ஒருத்தனுக்குத் தீட்டு ஸம்பவித்துவிட்டால் அந்த நாளில் என்ன பண்ணுவார்கள்? மற்றவர்கள் அவன் கிட்டேயே வரமாட்டார்கள். மேலே பட்டு விடப்போகிறான் என்று தள்ளித் தள்ளியே போவார்கள். கடனாளியாக இருக்கிறவனைக் கண்டும் பயந்து, “எங்கே நம்மைக் கேட்டு விடுவானோ?” என்று மற்றவர்கள் ஒதுங்கித்தானே ஓடுகிறார்கள்! இவனும் கடன் கொடுத்தவன் எங்கே எதிர்ப்பட்டு விடுவானோ என்று பயந்து கொண்டு ஜன ஸமூஹத்தின் கண்ணில் படாமல் ஒளிந்து கொண்டுதான் போவான். தலையில் துணியைப் போட்டுக் கொண்டு போவது என்பார்கள், அடையாளம் தெரியாமலிருப்பதற்கு தன்னைத்தானே இப்படிப் பெரிய ஆசௌசம் ஏற்பட்டு விட்டதுபோலக் கடனாளி ஸமூஹ ப்ரஷ்டம் செய்து கொண்டு விடுகிறான். – ஜகத்குரு ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் அருள்மொழிகள்
What used to happen when a person was in a state of ‘Theetu’? Those who saw him would avoid coming near him. They used to be scared that they might come into physical contact with him. Similarly people also run away from persons who are in debts; they are scared that he will ask loans from them. The borrower also tries to shun the society because he is afraid the lender will appear in front of him and demand the return of the money. Our ancients used to colloquially say that a person used to cover his face with cloth so that nobody recognizes him. In such a manner, an indebted person isolates himself from the society like an unclean person. – Jagadguru Sri Chandrasekharendra Saraswathi Swamigal
Categories: Deivathin Kural, Golden Quotes
Leave a Reply