பகவான் கீதையில் நன்றாக எச்சரிக்கை பண்ணியிருக்கிறார். “லோகாசாரங்களுக்கு, உலக வழக்குகளுக்கு வித்யாஸமாக நீ போனாயானால் (உன்னளவில் நீ அவற்றை விட்டு விடலாமென்றாலுங்கூட) நீ ஜனங்களுக்குத் தப்பான வழிகாட்டியாகி விடுவாய். உன்னைப் பார்த்து அவர்களும் அவற்றை விட்டு விடுவார்கள். ஆனால் நீ உன்னுடைய பக்வ விசேஷத்தால் இப்போது விட்டதைவிட உசந்த வழிக்குப் போகக்கூடுமென்றாலும், ஸாதாரண ஜனங்கள் தற்போது இருக்கிற ஸ்தானத்தை விட்டதோடு மட்டும் இருக்குமே தவிர, விட்டபின் இதைவிட உசத்தியான ஒன்றைப் பிடித்துக் கொள்ள அவர்களுக்கு சக்தியும், ஸம்ஸ்காரமும் போதாது. இருக்கிற பிடிப்பையும் விட்டு விட்டு இன்னம் கீழே விழுந்து விடுவார்கள்” என்ற இவ்வளவு அபிப்ராயங்களையும் அடக்கித்தான், அடைத்து வைத்துத்தான்
ஸக்தா: கர்மண்யவித்வாம்ஸோ யதா குர்வந்தி பாரத |
குர்யாத் வித்வாம்ஸ்ததா (அ) ஸக்த சிகீர்ஷுர் லோகஸங்க்ரஹம் ||
புத்தி பேதம் ந ஜநயேத் அஜ்ஞானாம் கர்ம ஸங்கிநாம்
என்றார் [3.25-26]. – ஜகத்குரு ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் அருள்மொழிகள்
Lord Krishna has issued a clear warning to the leaders in Srimad Bhagawad Gita. “Even if you have attained a stage in which you can give up traditions and accepted social practices, if you do so, you will be sending a wrong signal to the public. They will also give up these traditions. You may be able to attain a higher stage due to your maturity, but the common man will not have the strength or the regular practice of rituals to do so. He will fall further down”. All these points are included in the sloka “Saktaahaa karmanyavidwaamso…” (3.25.26) – Jagadguru Sri Chandrasekharendra Saraswathi Swamigal
Categories: Deivathin Kural, Golden Quotes
Can I circulate the Maha Periyava Qutotes to my friends through whatsapp
Absolutely!! You can also share these golden quotes using the buttons specified at the bottom of the post. Ram Ram