Periyava Golden Quotes-478

album1_116

ரிஃபார்ம் லீடர்களுக்கும் ஃபாலோயர்களுக்கும் [அவர்களைப் பின்பற்றுவோருக்கும்] இடையே ஒரு வித்யாஸம். இதைக் கொஞ்சம் பார்க்கலாம். இந்த நாளில் மதம் விதிக்கிற சீலங்கள் (religious virutes) மத ஸம்பந்தமில்லாத வெறும் ethical excellences (நன்னெறிப் பண்புகள்) என்று ஒரு விசித்ரமான பாகுபாடு பண்ணுவது வழக்கமாயிருக்கிறது. மத ஸம்பந்தம் அதாவது ஈஸ்வரப் பிரேரணையான [மத] சாஸ்திர ஸம்பந்தம் என்பது இல்லாமல் நன்னெறி, ethics,morality என்று எதுவுமே இல்லை. ஆனாலும் இப்படி ‘சாஸ்திரம்’ என்று பூர்விகக் கட்டுப்பாட்டுக்கு அடங்கி நடக்கிறோம் என்றால் அது இந்தக் காலத்தவருக்கு அவமானமாக, தங்கள் கௌரவத்தைக் குறைத்துக் கொள்வதாக இருக்கிறது. சாஸ்திரங்களில் கண்ணுக்குத் தெரியாத ‘அத்ருஷ்ட’ தத்வங்களை base பண்ணியே அநேக தர்மங்களையும், அந்த தர்மங்களை நடைமுறையில் காட்டுவதற்கான கர்மங்களையும் சொல்லியிருப்பதெல்லாம் ‘ஸுபர்ஸ்டிஷன்’ என்று மேல்நாட்டுக்காரர்கள் சொல்வதால் இதையெல்லாம் நாம் ஏன் அநுஸரிக்க வேண்டும் என்று அவமானமாயிருக்கிறது. நம் சாஸ்திரத்தை நாம் ஸரியாகப் புரிந்துகொண்டு அவர்களுக்கு எடுத்துச் சொல்ல வேண்டும் என்றில்லாமல், அவர்கள் தங்களுடைய பார்வையில் பட்டபடி இதைப்பற்றிச் தப்பாகச் சொல்வதையெல்லாம் நம்மவர்களே எடுத்துக் கொண்டு ஃபாஷனாக ரிஃபார்ம் பண்ணிவிட வேண்டுமென்று ஆரம்பிக்கிறார்கள். கொஞ்ச காலமாக, நாம் எடுத்துச் சொல்லாமலே, வெள்ளைக்காரர்கள் தாங்களாக ஆராய்ச்சிகளும் பரிசோதனைகளும் பண்ணி ஏற்கனவே தாங்கள் பரிஹாஸம் பண்ணின அநேக ஸமாசாரங்களைப் பெரிசாகக் கொண்டாட ஆரம்பித்திருக்கிறார்கள். ஹோமம் பண்ணுவதில் பலன் இருக்கிறது. மந்திரத்தில் பலன் இருக்கிறது, லோகாந்தரங்கள் இருக்கின்றன என்றெல்லாம் அவர்களே ஆரம்பித்திருக்கிறார்கள். இப்போது அவர்கள் ஸர்ட்டிஃபிகேட்டின் மீது நம்மவர்களும் இவற்றைக் கொஞ்சம் ஒப்புக் கொள்ள ஆரம்பித்திருக்கிறார்கள். – ஜகத்குரு ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் அருள்மொழிகள்
Let us look at the differences between the reformers and their followers. Nowadays, there is a tendency to make a peculiar distinction between religious virtues and ethical values. Ethics cannot be separated from religion and sastras which are indeed the command of Eswara, the Divine Supreme. But, in the present time, many consider it a matter of shame and loss of prestige to follow the traditional restrictions prescribed by our sastras. The latter have stipulated certain virtues and a code of conduct for the actual practice of these virtues based on certain subtle philosophical principles which are not visible to the naked eye. Since the Westerners dismiss these as superstitions, our people also decide to follow suit. They feel ashamed to adhere to the ancient traditions and sastras.  They do not realize that they should develop a proper perception of our scriptures and make the Westerners understand it. Instead they adapt the improper perspective and criticism of the Westerners and set forth on the path of reformation. In the recent days, without any of our initiative, Westerners have started eulogizing many of our traditional practices which they had mocked at earlier, after certain research and experiments of their own. They are declaring that Homams and mantras have a certain power of their own and can confer certain worldly benefits, there are other worlds, etc. On receipt of this ‘certificate’ from the Westerners, our people have also started accepting certain things! – Jagadguru Sri Chandrasekharendra Saraswathi Swamigal



Categories: Deivathin Kural, Golden Quotes

Tags:

6 replies

  1. Please..it should be ‘of Eswara’ and not ‘if’ in the seventh line from the top.Pranams

  2. I must admit that many of us, including myself, are not aware of our culture and customs. as our parents/grand parents / great parents migrated from the village to some other place, including cities, etc. thus we are bereft of traditional knowledge, including culture, etc. IN the new places, the children were put in such schools, where traditional teaching is not available. So, almost a few generations of people born in such Brahmin families are not aware of these values. One or two generations subsequent to the original migrants even started suspecting their origins. Either the message from the Mutts didn’t reach the intended quarters or the feeling that what else new could have been taught by the Vedic scholars or the Acharyas trained in the Mutts, thus, post-independence many Brahmin families called themselves as Brahmins, but without strictly following the Brahminical or the Hindu traits. It is sad indeed. At least a few people have started supporting the Veda patashalas and the vidyarthis there in some ways, thus a revival seems to be on the cards. Had HHH Mahaperiava been in His mortal form, He would have accelerated the transition, which is not happening. Let us pray to Him to give us the strength and means to revive the tradition and establish the supremacy of the Hindu tradition and culture.

  3. In some Vedanta Classes, Karma and Bhakti are commented on as “It’s for people who are not aware (self).” But one key thing they forget is only Karma purifies the mind and prepares for God Realization. It’s like discussing a PhD thesis, without even joining a school. Even Ramana Maharishi has spoken a lot on Bhakthi, Japa, Nithya Karma, etc. and following Acharams. I have read in a book once he told a Vedic scholar to wear panchakacham and recite Vedas.

    • Thanks Aravind for your enlightening points. Could you please give more details of the book (name, publisher etc), where Ramana Maharishi has instructed the Vedic scholar to wear Panchakacham.

      Thanks

Leave a Reply

%d bloggers like this: