சோற்றுச் செலவைவிட ஜாஸ்தியாகும் காபியை நிறுத்துவது; பட்டுத் துணி வேண்டாம் என்று விடுவது; ஸ்வயம்பாக நியமத்தால் (தன் சாப்பாட்டைத் தன் கையாலேயே சமைத்துச் சாப்பிடுவது என்ற நெறியால்) ஹோட்டல் செலவை அடியோடு குறைப்பது; ஸினிமாவுக்குப் போவதை நிறுத்துவது என்ற இந்த நாலை மட்டும் செய்து விட்டால் போதும். எவனும் கடன் கஸ்திப்படாமலிருப்பதோடு, பிறத்தியாருக்கும் திரவிய ரூபத்தில் ஏதோ கொஞ்சமாவது உபகரிக்க முடியும். இதெல்லாம் ஒரு குடும்பத்தில் தினப்படி ஸமாசாரங்கள். இவற்றோடு ஸமூஹ ப்ரச்னையாகிவிட்ட வரதக்ஷிணையையும், ஆடம்பரக் கல்யாணத்தையும் சேர்த்துக் கொள்ளவேண்டும். வரதக்ஷிணை இல்லை, கல்யாணத்துக்காக ஆயிரம் பதினாயிரம் என்று செலவழிப்பதில்லை என்றால் எந்தக் குடும்பத்திலும் பணமுடை, கடன் உபத்ரவம் ஏற்படவே ஏற்படாது. பொதுப் பணிகளுக்கு உதவ ஸம்ருத்தியாகக் கிடைக்கும். – ஜகத்குரு ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் அருள்மொழிகள்
Four things have to be given up in order not to get into debt and also financially assist the needy: giving up coffee, desisting from purchasing silk saris, cutting down on hotel expenditure by cooking one’s own food, and stop going to the movie theatres. These practices have become part of everyday life. We should also include the practice of abolishing dowry and extravagant marriages which have become social issues. If it is resolved to put an end to extravagant marriages and the practice of no dowry, no family will be caught in the clutches of debt and there will also be enough money to spend for public causes. – Jagadguru Sri Chandrasekharendra Saraswathi Swamigal
Categories: Deivathin Kural, Golden Quotes
Jaya Jaya Sankara Hara Hara Hara Sankara. Janakiraman, Nagapattinam