Periyava Golden Quotes-441

album1_74

எந்தெந்த ஸ்டேஜில் எப்படிப்பட்ட பக்குவ ஸ்திதிகளிலிருப்பார்கள், அந்த ஸ்டேஜில் அவர்கள் என்ன பண்ணினால் நிறைவு பெறுவார்கள், ஆனால் இந்த நிறைவே நிறைந்த நிறைவு என்று நின்றுவிடாமல் மேலே போவார்கள் என்று ரொம்பவும் understanding-உடன் கவனித்து ஒரு ஜீவனைக் கொஞ்சம் கொஞ்சமாக மேலே கொண்டு போவதற்காகவே, முடிவிலே ஜீவ-ப்ரம்ம அபேதத்தை சொன்ன ஹிந்து மதம் அடியிலே அநேக தேவதைகள், பித்ருக்கள் உபாஸனையைச் சொல்லியிருக்கிறது என்று புரிந்து கொள்ளாததால் ‘க்ரிடிஸைஸ்’ செய்கிறார்கள். அநேக ஜன்மாந்தர வாஸனைகளோடு பிறந்திருக்கிற பெருவாரியான ஜனங்களை இப்படிக் கொஞ்சம் கொஞ்சமாக, gradual-ஆகத்தான் முன்னேற்ற முடியும். அப்படியில்லாமல் முதலிலேயே மேலே ஆரம்பித்தால் அது பிடிபடாமல் கீழே விழும்படியாகத் தான் ஆகும் என்பதற்கு proof-ஆகவே மற்ற மதஸ்தர்களை விட நம்மிலேயே வெகு அதிகமாக மஹான்களும் ஸாதுக்களும் தோன்றியிருக்கிறார்கள்! – ஜகத்குரு ஸ்ரீசந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் அருள்மொழிகள்

Our Hinduism is a very understanding religion. It realizes that persons at different stages of life will be at different stages of maturity and they may need to follow certain prescribed course of actions to achieve maturity at that stage. But it is also aware that people should not become content with that but aim for greater maturity and spiritual elevation which will lead one eventually to the realization of the non dual nature of the soul and the Brahmam, the ultimate philosophy of Hinduism. But at the same time Hinduism also advocates the worship of a multitude of divine beings or Devathas and Pithrus (ancestors)  because this is only gradual way in which a majority of the people born with a karmic destiny unique to each who can then attain spiritual elevation gradually and steadily. If this is not done and the process of elevation commences at the top, only a severe fall will be the consequence. This is the reason our Hindu religion has given birth to many evolved souls. – Jagadguru Sri Chandrasekharendra Saraswathi Swamigal



Categories: Deivathin Kural, Golden Quotes

Tags:

Leave a Reply

%d bloggers like this: