy as he assumed that she is offering keerai plucked by the Sivanadiar to God because it must be superior as it was plucked by an adiar. But he decided to ask the lady about this matter after lunch.”
“After lunch Sivanadiar asked Aachi why she offered only keerai plucked by Sivanadiar to God. She said my husband was chanting Siva naama while plucking the leaves and hence it has already been offered to God and there is no need to do nivedhanam again. But you plucked the leaves silently. So I cooked them separately and offered to God. Sivanadiar felt humble on hearing this. When they did namaskaaram the Sivanadiar blessed them and also appreciated her bakthi and intelligence.
Do you know what benefit this couple got by doing such wonderful Athithi bhojanam? After few years they performed Shastibada poorthy (60th birth day) for Chettiar. On one Maha Sivarathri day they saw four kaala Pooja in Kumbeswara Swami temple and came home. Sivakami Aachi said she was feeling tired and sat in the Pooja room and just collapsed. Chettiar who rushed to help her also collapsed near her. On that great Maha Sivarathri day the couple reached the lotus feet of Lord Siva. You see the benefit of Athithi bhojanam. On every Sivarathri day I remember that dedicated couple because they had done such a great Athithi bhojanam.”
When Periyavar completed this upanyasam everyone had tears in their eyes. Swamigal got up and said with compassion “It is 2 O clock. You must all be hungry. Please go and eat well.”
Categories: Devotee Experiences
I had taken sankalpa few years back not to eat my dinner with out offering food to some deserving person. I used to pack Idli (or) Dosa (or) Curd Rice and go around looking for a person in the streets to offer. Only after many attempts, will I find some one who will accept my offering. On one occasion, I was coming back from Delhi to Bangalore and the flight landed at around 10pm. En-route to my home from Airport, I found a hotel to pack some items & was looking for some one to offer to. Around 11:30pm, I found a muslim old gentlemen walking on the streets and I asked the cab driver to stop to check with him if he will accept my food after briefly explaining my sankalpa. The muslim old man after accepting, looked up the sky & shouted, “Hey Allaha!!!”. I realized this man seem to have been praying to the god for food & I was so happy to be an instrument of the god that day. The cab driver who was watching all this explained to me about an auto driver who offers 40% of his daily earning to feed people. I then realized how small is my act. But some how the above act of mine didn’t continue after few months
I am inspired now to continue my Anna Dhanam after reading this post. thank you…
Wonderful!
மகா பெரியவா திருவடி சரணம் …
படிக்கும் பொழுதே கண்களில் கண்ணீர் வருகிறது. பெரியவா நேரிடையாக நம் முன் அமர்ந்து சொல்வது போன்ற ஒரு உணர்வு. அதிதி போஜனத்தின் அருமையை உணர்ந்து கொண்டேன். செட்டியார் தம்பதி எவ்வளவு புண்ணியம் செய்து இருக்கிறார்கள் . அதனால் தான் சிவராத்திரி அன்று சிவலோக பிராப்தி அடைந்து உள்ளார்கள். அதுவும் மகா பெரியவா ஒவ்வொரு சிவராத்திரி அன்றும் அந்த தம்பதியினரை நினைத்து கொள்வேன் என்று சொன்னது அந்த தம்பதியர் எவ்வளவு பெரிய புண்ணியம் செய்து மகா பெரியவா மனதில் நீக்கமற நிறைந்து உள்ளார்கள் …
இந்த 19ம் தேதி ஞாயிற்று கிழமை காஞ்சி சென்று மகா பெரியவா பிருந்தாவனத்தில் பெரியவாளை மனதார தரிசனம் செய்யும் பேறு பெற்றேன்
லோகா ஸமஸ்த சுகினோ பவந்து ……
ராம் ராம் ராம்
நன்றி
உமா வெங்கட்
I have read this several times in the past. However, feel that each time is the first time. What a blessing to the Chettiar couple! Hara Hara Sankara! Jaya Jaya Sankara!