“சரீரமாவது, வீடாவது?” என்று ஒரே வைராக்யத்தில் மனஸைக் கெட்டியாக வைத்துக் கொண்டிருக்கிற யாரோ ஒரு சிலரைத் தவிர மற்றவர்களெல்லாரும், சரீரத்திலும் வீட்டிலும் இருக்கிறபோதேதான் அவற்றுக்கான கடமைகளைப் பண்ணி அதனாலேயே கர்மா மூட்டையைக் குறைத்துக் கொள்ள வேண்டும். இந்த ஜீவன் இந்த சரீரத்திலிருக்கிறபோதேதான் ஸத் கர்மா பண்ண வேண்டும், ட்யூட்டிகளைப் பண்ண வேண்டும் என்பதால் ஓரளவு வரைக்கும் சரீர போஷணை, வியாதி வந்தால் அதற்கு சாந்தி, குடும்பக் கார்யங்களுக்காக ஸம்பாத்ய அபிவிருத்திக்குப் பிரார்த்தனை என்றிப்படி selfishஆகத் தோன்றுகிறவைகளையும் செய்யத் தான் வேண்டும். அதியாக எதிலுமே போகக்கூடாதுதான். ஆனால் இப்போது ‘ஸெல்ஃபிஷ்’ என்று தோன்றுகிற பல சாஸ்த்ரோக்தமான கார்யங்கள் ஒரு ஸாமான்ய ஜீவன் தன் கடமையைப் பண்ணுவதற்கு அங்கமாகவே செய்து கொள்ள வேண்டியவைதான். இப்படியே கர்மாவால் நமக்கு வந்து வாய்த்து, நாம் அவர்களுக்குப்பட்ட ஜன்மாந்தர [கர்மக்] கடனை இப்போது நாம் செய்யும் ட்யூட்டி ரூபமான கர்மாவால் தீர்த்து வைக்கும் தார புத்ராதிகளுக்கானா பல சாஸ்த்ரோக்த காரியங்களைப் பண்ணுவதற்கும் ‘ஸெல்ஃபிஷ்’ என்று வெட்கப்பட வேண்டியதில்லை. – ஜகத்குரு ஸ்ரீசந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் அருள்மொழிகள்
Except for the exceptional, the others have to reduce their Karmic burden by performing their duties while in this body and fulfilling their domestic responsibilities. Since the soul has to perform sath karma or good tasks while being in this body, rituals for the welfare of the family and rituals to promote good health if illness strikes, have to be performed, though they may seem selfish in nature. Of course, anything in excess is bad. But most of the rituals prescribed by our sastras, which may seem self oriented at the first glance, have to be performed as part of the process of fulfilling one’s responsibilities and duties. So there is no need to feel ashamed while performing the many rituals for the welfare of the spouse and the progeny, the two having become associated with us only because our karma decided so. – Jagadguru Sri Chandrasekharendra Saraswathi Swamigal
Categories: Deivathin Kural, Golden Quotes
Thanks for sharing this.glad to read it on a Thursday morning. Could someone tell me more on what rituals Periyava is mentioning here ? Please help.
Rituals as per their Swadhama along with helping others (Paropagaram). Ram Ram