Experience of Smt Rajeswari with Mahaperiyava

Right_hand_blessing.jpg

Thanks to Smt Rajeswari who sent me photos of her hand-written pages about her experience with Mahaperiyava. Thanks to Smt Srividya for typing this in Tamil for me.

It has been a while since I read an article that was written from the heart. Today we see so poetically penned articles praising Periyava etc – they are good too. However a simple, un-exaggerated experience is so nice to read.

It is easier to “say” that we are devotees of Periyava but it takes a long time to surrender to Him. It is easier to say that we all are Kanchi mata viswasis – bringing that to reality is a whole different game. Smt Rajeswari has written a most powerful statement at the end of the article on how we are going everywhere in the world looking for something that is readily available to us in the form of our Kanchi Acharyas!

She has also shared two videos of a stuthi on Kanchi Periyavas. I am guessing she sang it too. I do not know this great devotee. I will contact her soon and see if she can share more….

Our namaskaram to this devotee!

Hara Hara Sankara Jaya Jaya Sankara!

For non-Tamil devotees – pl stand by – we will have this translated soon.

என் பெயர் : ராஜேஸ்வரி  என் தாய்  வீடு பிறந்த இடம் காஞ்சிபுரத்திலிருந்து மூன்று கிலோமீட்டர் தூரத்திலிருக்கும் “ஓரிக்கை கிராமம் “.இந்த கிராமம் ஒரு புண்ணியஸ்தலமாக மாறிவிட்டது ஏனென்றால் பராமாச்சாரியாருக்கு மணிமண்டபம் கட்டப்பட்டுள்ளது .

எனக்கு ஐந்து வயதிலிருந்தே  பெரியவாளை நினைவிருக்கிறது . எங்கள் வீட்டில் எத்தனையோ  வருடங்கள் மடம் இருந்தது .அதாவது நான்கு  ஐந்து  வ்யாஸ பூஜைகள் நடந்தது . புதுப் பெரியவா ஜெயேந்திர  சரஸ்வதி ஸ்வாமிகளுக்கு பட்டாபிஷேகம் மடாதிபதியாக வந்ததும் எங்கள் வீட்டிற்கு பக்கத்து வீட்டில் பயிற்சி கற்றுக்கொடுத்தார்கள் .  நான்  சின்ன பெண் ஆதனால் சரியாக விவரிக்கத் தெரியவில்லை .

தினமும் நானும் என் அக்காவும் பள்ளிக்கூடத்திலிருந்து மாலை வீட்டிற்கு வந்தவுடன் ஐந்து மணிக்கு பெரியவா சாப்பிட்ட பிரசாதத்தை மண்ணால் செய்த தட்டோடு கொடுப்பார்கள் . எங்கள் குடும்பத்தில் எங்களுக்கு தாத்தாவை போல் பார்த்தோமே தவிர கடவுள் என்று பார்க்கவில்லை. பூஜை முடிந்தவுடன் தீர்த்தம் கொடுப்பார் பெரியவா. முதலில் பொன் காசு அல்லது வெள்ளிக்காசு கொடுப்பார்கள்.அந்தக் காலத்தில் காமாட்சி அம்மன் ஒருபுறம் மறுபக்கம் பெரியவா இருக்கும்.

நான் பொன் காசை பெற்றுக்கொண்டபின் தீர்த்தம் பெற்றுக்கொள்வேன். மறுபடியும் கியூவில் நின்று சென்று ஆசிபெற்றுக்கொண்டு தீர்த்தம் பெற்றுக்கொள்வேன் மீண்டும். என்னை பார்த்து சைகை காட்டுவார் . சிறுவயதிலிருந்தே அவர் நிழலிலேயே வள்ர்ந்தேன் .

வருடத்திற்கு ஒருமுறையாவது பெரியவாளை பார்க்காமல் இருக்கமாட்டேன். கல்யாணம் ஆன பிறகு கூட வருடத்திற்கு ஒரு முறையாவது  வந்து பார்த்து ஆசிர்வாதம் பெற்றுக்கொண்டுதான் போவேன். என் இரண்டாம் மகன் பிறந்த  பிறகு  ஐந்தாம் மாதம் வந்தவுடன் பெரியவாளை  பார்த்துவிட்டுப்  போகலாம் என்று என் தம்பியிடம் சொன்னேன். அவன் பெரியவாள் மடத்திலில்லை என்று சொன்னான். நான் ரொம்ப வருத்தப்பட்டேன் இந்த வருடம் பெரியவாளை பார்க்காமல் போகிறேனே என்று கவலையுடன் தூங்கினேன் . அன்று இரவு கனவில் வந்து பெரியவாள் ஆசிர்வாதம் பண்ணினார். என் கனவில் வரதராஜ பெருமாள் கோவில் தெருவில் ஒரு வீட்டில் காட்சி தந்தார்.  எவ்வாறு என்றால் சின்ன காஞ்சிபுரத்தில்லுள்ள ஒரு வீட்டில் ஒரு அறையில் வாசற்படிக்கு உள்பக்கம் உட்க்கார்ந்து . இருக்கிறார். உள்ளே கிருஷ்ணன் சிலை ஒன்று நின்றிருக்கிறது . நான் அங்குள்ள ஜன்னல் வழியாக எட்டி எட்டிப்  பார்க்கிறேன் நிறைய கூட்டங்கள் இருக்கிறார்கள். எல்லோரையும்  தள்ளி பார்த்தேன்  பெரியவா கையை தூக்கி ஆசிர்வாதம். பிறகு காலை எழுந்து அம்மாவிற்கு சொல்லி சந்தோஷப்பட்டேன் பெரியவா கனவில் வந்து ஆசிர்வாதம் கொடுத்துவிட்டார் என்று.

அன்று மாலை மூன்று மணிக்கு என்னுடைய  சிநேகிதி சரஸ்வதி என்பவள் என்னிடம் வந்து பெரியவாள் சின்ன காஞ்சிபுரத்தில் இருக்கிறாராம் , வருகிறாயா நாம் சென்று பார்க்கலாம் என்று சொன்னாள். அதை கேட்டவுடன் என் ஆனந்தத்திற்கு அளவேயில்லை. உடனே நான் என் அம்மாவிடம் குழந்தைகளை பார்த்துக்கொள்ளும்படி சொல்லிவிட்டு என் தோழி சரஸ்வதியுடன் பெரியவாளை தரிசிக்க  ஓரிக்கை கிராமத்திலிருந்து சின்ன காஞ்சிபுரம் சென்றேன் .

எனக்கு ஒரே ஆச்சர்யமாகிவிட்டது, என்னையே என்னால் நம்பமுடியவில்லை இது நிஜமா கனவா  என்று என் பாக்கியமே பாக்கியம். நான் என் கனவில் பெரியவாளை தரிசித்தது போல அந்த
ஜன்னல்கள், பக்த கூட்டங்கள், கிருஷ்ணன் சிலை, பெரியவாள் உட்கார்ந்திருந்த அறை என்பார்த்தும் எல்லோரையும் ஆசிர்வாதம் செய்யும் விதம் எல்லாம் அப்படியே இருந்தது. எனக்கு ஒவ்வொரு மாதமும் தரிசனம் கொடுத்துக்கொண்டே இருப்பார். எனக்கு மூன்றாவதாக மகள் பிறந்தவுடன்  பேமிலி பிளானிங்  செய்து கொண்டேன். இந்த வருடம் என் தம்பியின் கல்யாணத்திற்காக ஆசிர்வாதம்  வாங்க எல்லோரும் சென்றோம். ஒவ்வொருவராக ஆசீர்வாதங்கள் பெற்றுக்கொண்டோம். நான் என் மனதில், என் மனத்துக்குள்ளேயே பாவமோ புண்ணியமோ எனக்கு தெரியாது நான் பேமிலி பிளானிங் செய்து கொண்டுவிட்டேன். நீங்கள்தான் எனக்கு துணையாக இருந்து என் உடம்பையும் என் குழந்தைகளையும் காப்பாற்றணும் என்று நினைத்துக்கொண்டே நமஸ்காரம் செய்தேன்.

எல்லோருக்கும் மௌனமாக ஆசிர்வாதம் செய்த பெரியவா என்னை மட்டும் பார்த்து

“உனக்கு எத்தனை குழந்தைகள்?” என்று கேட்டார் எனக்கு ஒன்றும் சொல்லவே தோன்றவில்லை.

பிறகு சமாளித்துக்கொண்டு இரண்டு மகன் ஒரு பெண் என்றேன். பழம் ஒன்றை கொடுத்து ஆசிர்வதித்து அனுப்பினார். நான் மனதில் நினைத்ததை  அறிந்து யாரிடமும் பேசாத பெரியவா என்னிடம் மட்டும் பேசினார். நான் அல்லவோ பாக்கியசாலி .

நான் என் ஊர் கடப்பாவிலிருந்து பெரியவளுக்காக 20 அல்லது 25 கிலோ முள்ளு கத்திரிக்காய் கொண்டு சென்று பெரிய தட்டில் கொட்டி பெரியவா முன் வைப்பேன். அதை பெரியவா  ஒவ்வொன்றாக தொட்டுப் பார்த்து “முள்ளு வுந்தியா ” என்று  தெலுங்கில் கேட்பார் முள்ளு இருக்கிறதா என்று அர்த்தம்.

ஒரு முறை குடும்பத்தில் குழப்பம் ஏற்பட்டது அதை எழுத இப்பொழுது எனக்கு விருப்பமில்லை. அப்பொழுது குழப்பம் செய்தவர்கள் இப்பொழுது என்னிடம் அதிக பிரியமும் மரியாதையும் வைத்திருக்கிறார்கள் .
அப்பொழுது பெரியவாளை பார்த்து பார்த்து அழுதேன் உடனே பெரியவாள் கனவில் வந்து அழாதே குடும்பம் என்றல் இப்படித்தான் இருக்கும். இங்கு நடந்தது எல்லாம் எனக்கு புவனேஸ்வரி சொன்னாள்  என்று கூறினார். இன்னமும் ஏதேதோ  கூறினார். எனக்கு கடைசியாக புரிந்தது நீ எல்லாவற்றையும் பொறுத்துக்கொண்டேயிரு, பொறுத்துக்கொள் என்பது போலிருந்தது. பின் நான் என் அண்ணாவிற்கு போன் செய்து கேட்டேன் பெரியவா எங்கு இருக்கிறார் என்று. பெரியவாள் “அம்பி” இருக்கிறார் என்றார். அங்கு புவனேஸ்வரி அம்மனை பூஜை செய்துக்கொண்டிருக்கிறார் என்று கூறினார். புவனேஸ்வரி சொல்ல பெரியவாள் வந்து எனக்கு புத்திமதி சொல்லிச்சென்றார். என் தாத்தா என்கின்ற பரமாச்சாரியார்.

என் பெரிய மகனுக்கு என் தம்பியின் மகளை திருமணம் செய்து கொடுக்க வேண்டுமென்று கேட்டார்கள் . நாங்கள் ஆலோசனை செய்து சொல்லலாம் என்று இருந்தோம் ஆனால் பெரியவாள் கனவில் வந்து நின்றார்.

நான் தூரமாக நின்றேன் “ரா ரா தங்கற ரா” “வா வா அருகில் வா” என்று தெலுங்கில் அழைத்தார். நானும் சென்று நின்றேன். மூன்றே வார்த்தை சொன்னார். [நீவி லல்லினி வெல்லி  சேசுக்குண்டாவ ] செயின் உங்கரம்  4 நலபை 50 யாவை ] தமிழில்  ” நீ லல்லியை உன் மகனுக்கு திருமணம் செய்து கொள்கிறாய், செயின், மோதிரம் . நீ கேட்க நினைப்பது 50 ஆயிரம்.

அவர்கள் 30 அல்லது 40 ஆயிரம் . நீ ஜம்பதூ  சரி “என்று சொல்லிச்சென்றார். அதனால் நாங்களும் பெரியவாள் வந்து கல்யாண பேச்சு பேசினார் என்று ஆனந்தப்பட்டு என் தம்பியின் மகள் லல்லியையே திருமணம் செய்து கொண்டோம். எங்கள்  ஓரிக்கை குடும்பத்திற்கு பரமாச்சாரியார் ஆஸீர்வாதங்கள் நிறைய உண்டு. எங்கள் சின்ன வயசிலேயே தந்தையை இழந்தோம். எங்களுக்கு கடவுளே பெரியவாதான். காஞ்சி மடத்திலிருந்து ஓரிக்கை பாலாற்றிற்கு குளிக்க வருவார் பெரியவா,நாங்கள் எல்லோரும் சென்று பார்ப்போம். எங்கள் தாத்தா வரமாட்டார் திண்ணையில் உட்கார்ந்து வேலை பார்த்துக்கொண்டிருப்பார் (எங்கள் தாத்தா கணக்கு பிள்ளை கிராமத்திற்கு) பெரியவாள் குளித்துவிட்டு ஆற்றிலிருந்து நேராக காஞ்சிபுரம் செல்லாமல் வேங்கடகிருஷ்ணன் வரமாட்டான்  நானே அவனை போய் பார்க்கிறேன் என்று கூறி வேக வேகமாக வீட்டிற்கு வந்து திண்ணையில் உட்கார்ந்து விடுவார். நாங்கள் ஓடி சென்று தாத்தா பெத்தலே வருகிறார் என்று சொல்லுவோம். உடனே தாத்தா 4 வாளி தண்ணீர் தலையில் ஊற்றிக்கொண்டு  வீபூதி பட்டை பூசிக்கொண்டு பெரியவாளை வரவேற்ப்பார்.

ஒரு முறை எங்கள் பாட்டி பெரியவாளை நான் கடவுளை பார்க்கணும் காட்ட வேண்டும் என்றார்களாம். பெரியவா என் பாட்டியை பார்த்து நாளை காலை மடியோடு வா என்றாராம். அப்படியே பாடி சென்றார் எங்கள் வீட்டில் உள்ள சாமி  அறையில் பெரியவாள் உட்கார்ந்து இருக்க பெரியவாளிடமிருந்து கற்பூரம் எறிவது போல் ஒளி வெளியே சென்று மீண்டும் பெரியவாளின் உடம்புக்குள் புகுந்ததாம்.பிறகு பாட்டியை பார்த்து கேட்டாராம் கடவுளை பார்த்தாயா என்று. பாட்டி ஆனந்த கண்ணீருடன் “ஜ்யோதியை பார்த்தேன் ஜ்யோதியே” என்று நமஸ்காரம்  செய்தாராம், சரி என்று சொல்லி ஆசிர்வதித்து அனுப்பினாராம்.

எங்களுக்கு எதாவது நல்ல காரியம் நடக்கவேண்டுமென்றால் பெரியவாள் கனவில் வந்தாலே போதும் எல்லாம் ஒரு சிறிய தடங்கல் இல்லாமல் நடந்துவிடும். அவர் “அன்றும் இன்றும் என்றும்” நடமாடும் தெய்வமே.
பெரியவாளை பற்றி எழுத நிறைய உள்ளது சமுத்திரத்திற்கு எப்படி கரையில்லையோ அதை போல பெரியவாளை பற்றி (மகிமையை) எழுதிக்கொண்டே போகலாம்.

கடப்பாவில் உள்ள எங்கள் வீட்டிற்கு ஜெயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள், விஜயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் அழைத்து பாத பூஜை செய்யும் பாக்யமும் எனக்கு கிட்டியது . அவர்களின் ஆசிர்வாதத்தால்
என் குழந்தைகளுக்கு நல்ல படிப்பு, வேலை, திருமணம் எல்லாம் எந்த தடங்கலும் இல்லாமல் நன்றாக நடந்தது. இவர்களின் ஆசீர்வாதங்கள் எங்களுக்கும் இந்த உலகத்திற்கும் உண்டு.

இப்பொழுது  நான் அதிகமாக தியானத்தில் அமர்ந்துவிடுகிறேன். அதாவது பிரமிட் தியானம் சுலபமாக இருப்பதால். பெரியவாளை மனதில் தியானித்து  தியானத்தில் அமர்ந்து விடுவேன். ஒரு நாள் பெரியவாளை
பார்க்கணும் என்று தியானித்தேன் ” எங்கிருக்கிறார்கள் என்று பார்க்க ஒரு செம்மண் கலர் மலையின் குகைக்குள் அவருடைய காவி கலர் வஸ்திரம் சுவரில் உலர்ந்துக்கொண்டிருந்தது, சமையல் செய்யும் அடுப்பு, படுக்கும் மேடை எல்லாவற்றையும்  கையால் காட்டி பெரியவா இங்குதான் இருக்கிறார், இது சமைக்கும் இடம், இந்த மேடையில் தான் தூங்குவார் என்று, ஆனால் காட்டும் மனிதர் தெரியவில்லை கை மட்டும் தெரிந்தது, அவர் சொல்வது கேட்டது. நான் திரும்பவும் எல்லாம் இருக்கிறது பெரியவா எங்கே என்ற உடனே பெரியவாள் குகைக்குள் உள்ள மாடிப்படிகளில் தலையிலிருக்கும் துணியை சரி செய்துக்கொண்டே என்னை பார்த்து சிரித்துக்கொண்டே கடைக்கண்ணால் ஒரு பக்கமாக
பார்த்துக்கொண்டே நான்கு சிஷ்யர்களுடன் தரிசனம் தந்தார்.

ஹரா ஹரா சங்கர ஜெய ஜெய சங்கர
பெரியவாளுக்கு பாதாபிவந்தனம்

குருவே  நமஹா :

காஞ்சிபுரம் மாநகரம் விரைந்து சென்று காமகோடி பீடாதிபதிகளான ஜெயேந்திர சரஸ்வதி விஜயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் அதாவது குருநாதர்கள் ஆசீர்வாதங்களை பெறுங்கள்.

லட்சக்கணக்கில் பணம் செலவு செய்துக்கொண்டு கண்களுக்கும் கைக்கும் எட்டாத மானசரோவர் செல்வதை விட அருகிலேயே  கண்களுக்கும் கைகளுக்கும் எட்டும் படியே இருக்கும் பிரத்யட்ச தெய்வங்களான காஞ்சி பீடாதிபதிகளை தரிசனம் செய்யுங்கள் .

குருநாதர்களை தரிசித்து ஆசீர்வாதங்களை பெற்று அங்கேயே த்யான மண்டபத்தில் கண்களை மூடி உங்களை மறந்து த்யானம் செய்யுங்கள். செய்து பாருங்கள் உங்களை சுற்றி சுற்றி பாலதிரிபுரசுந்தரியின்
கால் சலங்கை ஒலியின் சப்தத்தை கேட்பீர்கள். இது மட்டும் அல்ல  ஓம் என்கிற ஒலியையும் உணர்வீர்கள் இது சத்தியம் சத்தியம் .

த்யானத்தில் குருநாதர்களையும், காமாட்சியின் தரிசனம் நிச்சயம் கிட்டும் . பாலதிரிபுரசுந்தரி தான் காமாட்சி .

ஹர  ஹர  சங்கர ஜெய ஜெய சங்கர
ஹர  ஹர  சங்கர ஜெய ஜெய சங்கர
காஞ்சி சங்கர காமகோடி சங்கர
காலடி சங்கர காமாட்சி சங்கர



Categories: Devotee Experiences, Periyava TV

15 replies

  1. Really blessed family to have seen MAHAPERIAVAA , very close to them. HE will continue to stand by thier family protect them for more generations.

    MAHAPERIAVAA THIRUVADI CHARANAM CHARANAM

  2. Blessed soul… what else one could say.
    The current generations prarabdha karma did not allow us to have a darshan of mahaperiyava but we are blessed atleast to read these experiences.
    jai sri periyava.

  3. Respected devotees, the space may be used read,share upadesams,more than anubhavams. Many a times, I see halucinations are shared, thereby demeaning THE REALITY.

  4. “”பெரியவாள் கனவில் வந்து அழாதே குடும்பம் என்றால் இப்படித்தான் இருக்கும். இங்கு நடந்தது எல்லாம் எனக்கு புவனேஸ்வரி சொன்னாள் என்று கூறினார்””

    எவ்வளவு ஸத்யமான வார்த்தைகள்…

    நல்லது எது என்று தெரியாமல் பல பிழைகள் செய்து விட்டேன் .. இனிமேலும் செய்வேன்

    நேற்று நன்றாக இருந்தது இன்று நன்றாக இல்லை நாளை எப்படியோ தெரியவில்லை…
    நீயே சகலமும் பார்த்துக்கொள்… என்ற மன உறுதி ஏற்பட வேண்டுகிறேன்….

    ஜகத் காரியத்தில் ஈடுபடும் மனதிற்கு எப்போதும் கிலேசம் இருந்துகொண்டே இருக்கிறது .. அதையெல்லாம் களைய ஜகன்மாதா ஜகத் குரு அவர்களை தியானிப்போம்…

    மகா பெரியவா காமாக்ஷி .. சந்திரமௌலீஸ்வரர் ..நினைவில் எப்போதும் நிற்க ..

  5. Respected Mahesh Sir,,
    If you could kindly permit me to do little bit translation of Smt.Rajeshwari’s experience with Sri Maha Periyava, I shall try and send you the draft.

  6. Hi Mahesh Garu,

    Thank you very much for posting my Mom`s Rajeswari experiences it was her dream to talk about maha periyavaa for along time.

    She started getting tears after seeing the posting of her experiences and her bhakti song.

    And she is still writing about periyavaa experiences.

    “THANK YOU” Once again.

    K.Divya (Rajeswari`s daughter)

    • Divya –

      Pl ask her to keep writing whatever incidents that she could think of and send to me – we will post it regularly. We need to learn a lot from your mother on acharya bakthi! Pl consider this as a request from all of us here in the blog.

      On December 16, 2016 at 6:09:56 AM, Sage of Kanchi ( comment-reply@wordpress.com) wrote:

  7. Hi Mahesh,
    Any possibility that you could translate this? Anybody who could give MAhesh a helping hand would be highly appreciated. We once again are very thankful to the entire team who is so blessed to be in Periyava’s service.

  8. Words are not enough to thank Mr.Mahesh for bringing in great people like this to share their experiences. These experiences will certainly act as a light house for generations to come. Pray Kanchi Kamakoti Acharyas to keep showering their blessings to one and all.

  9. Jaya jaya sankara !! Hara Hara sankara

  10. #ReligionTGP
    I shed tears after reading this post. It is not only someone’s personal experience, but also a directive from HHH Mahaperiava to all of us.

  11. Real bhakthai get these apoorva anugrahams.
    Very ennobling incidents

Leave a Reply to shreeCancel reply

Discover more from Sage of Kanchi

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading