நாஸ்திகர்கள் என்று போகிறவர்களை விட்டு விடலாம். அவர்கள் ரொம்பக் கொஞ்சம் பேர்தான். “ரிலிஜன்” என்று போற்றிச் சொல்லி, “நாங்கள்தான் வேதத்தின் ஸ்பிரிட்டை ஸரியாகப் புரிந்து கொண்டு இன்டர்ப்ரெட் பண்ணுகிறோம்”, “அதை ‘ஆர்த்தடாக்ஸி’யின் ஆதிக்யத்திலிருந்து மீட்டு உள்ளபடி ப்ரகாசம் பண்ணுகிறோம்.” என்று சொல்லிக் கொண்டே ரிஃபார்ம்காரர்கள் அநாதிகாலமாய் ஒழுங்காயிருந்து வந்த ஸமுதாயத்தைக் கட்டுப்பாடேயில்லாமல் ‘டிஃபார்ம்’ [உருக்குலைவு] பண்ணுகிறார்களே என்பதுதான் துக்கமாயிருக்கிறது. ஆயிரலக்ஷம் ஆசாபாசங்கள், அழுக்குகள் இருக்கிறவர்களை எடுத்த எடுப்பில் உச்சாணிக் கொம்பிலுள்ள மனஸ் சுத்தத்துக்கு ஏறுங்கள் என்று, சொல்லி தாங்கள் இங்கேயுமில்லாமல் அங்கேயுமில்லாமல் திரிசங்கு லோகத்தில் தொங்குவது போதாது என்று, மற்றவர்களையும் அவர்கள் ஏற்கனவே இருந்த இடத்துக்கும் கீழே உருட்டி விடுகிறார்களேயென்று துக்கம் துக்கமாக வருகிறது. வேறே ஒன்றும் தெரியாவிட்டாலும், ஈஸ்வரன் என்று ஒருத்தனுக்கு பயந்து தர்ம நியாயமாக நடக்கவேண்டும்; பெரியவர்கள், முன்னோர்கள் காட்டும் வழியில் போகவேண்டும் என்பதால் இதுவரை ஜனங்களுக்கு இருந்த ஒழுக்கத்தையும் பணிவையும்கூட இந்தச் சீர்திருத்தங்கள் போகப் பண்ணிவிட்டன. ஸ்வதந்திரம், ஸ்வதந்திரம் என்று சொல்லி எல்லோரையும் – ஸ்வபாவமாக விநயகுணம் உள்ள நம்முடைய, நல்ல பொது ஜனங்களை – மமதையில் கொண்டு தள்ளியிருப்பதுதான் சீர்திருத்தவாதிகள் செய்திருக்கிற கைங்கர்யம். யாரும் யாருக்கும் அடங்க மாட்டோம் என்று ஆக்கியிருக்கிறார்கள். எல்லாருக்கும் ஸ்வயநலம்தான் – ரைட் ரைட் என்ற பெயரில் – ஸகலமுமாகி விட்டது.
ஆனபடியால், “நாங்கள் ஹிந்து மத அபிமானிகள் தான்; நாங்கள்தான் நிஜமான ஹிந்துமதத்தின் அபிமானிகள்; we are for religion” என்று சொல்லிக் கொண்டே, இவர்கள் “கார்யத்தில் சாஸ்த்ர விரோதமாக எதை வேண்டுமானாலும் செய்வோம்” என்று போகிறவரையில் இவர்கள் பிரசாரம் செய்வது irreligion [மத விரோதம்] தான். ‘சாஸ்திரம் வேண்டாம், சடங்கு வேண்டாம், மனஸ் தான்’ என்று இருக்கிறவன் ஒன்றுக்கும் உதவாதவன்தான். – ஜகத்குரு ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் அருள்மொழிகள்
One can ignore the non-believers who are in minority. What is sad is that those eulogizing the religion claim to have found the right interpretation to the Vedic spirit and declare that they will free it from the dominance of orthodoxy and make it shine. In the process the discipline of the society has collapsed and the reformists have deformed the society. This pains the heart. These reformists themselves are occupying a Trishanku Sorga (hanging between the heaven and the earth). But they are pushing the people down to the depths of the earth by advising them to practice a purity of mind which is very difficult when a person is full of desires and impurities in his heart. At least the fear of God had kept the people disciplined, inducing them to follow the rules of Justice and dharma and tread in the path shown by the ancestors. The only contribution of the reformists has been to make the fundamentally humble public arrogant in the name of reformation and independence. In their quest for Rights, everybody has become self-centered and are not ready to be controlled by anyone. Hence as long as these reformers continue to act against the scriptures claiming to be true followers of the Hindu religion their propaganda should be considered as irreligious. A person, who cries out for the purity of mind disregarding scriptures and rituals, is definitely useless. – Jagadguru Sri Chandrasekharendra Saraswathi Swamigal
Categories: Deivathin Kural, Golden Quotes
Leave a Reply