Periyava Golden Quotes-430

album1_63

மந்த்ரபூர்வமாக சாஸ்த்ரோக்தக் காரியங்களைப் பண்ணும்போது அந்த மந்த்ரங்கள் லௌகிகமாக ஒரு பலனைத் தருவதோடு, சித்தா சுத்தியையும் தருகின்றன என்பதைக் கவனிக்க வேண்டும். வெறும் கர்மாவே சித்த சுத்தி தருவது என்றால் மந்த்ரத்தோடு சேர்ந்து வரும்போது சித்தப் பரிசுத்திகர சக்தி இன்னம் ஜாஸ்தியாகிறது. ஒரு பிண்டத்துக்குப் பும்ஸவனம் பண்ணும்போது ஒரு பிறந்த குழந்தைக்கு ஜாத கர்மம் பண்ணும்போது, அது வளர்ந்துவிட்ட உபநயன ஸம்ஸ்காரம் பண்ணும்போது அந்த ஜீவனின் ஆத்ம பரிசுத்தியை முக்யமாக உத்தேசித்தே இந்தக் கார்யங்கள் செய்யப்படுகின்றன நம் பொறுப்பில் ஈச்வரன் விட்டிருக்கிற இந்த நம்முடைய சொந்த ஜீவன், அப்புறம் பெண்டாட்டி, பிள்ளை குட்டி என்கிற ஜீவர்கள் ஆகியவர்களுக்கு நியாயமாக லோகத்தில் என்ன நல்லது கிடைக்க வேண்டுமோ அதற்கும், இவர்களுடைய ஆத்ம பரிசுத்திக்காகவும் ஒருத்தன் செய்யும் கார்யங்களும் ஒரு தினுஸில் ஜீவாத்ம கைங்கர்யந்தானே? பரோபகாரம்தானே? – ஜகத்குரு ஸ்ரீசந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் அருள்மொழிகள்

When rituals prescribed by our sastras are performed with the necessary chanting of Manthras, the mind also gets purified while materialistic benefits are reaped. When just the mere performance of the duty itself can purify the mind, the addition of these Manthras or Holy chants enhances the purity of the mind. When Bumsavanam is performed for the foetus and Jaathakarma is conducted for the new born or when the thread ceremony is performed after it grows up, the intention behind all these rituals is the purification of the soul. Eswara has left our soul and our families in our care. So when we do our duties towards the self and strive to fulfill the worldly comforts due to the families and also perform the duties necessary for the purification of their souls, it is one form of philanthropy and spiritual service. – Jagadguru Sri Chandrasekharendra Saraswathi Swamigal



Categories: Deivathin Kural, Golden Quotes

Tags:

Leave a Reply

%d bloggers like this: