Periyava Golden Quotes-428

album1_62

ஸ்வயநலனாக செய்து கொள்வதாகத் தோன்றுகிற பலவித ஹோமம், பூஜை முதலியவற்றிலுங்கூட ஆத்ம பரிசுத்திக்கான மருந்தும் இருக்கிறது. எல்லாம் பரமாத்மாவானாலும் லோகத்தின் நடைமுறையில் ஒன்றுக்கொன்று வித்யாஸமான ஜீவன்கள் என்று வைத்துத்தான் கார்யங்கள் நடந்தாக வேண்டியிருக்கிறது. நாம் எல்லோருமே ஸ்வயஞ்ஜ்யோதியான ஆத்மாதான் என்றாலும் அது நமக்கே தெரியாதபடி கர்மா மேகமாக மறைக்கிறது. கர்மா மூடிய ஜீவனை அதிலிருந்து வெளியிலே கொண்டுவர வேண்டிய பொறுப்பு நமக்கு இருக்கிறது. நம்மை லோகத்தில் வெறுமனே தனியாக விட்டு வைத்திருக்கவில்லை. பெண்டாட்டி, பிள்ளை குட்டி என்று சேர்த்து வைத்திருக்கிறது. இதுவும் கர்மாவால் ஏற்பட்டதுதான். கர்மவாஸனை ஒரு பக்கம் நம் மனஸுக்குள் அழுக்குகளை ஏற்றி ஆத்மாவை உணர முடியாமல் பண்ணுகிறதென்றால், கர்ம பந்தம் பல கடமைகளைப் பண்ண வைக்கிறது. உடம்பு என்ற வீட்டுக்குள் இருக்கும் ஜீவன், அப்புறம் அந்த ஜீவனுக்கு பந்துக்கள் என்பவர்களால் ஏற்பட்டிருக்கும் வீடு இவற்றுக்கு ஒருத்தன் பண்ண வேண்டிய கடமைகளைப் பண்ணினாலன்றி கர்மாவைத் தீர்க்க முடியாது. இத்தனை பழைய கர்ம பாக்கியை வைத்துக் கொண்டு இப்போதே ஆத்மா தெரியணும், ஈச்வரன் தெரியணும் என்றால் தெரியாது. ஸத் கர்மாவால் பாப கர்மாவைப் போக்கிக்கொண்ட பின்தான் மேகம் விலகி ஸூர்யப் பிரகாசம் தெரியும். இந்த ஸத்கர்மா பலவிதமான கடமைகள் ரூபத்தில் இருக்கிறது. ஆத்ம ஞானம் அல்லது ஈச்வர பக்தி என்று ஒரே ஆவேசமாகப் போகிற அபூர்வமான சில பேர்களுக்குத்தான் ஒரே flash-ல் கர்மா அறுந்து விழுமே தவிர, மெஜாரிடி ஜனங்களுக்கு ட்யூட்டிகளை சுத்தமாகப் பண்ணிப் பண்ணி ரொம்பவும் gradual-ஆகத்தான் கர்மாவைப் போக்கிக் கொள்ள முடியும். “இருவினை ஒப்பு” என்று [சைவ] ஸித்தாந்திகள் சொல்வதுபோல ஜன்ம ஜன்மாந்தரங்களாகப் பண்ணிய பாப கர்ம பாரத்தால் ஒரு தராசுத் தட்டு ரொம்பவும் கீழே போயிருக்கிறதென்றால் அந்த அளவுக்கு ஸத் கர்மாவைப் பண்ணியே இரண்டு தட்டுக்களையும் ஸமமாகச் செய்ய வேண்டும். – ஜகத்குரு ஸ்ரீசந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் அருள்மொழிகள்

Though many rituals and worships performed by a Hindu seem to be motivated by self interests, they also pave the way for spiritual purification. Though it is a fact that one Supreme Power pervades this world, the actual world functions with different kinds of beings who are the manifestations of the former.  Though all of us are the vessels of the luminous Soul (Paramathma), the cloud of karma darkens it. The responsibility of freeing the soul from this karma is entrusted with us. We are not alone in this world. Many family commitments bind us as a result of our previous actions or karma. While karma adds many impurities to the heart and prevents us from realizing the Soul/Self, the bonds created by the karma motivate us to perform our duties. The soul inhabits the house called body and a home has been created for this being by the relationships it has. Unless one performs the duties towards the self and the relations, he cannot expiate his karma. It is not possible to realize Bhagawan without settling these Karmic debts. Only when Good actions or sathkarma cancel out the sinful actions or Paapa karma, can the clouds dispel and the Sun glow. This sath karma takes the form of various divine duties. This karmic bond breaks off in one go only to a rare few who are intensely immersed in Self- realization or Godly Devotion. But for the majority the Karmic burden is removed gradually only with the diligent performance of one’s duties. As the Saiva Siddhaanthis state, if one side of the balance is weighed down with the sinful actions performed in various births, only performance of good actions can restore the balance and cancel the Paapa Karma. – Jagadguru Sri Chandrasekharendra Saraswathi SwamigalCategories: Deivathin Kural, Golden Quotes

Tags:

Leave a Reply

%d bloggers like this: