சீர்திருத்தத் தலைவர்களில் பலர் லோகாந்த்ர, ஜன்மாந்தரங்களில் பலனைத் தருபவனாக ஈஸ்வரனொருவன் இருக்கிறானென்பதை மறந்து, தாங்களே அதிகாரி, தாங்களே கர்த்தா என்று நினைத்துக் கொண்டு, இவர்கள் விரும்புகிற சீர்திருத்தம், முன்னேற்றம் எல்லாம் தங்கள் வாழ்நாளிலேயே நடந்து பார்த்தாக வேண்டும் — “In my life time” – என்கிறார்கள். இவர்களில் சிலர் கொஞ்சம்கூட அடக்கமில்லாமலிருக்கும்போது ”தம்ப-மான-மதான்விதா:” என்று (கீதையில்) சொல்லியிருப்பதுபோலத் தாங்களே எதையும் ஸாதித்துவிட முடியும் என்று தற்பெருமையில் மதம் பிடித்து டம்பமாகத் திட்டங்களை போட்டு, ‘லோகத்தையே மாற்றிவிடப் போகிறேனாக்கும்’ என்று கிளம்புகிறார்கள். இவர்களைப் படம் பிடித்துக் காட்டுவதுபோல பகவான்.
“இதமத்ய மயா லப்தம் இமம் ப்ராப்ஸ்யே மநோரதம்” –
”இன்றைக்கு இதை ஸாதித்து விட்டேனாக்கும். இன்னமும் பெரிசாக நாளைக்கு ஸாதிப்பேன்” என்று வெறும் லௌகிகமாகவே எதெதையோ பண்ணிப் பூரித்துப் போகிறார்கள் என்கிறார். இப்படியெல்லாம் செய்கிறவர்களிடத்தில் சாஸ்திரப்படி சொல்லப்படும் சௌசம் (தூய்மை, மடி-விழுப்பு பார்ப்பது) இருக்காது, எந்த ஆசாரமுமே இருக்காது: ”ந சௌசம் ந அபி ச (ஆ)சார:” என்கிறார்3.
உபநிஷத்திலும், “ஸ்வயம் தீரா: பண்டிதம் மன்ய மானா:” என்று “நானே மஹா புத்திசாலி, மஹா பண்டிதன்” என்று பரலோக விஷயங்களைப் புரிந்து கொள்ளாமல் கிளம்புகிறவர்களையும், அவர்களை வழிகாட்டியாகக் கொண்டு பின்னே போகிறவர்களையும் சொல்லி, இவர்கள் எல்லாரும் குருடர்களால் வழிகாட்டப்பட்ட குருடர்கள் மாதிரி சுற்றிச் சுற்றித் தடுமாறிக் கொண்டிருக்கிறார்கள் என்று சொல்லியிருக்கிறது. – ஜகத்குரு ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் அருள்மொழிகள்
Impervious to the fact that there is a Supreme Power who grants the results of our actions across Universe and Time, a majority of these reformers insist that the that the reforms and development they aim at should be realized in their lifetime itself. They arrogantly assume that they are the masters of their actions. Some of them are strangers to humility and true to the statement of Srimad Bhagawad Gita – “Tamba Maana Madaanvitaahaa” set forth egoistically to reform the world with elaborate plans of their own. Lord Krishna has painted a very accurate picture of such persons in Srimad Gita. He states that such people take pride that they have achieved something in the present and will achieve greater things in the future without realizing that all their efforts are confined to the material world. He declares that there will be no purity or traditions prescribed by the sastras, among such people. In Upanishads also such persons who set forth assuming they are great scholars and realized souls, forgetting about all the other esoteric matters and their mindless followers are described as blind leading the blind. – Jagadguru Sri Chandrasekharendra Saraswathi Swamigal
Categories: Deivathin Kural, Golden Quotes
Leave a Reply