Periyava Golden Quotes-458

album1_92
Jaya Jaya Sankara Hara Hara Sankara – Sri Parameswaran gives the real definition of ‘Thanakku Minji Dharmam’. Ram Ram

பரோபகாரம் என்பது ஈஸ்வரனின் கட்டளையான கடன் என்று புரிந்து கொண்டு விட்டால் – நாம் எத்தனை கஷ்ட தசையிலிருந்தாலும் பரோபகாரத்தை விட்டுவிடாமல் செய்வோம். ”தனக்கு மிஞ்சி தர்மம் என்றுதானே சொல்லியிருக்கு? நீயே ச்ரம தசையிலிருக்கிறபோது மற்றவர்களுக்காக வேறு ஏன் ச்ரமப்படுகிறாய்?” என்று கேட்கத்தான் கேட்பார்கள். அப்போது, “நான் ச்ரம தசையில் இருக்கிறேன் என்றால் பூர்வ ஜன்மாவில் ஈஸ்வராக்ஞைகளை ஸரியாகப் பண்ணாததற்கு இது தண்டனை என்றே அர்த்தம். போன ஜன்மத்தில் நான் பிறத்தியாருக்கு எந்த உபகாரமும், தொண்டும் பண்ணாததால் இப்போது கஷ்டப்படுகிறேன். அதனாலேயே இப்போதுதான் நிச்சயமாக நான் பரோபகாரம் செய்தாக வேண்டும். தனக்கு மிஞ்சி – போன ஜன்மாவின் [கர்ம] பாக்கியாக, அப்போதைய உடம்பு போன பிறகும் மிஞ்சி – இப்போது வந்து சேர்ந்திருக்கும் இந்தக் கஷ்டம்தான், ‘தனக்கு மிஞ்சி’. இது தீருவதற்காகவே தர்மம் செய்தாக வேண்டும். அதுதான் ‘தனக்கு மிஞ்சி தர்மம்’. நீர் அதற்கு வேறேதோ தப்பர்த்தம் பண்ணிக் கொண்டிருக்கிறீர். இப்போது நான் தன்னையும் மிஞ்சி – அதாவது என் சொந்தக் கஷ்டத்தையும் மிஞ்சி – தர்மம் பண்ணினால்தான் வருங்காலத்திலாவது நன்றாயிருப்பேன்” என்று பதில் சொல்ல வேண்டும். எத்தனையோ கஷ்டத்திலும் இளையான் குடிமாற நாயனாரைப் போலப் பரோபகாரம் பண்ணினவர்களின் ஞாபகம் நமக்குப் போகக்கூடாது.தான் எத்தனை கஷ்டப்பட்டாலும் அதைப் பொருட்படுத்தாமல் அதற்கு மேம்பட்டு வெளியிலே வருவதுதான் தனக்கு மிஞ்சுவது. இப்படி வந்து லோகத்துக்கு உபகரிப்பதுதான் “தனக்கு மிஞ்சி தர்மம்” என்று வைத்துக் கொள்ள வேண்டும். இது ரொம்ப ஹை லெவலில் [உயர் மட்டத்தில்]. லோயர் லெவலில் [அதற்கு கீழ்ப்பட்ட நிலையில்] பிறருக்கு திரவிய ஸஹாயம் செய்வதற்காகவே தான் மிச்சம் பிடிக்கும் விதத்தில் வரவுக்குள் செலவை அடக்கி, கடன் கஸ்தி இல்லாமல் சிக்கனமாக வாழ வேண்டும். – ஜகத்குரு ஸ்ரீ   சந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் அருள்மொழிகள்

If we acquire the realization that philanthropy is but a debt to be settled by the order of the Parameswara, then we will not give up philanthropy in even the direst circumstances. Others may discourage us by quoting the proverb that charity begins only after taking care of the self. They may question us as to why we perform charity even in the most financially difficult situation. We should point out that the sufferings we undergo in this birth are the direct result of our inability to implement the orders of the Eswara in the previous birth. “I am suffering in this birth because I failed to perform any charity or service in the previous birth. So I should definitely perform philanthropy in this birth. The true meaning of the proverb “Thanakku Minji Dharmam” should be interpreted as follows: the residual Karma of our previous birth causes the suffering in our current birth. It (Karma) continues to remain even after the body of the previous birth is non-existent (thanakku minji). So we have to perform charity (dharmam) in this birth to settle this debt which has occurred due to our residual Karma. So I should perform philanthropy in spite of my difficulties. This is the true meaning of the proverb ‘Thanakku Minji Dharmam” and you have interpreted it wrongly.” This should be our answer. Even in the most trying of circumstances, we should not forget the services performed by people like “Ilayankudi Maara Naayanaar”. Whatever be the extent of one’s sufferings, one should rise above them (thanakku minji) and serve the society (dharmam). This is at a very high level. At a lower level, one should contain one’s expenditure within the income, without getting indebted, with the sole purpose of providing financial assistance to the needy. – Jagadguru Sri Chandrasekharendra Saraswathi Swamigal



Categories: Deivathin Kural, Golden Quotes

Tags:

1 reply

  1. What a nice explanation. Simply GREAT.

Leave a Reply

%d