Periyava Golden Quotes-453


album1_87

கடன் கொடுத்தவன் எப்படியெல்லாம் கடின சித்தனாகிக் கொடுமை பண்ணுகிறான் என்பதும் எனக்குத் தெரியாமலில்லை. அநியாய வட்டி வாங்குவது, எத்தனை திருப்பினாலும் அசலில் கழித்துக் கொள்ளாமல் வட்டியிலேயே கழித்துக் கொள்வது என்று அவர்களும் அநேக அக்ரமங்கள் பண்ணத்தான் பண்ணுகிறார்கள். கடன் வாங்குவது என்ற தப்பை ஒருவன் பண்ணுவதால்தான் இப்படி இன்னொருத்தன் (கடன் கொடுப்பவன்) பாவம் செய்பவனாக ஆகிறான். கடைசியில் ஸர்க்கார் அவனுக்கு நாமம் போடுகிறபோது அவனும் கஷ்டப்படுகிறான். ஆதலால், அடிமுதலில் எவனானாலும் கடன் என்றே போகாமல் தன் வருவாயில்தான் காலம் தள்ளுவது என்று ஆக்கிக் கொள்ள வேண்டும். கடன் கஸ்தியால்தான் அநேகர் திருடர்களாவது; போலி ஸந்நியாஸிகளாகி ஊரை ஏமாற்றுவது. மானஸ்தர்களில் பலர் குடும்பத்தோடு பிராணஹானி பண்ணிக் கொள்வதாகவும் அவ்வப்போது பேப்பரில் பார்க்கும்போது மனஸ் வேதனைப்படுகிறது. முன்னயே சொன்ன மாதிரி கடன் கொடுத்தவன், கடன் பட்டவன் என்ற இரண்டு பேர் மட்டுமில்லாமல் ஊரார் எல்லாருமே ஒருவன் கடனாளி என்றால் “அவன் எங்கே நம்மை உபத்ரவம் பண்ண வருவானோ?” என்று ஓடும்படியிருக்கிறது. கடன் பழக்கத்தினால் இப்படி லோகம் முழுக்க சிரமங்கள் ஏற்படுவதால்தான், இந்த லோகத்திலேயே அதுதான் பெரிய தீட்டு என்று ஆசார்யாள் தீர்ப்புப் பண்ணி விட்டார்.ஜகத்குரு ஸ்ரீ   சந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் அருள்மொழிகள்


I am also aware that many a time the lender becomes hard hearted and tortures the borrower. Usurious interest is charged and very often money returned is adjusted against the interest and not the principal. It so happens that when somebody commits the mistake of borrowing money the lender also resorts to such unjust practices. When the Government betrays the lender, he also suffers. Hence persons belonging to all walks of society should adopt a resolution not to get into debt and plan their lives according to their income. It is because of the debt trap that many resort to stealing or cheat the people by posing as God men. Sensitive persons commit suicide along with their families. It is distressful to read about such happenings in the newspapers. Not only the borrower and the lender but the public also are on the run to avoid a habitual debtor fearing that he may cause them trouble.    It is because debt causes such universal harm that Aachaaryaal has declared it to be the most severe form of ‘asowcham’ (Theetu), lack of cleanliness.Jagadguru Sri Chandrasekharendra Saraswathi Swamigal



Categories: Deivathin Kural

Tags:

What do you think?

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: