பகவான் நம்மை ஏதோ ஒரு இடத்தில் ஒரு ஸமூஹ தர்மத்தில், குலாசாரத்தில் பிறப்பித்திருக்கிறான். என்ன அர்த்தம்? புருஷனை அநுஸரித்துப் பத்தினி கடைத்தேற வேண்டுமென்பதுபோல், ஜீவன் இவ்வாறு தனக்குப் பிறப்பால் எந்த சாஸ்திரமும் ஸம்பிரதாயமும் ஏற்பட்டிருக்கிறதோ அதை அநுஸரித்து ச்ரேயஸ் அடைய வேண்டுமென்றுதான் அர்த்தம். “மாட்டேன்; இந்த ஆசாரப்படி செய்ய முடியாது” என்றால் அது பதியைத் திரஸ்காரம் பண்ணுவது போன்ற பெரிய தோஷந்தான். “இந்த ஸமயாசாரத்தை விட்டு இன்னொன்றுக்குப் போவேன்; வேறே மதத்தில் சேருவேன்” என்றால் இன்னம் தப்பு. அது பதியை விட்டுவிட்டுப் பரபுருஷனிடம் போகிறது போல, அதனால்தான் “பதிதோ பவேத்” என்றது. இப்படி ஆகாமல் தப்புவதுதான் நமக்கு முக்கியம். சீர்திருத்தவாதி ஏதோ இந்த லோகத்துக்கு, இப்போது நடத்துகிற வாழ்க்கை உயர்வுக்கானவற்றை மட்டும் பார்த்து மதுரமாகச் சொல்கிறாரென்பதால் அதன்படிச் செய்து நரக விஷத்தில் போய் விழக்கூடாது. ஆசாரம் ஒருவனை விழாமல் காப்பது மட்டுமில்லை; அவனை இப்போதைய ஸ்திதியிலிருந்து இன்னமும் தூக்கிவிட்டு ஈஸ்வர ஸந்நிதானத்தில் கொண்டு நிறுத்திவிடும். – ஜகத்குரு ஸ்ரீ சந்திரசேகரேந்திர ஸரஸ்வதி ஸ்வாமிகளின் அருள்மொழிகள்
If Bhagawan has ordained us to be born in a particular society amidst certain traditions, we should ponder over the fact. He means us sublimate ourselves by following the path of our ancestors similar to the way a wife is true to her husband. If we refuse to follow these traditions, it is equivalent to betraying one’s husband. If one chooses to convert to another religion by abandoning the traditional way of life prescribed by our ancestors, it is still worse. It is like leaving one’s husband and going with another. That is the reason for the warning of the sastras – ‘Pathitho Bhaveth”. This serious mistake should not be committed by us. One should not be misled by the sweet talk of the reformers who is interested in enhancing one’s status in this worldly life and fall into poisonous hell. Strict adherence to the traditions of our ancestors will not only prevent our downfall but elevate us to the abode of Eswara. – Jagadguru Sri Chandrasekharendra Saraswathi Swamigal
Categories: Deivathin Kural, Golden Quotes
Both ‘AnAchArams’ are taking place very freely in this KaliyugA. MahaPeriava only should correct this trend.