Periyava Golden Quotes-445

album1_79

இப்போது பொதுவாக உள்ள பரிதாப நிலை என்னவென்றால், ஒன்று, சிக்கனமாக இருப்பவன் தானும் அநுபவிக்காமல் பிறத்தியானுக்கும் உதவி பண்ணாமல் கருமியாக இருக்கிறான்; செலவாளியாக இருப்பவனோ ‘ஸெளகர்யம், இன்னும் ஸெளகர்யம்’ என்று பறப்பதில் தனக்கே போதாமல் கடனாளியாக நிற்பதால் இவனாலும் பரோபகாரம் நடப்பதில்லை. பிறருக்குச் செய்வதற்காகவே சொந்த விஷயத்தில் சிக்கனமாயிருக்க வேண்டும் என்ற உயர்ந்த கொள்கையை ஒவ்வொருவனும் கடைப்பிடித்தால் எவ்வளவோ புண்யத்துக்குப் புண்யம், நிம்மதிக்கு நிம்மதி, எத்தனையோ தீனர்களும் க்ஷேமமடைவார்கள். சிக்கனமாயிருந்தாலொழிய, இப்போது இருக்கிற போக போக்ய இழுப்பில், எவனுக்குமே மிச்சம் பிடிக்க முடியாது. அதனால் சிக்கன வாழ்க்கை நடத்தினால்தான் ‘தனக்கு மிஞ்சி’ தர்மம் பண்ண முடியும். அதாவது எத்தனை சிக்கனமாயிருக்க முடியுமோ அப்படியிருந்து தனக்கு மிஞ்சும்படியாகப் பண்ணிக் கொண்டு தர்மம் பண்ணணும்.- ஜகத்குரு  ஸ்ரீ   சந்திரசேகரேந்திரசரஸ்வதி  சுவாமிகளின் அருள்மொழிகள்

In today’s sorry state of affairs, a thrifty person is mean and neither has any enjoyment in his life nor helps the others; on the other hand, a spendthrift, in pursuit of more and more comforts, gets into debt and is not in a position to help the others. If only a person follows the noble principle of being thrifty in order to be philanthropic, he will not only earn a lot of Punniya (goodwill) but also enjoy peace of mind. Many a needy person will also reap benefits. In the kind of materialistic, consumerist world we live today, unless a person is thrifty, he cannot save anything. Only a thrifty life will enable him to be philanthropic after taking care of his own needs. In other words, a person should be as thrifty as possible and give to others after attending to his own needs. – Jagadguru Sri Chandrasekharendra Saraswathi Swamigal



Categories: Deivathin Kural, Golden Quotes

Tags:

Leave a Reply

%d bloggers like this: