
Many Jaya Jaya Sankara to Shri B Srinivasan for the share. Ram Ram
விநாயகர் அகவல் – பாகம் 30
ஸ்ரீ மகா பெரியவா சரணம். கணேச சரணம்.
கீழ்நோக்கியே செலுத்தி விரயமாகும் விந்துவை, குண்டலினி யோகத்தால் கட்டி மேல்நோக்கி ஏற்றி சாதனை செய்தால் புருவ மத்தியில் கண் திறக்கும் – ஒரு க்ஷணநேரம். இதைத் தான் வேதமும் “ஊர்த்வ ரேதம் விரூபாக்ஷம்” என்று சுட்டிக் காட்டும். இந்த சாதனையில்தான் அங்கிருக்கும் சந்திர மண்டலத்தில் அமுத ஊற்று பெருக்கெடுக்கும். இப்படி விந்துவைக் கட்டி அதை நாதத்தில் ஒடுக்குவது ஒரு பெரும் யோக சாதனை.
ஆதி சங்கர பகவத்பாதர் நிர்வாண ஷடகத்தில், இதையே “சித்தானந்த ரூபா சிவோஹம் சிவோஹம்” என்கிறார்.
சதாசிவம் என்றாலும் சிவலிங்கம் என்றாலும் ஒன்றுதான். அண்டத்தில் சத்தம்; சத்தத்தில் சதாசிவம்.; பிண்டத்தில் சித்தம்; சித்தத்தில் சிவலிங்கம். புறத்தில் சதாசிவம்; அகத்தில் சிவலிங்கம்.
இந்த அற்புத தத்துவத்தை காட்டினான் கணபதி பெருமான் ஒளவைக்கு. சத்தத்தின் உள்ளே சதாசிவம் காட்டிச் சித்தத்தின் உள்ளே சிவலிங்கம் காட்டி. இதை நினைத்தால், நம் அகமும் ஆனந்திக்கும். புருவ மத்தியில் சதாசிவத்தையும், இதய கமலத்தில் சிவலிங்க மூர்த்தியையும் பூஜிப்பது மரபு.
மற்றவை அடுத்த பதிவில் பார்க்கலாம்.
![]()
One Response
Guru Arulalan Upadesam Samighya in the year 1977 on Vinayagar Agaval, to this Adiyan, the Vinayagar Agaval still has the great blessings even now, the good and bad balance of happenings in my life a great Boon. His Upadesam to read and do the Parayanam with the help of book only. MahaPerivaa Padarakamalam Saranam.