Periyava Golden Quotes-465

album1_98

எனக்கு எந்தக் கட்சியும் கிடையாது. ஒரு ஜட்ஜை எந்தக் கட்சி என்று கேட்டால் என்ன சொல்வது? ‘லா’வை (சட்ட புத்தகத்தைப்) பார்த்து, சொந்த அபிப்ராயமில்லாமல், அதன் பிரகாரம் சொல்லத்தான் ஜட்ஜ் இருக்கிறார். ‘எடர்னல் லா’ (ஸநாதன தர்மம்) என்கிற சாஸ்திரங்களைப் பார்த்து அதிலிருப்பதைச் சொல்லவும், என்னால் முடிந்தமட்டும் அப்படிச் சொல்லியிருப்பதன் பிரகாரமே நடக்கப் பிரயத்னப்படவும்தான் நான் இருக்கிறேன். அந்த சாஸ்திரங்களில் சொல்லியுள்ள ஆசாரங்களின்படி நீங்கள் நடக்க வேண்டும் என்று சொல்ல வேண்டியதுதான் ஆசார்யாளின் சின்னப் பிரதிநிதியாக இருக்கிற என் பொறுப்பு.  நான் சொல்வது உங்களுக்கு ஏறுவதும் ஏறாததும் நானே அந்த சாஸ்திரப்படி எவ்வளவுக்குச் செய்கிறானோ, செய்யவில்லையோ அதைப் பொறுத்ததுதான். எனக்கு அநுஷ்டான சக்தி இருந்தால்தான் என் சொல்லுக்கு அதன்படி சாஸ்திர ரீதியாக உங்களை நடக்கப் பண்ணுவிக்கிற சக்தி இருக்கும். – ஜகத்குரு ஸ்ரீ   சந்திரசேகரேந்திர ஸரஸ்வதி ஸ்வாமிகளின் அருள்மொழிகள்

I do not take any sides. A judge cannot take sides. He can only refer to the law books and deliver his judgment based on the law of the land without fear or favor. I am here to expound on the eternal law of Sanatana Dharma (the ancient Hindu code of conduct) as far as possible and strive to follow the law I have stated. It is my duty as the humble representative of the Aacharyal, to instruct you to act according to these traditions. Whether you follow it or not depends on of my own practice in following these traditions (or not).  Only if I am strong enough to strictly adhere to these traditions the resultant power (Anushtaana Sakthi) will induce you to follow the traditions prescribed by our ancient sastras. – Jagadguru Sri Chandrasekharendra Saraswathi Swamigal



Categories: Deivathin Kural, Golden Quotes

Tags:

2 replies

  1. Maha Periyava Thiruvadi Charanam. Ram … Ram… Ram

    uma venkat

  2. Jaaya Jaya Sankara Hara Sankara. Pahi Pahi Sri Maha Prabho Janakiraman. Nagapattinam

Leave a Reply

%d bloggers like this: