Periyava Golden Quotes-464

album1_97

இத்தனை சீர்திருத்தத் தலைவர்கள் வந்து இவ்வளவு சீர்திருத்த இயக்கங்களை ஆரம்பித்தும் இவற்றிலிருந்து நாம் மஹானாக, ஞானியாக எத்தனை பேரைப் பெற முடிந்திருக்கிறது? யாரை வேண்டுமானாலும் ரிஷி, அவதாரம், Messenger of God என்று சொல்லி விடலாம். ஆனால் வாஸ்தவத்தில் ஜனங்களின் தாபத்தை சமனம் செய்கிற அநுக்ரஹ சக்தி இவர்களுக்கு இருக்கிறதா என்பதே கேள்வி. ஸம்பிரதாயமாக வருகிற குரு உபதேசத்தால் இப்போதும் பலபேர் பெற்று வருகிற அநுக்ரஹமும் ஸ்வாநுபூதியும் இந்த Reform-காரர்களிடமிருந்து வருமா? நேற்றைக்கொன்று, இன்றைக்கொன்று என்று சொல்லிக் கொண்டிருக்கும் இவர்களுக்காக Tradition என்ற வஜ்ரம் பாய்ந்த ஸம்பிரதாய விருக்ஷத்தை வெட்டி விடுவதா? இப்படி நான் கேட்கவில்லை. பத்துப் பன்னிரண்டு வெள்ளைக்காரர்களே – அவர்கள் ஆத்ம ஸம்பந்தமாக நிறையப் படித்து ரொம்பவும் ஸாதனைகளும் செய்தவர்கள் – என்னிடம் வந்து இப்படி வற்புறுத்திக் கேட்டுக் கொண்டிருந்தார்கள். “Tradition என்கிற சாஸ்திர மரபு, அதன்படியே சொந்த வாழ்க்கையை நடத்தினதால் பரிசுத்தி பெற்ற குருமார்கள், அப்படிப்பட்டவர்களின் அநுபவத்தில் ஊறிப் பக்குவமாகி வருகிற உபதேசம் தீக்ஷை முதலானவை, இவை சிஷ்யனுக்குள்ளேயும் போய் அவனை சுத்தி பண்ணுவது – என்றிப்படியில்லாமல் ஆத்மாநுபவம் எப்படி வர முடியும்? எத்தனையோ மதங்கள், Reform-கள் வந்துவிட்டாலும் பூர்வாசாரத்தில் ஊறிய ஆசார்யர்களைப் பின்பற்றாவிட்டால் ஆத்மாபிவிருத்தி என்பது மிகவும் துர்லபமாகத் தானே இருக்கிறது?” என்று அவர்கள் கேட்டார்கள். – ஜகத்குரு ஸ்ரீ   சந்திரசேகரேந்திர ஸரஸ்வதி ஸ்வாமிகளின் அருள்மொழிகள்

In spite of the appearance of so many reformist leaders and the reformist movements spread by them, how many enlightened souls have appeared in their midst? Many a person can be called a messenger of God. But how many of them are really equipped with that divine power capable of settling the longings of the common people? It is not possible to receive the blessings and self-awareness that the public receive from the usual preaching of Gurus from these reformists. Should we cut down the ancient and strong tree of tradition based on the recommendations of these inconsistent reformists whose statements vary from day to day? This question has not been posed by me. On the other hand, these concerns were voiced by a few foreigners who have read a lot on spiritual matters and are sadhakaas (practitioners) in their own right. They were asking me such compelling questions. Gurus who had purified themselves by living according to the traditions prescribed by the Saastraas and also have the maturity of experience enunciate such upadesams or teachings. They also grant Deekshai (the initiation into spiritual practice) and thus his disciples are purified within and without. Otherwise how can there be realization of the soul?  Though there are many religions and many reforms have taken place, unless one follows the great teachers who are steeped in the ancient traditions is not the possibility of spiritual growth very slim? These were queries raised by the foreigners. – Jagadguru Sri Chandrasekharendra Saraswathi Swamigal



Categories: Deivathin Kural, Golden Quotes

Tags:

Leave a Reply

%d bloggers like this: