Periyava Golden Quotes-439

album1_72

மநுஷ்ய ராஜாக்களைப் போல இல்லாமல் எல்லா ஜனங்களுக்கான எல்லாக் காரியங்களையும் தான் ஒருத்தனாகவே கவனிப்பதற்கு ஈச்வரனுக்கு சக்தி இருக்கத்தானிருக்கிறது என்றாலும், ஏதோ ஒரு காரணத்துக்காக, லீலைக்காக, அவர்தானே இப்படிக் கொஞ்சங் கொஞ்சம் அதிகாரம் கொடுத்து அநேக தேவஜாதிகள் இந்த லோக நிர்வாஹத்தை கவனித்துக் கொள்ளும்படியாக வைத்திருக்கிறார்? லோகத்தையும் நேச்சரையும் ஒருவன் தாண்டிப் போகிற வரையில், இவன் ஸம்பந்தமாகவே அவர் நியமித்திருக்கிற இந்த அதிகாரிகளை அவன் ஆச்ரயிக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறார் என்றுதானே இதற்கு அர்த்தம்? கீதையில் பகவானே இந்த விஷயத்தை ஸ்பஷ்டமாகச் சொல்லியிருக்கிறார். “எல்லா தர்மத்தையும் மூட்டை கட்டிவிட்டு என் ஒருத்தனையே பிடிச்சுக்கோ; என்கிட்டேயே சரணாகதி பண்ணு” என்று அவர் சொன்னது மட்டும் பிரஸித்தியாயிருக்கிறது. ஆனால் இப்படிச் சொன்னது கடைசியில்தான். அதற்கு முந்தி, “பல தினுஸான ஆசைகள் உள்ளவர்கள் அந்தந்த ஆசைகளைப் பூர்த்தி பண்ணும் அநேக தேவதைகளை உபாஸனை பண்ணுகிறார்கள். அப்போது அவர்களுக்கு அந்த தேவதைகளிடம் ஸ்திரமான ஈடுபாட்டை நானேதான் உண்டு பண்ணுகிறேன். ஆனாலும் அந்த தேவதைகளுடனேயே நின்று விடாமல், அதுகளுக்கும் அந்தர்யாமியாக நான்தான் ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறேன் என்ற தத்துவத்தை மறந்து அந்த தேவதைகளே எல்லாம் என்று நினைத்து விடக்கூடாது. இப்படி நினைக்கிறவன் அவை தருகிற அல்ப இச்சா பூர்த்திகளோடையே நின்று விடுகிறான். என் நினைவை விடாமல், அவற்றை உபாஸிக்கிறவன் நாளாவட்டத்தில் என்னிடமே வந்து சேருகிறான்” என்று சொல்கிறார். – ஜகத்குரு ஸ்ரீசந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் அருள்மொழிகள்

Unlike the Earthly Kings, Bhagawan has got the supreme power and capacity to take care of the entire Universe on His own. But for some reason or other, may be due to His divine will, He has deputed many of His servants to take care of the various aspects of the administration of this world, by delegating some powers to them. This only means that Eswara expects us to be dependent on these “officials” deputed by Him till we are free of this world and nature. This has been clearly expressed by the Lord in Srimad Bhagawad Gita. Only those words of Lord Krishna which direct a person to surrender at His feet, after giving up all other chosen paths (Maamekam Sharanam Vraja) have become famous. But before uttering these words He states, “Persons with different kinds of desires worship different Devathas to fulfill these desires. At that juncture, it is I who create steadfast devotion to these Devathas in the minds of the devotees. At the same time, it should not be forgotten that I am the motivating force in these Devathas and they should not assume that these Devathas are all powerful in themselves. A person who suffers from this mistaken notion does not progress beyond the negligible desires fulfilled by these Devathas. But a person who worships them, without forgetting my All Pervasive presence, eventually comes to me.” – Jagadguru Sri Chandrasekharendra Saraswathi Swamigal



Categories: Deivathin Kural, Golden Quotes

Tags:

Leave a Reply

%d bloggers like this: