‘சீர்திருத்தத் தலைவர்களில் பலர் அத்ருஷ்ட பலன்’ என்பதாக சாஸ்திரங்களில் சொல்லியிருக்கிறதை நம்பாமல் வெள்ளைக்காரர்கள் எண்ணப் போக்குப்படி இவர்களும் practical result என்று உடனுக்குடனே லோகத்தில் வெளிப்படையாகத் தெரியும் பலன்களை மட்டுமே கருதிக் கார்யம் செய்வதுதான் இவர்கள் பண்ணுகிற பெரிய தப்பு. யதார்த்தத்துக்கு மேல், யதார்த்தத்துக்குப் பிடிபடாத தெய்வ சக்தி ஒன்று இருக்கிறது. அது அப்போதைக்கப்போது கண்ணுக்குத் தெரியும்படியாக மட்டும் ரிஸல்டைக் காட்டி விடுவதில்லை. நம் கார்யங்கள், எண்ணங்கள் இவற்றின் பலன் உடனே இங்கேயே தெரியாமல், ஏதோ காலத்தில், ஏதோ ஜன்மாந்தரத்தில், ஏதோ லோகாந்தரத்தில்கூட விளையும் படியாகத்தான் விஸ்தாரமான அளவிலே லீலை பண்ணிக் கொண்டிருக்கிறது. இப்படி உடனுக்குடனே பலன் தெரியாமல் எப்போதோ விளைய இருப்பதைத்தான் ‘அத்ருஷ்ட பலன்’ என்பது. இதிலே இந்த ரிஃபார்மர்களுக்கு அநேகமாக நம்பிக்கையே கிடையாது. அவர்களுடைய படிப்பு, பார்வை எல்லாம் வெள்ளைக்காரர்களின் வழியிலேதான் இருக்கிறது. அதனால்தான் லோகத்தில் அநேக வித்யாஸங்கள் இருப்பதெல்லாம் ஜன்மாந்த்ர கர்மாப்படி அவரவரும் ஆத்மாபிவிருத்தி அடைவதற்காக ஏற்பட்டது என்பதை ஒப்புக் கொள்ளாமல், ஸமத்வம், அபேதவாதம் என்று எதையோ சொல்லிக் கொண்டு எல்லாவற்றையும் பலபட்டடையாகப் போட்டுக் குழப்ப வேண்டும் என்கிறார்கள். இப்படியே லோகாந்தரங்களிலும் அத்ருஷ்ட பலன் ஏற்படுவதைப் புரிந்து கொள்ளாததால் தேவதைகளுக்கான யஜ்ஞாதி கர்மாக்கள், பித்ருக்களுக்கான திவஸ தர்ப்பணாதிகள் ஆகியவற்றை வீண்கார்யம், ஸுபர்ஸ்டிஷன் என்று கேலி செய்கிறார்கள். – ஜகத்குரு ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் அருள்மொழிகள்
Aping the Westerners, most of the reformist leaders do not count upon those fruits which accrue invisibly. They do not believe in a Divine power which is above reality and cannot be understood by our practical knowledge. This power does not reveal the results immediately. It is indulging in an elaborate exercise in which the fruits of our deeds and thoughts are reaped not necessarily in this birth but in some other birth and may be even in some other universe or dimension too. This is “Adhrushta” – the invisible result which is not apparent immediately. The reformers do not have any belief in this. Their education and opinions are entirely influenced by the Western way of thinking. Hence they do not realize that the differences that exist in the world are the result of Karma (the result of deeds in the previous births) and they have been created to enable one to expiate the karma and elevate the soul. They are intent upon creating a world without these essential differences and absolutely equal which results in a lot of confusion. Without being convinced of the invisible results which accrue in other dimensions of the universe they mock upon rituals like yajnas for the devathas (heavenly beings) and tharpanam for the ancestors. – Jagadguru Sri Chandrasekharendra Saraswathi Swamigal
Categories: Deivathin Kural, Golden Quotes
Leave a Reply