Today is the mukthi date of Mahaperiyava as per English calendar

Let us pray Mahaswami on this day to receive His blessings!

Hara HAra Sankara Jaya Jaya Sankara

Periyava_Siddhi_Day_Daily_sheet_calendar

ஸ்ரீ பரணீதரன் அவர்கள் கைவண்ணம்…

1994 ஜனவரி 8 ஆம் தேதி ஐயன் மஹா சமாதி அடைந்த பின், வெளி வந்த ஆனந்த விகடனில், அப்போது தொடராக வந்து கொண்டிருந்த ‘அன்பே அருளே’ கட்டுரையின் 8 ஆவது அத்தியாயம். ஸ்ரீ பரணீதரன் மாமா அவர்கள் கைவண்ணம்…

சாக்கியர் கூத்தை பற்றி தொடர்வதற்குள் ஒரு பிரளய கால ஊழிக்கூத்தே நடந்து முடிந்து விட்டது.
நூற்றாண்டு பிறந்த தின வைபவமாக கடந்த மே மாதம் கனகாபிஷேக காட்சியருளி, கோடிக்கணக்கான பக்தர்களின் நெஞ்சங்களை குளிர்வித்த பெரியவா, ஒரே நொடியில் தமது சரீர உடையை உதறிவிட்டு நம் கண்ணிலிருந்து மறைந்து விட்டார்.

1994 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 8 ஆம் தேதி – சனிக்கிழமை பிற்பகல் 2.58 மணிக்கு துவாதசியன்று பெரியவா மகா சமாதி அடைந்து விட்ட செய்தி ஊரெங்கும், நகரங்கள் என்றும், கிராமங்கள் தோறும், நாடு முழுவதும், உலகம் பூராவும், எட்டி விடுகிறது. கோடிக்கணக்கானவர்களின் நெஞ்சங்கள் பதறி துடித்தன. கண்ணீர் பொங்கி பொங்கி பெருகியது. பாசத்தை வளர்த்து கொண்டு விட்ட பக்தர்கள் குமுறி குமுறி அழுதார்கள்.
‘பெரியவா என்னை அனாதையா விட்டுட்டு போயிட்டாளே…’

‘திடீர்ன்னு இப்படி ஏமாத்திட்டு போயிட்டாரே…’

‘இனிமே பெரியவாளை தரிசனம் பண்ண முடியாதே..அந்த கருணை வடிவத்தை காண முடியாதே…அன்பு சிரிப்பை பார்க்க முடியாதே… அமுத பேச்சை கேட்க முடியாதே…’

அப்பா அம்மா போனப்ப ஆறுதலுக்கு, பெரியவா கிட்டே ஓடி வந்தேன். இப்ப பெரியவாளே போயிட்டாளே யாருகிட்டே போவேன்?

‘பெரியவாளுக்கு முன்னாலே நான் போயிடணும் ன்னு பிரார்த்தனை பண்ணிண்டு இருந்தேன். என்னாலே யாருக்கு என்ன பிரயோஜனம்? பெரியவா இருந்தா உலகத்துக்கே க்ஷேமமாச்சே…’

‘நான் கொடுத்து வெச்சவன் சார், பெரியவா மௌனவிரதம் ஏற்பதற்கு முன்னே ஒரு நாள் தரிசனத்துக்கு போயி இருந்தேன். நிறைய பேசினார் அமோகமா அனுக்கிரகம் பண்ணினா…இப்படியே பேசாம ரொம்ப நாள் உக்காந்திருப்பார் ன்னு நெனைச்சனே… மோசம் போயிட்டேனே…’

‘பெரியவாளை தவிர எனக்கு வேறு யாரையும் தெரியாதே..நாற்பது வருஷமா பெரியவா கூட இருந்து தொண்டு பண்ணினேன்…எவ்வளவு பேசி இருக்கா…ஒரு தரம் என்னை கோவிச்சிண்டுட்டா…ஏண்டா, உன்னை ரொம்ப கோவிச்சிண்டுட்டேனா? வருத்தமா இருந்ததா ன்னு அடுத்த நிமிஷமே குழந்தை மாதிரி விசாரிச்சாளே…எப்பு கோவிச்சிக்க இப்ப பெரியவா இல்லியே…’

‘பெரிய எசமான் உள்ளே படுத்துண்டு இருக்காங்க ன்னு ஒரு தைரியம் இருந்துதுங்க. எட்டி பார்த்தா அவங்க இருக்க மாட்டாங்களே…’

‘தெய்வம் என்னை தனியா விட்டுட்டு போயிடுச்சுங்க…உலகமே இருளோன்னு இருக்குதே..’
இப்படி பல்வேறு தரப்பட்ட பக்தர்கள் கதறி கதறி தீர்த்துவிட்டனர். தன் தாய், தந்தை, குழந்தை, நெருங்கிய உறவினர் இவர்களை இழந்து விட்டவர்கள் போல் என்னிடம் தேம்பி தேம்பி அழுதனர். என் சொந்த துயரத்தை உள்ளடக்கி பொங்கிய கண்ணீரை தேக்கி நிறுத்தி, அவர்களுக்கு ஆறுதல் வார்த்தை சொல்லி தேற்றிக்கொண்டு இருந்தேன்.

என்னால் தேற்ற முடியாமல் போனது அந்த ஆறு வயது சிறுமியைத்தான்.

‘எனக்கு மூணு வயசு இருக்கறப்போ பெரியவா கல்கண்டு கொடுத்தா. அதுக்கப்பறம் பெரியவாளை நான் பார்க்கவே இல்லை. அழைச்சிண்டு போ ன்னு அப்பா கிட்ட எத்தனையோ தடவை சொன்னேன். அழைச்சிண்டு போகலே. இப்போ சாமி கிட்டே போயிட்டாரே.நான் இனிமே பெரியவாளை எப்படி பார்க்கிறது?’ என்று அந்த சிறுமி கண்கலங்கிய போது, எப்படி தேற்றுவது என்று கலங்கி போனேன் நான்.

ஜனவரி முதல் தேதியன்று பத்து நிமிடங்கள் மட்டுமே பெரியவா தரிசனம் இருந்திருக்கிறது. அதற்கு பிறகு பொது தரிசனமே இல்லை. உடல்நிலை சரியில்லை. வைத்தியர்கள் அருகிலேயே இருந்து தேவையான சிகிச்சைகள் அளித்து கொண்டு இருந்தார்கள்.

8-ஆம் தேதி சனிக்கிழமை அன்று உடல் நிலை தேறியது. ஈச்சங்குடியில் வாங்கியுள்ள பெரியவாளின் பூர்வாச்ரம தாயாரின் இல்லத்தில் வைப்பதற்காக தயாரான அப்பா அம்மா படங்கள் அவரிடம் காட்டப்பட்டது. அதை சற்று நேரம் பார்த்து கொண்டிருந்தார்.

பாலுவிடம், ‘நீ கலவை பார்த்திருக்கியோ அங்கே போயிருக்கியோ?’ என்று கேட்டிருக்கிறார். எதற்கு திடீர் என்று கலவையை நினைத்துக்கொண்டாரோ?

யாரோ ஒருவர் தரிசனத்துக்கு வந்தார். ‘சௌக்கியமா இருக்கேளா?’ என்று உரத்த குரலில் கேட்டிருக்கிறார்.
‘பெரியவாளோட பழைய குரல் மாதிரி இருந்தது. எங்களுக்கெல்லாம் ஆச்சிரியமாக போய்விட்டது…’ என்றார் திருக்காளாவூர் ராமமூர்த்தி.

‘பிரும்ம ஸ்ரீ சாஸ்த்ரிகள்’ என்று பெரியவா பெயரிட்ட வேதபுரியை பார்த்து ‘கையில் என்ன?’ என்று கேட்டாராம். ‘பெரியவாளோட மரக்குவளை…அலம்ப எடுத்துண்டு போறேன்…’ என்று பதில் கூறி விட்டு போயிருக்கிறார்.
பெரியவா சாதாரணமாக இருப்பதை அறிந்து எல்லோருக்கும் மகிழ்ச்சி. பிக்ஷையை ஏற்றுக்கொண்டு இருக்கிறார். பிறகு படுக்க வைத்து இருக்கிறார்கள். அரை நொடியில்…அனாயாசமாக அப்போது மணி 2.58…

அல்லும் பகலும் ஒவ்வொரு கணமும் கண்ணிமை போல் பாதுகாத்து வந்த திவ்ய சரீரத்தை பார்த்து கதறி தீர்த்து விட்டார்கள் அந்த புண்ணியசாலிகள். மஹா சுவாமிகளுக்கு கைங்கர்யம் செய்தவர்கள் அத்தனை பெரும் பாக்கியசாலிகள். யார் பெயராவது விட்டு போய் விடுமோ என்பதால் அவர்களது பெயர்களை நான் இங்கு குறிப்பிடவில்லை.

அன்று மதியம் இரண்டரை மணி அளவில் ஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள், பால சுவாமிகளுடன் தாம்பரம் நிகழ்ச்சி ஒன்றுக்கு சென்று வர, பெரியவாளிடம் உத்தரவு பெற்று சென்றதை கண் கலங்கியவாறு கூறினார். சென்னைக்கு செய்தி சென்று, தாம்பரத்தை அடைவதற்கு முன்பே தெரிவிக்கப்பட்டு, இரு சுவாமிகளும் மாலை ஐந்து மணியளவில் ஸ்ரீ மடத்துக்கு வந்திருக்கிறார்கள்.
துறவியேனும் நாற்பது ஆண்டு கால தொடர்பின் பின்னணியும், பல்வேறு நிகழ்ச்சிகளும் நினைவில் அலைமோத ஸ்ரீ ஜெயேந்திரர் நெஞ்சம் குமுறி கண்ணீர் வடித்ததில் வியப்பென்ன? ஒப்புயர்வற்ற குருவின் உபதேசம் பெற்றதற்கும், பிரம்ம ஞானியிடம் பாடம் பயின்றதற்கும், மகானிடம் அறிவுரை கேட்டதற்கும் முற்பிறவியின் நற்பேறு அன்றோ காரணம் என்ற நன்றி கண்ணீர் அல்லவா அது!

அத்தருணம் உள்ளத்தில் எழுந்த சிந்தனைகள் எல்லாம் கூற முடியாமல் துயரமே உருவாக சோகமே வடிவாக அமர்ந்திருந்தாலும் – மறுநாள் நடக்க வேண்டிய சடங்குகளில் தீவிர கவனம் செலுத்தி, பக்தர்களிடம் ஆணைகள் பிறப்பித்துக்கொண்டு இருந்தார்.

பால சுவாமிகள் அங்கும் இங்கும் எங்கும் காணப்பட்டார். ஒரு கணம் தரிசித்து ஆறுதல் பெற காத்திருக்கும் பக்தர்களை சந்தித்தவாறே, தேவையான ஏற்பாடுகளில் கவனம் செலுத்தி கொண்டு இருந்தார்.

என்னை கண்டதும் தனியே அழைத்து சென்று, ‘ஏமாந்து போயிட்டோம்…இன்னிக்கு நன்னா தான் இருந்தா. பேசினா, சிரிச்சா, பிக்ஷை பண்ணினா…தைரியமா இருந்தது. தாம்பரம் போயிட்டு வந்துடலாம் ன்னு புறப்பட்டோம்…எதிர்பார்க்காம சேதி வந்தது.’என்று நடந்தவற்றை கூற தொடங்கினார். நடந்து சென்றவாறே ஒருவருக்கு கையசைப்பு, ஒருவரை அருகில் வரசொல்வது, இன்னொருவரை பார்த்து, ‘ஒ, வந்திருக்கேளா?’ என்று கேட்பது. ‘உங்களுக்கு எப்போ தெரியும்?’ என்று பரிவுடன் விசாரிப்பது…’பிருந்தாவன வேலை வேகமா நடந்து கொண்டு இருக்கிறதா?’என்று பார்வையிடுவது… பம்பரமாக சுற்றி சுழன்று கொண்டிருந்தார் பால பெரியவர்.

பக்தர்கள் கூட்டம் பெருகி கொண்டே இருந்தது. வேகமாக நகர்ந்த க்யு இரண்டு கிலோ மீட்டர் வரை நீண்டது. வெகு விரைவில் தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. காவலர்கள் பணி போற்றத்தக்கதாய் இருந்தது.
மேடையில் பெரியவாளின் திருமேனி ஒளிர்ந்து கொண்டு இருந்தது. நான்கு ஆண்டுகளாக நாம் கண்ட தரிசனம். ஒரே ஒரு வித்தியாசம்…எவ்வித அசைவும் இல்லை…மூலவராகிவிட்ட நிலையில், தெய்வீக சாந்நித்யம் நிலவியது. சுற்றிலும் மடத்து சிப்பந்திகள். அவ்வப்போது, இரு சிஷ்ய சுவாமிகளும் வந்து உடனிருந்தார்கள். எதிரில் நகர்ந்த க்யூ வில் கும்பிட்டவர்கள், குமுறி அழுதவர்கள், கன்னத்தில் போட்டு கொண்டவர்கள், கண்ணீர் அஞ்சலி செலுத்தியவர்கள், இஸ்லாமிய பெருமக்கள், கிறிஸ்துவ சகோதர-சகோதரிகள், வெளிநாட்டினர், பல சமயத்தினர், பல மொழியினர் பொது வாழ்வில் பலதுறை சேர்ந்தவர்கள், பெரும் செல்வந்தர்கள், பரம ஏழைகள், தள்ளாடும் முதியவர்கள், ஆண்கள், பெண்கள், சிறுவர்-சிறுமியர்…

ஒரு புறம் ஒலிப்பெருக்கியில் ‘ஜெய ஜெய சங்கர…ஹர ஹர சங்கர…’கோஷம், நாம சங்கீர்த்தனம், பக்தி பாடல்கள், தேவாரம், திருப்புகழ், சகஸ்ர நாம பாராயணம், வேத முழக்கம்…. மேடை நிரம்ப மணம் பரப்பும் மலர் கொத்துக்கள், வாசனை திரவியங்களின் புகை மண்டலம்…தேவலோக சூழ்நிலை…

பன்னிரண்டு மணிக்கு மேல் மகாபிஷேகம் தொடங்கியது. பிரதம சீடர் ஸ்ரீ ஜெயேந்திர சுவாமிகள், குருவின் திருமேனிக்கு முறைப்படி அபிஷேக, அர்ச்சனைகள் செய்வித்து, தூப தீப கற்பூர ஆரத்தி எடுத்து வழிபட்டது, ஆலயம் ஒன்றில் சிவபூஜை நடைபெற்றது போன்ற உணர்வை தோற்றுவித்தது.

இறுதியாக நான்கு மணியளவில் பிருந்தாவன பிரவேச ஊர்வலம் புறப்பட்டு அருகிலிருந்த மாளிகைக்குள் சென்றது. வெளியே இருந்தவர்களுக்கு புனித திருமேனியின் கடைசி புண்ணிய தரிசனம் அதுவே.



Categories: Devotee Experiences

3 replies

  1. Thanks so much to Anusham163 for the translation.

  2. Here is an excerpt from an article by Sri Sankaran Chandran about MahaPeriava’s Sidhdhi day.:

    அவருடைய 100 வது ஜன்ம தினம் 1993 மே மாதம் மடத்தில் கொண்டாடப்பட்டது. நானும் என் நண்பன் கணேசனும் தரிசனத்திற்காக காஞ்சி சென்றிருந்தோம். கூடத்தில் பக்தர்கள் நிரம்பி வழிந்தனர். பத்து மணிக்கு பெரியவாளை ஒரு ஈஸிசேரில் வைத்து, கூடத்திற்கு கொண்டுவந்தார்கள். சில நிமிஷங்கள் கழிந்து, பெரியவா பக்தர்களை நோக்கிக் கைகளைக் கூப்பினார் (அவர்களுக்கு நன்றி சொல்லும் பாவனையிலோ?). இதைக் கண்டவுடன் பல பக்தர்கள் உணர்ச்சிவசப்பட்டனர்.

    1994 ஜனவரி 6—ஆம் தேதி தரிசனத்திற்காக நான் காஞ்சிக்கு சென்றிருந்தேன். (என் தகப்பனார் ஸ்ரீ சங்கரன் 1993 நவம்பர் மாதம் 18—ஆம் தேதி இயற்கை எய்தியிருந்தார். காரியங்கள் எல்லாம் முடித்த பிறகு நான் அங்கு சென்றிருந்தேன்). நான் பெரியவா தங்கியிருந்த அறைக்குச் சென்றபொழுது, ஸ்ரீ வைத்யநாதன், பெரியவாளை ஆக்ஸிஜனில் வைத்திருப்பதாகவும், சில தினங்கள் கழித்து வரும்படியும் கூறினார். நான் புறப்பட இருக்கையில், பெரியவா அருகில் இருந்த ஸ்ரீகண்டன் வெளியில் வந்து, “நீங்கள் உங்கள் தந்தையாரின் காரியங்களை நன்றாகச் செய்தீர்களா?” என்று கேட்டார். நான் “ஆமாம்” என்று கூறினேன். பிறகு, ஸ்ரீகன்டன் திரும்ப பெரியவாளிடத்திற்கு சென்றார். அந்த ஒரு மோசமான தேகநிலையிலும், என்னைப்பற்றி விசாரிக்கும் அளவு அவருக்கு என்மேல் பரிவு இருந்தது. அதுதான் பெரியவாளின் உயர்ந்த நிலை.

    ஜனவரி 8—ஆம் தேதி பெரியவா மஹாஸமாதி அடைந்தார்.

    அவருக்கு அருகில் இருந்த ஸ்ரீ வைத்யநாதன், பெரியவாளின் கடைசி நிமிஷங்களை இப்படி விவரித்தார்:–

    பெரியவா கட்டிலில் படுத்துக் கொண்டிருந்தார். நான்கு பேர்கள் மட்டுமே அவர் அருகில் இருந்தனர். சுமார் 2=50க்கு அவர் எழுந்து உட்கார்ந்து தன் கடைசி மூச்சை விட்டார். சாஸ்த்ரங்களின்படி, ஒரு சன்யாசி உட்கார்ந்த நிலையில்தான் தன் பூத உடலை விடவேண்டும் என்றிருக்கிறது. பெரியவா தன் வாழ்நாள் முழுவதும் ஒரு உண்மையான சன்யாசியாக வாழ்ந்து, அவருடைய கடைசி மூச்சு வரை சன்யாச தர்மத்தைக் கடைப்பிடித்தார். பீஷ்மரைப்போல், தன் பூதவுடலை விட்டு செல்லும் சமயத்தை அவரே தேர்ந்தெடுத்தார்.

  3. Here is the English translation of the above article:

    Before I could continue writing the conversation regarding ‘Chakkiyar Koothu’, an ‘end—of—the—world’ dance of deluge was enacted.
    Periava whose Kanakabhishekam was conducted on His 100th birth day during last May, and blessed millions of devotees, discarded His mortal body in an instant and disappeared from our view.

    At 2=58 P.M on Saturday the 8th January 1994, in Uththarayana Punya Kala, Ekadasi thithi, Periava attained Sidhdhi—-this news spread like wild fire all over the country and all over the world. Million hearts melted; tears welled up and flowed like an ocean. Devotees who had developed a close bond with Periava wept uncontrollably.

    “Periava had left me as an orphan…”

    “Why did He leave so suddenly , deceiving all of us..”

    “I cannot have Darsan of Periava hereafter; cannot see that loving figure; cannot enjoy that enchanting smile; cannot hear that nectar—like voice..”

    “When my mother and father passed away, I came to Periava; now Periava Himself has left me; whom shall I go to, hereafter ?’’

    “I have been praying that I should leave this world before Periava; my existence is of no use to anybody, where as Periava’s existence means protection and happiness to the whole world;….”

    “I am a lucky person Sir! I went for His Darsan one day before He went into total silence; Periava talked a lot; blessed me abundantly; I believed that He would remain like that, but He has deceived us..”

    “I do not know anybody else other than Periava; I have been serving Him during the past forty years; Oh ! How much He has talked ! Once He admonished me; But, next minute, He asked me, ‘Did I scold you severely? Are you sad ?’. Now there is no Periava to scold me…..”

    “I used to be confident and relaxed with the thought that ‘Big Boss’ was sleeping inside; Now He will not be there if I look there..”

    “God had left me alone now; the whole world looks dark to me..”

    Hundreds of devotees wept and cried this way. They came to me and cried as if they had lost some of their blood relations like a mother or father or child. I controlled my emotions and tears and was consoling them.

    But I could not console that six year old girl

    “Periava gave me sugar candy when I was three. After that I never had any Darsan. I asked my father many times to take me there; but he did not; now He has gone near the God, how can I see Periava now ?…”

    On January 1st, He gave Darsan only for ten minutes. After that there was no ‘public’ Darsan. He was not keeping well; doctors were by His side and were treating Him.

    On Saturday, the 8th January, His health showed improvement. The portrait of His erstwhile parents which was to be kept in the ancestral house of His mother was shown to Him. He was looking at it for some time.

    He asked Balu, “Have you been to Kalavai ?”

    Nobody knew why He was remembering Kalavai all of a sudden !

    “Somebody came for Darsan; He had asked him, ‘Are you well?’ in a loud voice. It was like Periava’s past voice. We were all surprised.”—–said Thirukkalavur Ramamurthy.

    He had asked Brahmasree Vedhapuri Sasthrikal “What is in your hand?”. “it is Periava’s wooden mug; I am taking it to wash it..” Vedhapuri had replied and left the place.

    Every one was happy that Periava was normal; He had taken ‘Bikshai’ also. Then they made Him lie down. Within half a second….just like that…. The Soul discarded the mortal body… It was 2=58 then.

    Those fortunate persons who were with Him and who had looked after Him as the eyelid protects the eye, wept uncontrollably looking at the lifeless body. Those who had served MahaSwamikal are the fortunate ones. I am not mentioning the names as any omission of any name will be unfair.

    Sri Jayendra Saraswathi Swamikal was mentioning, with tears in His eyes, that He along with Balaswamikal took permission from Periava at about 2=30 P.M to go to Tambaram for a function and left. They were informed before they reached Tambaram, and both of them returned to Kanchi Matam by 5 P.M.

    Is there any wonder that tears were flowing down Jayendrar’s eyes, though a saint Himself, because of the forty years’ association He had with Periava, and the various incidents during that period came to his mind as waves. Those were tears of gratitude, for the Upadesam he obtained from the incomparable Guru, the learning from the ‘Brahma Gnani’ , the various advices he had from the Mahan, which were again owing to the ‘fruits of previous birth’. Although he was sitting there, bathed in sorrow, unable to express his thoughts at that time, he attended to the rituals that were to take place the next day and was giving the necessary orders.

    Balaswamikal was seen here, there and everywhere. While meeting with the devotees who had come to him for solace, he was attending to the duties and the necessary arrangements. When he saw me, he called me and said, “ we were taken by surprise. He was well today, talked a lot, took His Biksha…..we were all encouraged… We left for Tambaram. We got this unexpected news…”. He would wave to some one, would call another, ask another, “Oh ! you have come..!?”, and ask another, “when did you come to know ?”, would enquire about the progress on the work on Brindavan and supervise it—He was running around all the time.

    The crowd of devotees was swelling. The queue which was moving fast, stretched for a distance of two kilometers. Soon, all the arrangements were completed well. Security persons did a good job.

    Periava’s mortal body was shining on the podium. It was a scenario we have been witnessing for the past four years, the only difference being that there was no movement. It was as if we were in a sanctum sanctorum. All the attendants and staff of the SriMatam were standing around. Now and then, Sri Jayendrar and Balaperiava came and sat there.

    In the queue opposite, there were those who simply prayed before Him, those who cried uncontrollably, many muslims, Christian brothers and sisters, foreigners, men from different religions, of different languages, persons in public life, rich people, very poor people, aged persons who cannot even stand, men, women, boys and girls…..

    On the podium, recitation of ‘Jaya Jaya Sankara….Hara Hara Sankara..’ singing of Nama Sangeerthanam, devotional songs, Thevaram, Thiruppukazh, Sahasra Namam, chanting of Vedas were going on; flower garlands which spread fragrant smell all around, clouds of smoke from incessant sticks ……all the environment of Deva Lokam.

    Maha Abhishekam started after 12 noon. First disciple Sri Jayendra Saraswathi Swamikal performed the Abhishekam and Archanas on the holy body, and Mangalarathi; all this looked like a Siva Puja performed in a temple.

    In the end, the procession towards the Brindavan started at 4 P.M and entered the ‘palace’ near by.

Leave a Reply to MuthuCancel reply

Discover more from Sage of Kanchi

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading