Sri Subramanya Bhujangam Translation

Drawing by Viji Subramanian's daughter

Jaya Jaya Sankara Hara Hara Sankara – Our sathsang seva volunteer Smt. Hemalatha Sukumaran has translated Aacharyal’s Subramanya Bhujangam for her friends and shared it with me. It may be useful for devotees who wants to understand the meaning and recite. Many Jaya Jaya Sankara to Smt. Hemalatha for the translation. Ram Ram


Subramanya Bhujangam

सदा बालरूपाऽपि विघ्नाद्रिहन्त्री
महादन्तिवक्त्राऽपि *पञ्चास्यमान्या ।
विधीन्द्रादिमृग्या गणेशाभिधा मे
विधत्तां श्रियं काऽपि कल्याणमूर्तिः ॥१॥

எப்பொழுதும் குழந்தையாய் இருப்பினும்  மலையொத்ததடைகளைப் போக்குபவர்
பெரிய தந்தம்  உடையவராய் இருப்பினும்
சிவனால்( சிங்கத்தால் )  பூஜிக்கபடுபவர்
பிரம்மா இந்திராதியரால்  தேடப்படுபவர்
மங்கள மூர்த்தியே! செல்வம் அருள்வீர்!

*पञ्चास्य- Adishankaracharya had made a pun  here.  Panchasya means Siva as well as lion. Elephant is afraid of lion. But this elephant is worshipped by Panchasya.

न जानामि शब्दं न जानामि चार्थं
न जानामि पद्यं न जानामि गद्यम् ।
चिदेका षडास्या हृदि द्योतते मे
मुखान्निःसरन्ते गिरश्चापि चित्रम् ॥२॥

சொல் அறிந்தேன் இல்லை அதன்
பொருள் அறிந்தேன் இல்லை
உரைநடையும் அறியேன்
கவி புனைதலும் அறியேன்.
மனத்தினுள்ளே தோய்ந்தது
திருமுகம் அன்னார் ஆறுமுகமே
வந்தது தன்னாலே என் நாவிலிருந்து
செய்யுள் சுரந்தது நினதருளாளே.

मयूराधिरूढं महावाक्यगूढं
मनोहारिदेहं महच्चित्तगेहम् ।
महीदेवदेवं महावेदभावं
महादेवबालं भजे लोकपालम् ॥३॥

மயிலேறிடுவாய்  மறையின்
பெரும் பொருளாவாய்
கவரும் வனப்புடையோய்
ஞானியர் உளமுறைவோய்
அமரர் அதிபதியாவாய்
வேதத்தின் உட்பொருளாவாய்
மகாதேவன் மைந்தனை- வையம் காப்போனை வணங்குவோம்

यदा संनिधानं गता मानवा मे
भवाम्भोधिपारं गतास्ते तदैव ।
इति व्यञ्जयन्सिन्धुतीरे य आस्ते
तमीडे पवित्रं पराशक्तिपुत्रम् ॥४॥

சன்னதி அடைந்திடும் மக்கள்
சம்சாரக் கடலினை கடந்தனரெனக்
காட்டிடவே கடற்கரை குடிபுகுந்தாயே
தூயவனை சக்திமகனை  துதித்திடுவேன்.

यथाब्धेस्तरङ्गा लयं यन्ति तुङ्गाः
तथैवापदः सन्निधौ सेवतां मे ।
इतीवोर्मिपंक्तीर्नृणां दर्शयन्तं
सदा भावये हृत्सरोजे गुहं तम् ॥५॥

கரையில்  அலைகளொடுங்குவது போல
துயரம் போக்கிடுவேன் வருவோர்க்கென
தெரிவிக்கவே கரையோரம் குடிவந்தோய் -தொழுவேன் குகனை இதயத்தாமரையில் தினமே!

गिरौ मन्निवासे नरा येऽधिरूढाः
तदा पर्वते राजते तेऽधिरूढाः ।
इतीव ब्रुवन्गन्धशैलाधिरूढाः
स देवो मुदे मे सदा षण्मुखोऽस्तु ॥६॥

யாமிருக்கும் குன்றேறிடும் மக்கள்
கயிலையே ஏறியவுணர்வடைவோரென
சொல்வார்போல் கந்தமலை நின்றாயோ
சண்முகா- என் சிந்தையிலிலங்கிடவே இன்புற்றேன் அனுதினமே

महाम्भोधितीरे महापापचोरे
मुनीन्द्रानुकूले सुगन्धाख्यशैले ।
गुहायां वसन्तं स्वभासा लसन्तं
जनार्ति हरन्तं श्रयामो गुहं तम् ॥७॥

பெருங்கடரோரம் குடிபுகுந்தோன்
பெரும்பாவம் தீர்த்திடுவான்
முனிவோர்க்கு அருள்வான்
சுகந்தமலை வந்தான்
குகைவாசம் கொண்டான்
தன்னொளியில் திகழ்ந்தான்
மக்கள் துயர் தீர்த்திடுவான்

लसत्स्वर्णगेहे नृणां कामदोहे
सुमस्तोमसंछन्नमाणिक्यमञ्चे ।
समुद्यत्सहस्रार्कतुल्यप्रकाशं
सदा भावये कार्तिकेयं सुरेशम् ॥८॥

பொற்கிருகத்திலிருந்து கொண்டே
மாந்தர் விரும்புவதை அருள்வாய்
மலர்க்குவியலால் நிரம்பியிருக்கும்
மாணிக்க கட்டிலில் அமர்ந்தவாறே
ஆயிரம் கதிரவன் உதித்தது போல
பிரகசமாய்த் திகழ்ந்திருக்கும்
கார்த்திகேயனை, வானவரீசனை
என்றென்றும் உளத்திலிருத்துவேன்.

रणद्धंसके मञ्जुलेऽत्यन्तशोणे
मनोहारिलावण्यपीयूषपूर्णे
मनःषट्पदो मे भवक्लेशतप्तः
सदा मोदतां स्कन्द ते पादपद्मे ॥९॥

இன்னொலியெழுப்பும் சிலம்பணியுடன்
மென்மையானதாய் மிகச்சிவந்ததாய்  மனங்கவர்ந்திடும் நளினமானதாய்
அமிழ்தத்தாரையால் நிறைந்துள்ளதே.
என் மனமென்னும் வண்டு எப்போதும்
தத்தளிக்கிறதே  தாபக்கவலைகளினால்
எந்நாளும் நின் பாதக்கமலங்களில்
கந்தனே அமிழ்ந்து ஆனந்திப்பேனே.

(Adishankara compares our restless mind to a beetle which can get rid of worries and enjoy the nectar by meditating upon the lotus feet of Skanda.)

सुवर्णाभदिव्याम्बरैर्भासमानां
क्वणत्किङ्किणीमेखलाशोभमानाम् ।
लसद्धेमपट्टेन विद्योतमानां
कटिं भावये स्कन्द ते दीप्यमानाम् ॥१०॥

தங்கமென ஒளிவீசிடும்
திவ்ய ஆடை அணிந்திட்டாய்
மணிகள் ஒலித்திட இடையில்
மேகலை அழகாய் விளங்கிட
கண்ணைப் பறிக்கும் ஒளி
ஒட்டியாணத்திலிருந்து வீச
நின்னிடையழகை தியானிப்பேன்
கந்தனே என்வுளம் ஒளிரச்செய்தாய்.

पुलिन्देशकन्याघनाभोगतुङ्ग_
स्तनालिङ्गनासक्तकाश्मीररागम् ।
नमस्यामहं तारकारे तवोरः
स्वभक्तावने सर्वदा सानुरागम् ॥११॥

மலைவாழ் மங்கை திண்ணிய
முலை சேர்த்து நெஞ்சோடு
ஆரத்தழுவவே  குங்குமப்பூ
மார்பில் படிந்து சிவந்ததுவே
தாரகனுக்கு எதிரியான பெரும்
தீரனவன் மார்பினைத் தொழுவேன்.
அருள் புரிவாய் பக்தருக்கு என்றும்
தருவாய்  செம்மை அன்பினையே.
(Raga has two meanings – red colour and love. )

विधौ क्लुप्तदण्डान् स्वलीलाधृताण्डान्
निरस्तेभशुण्डान् द्विषत्कालदण्डान् ।
हतेन्द्रारिषण्डाञ्जगत्त्राणशौण्डान्
सदा ते प्रचण्डान् श्रये बाहुदण्डान् ॥१२॥

அயனுக்கு கரம் கொடுத்தது தண்டனை
விளையாட்டாய்  காத்தது அண்டந்தனை
விரட்டினது வேழவுரு அண்ணன் தனை
எதிரிகளுக்கு காலன் கை தண்டமானதை
அசுரர்தமை கண்டதுண்டமாக்கியதை
வையம் காக்கும் பெருமை கொண்ட கை
வலிமையான புஜங்கள் கொண்டனுனது நீள்தோள்கள் காக்க எனை அநுதினமே.

सदा शारदाः षण्मृगाङ्का यदि स्युः
समुद्यन्त एव स्थिताश्चेत्समन्तात् ।
सदा पूर्णबिम्बाः कलङ्कैश्च हीनाः
तदा त्वन्मुखानां ब्रुवे स्कन्द साम्यम् ॥१३॥

சரத்கால சந்திரன் ஆறு
ஒரேநேரம் தோன்றியே
அருகருகே ஒளிவீசினால்
பூரணவுருவாய் மருவில்லாமல்
இருக்குமானால் நிலவை
ஆறுமுகா நின்முக அழகிற்கு
சிறிது ஒப்பு சொல்லுவேன்.

स्फुरन्मन्दहासैः सहंसानि चञ्चत्
कटाक्षावलीभृङ्गसंघोज्ज्वलानि ।
सुधास्यन्दिबिम्बाधरणीशसूनो
तवालोकये षण्मुखाम्भोरुहाणि ॥१४॥
அன்னப்பறவைகள் அசைந்ததுபோல்  புன்சிரிப்பு தவழ்ந்த வதனமே
வண்டுகளாய் ஒளிர்ந்ததே கடைவரை  நீண்ட கண்களின் வரிசையே!
தேன் ஊறும் கோவைக்கனியென அதரங்கொண்ட தரணிமகனே
இதயத்தில் நான் கொண்டது சண்முகா
நினது  தாமரைமுகங்களையே !

विशालेषु कर्णान्तदीर्घेष्वजस्रं
दयास्यन्दिषु द्वादशस्वीक्षणेषु ।
मयीषत्कटाक्षः सकृत्पातितश्चेद्
भवेत्ते दयाशील का नाम हानिः ॥१५॥

காதுவரை நீண்டதாய்  என்றும்
கருணை பொழியும் அகலமான
பன்னிரு கண்களிலிருந்து
என்மீதும் சற்றே கடைக்கண்
பார்வையை ஒருமுறையேனும்
செலுத்தலாகாதோ கருணையுருவே
என்ன கஷ்டம் உனக்கிதிலே.

सुताङ्गोद्भवो मेऽसि जीवेति षड्धा
जपन्मन्त्रमीशो मुदा जिघ्रते यान् ।
जगद्भारभृद्भ्यो जगन्नाथ तेभ्यः
किरीटोज्ज्वलेभ्यो नमो मस्तकेभ्यः ॥१६॥

குழந்தாய் என்னிலிருந்து வந்தாய்
வாழ்கவென ஆறுமுறை உவகையுடன்
மந்திரமுரைத்தே உச்சி முகர்ந்தார் ஈசன்
அகில பாரம் தாங்கும் உலக நாயகனின் மகுடங்களால் அணிபெற்று ஒளி வீசும்
அந்தத் தலைகளை வணங்குகிறேன்.

स्फुरद्रत्नकेयूरहाराभिरामः
चलत्कुण्डलश्रीलसद्गण्डभागः ।
कटौ पीतवास करे चारुशक्ति
पुरस्तान्ममास्तां पुरारेस्तनूज ॥१७॥

ஒளிரும் இரத்தின கங்கணமும் அட்டிகையும் அசையும் காதணியும்              அழகுற அலங்கரித்த கழுத்தும்
இடையில் பட்டாடையும் கையில்
நற்வேற்படையும் கொண்டவனே
புராரி மகனே  என்னுள்ளே
நீ இருக்கக் கண்டேனே.

इहायाहि वत्सेति हस्तान्प्रसार्या_
ह्वयत्यादशच्छङ्करे मातुरङ्कात् ।
समुत्पत्य तातं श्रयन्तं कुमारं
हराश्लिष्टगात्रं भजे बालमूर्तिम् ॥१८॥

இங்கே வா குழந்தாயென
சங்கரன் கைநீட்டி அழைக்க
சட்டென எழுந்து அம்மாவின்
மடிவிட்டு தந்தையிடம் தாவிய
அச்சிறுவனை ஹரனால்
கட்டித்தழுவப்பட்ட குழந்தை
தெய்வத்தைப் போற்றிடுவேன்.

कुमारेशसूनो गुह स्कन्द सेना_
पते शक्तिपाणे मयूराधिरूढ ।
पुलिन्दात्मजाकान्त भक्तार्तिहारिन्
प्रभो तारकारे सदा रक्ष मां त्वम् ॥१९॥

குமரா! அரன் மகனே! குகனே!
கந்தா! சேனைத்தலைவனே!
வேலவனே! மயிலேறியவனே!
குறத்திமணாளனே! பக்தர்கள்
குறை தீர்க்கும் பிரபோ! தாரகன்
எதிரியே! எப்பொழுதும் என்னை
காப்பாற்ற வேண்டும் நீயே.

प्रशान्तेन्द्रिये नष्टसंज्ञे विचेष्टे
कफोद्गारिवक्त्रे भयोत्कम्पिगात्रे ।
प्रयाणोन्मुखे मय्यनाथे तदानीं
द्रुतं मे दयालो भवाग्रे गुह त्वम् ॥२०॥

புலனடங்கி  நினைவிழந்து
அசைவற்று கோழை வாயிலிருந்து
வழிய உடல் பயத்தினால் நடுங்க
அந்தி பயணத்தை எதிர்நோக்க
அந்த நேரத்தில் என் தலைவா
மிகவேகமாய் என்னெதிரில் நீ
வந்திடுவாய், குகனே, தயாபரனே.

कृतान्तस्य दूतेषु चण्डेषु कोपाद्
दहच्छिन्द्धि भिन्द्धीति मां तर्जयत्सु ।
मयूरं समारुह्य मा भैरिति त्वं
पुरः शक्तिपाणिर्ममायाहि शीघ्रम् ॥२१॥

யமதூதர்கள் நெருங்கிவந்தே
பயங்கரமாய் கோபத்துடன்
நெருப்பிலிடு வெட்டு பிளந்திடு
என்றென்னை அச்சுறுத்துகையில்
அஞ்சாதே என்று மயிலேறி நீ
கையில் வேல் தாங்கி என்னருகே
விரைவில் ஓடி வருவாய்.

प्रणम्यासकृत्पादयोस्ते पतित्वा
प्रसाद्य प्रभो प्रार्थयेऽनेकवारम् ।
न वक्तुं क्षमोऽहं तदानीं कृपाब्धे
न कार्यान्तकाले मनागप्युपेक्षा ॥२२॥

விழுந்து விழுந்து உன் காலடியில்
தொழுதெழுவேன் என் தலைவா
மீண்டும் மீண்டும் வேண்டுவேனே
அருள வேண்டும் பேசவும் இயலாத
அந்த அந்திம நேரத்தில் என்னைத்
துளியும் கைவிடாதே கருணைக்கடலே.

सहस्राण्डभोक्ता त्वया शूरनामा
हतस्तारकः सिंहवक्त्रश्च दैत्यः ।
ममान्तर्हृदिस्थं मनःक्लेशमेकं
न हंसि प्रभो किं करोमि क्व यामि ॥२३॥

ஆயிரம் அண்டங்களை அனுபவித்த
சூரன் எனப்பேர் உடையோனையும்
சிங்கமுக அசுரனையும் நீ அழித்தாய்
என் உள்ளத்தினுள்ளே இருக்கும்
மனக்குறை ஒன்றையும் தீர்க்கவில்லை
என்ன செய்வேன் யாரிடம் செல்வேன்.

अहं सर्वदा दुःखभारावसन्नो
भवान्दीनबन्धुस्त्वदन्यं न याचे ।
भवद्भक्तिरोधं सदा कॢप्तबाधं
ममाधिं द्रुतं नाशयोमासुत त्वम् ॥२४॥

எப்பொழுதும் துன்பச்சுமையில்
அமிழ்ந்து இருக்கிறேன் நான்
ஏழை பங்காளியே உன்னிடம்
யாசிப்பது வேறொன்றுமில்லை
உன்னைத் தொழுவதற்கு தடையாய்
என்றும் கவலைகள் பீடித்தபடியால்
உமைமைந்தனே என் மனக்கஷ்டத்தை
விரைவில்  நீ அழித்திட வேண்டும்.

अपस्मारकुष्टक्षयार्शः प्रमेह_
ज्वरोन्मादगुल्मादिरोगा महान्तः ।
पिशाचाश्च सर्वे भवत्पत्रभूतिं
विलोक्य क्षणात्तारकारे द्रवन्ते ॥२५॥

வலிப்பும் குஷ்டமும் காசமும்
மூலமும் நீரிழிவும் காய்ச்சலும்
பைத்தியமும் வீங்கு சுரப்பியும்
மற்றும் பெருநோய்கள் பலவும்
பேய்பிசாசுகளும் தாரகன் எதிரியே
திருநீர் உனதை பன்னீரிலையில்
பார்த்த மாத்திரத்தில் ஓடிடுமே.

(திருச்செந்தூரில் விபூதி ப்ரஸாதம் பன்னீரிலையில் வழங்கப்படுகிறது. இது நோய் தீர்க்கும் மருத்துவ குணம் கொண்டதாக நம்பப்படுகிறது. இவ்விலை இருபுறமும் ஆறு ஆறு நரம்பு கொண்டதால் பன்னிரு இலை என்பதே பன்னீர் இலை என்று மருவியதாகச் சொல்லப்படுகிறது)

दृशि स्कन्दमूर्तिः श्रुतौ स्कन्दकीर्तिः
मुखे मे पवित्रं सदा तच्चरित्रम् ।
करे तस्य कृत्यं वपुस्तस्य भृत्यं
गुहे सन्तु लीना ममाशेषभावाः ॥२६॥

பார்ப்பது கந்தா உன் உருவையே
கேட்பதும் கந்தா உன் புகழையே
பேசுவதும்  என்னாளும்
உனது புனித கதையயே
கரங்களும் நின் செயலுக்கே
உடலும் உன் சேவகத்துக்கே
என் எல்லா உணர்ச்சிகளுமே
ஐக்கியமடையட்டும்  குகனிடமே.

मुनीनामुताहो नृणां भक्तिभाजां
अभीष्टप्रदाः सन्ति सर्वत्र देवाः ।
नृणामन्त्यजानामपि स्वार्थदाने
गुहाद्देवमन्यं न जाने न जाने ॥२७॥

பெருமுனிவருக்கும் பக்திப்
பெருக்கோடு தொழுவோர்க்கும்
வேண்டிய வரங்கள் தந்திடவே
தெய்வங்கள் நிறைந்துள்ளனரே.
அனைவரும்  ஒதுக்கியவனுக்கும்
தானே முன்வந்து அருள்புரியும்
குகனைப்போல் தெய்வமொன்றை
யானறியேன் யான் அறியேனே.

कलत्रं सुता बन्धुवर्गः पशुर्वा
नरो वाथ नारि गृहे ये मदीयाः ।
यजन्तो नमन्तः स्तुवन्तो भवन्तं
स्मरन्तश्च ते सन्तु सर्वे कुमार ॥२८॥

மனைவியும் மக்களும் சுற்றமும்
விலங்கினமும் ஆணோ பெண்ணோ
என்னில் வசிக்கும்  அனைவரும்
உன் துதியையே  பாடிட வேண்டும்
உன்னையே தொழுதிட வேண்டும்
குமரா  உனை வணங்கிட வேண்டும்
நின்னையே நினைத்திட வேண்டும் .

मृगाः पक्षिणो दंशका ये च दुष्टाः
तथा व्याधयो बाधका ये मदङ्गे ।
भवच्छक्तितीक्ष्णाग्रभिन्नाः सुदूरे
विनश्यन्तु ते चूर्णितक्रौञ्चशौल ॥२९॥

மிருகங்களும் பறவைகளும் கடிக்கும்
உயிரினங்களும் மற்றும் துஷ்டர்களும்
வியாதிகளும் என்னை வருத்துகையில்
உன் கூர்வேலால் விரட்டிடு வெகுதூரம்
அவற்றை நசித்திடுவாய்  கிரௌஞ்ச
மலையைப் பொடிப் பொடியாக்கியவனே

जनित्री पिता च स्वपुत्रापराधं
सहेते न किं देवसेनाधिनाथ ।
अहं चातिबालो भवान् लोकतातः
क्षमस्वापराधं समस्तं महेश ॥३०॥

பெற்றோர் தன் மக்கள்
குற்றம் பொறுத்திடுவோரே!
தேவசேனை தலைவா!
சிறுபிள்ளை  நான்- நீயோ
தந்தை அனைவருக்குமே
என் பிழை பொறுத்தருளுவாய்
அனைத்து உலகுக்கும் ஈசனே.

नमः केकिने शक्तये चापि तुभ्यं
नमश्छाग तुभ्यं नमः कुक्कुटाय ।
नमः सिन्धवे सिन्धुदेशाय तुभ्यं
पुनः स्कन्दमूर्ते नमस्ते नमोऽस्तु ॥३१॥

உன் மயிலுக்கு வணக்கம்
சக்தி வேலுக்கும் வணக்கம்
உனது ஆட்டுக்கு வணக்கம்
உன் சேவலுக்கும் வணக்கம்
கடலுக்கும் கடல்சார்ந்த உன்
நிலபரப்பிற்கும் வணக்கம்
கந்தவுருவிற்கு மீண்டும்
மீண்டும் வணக்கம் வணக்கம்.

जयानन्दभूमञ्जयापारधामन्
जयामोघकीर्ते जयानन्दमूर्ते ।
जयानन्दसिन्धो जयाशेषबन्धो
जय त्वं सदा मुक्तिदानेशसूनो ॥३२॥

இன்பமே இருப்பிடமானவனுக்கு ஜயம் எல்லை அதில் இல்லாதவனுக்கு ஜயம்
மாசில்லா கீர்த்தி கொண்டவனுக்கு ஜயம்
ஆனந்தமே உருவானவனுக்கு ஜயம்
ஆனந்தக் கடலானவனுக்கு ஜயம்
நிறைவான உறவானவனுக்கு ஜயம்
முக்தியைத் தந்திடும் ஈசனது மகனே
என்றென்றும்  உனக்கு ஜெயமே!

(பலஸ்ருதி)
भुजङ्गाख्यवृत्तेन क्लृप्तं स्तवं यः
पठेद्भक्तियुक्तो गुहं संप्रणम्य ।
स पुत्रान्कलत्रं धनं दीर्घमायुः
लभेत्स्कन्दसायुज्यमन्ते नरः सः ॥३३॥

புஜங்க சீரில் அமைந்தள்ள
புகழ் மாலை இதுதன்னை
பக்திபூண்டு படித்திட்டே
குகனை வீழ்ந்து வணங்கிட
நன்மக்கள் மனையாளோடு
செல்வமும் நீண்ட ஆயுளும்
பெற்றே இறுதியில் அம்மனிதன்
கந்தனோடே இணைந்திடுவாரே.



Categories: Krithis

7 replies

  1. Madam
    It is really nice to read. If it can be translated in the same tune and rhythm of the sloka it will be even better.

  2. Thanks for sharing this. As I was reading Bhujangam last Thursday, just thought if I can know the meaning and this came up next day. Maha Periyava Padham Charanam!! Om Swaminatha Periyava Charanam!!

  3. Very nice. Shri Gurubhyo Namaha! Om SaravaNa Bhavaaya Namaha!

  4. Great translation. Really Blessed.

  5. Wonderful.Now I can recite knowing the full meaning.

  6. Thanks so much for sharing the translation.

  7. Thank you so much for the translation. Really blessed by Mahaperiyava. what a coincidence. Yesterday night I listened about subramanya Bhujangam. And decided to chant from Today morning. when I saw this post, went to pooja room and thanked periyava for such a blessing.

    Once again thanking for the great details

Leave a Reply to sriramCancel reply

Discover more from Sage of Kanchi

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading