எது இன்றியமையாதது, எதெது இல்லா விட்டாலும் வாழ்க்கை நடத்த முடியும்; எதெதுகள் இல்லாமலும் நம் அப்பன் பாட்டனெல்லாரும் ஸந்தோஷமாகவே வாழ்ந்தார்கள் என்று ஆலோசித்துப் பார்த்துத் தேவைகளைக் குறைத்துக் கொண்டு வாழ வேண்டும். முதலில் சிரமமாக இருக்கும். சபலங்கள் இழுத்துக் கொண்டுதான் இருக்கும். இருந்தாலும் தாயான அம்பாளை வேண்டிக்கொண்டு, அநுக்ரஹ பலத்தில் தேறித் தெளிந்து ஜயிக்க வேண்டும். அப்புறம் தெரியும், அந்த எளிய வாழ்க்கையில்தான் எத்தனை நிம்மதி இருக்கிறதென்று! போக்ய வஸ்துக்களைத் தேவை தேவை என்று சேர்த்துக் கொண்டே போனால் அப்புறம் வீடு பெரிசாகப் பார்க்க வேண்டியிருக்கிறது. அதனால் வாடகைச் செலவு ஏறுகிறது. இப்படி ஒன்றிலிருந்து ஒன்றாக நமக்கே வருமானம் போதாமல் ஆக்கிக் கொண்டால் பரோபகாரம் பண்ணி நம் கர்மாவைக் கழுவிக் கொள்வதெப்படி? அநாவசியங்களை எல்லாம் கழித்துக் கட்டிவிட்டால் நமக்கும் நிம்மதியாக, பிறருக்கும் உதவியாக ஜன்மாவை உயர்த்திக் கொள்ளலாம். அம்பாள் தாயாக, அந்த ஒரே தாயாருக்கு நாம் அத்தனை பேரும் குழந்தைகளாக, ஒரு குடும்பத்தில் பத்துக் குழந்தைகள் இருந்தால் அவை ஒட்டிக் கொண்டு இருக்கிறாற்போல், ஒருத்தருக்கொருத்தர் உபகாரம் பண்ணிக் கொண்டு வாழலாம். இந்த உபகாரம்தான் என்று Generalise பண்ண வேண்டியதில்லை; அவாவாள் ஸ்திதியில் எது ஸாத்யமோ அந்த உபகாரத்தைச் செய்து கொண்டு ஆனந்தமாக வாழலாம். – ஜகத்குரு ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் அருள்மொழிகள்
We should reduce our needs by pondering over what is indispensable in life, what is not necessary and without which our ancestors lived happily. It may be initially difficult to do so but by praying to Ambal, the Mother Goddess, we should achieve our purpose with the help and strength of Divine Blessings. Once we do so, we can enjoy the peace of a simple life. If we go on expanding our needs, collecting more and more things, we feel the need for a bigger house and thus start paying more rent. If we continue to cater to our own needs then where will be the wherewithal to perform Philanthropy (Paropagaram) and mitigate our Karmic debt? If we put an end to all unnecessary things in life, we can enjoy a peaceful life and also lead a sublime life, helpful to others. We can live as the divine children of the Mother Goddess, closely attached to each other and helping each other. There is no need to generalize in what particular way we can help each other. Each person can render such assistance as is possible by him based on his position and status. – Jagadguru Sri Chandrasekharendra Saraswathi Swamigal
Categories: Deivathin Kural, Golden Quotes
jaya jaya shankara, shri kamatchi ambal kumbabisekam 9th february vehi seerum sirappum aha amaiya antha kamatchi ammanaiye prarthippom
What a tailor made comfotability by our Kamakshi Thaai MahaPeriva for us to follow simply. We are all Blessed by him as HIS Sishyaas.
JAYA JAYA SANKARA HARA HARA SANKARA. JANAKIRMANAN. NAGAPATTINAM