Jaya Jaya Sankara Hara Hara Sankara – Newsletter from Sri Pradosha Mama gruham describing three beautiful incidents.
Anantha Jaya Jaya Sankara to our sathsang seva volunteer for the Tamizh typing and translation. Ram Ram
வாயினால் உன்னைப் பரவிடும் அடியேன் படுதுயர் களைவாய் பாசுபதா பரஞ்சுடரே!
ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ பெரியவாளின் மகிமை (17-06-2008)
“எல்லாமும் அறிவாய் நீ”
சர்வ வல்லமை படைத்த சாட்சாத் ஈஸ்வரரின் திரு அவதாரமாய் இந்த மண்ணில் சுக பிரம்மரிஷியின் மேன்மையோடு ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ மஹா பெரியவாளெனும் நடமாடும் தெய்வம் நம்மை ஆட்கொண்டருளுகிறது.
தரிசிக்கும் பாக்யம் பெற்ற பக்தர்களின் வாழ்வில் நடந்தவை, நடப்பவை, நடக்கவிருப்பவை என யாவும் அந்த சர்வக்ஞருக்கு தெரிந்ததே என்பதில் துளியும் சந்தேகமில்லை என்பது பல பக்தர்களின் அனுபவங்களாகின்றன.
அவருள் சிவராமகிருஷ்ணன் ஒருவர். வயதான தாயாருக்கு ஸ்ரீ பெரியவாளிடமிருந்த பக்தி சிவராமகிருஷ்ணனுக்கும் ஊட்டப்பட்டு இருந்தது. மடி செய்து கொண்டிருந்த அந்த தாயாருக்கு ஒரு பெரும்பாக்யம் கிட்டி இருந்தது. சிவராமகிருஷ்ணன் ஸ்ரீ பெரியவாளை தரிசிக்க செல்லும் போதெல்லாம் தாயார் மடியாக ஒரு வெங்கலப் பானையில் ஸ்ரீ பெரியவாளுக்கென திரட்டிப்பால் கிளறி பக்தி சிரத்தையோடு அனுப்பி வைப்பார். திரட்டிப்பாலை அன்பு தெய்வமாய் ஸ்ரீ பெரியவா பக்திக்கு கட்டுப்பட்டு ஒரு சிறு உருண்டையாக உருட்டி ஏற்றுக் கொள்வது வழக்கமாயிருந்தது.
இப்படி ஒரு முறை சென்னையிலிருந்து சிவராமகிருஷ்ணன் புறப்பட்டார். காஞ்சிபுரத்திற்கு அந்த நாட்களில் செங்கல்பட்டு வழியாக காரில் செல்வது அவருடைய வழியாக இருந்தது. ஒரு பௌர்ணமி தினத்தில் தரிசிக்க புறப்பட்டு தன் தாயார் கொடுத்தனுப்பிய திரட்டுப்பாலுடன் ஸ்ரீ பெரியவாள் தரிசனத்திற்காக போய் நின்றார்.
அது அதிகாலை விஸ்வரூப தரிசனம். இவர் வெளியே நிற்க ஸ்ரீ பெரியவாள் உள்ளே இருக்கிறார். ஸ்ரீ பெரியவாளின் கைங்கர்யம் செய்யும் ஒருவரிடம் சிவராமகிருஷ்ணன் தான் வந்திருப்பதாக சொல்லச் சொல்கிறார்.
அவர் போய் உள்ளே அமர்ந்திருக்கும் ஸ்ரீ பெரியவாளிடம் இதை கூறியபோது சட்டென்று ஸ்ரீ பெரியவா “அவர போகச் சொல்லு” என்று கூறிவிடுகிறார். கைங்கர்யம் செய்பவருக்கோ தயக்கம், இப்படி ஸ்ரீ பெரியவா கூறியறியாதவராய் தயங்கியபடி வெளியே வருகிறார். காத்து நிற்கும் சிவராமகிருஷ்ணன் முகத்தில் தெரியும் ஆவல் இவரை சங்கடப்படுத்துகிறது. இருந்தாலும் ஸ்ரீ பெரியவாளின் கட்டளையை சொல்லாமலிருக்கலாமா என மெல்ல சொல்கிறார். பக்தரின் முகத்தில் திகைப்புடன் ஏமாற்றம் நிறைகிறது. அப்படியா ஸ்ரீ பெரியவா சொன்னார் என்று மறுமுறை சந்தேகம் தெளிய கேட்கிறார். கைங்கர்யம் செய்பவருக்கும் அதை திரும்பச் சொல்ல தர்மசங்கடம் தான். இருந்தாலும் வேறு என்ன செய்வது.
சரி ஏதோ நாம் தவறு செய்துவிட்டோம் போலும் என்று சிவராமகிருஷ்ணன் மனதை தேர்த்திக் கொள்கிறார். ஆனால் தாயார் கொடுத்த திரட்டிப்பாலையாவது சமர்ப்பிக்க வேண்டுமே என்று தோன்றுகிறது.
“அம்மா எப்பவும் பெரியவாளுக்கு பண்ணி கொடுப்பா. ஸ்ரீ பெரியவா ஏத்துப்பா….இதையாவது கொண்டு போய் சமர்ப்பிச்சுடுங்கோ” என்று மனதை சமாதானம் செய்வித்துக் கொண்டு திரட்டுப்பாலை அவரிடம் கொடுத்தனுப்பினார்.
கைங்கர்யம் செய்பவரும் இதற்கு தயக்கம் காட்டவில்லை. சரி போகிறது இந்த திரட்டுப்பாலை எப்போதும் போல ஸ்ரீ பெரியவாள் ஏற்றுக் கொண்டுவிடத்தான் போகிறார்; பக்தருக்கு இதுவே ஆறுதலாகி போய்விடும் என நினைத்தபடி ஸ்ரீ பெரியவாளிடம் இதைக் கொண்டு வைக்கிறார்.
“அவரோட தாயார் ஸ்ரீ பெரியவாளுக்கு திரட்டிப்பால் கொடுத்தனுப்பினாளாம்” என்று கைங்கர்யம் செய்பவர் சொல்லி முடிப்பதற்கு முன் “இதையும் எடுத்துண்டு அவரை திரும்பி போகச் சொல்லு” வினோதமான கட்டளையாக ஸ்ரீ பெரியவா உதிர்க்க கைங்கர்யம் செய்பவருக்கே வெலவெலத்துப் போனது. பிறகு எப்படியோ சமாளித்துக் கொண்டு சிவராமகிருஷ்ணனிடம் இதை சொல்லவும் முடியாமல் மெல்லவும் முடியாமல் இவர் நிலை பரிதாபமாக போனது.
இப்படி ஸ்ரீ பெரியவா தன்னை பார்ப்பதையும், தன் தாயார் சமர்பித்ததை ஏற்றுக் கொள்வதையும் முழுமையாக ஏன் நிராகரிக்க வேண்டுமென்று சிவராமகிருஷ்ணனின் வேதனை பன் மடங்காகி பெருகிறது. தெய்வம் எதை செய்தாலும் அதில் நியாயம் இருக்கும் என்ற அசைக்க முடியாத நம்பிக்கையால், தெய்வத்தின் இச்செயலுக்கு தான் எப்பேற்பட்ட தவறு செய்துள்ளோமோ அதை அறியவும் வழியில்லேயே என்று மனதில் பெரும் தாபம். எப்போதுமில்லாத தாங்க முடியாத சோகம் தரும் அனுபவமாக சிவராமகிருஷ்ணனுக்கு இச்சம்பவம் அமைந்துவிட்டத்தில் ஸ்ரீ பெரியவாளின் உத்திரவானதால் கொண்டு வந்த திரட்டிப்பாலை எடுத்துக் கொண்டு காரில் செங்கல்பட்டு வழியாக சென்னை நோக்கி செல்கிறார்.
சென்னையில் வீட்டையடையும் போது அங்கே வீட்டின் முன் கூட்டம். இதை பார்த்ததும் ஏதோ அசம்பாவிதம் என்று சிவராமகிருஷ்ணனுக்கு புரிந்து விடுகிறது.
பரம சிரத்தையோடு ஸ்ரீ பெரியவாளுக்கு திரட்டிப்பாலை அனுப்பி வைத்த தாயார் நற்கதியடைந்து விட்டிருந்தார். தொலைபேசி வசதிகள் பெருகாத அந்த நாட்களில் இந்த செய்தி சிவராமகிருஷ்ணனை வேண்டுமானால் அடைய முடியாமல் போயிருக்கலாம்.
லோகங்கள் யாவிலும் நடக்கும், நடக்கவிருக்கும் எல்லாமுமே ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ மஹா பெரியவாளெனும் முக்காலமும் உணர்ந்த ஞானிக்கு தெரியாமலா போகும். ஸ்ரீ பெரியவாளின் கட்டளைக்கு இப்போது அர்த்தம் புரிந்தது. சிவராமகிருஷ்ணனுக்கு கண்ணீர் பெருகியது. அது தாயின் மறைவிற்கா அல்லது தாயினும் மேலான ஸ்ரீ பெரியவாளெனும் தெய்வத்தின் கருணையை எண்ணியா!
அங்கேயும், இங்கேயும் பிரம்மஞானிகள்
ஸ்ரீ மடத்திலிருந்து ஒரு வேத பண்டிதர் திருவண்ணாமலை செல்வதாக ஸ்ரீ பெரியவாளிடம் தெரிவித்துவிட்டு புறப்பட்டார். திருவண்ணாமலை போவதன் நோக்கம் இன்னதென்று ஸ்ரீ பெரியவாளிடம் அவர் சொன்னதாக தெரியவில்லை. அங்கே சென்றவருக்கு ஸ்ரீ ரமண மகரிஷி அவர்களை தரிசிக்க தோன்றியது.
ஸ்ரீரமணாஸ்ரமம் சென்றவர் ஸ்ரீரமண பகவானை தரிசித்த பிறகு அங்கே ஏற்பாடு செய்திருந்த சாப்பாட்டிற்கு உட்கார்ந்தார். அந்த ஏற்பாடு பண்டிதருக்கு சற்றே வித்தியாசமாக இருந்ததாக உணர்ந்தார். ஸ்ரீரமண பகவான் நடுவே உட்கார்ந்திருக்க, பகவானின் ஒரு பக்கமாக வைதீக பண்டிதர்களை சாப்பிட உட்கார வைத்திருந்தனர். பகவானின் மறு பக்கமாக அவரை அடிக்கடி தரிசிக்க வரும் அயல்நாட்டு பக்தர்களை உட்கார வைத்திருந்தனர்.
இந்த அமைப்பே பண்டிதரை சற்றே சங்கடப்படுத்தியது. மிகவும் நியமமாக தனித்தே உணவை உண்ணும் பழக்கமானவராய் இருந்ததால் இப்படி சமபந்தியாய் அந்நிய நாட்டினர்களோடு, அவர்கள் வேறு பிரிவாய் உட்கார்ந்திருந்தாலும் இப்படிப்பட்ட ஒரு ஏற்பாடு அவர் மனதிற்கு ஒப்புதலாக படவில்லை.
இவர் சங்கடத்தை இன்னொரு அம்சமும் அதிகப்படுத்தியது. வைதீக பண்டிதர்களுக்கு ஒரு பக்கம் சாத்வீகமான சமையல் பரிமாறப்பட அந்த பக்கம் நேர்மாறாக அயல்நாட்டு பக்தர்களுக்கு வெங்காயம் கலந்த சாப்பாடு போடப்பட்டுக் கொண்டிருந்தது. இதுவும் பண்டிதருக்கு மிக வித்யாசமாகவும், சற்றும் ஏற்றுக் கொள்ள முடியாததாகவும் தோன்றியது.
ஸ்ரீரமண மகரிஷி இதற்கு நடுவே அமர்ந்து பிட்சை ஏற்றுக் கொள்வதை பண்டிதரால் ஜீரணிக்க முடியவில்லை. ஏதோ பெரிய குற்றம் கண்டு பிடித்தவர் போல் இதை போய் ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ மஹா பெரியவாளிடம் தெரிவிக்க வேண்டுமென்று பண்டிதர் துடித்தார்.
நேரே திரும்பி ஸ்ரீ மடத்திற்கு வந்து சேர்ந்தார்.
முதல் காரியமாக ஸ்ரீ ரமணாஸ்ரமத்தில் நடக்கும் இந்த தகாத விஷயத்தை ஸ்ரீ பெரியவா காதில் போட்டேயாக வேண்டுமென்று தரிசனத்திற்கு நின்றார்.
ஸ்ரீ பெரியவாளை சில பக்தர்கள் சூழ்ந்திருக்க இவர் நெருங்கி, திருவண்ணாமலை புகாரை சொல்ல எத்தனித்தார். இவர் வாயை திறக்குமுன் ஸ்ரீ பெரியவா “இப்போ ஒண்ணும் சொல்ல வேண்டாம்…அப்பறமா பார்க்கலாம்” என்று தடுத்து விட்டார்.
ஸ்ரீ பெரியவா தனிமையில் இருந்தபோது மீண்டும் பண்டிதர் சென்றார். இப்போது பண்டிதரை ஸ்ரீ பெரியவா பேசவிட்டு காத்திருந்தார். பண்டிதர் தான் அங்கே பார்த்ததை குற்றமாக தோஷமாகவும் பெரியவாளிடம் புகார் உரைத்தார்.
ஸ்ரீ பெரியவாளெனும் கண்கண்ட தெய்வமோ, பண்டிதரிடம் சடாலென்று “நீ இதை பாக்கத்தான் அங்கே போனியாக்கும்” என்று கேட்டு பண்டிதரின் இச்செயல் தவறானது என்பதை உணர செய்து விட்டார்.
பண்டிதரின் சுருதி குறைந்தது. தான் தவறாக கூறி விட்டோமோ என்று எண்ணம் ஓடியது.
“பிரம்ம ஞானிகளின் சன்னதியிலே எதுவும் தோஷமில்லை தெரியுமோ” என்றார் ஸ்ரீ பெரியவா.
அப்போதும் பண்டிதருக்கு சமாதானமாகவில்லை. சரி! ஸ்ரீ ரமணர் எனும் பிரம்ம ஞானியை சுற்றிலும் நடப்பவைகளைளுக்கு தோஷம் இல்லையென்றால், சாட்சாத் சர்வேஸ்வரராய் பிரம்மஞானியாய் விளங்கும் ஸ்ரீ பெரியவாளின் சூழலிலும் எதற்கும் தோஷம் இல்லையல்லவா? அப்போது ஏன் ஸ்ரீமடத்தில் சில விதிமுறைகள் கடுமையாக இருக்கின்றனவே என்று பண்டிதருக்கு எண்ணம் ஓடியது.
இதை புரிந்துக் கொண்டது போல ஸ்ரீ பெரியவாளின் திருவாக்கு வெளிப்பட்டது. “அப்போ இங்கே மட்டும் அதை ஏன் ஏத்துக்கலேன்னு நீ நினைக்கலாம்…இங்கே ஆதி சங்கரர் காலத்திலிருந்து தொடர்ந்து வர்ற மடத்து சம்பிரதாயங்கள்…அதை யாராலும் மீற முடியாது…அங்கே அந்த பிரம்மஞானிக்கு இந்த கட்டுப்பாடெல்லாம் கிடையாது.”
இப்படி சர்வ சாதாரணமாக ஸ்ரீ பெரியவா கூறிவிட்டாலும் ஸ்ரீ ரமணரை தம்முடன் சம்பந்தப்படுத்தி சம்பிரதாயங்களுக்கு வித்தியாசங்கள் இருப்பினும், அங்கேயும் அவர் பிரம்மஞானி, இங்கே தானும் பிரம்மஞானி என்ற மாபெரும் உண்மையின் எளிய வெளிப்பாடாகவே ஸ்ரீ பெரியவாளின் இந்த திருவாக்கை பண்டிதர் அந்த கணமே உணர்ந்தவராய் ஆனந்தித்தார்.
கேட்டதும் கிடைக்கும் சன்னதி
ஒரு சுமங்கலி தன் மகனை அழைத்துக் கொண்டு மகானிடம் வந்து “இவனுடைய வாயில் புண் இருக்கு…எத்தனையோ மருந்து கொடுத்தும் போகலே. பெரியவாதான் காப்பாத்தணும்” என்று வந்து நின்றாள்.
உடனே ஸ்ரீ பெரியவா அங்கிருந்தவர்களைப் பார்த்து “தேங்காய் பூ கிடைக்குமா” என்றார்.
பலபேருக்கு அப்படி ஒரு பூ இருப்பதாக தெரியவில்லை. தேங்காய் பூ பற்றி தெரிந்தவர்களுக்கோ அது கேட்டவுடனே கிடைக்கும் வஸ்து அல்ல என்பது தெரியும். ஏதாவது ஒரு தேங்காயில் அபூர்வமாக தென்படக்கூடியதாயிற்றே இப்படி திடுதிடுப்பென்று கேட்டால் கிடைக்காத பொருளாயிற்றே என்று செய்வதறியாமல் நின்றனர்.
இப்படி ஸ்ரீ பெரியவா தேங்காய் பூ கிடைக்குமா என்று கேட்டு நிறுத்திய உடனேயே காக்கிநாடாவிலிருந்து சிந்தாமணி கணபதி என்ற பண்டிதர் பக்தி பரவசத்தோடு ‘சந்திரசேகர பாஹிமாம்’ என்று பாடிக்கொண்டே வந்து சாஷ்டாங்கமாக நமஸ்கரித்தார்.
மேலும் தான் கொண்டுவந்த முப்பது தேங்காய்களை ஸ்ரீ பெரியவா முன்னே வைத்தார். எப்போதும் எல்லோரும் செய்வது போல தேங்காய்களை அப்படியே சமர்பிக்காமல் எல்லா தேங்காய்களை ஸ்ரீ பெரியவா முன்னாலேயே உடைத்து உடைத்து தட்டில் வைத்தார்.
என்ன அதிசயம்….அவற்றுள் நாலு மூடி தேங்காய்களுள் அரை எலுமிச்சை அளவில் தேங்காய் பூ என்ற கட்டி இருந்தது. அவைகளை அந்த மாதுவிடம் கொடுக்கச் சொல்லி “வெயிலில் உலர்த்தி தினமும் கொஞ்சமாக சாப்பிடச் சொல்லு” என்றார்.
பையனுக்கோ அவசரம். அதை உடனே அப்படியே வாயில் போட்டுக் கொண்டான். பெரியவா மற்ற பக்தர்களுக்கு தரிசனம் கொடுத்துக் கொண்டிருக்க ஒரு மணி நேரம் ஆனது. பையன் திரும்பி வந்தான். சுற்றியிருந்தவர்களுக்கெல்லாம் பையனுக்கு என்ன ஆனதோ என்று திகீரென்றது.
“பாதி புண் சரியாயிடுத்து” என்றான் பையன்!
இப்பேற்பட்ட ஆனந்த அனுபவங்களை அள்ளித் தந்து, தன் அபார கருணையால் ஆட்கொண்டருளும் ஸ்ரீ மகா பெரியவாளிடம் நாம் கொளும் பூர்ண சரணாகதம் நமக்கு சகல நன்மைகளையும், சர்வ மங்களங்களையும் அருளும் என்பது திண்ணம்.
– கருணை தொடர்ந்து பெருகும் (பாடுவர் பசிதீர்ப்பாய் பரவுவார் பிணிகளைவாய்
– சுந்தரமூர்த்தி சுவாமி தேவாரம்
_________________________________________________________________________________
Vaayinaal unnai paravidum adiyen Paduthuyar kalaivaai paashupathaa paranchudare! Sri Sri Sri Maha Periyava Mahimai! (17-06-2008)
“You know everything!”
Sri Sri Sri Maha Periyava, an incarnation of Sakshat Parameshwara, who has the greatness similar to Sukha Brahma Rishi, has been amongst us like a sage and blessing all of us.
Many of Sri Periyava’s devotees have experienced that Sri Periyava, a sarvagnya, knows His devotees’ present, past and future events.
Sri Sivaramakrishnan is one among those devotees. His mother had inculcated bhakthi towards Sri Periyava right from his young age. His mother had the good fortune of preparing thiratti paal (milk sweet) to Sri Periyava, whenever Sivaramakrishnan went for darshan. Sri Periyava also used to accept the sweet as a mark of accepting her bhakthi.
Once Sivaramakrishnan started from Chennai to Kanchipuram. Those days, one had to go through Chengalpet to reach Kanchipuram. On a Pournami day, he started along with thiratti paal, for Sri Periyava’s darshan. That was early in the morning and time for Viswaroopa darshan. He was standing outside and Sri Periyava was staying inside. Sivaramakrishnan requested one of Sri Periyava’s assistants to inform Sri Periyava about his arrival.
When Sri Periyava’s assistant went inside and informed about Sivaramakrishnan, immediately, Sri Periyava said, “Ask him to go away”. Sri Periyava’s assistant felt perplexed as soon as he heard those words, as Sri Periyava never spoke that way. When he came out, after seeing Sivaramakrishnan’s face, he felt difficult facing him. But in order to obey Sri Periyava’s orders, he slowly conveyed the message. Sivaramakrishnan felt extremely worried after hearing it and asked the assistant once again to clarify if Sri Periyava asked him to leave immediately. Though the assistant hesitated to repeat, but did not know any other way.
Sivaramakrishnan consoled himself thinking that he committed some mistake. But, he thought that he should give the milk sweet (Thirattu paal) to Sri Periyava.
“Amma would give this to Sri Periyava every time and Sri Periyava used to accept it. Please give this to Sri Periyava” told Sivaramakrishnan and gave the sweet to the assistant. Assistant also felt that there is no issue in doing that and also thought it might console Sivaramakrishnan. So, he kept the milk sweet in front of Sri Periyava.
“His mother gave this milk sweet for Sri Periyava” told the assistant. Before he could complete the statement, Sri Periyava told “Ask him to leave along with it”. Assistant got stunned as soon as he heard this from Sri Periyava. Sivaramakrishnan’s agony increased as Sri Periyava avoided seeing him and also not accept his mother’s sweet. He had a firm belief that there is a reason behind Sri Periyava’s every action. But, Sivaramakrishnan was unable to understand the sin that he might have committed. To obey Sri Periyava’s orders, he immediately left the place along with the sweet and came towards Chennai.
When he was about to reach his house, he saw lot of people standing in front of his house. As soon as he saw that, he understood that there is some mishap happened. His mother had reached the lotus feet of the Almighty. As there was no phone connectivity those days, Sivaramakrishnan did not receive this information on time.
But, would not Sri Sri Sri Maha Periyava, who knows everything including the present, past and the future, know about this event. Sivaramakrishnan realized the real reason behind Sri Periyava’s orders and started crying. Nobody knew if those tears were for his mother or towards the grace of Sri Periyava!
Brahma Gnani’s there and here too!
One of the Veda Pandits from Kanchipuram, informed Sri Periyava that he is going to Tiruvannamalai and started. It did not seem like he mentioned the reason for his visit to Tiruvannamalai. Once he reached there, he had a desire to have darshan of Sri Ramana Maharshi.
When he went to Ramana Ashram, he had darshan of Sri Ramana Maharshi and then sat there for lunch in the ashram. He felt that the arrangement there was slightly different. Sri Ramana Maharshi was sitting in the center. On one side to Maharshi, they had Veda pandits sitting and on the other side, they had foreigners sitting. This arrangement really disturbed the Pandit. As this Veda pandit had a habit of eating alone, he could not accept this arrangement where he was made to sit along with other pandits and foreigners.
Also the fact that the Veda pandits were served sathvik food and the foreigners were served food with onion, increased his mental disturbance. Veda pandit was unable to accept this as well and could not digest the fact that Sri Ramana Maharshi was sitting in the center and having His food. As if he identified a big mistake in this process, he wanted to inform this to Sri Sri Sri Maha Periyava.
He came back to Sri Matam. As the first thing, he came for Sri Periyava’s darshan to inform all that he saw in Ramana Ashram. Few devotees had surrounded Sri Periyava and before he could open his mouth to complain, Sri Periyava stopped him by saying, “No need to tell anything now…let’s see later.”
When Sri Periyava was alone, he came back again. Now, Sri Periyava let the veda pandit talk and the pandit stated all his complaints about the process followed in the Ashram.
Sri Periyava, immediately asked “Did you go there only to see this?” By asking this, Sri Periyava made the Veda pandit realize his mistake. Veda pandit lost his zeal and also realized his fault.
“In the sannidhi of Brahma Gnanis, there is nothing wrong or dosham. Do you know?” asked Sri Periyava.
Even after this, pandit did not get satisfied. If all that is happening around Sri Ramana Maharshi, a Brahma Gnani, isn’t it the case for Sri Periyava as well, who is none other than sakshat Sarveshwara. He thought why there are so many restrictions in Sri Matam?
Sri Periyava started talking as if he understood pandit’s thought process. “You might think why it is not the case here. These practices here were established by Sri Adi Sankara and nobody can change it. There, that Brahma Gnani does not have any restrictions.”
Even though Sri Periyava told there are differences between Ramana Ashram and Sri Matam on the practices followed, Veda Pandit felt happy that he realized the fact, through the words of Sri Periyava that a Brahma Gnani is present there and here too.
Sannidhi that gives everything immediately
Once a sumangali came with her son and told Sri Periyava, “He has mouth ulcer. It did not get healed even though we gave lot of medicines. Only Sri Periyava should save him.”
Immediately Sri Periyava asked people there, “Can I get coconut flower (flower inside the coconut shell).”
Lot of people there did not even know that something like that existed. For people who knew about it, also knew that it is not something that they could get immediately. It might appear in some coconut very rarely. So, they did not know what to do at that point of time.
After Sri Periyava asked about this flower, a Veda Pandit from Kakinada, named Chinthamani Ganapathi came for Sri Periyava darshan singing, “Chandrasekhara Pahimam” and prostrated there. Also, he kept all 30 coconuts that he brought, in front of Sri Periyava. Instead of keeping all the coconuts as such, as everyone does, he broke the coconuts and placed in front of Sri Periyava.
What a miracle…Inside four coconuts, this flower appeared which was of the size of half lemon. Sri Periyava instructed the assistant to give that to the lady and told “Keep it in sunlight and ask your son to eat it in small portions.”
But her son was in a hurry. He ate it immediately there itself. Sri Periyava was granting darshan to other devotees. After an hour, he came back and everyone there were curious to know what happened to him.
“Half of my mouth ulcer is gone” told that boy!
It is evident that our bhakthi and complete surrender to Sri Sri Sri Maha Periyava would grant us all prosperity and happiness!
- Grace will continue to flow (paaduvar pasi theerppai paravuvaar pinikalaivaai)
- Sundaramoorthy Swami Thevaram
Categories: Devotee Experiences
Superb and authenticated souce!
Blessed boy.
Hara Hara Sankara Jaya Jaya Sankara. Janakiraman. Nagapattinam