தொண்டு உள்ளத்துக்கு லக்ஷணம் அன்பும் அடக்குமும்தான். “தொண்டர் தம் பெருமை” என்று அதைப் பெரியதற்கெல்லாம் பெரியதாக மற்றவர்கள் கொண்டாடலாமேயொழிய, தொண்டு செய்கிறவனுக்குத் ‘தான் பெரியவன்’ என்ற எண்ணம் லவலேசங்கூட இருக்கக் கூடாது. தான் ரொம்பவும் சின்னவன் என்ற எண்ணமே இருக்க வேண்டும். பேருக்கு ஆசைப்பட்டுக் கொண்டு தொண்டு செய்வதென்றால் அந்தத் தொண்டையே அழுக்குப் பண்ணினதாகத்தான் அர்த்தம். அடக்கமும் அன்பும் இருந்தால் வீட்டிலே இருக்கிறவர்களை எதிர்த்துக் கொண்டும் அவர்களிடம் எரிந்து விழுந்து கொண்டும் எவனும் வெளியிலே தொண்டு செய்யப் போகமாட்டான். – ஜகத்குரு ஸ்ரீசந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் அருள்மொழிகள்
Love and humility are the two basic characteristics of a socially minded person. Others may shower encomiums on him for his philanthropy but he should not have even the slightest trace of ego in him. He should feel that he is the humblest of beings. If he performs social service seeking publicity it only means that he is corrupting the very concept of philanthropy. If a person has really the qualities of love and humility ingrained in him he will never get irritated with his family members and go out to do social service. – Jagadguru Sri Chandrasekharendra Saraswathi Swamigal
Categories: Deivathin Kural, Golden Quotes
Leave a Reply