Periyava Golden Quotes-427

album1_61

 

தான் பிறர் பாரத்தைத் தாங்குகிறவனாகத்தான் இருக்க வேண்டுமே தவிர, தன் பாரத்தை இன்னொருவரிடம் தள்ளினால் அது தனக்கு அவமானம்; தன் கை பிறருக்கு உதவுவதாக இருக்க வேண்டுமேயொழியத் தானே இன்னொரு கையை உதவிக்கு எதிர்பார்த்தால் அது தனக்கு ரொம்பவும் கௌரவஹீனம் என்ற உணர்ச்சி பரோபகாரத்தில் ஈடுபடுகிற எவனுக்கும் basic –ஆக வேண்டும். லோக ஸேவைக்குப் போகிறவர்கள், ‘என் கார்யம் பூராவையும் நானே பார்த்துக் கொண்டுதான் பொதுத் தொண்டுக்குப் போவேன்’ என்று பிரதிக்ஞை பண்ணிக் கொண்டு விட்டால் எல்லாம் ஸரியாய்விடும். தன் கார்யம் என்பதில் தன் வீட்டுக் கார்யம், மாதா-பிதா-பத்னி-புத்ரர்-ஸஹோதரர் முதலான வீட்டு மநுஷ்யர்களின் கார்யம் அடக்கந்தான். என் கடமையில் தப்பாமல், குடும்பத்துக்குச் செய்ய வேண்டியதைச் செய்து கொண்டே உன் குடும்பமான — வஸுதைவ குடும்பகம்: லோகமெல்லாம் ஒரு குடும்பம் என்கிறபடி — ஸகல மக்களுக்கும் என்னாலான பணியைச் செய்ய அருள் பண்ணப்பா” என்று ஈஸ்வரனைப் பிரார்த்தனை பண்ணிக் கொண்டால் அவன் அப்படி அனுக்ரஹம் செய்வான். அதுதான் நாம் பண்ணிக் கொள்ள வேண்டிய வேண்டுதல். – ஜகத்குரு ஸ்ரீசந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் அருள்மொழிகள்


A person who seeks to be a philanthropist should have the realization that while he can be of help to the society, he should not expect others to fulfill his own responsibilities. He should bear the burden of others and not cast his burden upon the shoulders of others. All those who are desirous of doing social service should take a pledge that they will do so only after having fulfilled their own responsibilities. These responsibilities include duties towards the parents, wife, children, brother, etc. One should pray to Bhagawan to bless us to perform our domestic duties without fail and also enable us to serve His own extended family-“Vasudaiva kutumbakam”- all the living beings of the world sincerely. He will definitely grant us our wish. This should be our prayer. – Jagadguru Sri Chandrasekharendra Saraswathi Swamigal



Categories: Deivathin Kural, Golden Quotes

Tags:

Leave a Reply

%d bloggers like this: