Jaya Jaya Sankara Hara Hara Sankara – Out of all the Vratta’s why Ekadasi fasting is very important? This has been magnificently explained by Sri Periyava here. There are many other types of fasting explained here including the most extreme ones and when one desires to observe them. The economic benefits one gets out of fasting has also been clearly called out.
Many Jaya Jaya Sankara to Shri ST Ravikumar, our sathsang seva volunteer for the translation. Ram Ram
பண்டிகை, வ்ரதம்; ஏகாதசிச் சிறப்பு
பகவத் பரமாகவே பண்டிகைகள் என்று சிலதை வைத்திருப்பதோடு வ்ரதங்கள் என்றும் சிலவற்றை வைத்திருக்கிறது. பண்டிகை என்பது நாம் ஆடை ஆபரணங்களுடன் அலங்காரம் பண்ணிக்கொண்டு, பகவானுக்கு அலங்காரம் பண்ணிப் பூஜை செய்து, அவன் ப்ரஸாதமாக அறுசுவை உணவு சாப்பிட்டு ஆனந்தமாயிருப்பது — போகிப்பண்டிகை, தீபாவளிப் பண்டிகை மாதிரி. புது வஸ்த்ராதிகள், அலங்காரம், பஞ்சபக்ஷ்ய போஜனம் முதலியன இல்லாமல், வழக்கமாகச் சாப்பிடுகிற மாதிரிக்கூட இல்லாமல், நியமத்தோடு உபவாஸமிருந்து பூஜை பண்ணுவது வ்ரதம். க்ருத்திகை வ்ரதம், ஷஷ்டி வ்ரதம், சதுர்த்தி வ்ரதம், ரிஷிபஞ்சமி வ்ரதம், ப்ரதோஷ வ்ரதம், ஸோமவார வ்ரதம், ச்ரவண வ்ரதம், பயோவ்ரதம், இது எல்லாவற்றையும்விட ஸர்வஜன அநுஷ்டானமாக ஏகாதசி வ்ரதம் என்று பல ஏற்பட்டிருக்கின்றன. எல்லா மதங்களிலுமே feasting, fasting என்று இந்த இரண்டும் இருக்கின்றன.
மற்ற வ்ரத தினங்களிலோ பூஜைக்கு அப்புறம் ஒரு பொழுதாவது பலஹாரம் பண்ணலாமென்றிருக்கிறது. ஏகாதசியில்தான் பூர்ண உபவாஸம்.
மற்ற வ்ரதங்களைப் புராண, ஆகமங்கள் சொல்கின்றன. அதில் சிவபரமான புராணாகமங்கள் சொல்பவைகளை வைஷ்ணவர்கள் அநுஷ்டிக்க மாட்டார்கள்; வைஷ்ணவ கிரந்தங்களில் சொல்லியுள்ளதை சைவர்கள் செய்ய மாட்டார்கள். ஏகாதசியோவென்றால் ஒவ்வொரு sect மட்டும் எடுத்துக்கொள்ளும் புராண ஆகமங்களில் மட்டுமின்றி ஹிந்து என்று பெயர் இருக்கிற அத்தனை பேருக்கும் பொதுவான தர்ம சாஸ்திரங்களிலேயே சொல்லப்பட்டிருக்கிறது. அதனால்தான் இதை ஸர்வஜன அநுஷ்டானமான வ்ரதம் என்று சொன்னேன்.
விஷ்ணு நித்ரை செய்து கொண்டிருந்தபோது லோகத்தை ஹிம்ஸை பண்ணிய ஒரு அஸுரனைக் கொல்வதற்காக அவருடைய சரீரத்திலிருந்தே ஸ்த்ரீ ரூபமாக ஒரு சக்தி வெளியே போய் ஸம்ஹாரம் செய்துவிட்டு வந்ததாகவும், விழித்துக் கொண்ட பகவான் அவளுக்கே ஏகாதசி என்று பேர் கொடுத்து இந்த ஏகாதசி வ்ரதத்தை ஏற்படுத்தினாரென்றும் பாத்ம புராணத்தில் கதை வருகிறது. மஹாவிஷ்ணு கூர்மமாகவும், தன்வந்திரியாகவும், மோஹினியாகவும் அவதாரங்கள் எடுத்து, க்ஷீராப்தியில் அம்ருதம் கடையப் பண்ணி அதை எடுத்துக் கொடுத்த நாளே ஏகாதசி என்பதாலும் அதைப் பொதுவில் விஷ்ணு ஸம்பந்தமுள்ளதாக நினைக்கிறோம். ஆனால் இந்த அம்ருத மதன ஸமயத்தில் முதலில் உண்டான காலகூட விஷத்தைப் பரமேச்வரன் புஜித்ததை முன்னிட்டுத்தான் அன்று எவரும் சாப்பிடக் கூடாது என்று ஏற்பட்டிருப்பதாக சைவர்கள் சொல்வதுண்டு.
இப்படி சைவம், வைஷ்ணவம் இரண்டுக்கும் ஏற்கத் தக்கதாயிருப்பதோடு ஹிந்துவாகப் பிறந்தவனில் எந்த இஷ்ட தெய்வத்தைக் கொண்டவனாயினும், எந்த ஜாதியைச் சேர்ந்தவாயினும் ஸகலருக்குமான வாழ்க்கை விதிகளைப் போடுகின்ற தர்மசாஸ்த்ரமும் ஏகாதசி உபவாஸத்தை விதித்திருப்பது அதன் விசேஷத்தைக் காட்டுகிறது.
தர்ம சாஸ்திரத்தில் சொல்லியிருக்கும் உபவாஸ நாட்களைச் சொல்கிறேன். ஒவ்வொரு பக்ஷத்திலும் வரும் ஏகாதசியன்று முழுப்பட்டினி கிடக்க வேண்டும். ஞாயிற்றுக் கிழமை, அமாவாஸ்யை, பௌணர்மி ஆகிய நாட்களில் பகலில் மட்டும் போஜனம் செய்து இரவில் உபவாஸமிருக்க வேண்டும். ஒவ்வொரு பக்ஷத்திலும் அஷ்டமியிலும் சதுர்த்தசியிலும் பகலில் சாப்பிடாமல், ராத்திரி மட்டும் ஆஹாரம் பண்ண வேண்டும்.
ராமநவமி, கோகுலாஷ்டமி, சிவராத்திரி ஆகியனவும் பூர்ண உபவாஸ தினங்களாகச் சொல்லப்பட்டிருக்கின்றன. ஆனால் சிவராத்ரியில்தான் இதை ஓரளவுக்கு விதிப்படிச் செய்வதாகவும் மற்ற இரண்டு தினங்களில் பூஜைக்கு அப்புறம் சாப்பிடுவதாகவும் (கிருஷ்ண ஜயந்தி பூஜை ராத்ரியில் செய்யப்படுவதால் பலஹாரம் செய்வதாகவும் -இதில் ஏகப்பட்ட பக்ஷண தினுஸுகள் சேர்ந்துவிடும்) நடந்து விடுகிறது.
குருவார வ்ரதம் என்பது நடைமுறையில் பரவியிருக்கிறது.
தக்ஷிணத்தில் எல்லாவற்றையும்விட அதிக வழக்கிலிருப்பது சனிக்கிழமை வ்ரதம்தான். ரொம்பப் பேர் அன்று ராத்ரி போஜனம் பண்ணுவதில்லையென்று வைத்துக் கொண்டிருக்கிறார்கள். வேங்கடரமண ஸ்வாமியை உத்தேசித்து இந்த வ்ரதம் ஏற்பட்டிருக்கிறது. “கலௌ வேங்கடநாயக:” [கலியுகக் கடவுள் ஏழுமலையானே] என்பதற்கேற்க, அவரது வ்ரதமே வெகுவாக அநுஷ்டானத்திலிருக்கிறது — சாஸ்த்ரத்தில் அது இல்லாவிட்டாலும்.
இதேபோல ஸோமவார வ்ரதமும் இங்கே சைவர்களிடையேயும், ஸ்மார்த்தகளிடையேயும் ஓரளவு நிறையவே வழக்கிலிருக்கிறது. வடக்கேயோ சைவ வைஷ்ணவ வித்யாஸமில்லாமல் எல்லோருமே ஸோமவார விரதமிருக்கிறார்கள். அதனால்தான் லால்பஹாதூர் சாஸ்திரிகூட ரொம்பவும் உணவு நெருக்கடி ஏற்பட்டபோது எல்லாரும் திங்கட்கிழமை உபவாஸமிருப்பது என்று வைத்துக்கொள்ள வேண்டுமென்று சொன்னார். திங்கட்கிழமை ராத்ரி ராஜாங்க விருந்துகள் நடத்துவதில்லை என்றேகூட நிறுத்தி வைக்கப்பட்டது.
இப்படி ராஜாங்க ரீதியிலேயே ஸோமவார ‘ஒரு பொழுது’ விதிக்கப்பட்டதிலிருந்து, உபவாஸங்களுக்கு சாஸ்த்ரத்தில் சொன்ன பலன்களோடு உணவுப் பிரச்னையை குறைப்பதில் பங்கு இருக்கிறதென்பதும் புதிதாகத் தெரிய வந்திருக்கிறது. சாஸ்த்ரப் பிரகாரம் எல்லோரும் உபவாஸாதிகளை அநுஷ்டித்தால் உணவிலே நமக்கு எப்போதும் ‘ஸர்ப்ளஸ்’, ஏற்பட்டு, ‘எக்ஸ்போர்ட்’ பண்ணி ‘எக்ஸ்சேஞ்ச்’ கூட நிறைய ஸம்பாதித்து விடலாம்!
சாந்த்ராயணம் என்னும் ஒரு வ்ரதம் உண்டு. உடம்பைப் போட்டு ரொம்ப வருத்திக் கொள்ளப்படாது தான் என்பது நம் மதக் கொள்கையானாலும், எத்தனை ஸாதனைகள் பண்ணியும் சித்த சுத்தி வராதவர்கள், தங்களுக்கு மற்றவர்களைவிட ஜாஸ்தியாயிருக்கிற பூர்வ பாப கர்மாதான் இப்படிப் பழி வாங்குகிறதென்று புரிந்து கொண்டு அதைக் கழிப்பதற்காக உடம்பை வருத்திக் கொண்டு சில அநுஷ்டானங்களைப் பண்ணும்படி சாஸ்த்ரம் விதிக்கிறது. இதற்கு ‘க்ருச்ரம்’ என்று பெயர். இப்படிப் பண்ணினால் தாங்கிக் கொள்ள முடியாதவர்கள் அதற்குப் பதில் ‘க்ருச்ர ப்ரதிநிதி’யாக இத்தனை ஆயிரம் காயத்ரி பண்ண வேண்டும் என்றும் இருக்கிறது. இப்படி ‘ஸ்ப்ஸ்டிட்யூட்’டைச் சொல்லிவிட்டதால், இந்த ‘ஸப்ஸ்டியூட்’டுக்கும் ‘ஸப்ஸ்டிட்யூட்’, அதற்கும் ‘ஸப்ஸ்டியூட்’ என்று போய், ஒரு கோதானம் பண்ணிவிட்டால் அது க்ருச்ரத்துக்கு ஸமானம் என்று ஆகி பசுவுக்குப் பதில் அதன் விலையைத் தக்ஷிணையாகத் தருவதாக ஆரம்பித்து, இந்தத் தக்ஷிணையையும் குறைத்துக் கொண்டே போய், தற்போது பரிஹாஸத்துக்கு இடமாக, ஒரு பிராம்மணனுக்கு ஆறே காலணா தக்ஷிணை கொடுத்துவிட்டால் க்ருச்ரம் அநுஷ்டித்தாகி விட்டது என்று வைத்துக் கொண்டிருக்கிறோம்! பாப பரிஹாரமாக உடம்பை வருத்திக் கொள்வதற்காகவே சாந்த்ராயண விரதம் ஏற்பட்டிருக்கிறது. சந்திரகலை வளர்வது தேய்வதைப் பொறுத்து போஜனம் செய்யும் அன்ன கவளத்தின் எண்ணிக்கையை அமைத்துக் கொள்வதுதான் சாந்த்ராயணம்.
இதை ஆரம்பிக்கிற திதியையொட்டி இரண்டு தினுஸுகள். ஒன்றை ‘கட்டெறும்பு சாந்த்ராயணம்’ என்றும், மற்றதை ‘கோதுமை சாந்த்ராயணம்’ என்றும் வேடிக்கையாகச் சொல்லலாம். கட்டெறும்பு எப்படியிருக்கிறது? தலை பெருத்து ஆரம்பிக்கிறது; அப்புறம் நடுவில் சிறுத்துத் தேய்ந்து விடுகிறது; மறுபடி பின்பாதி பெருத்துக் கொண்டு போகிறது. இதே மாதிரி ஒரு தினுஸு சாந்த்ராயணத்தைப் பௌர்ணமியன்று ஆரம்பித்து, அன்று பதினைந்து கவளம் சாப்பிட வேண்டும். மறுநாளான க்ருஷ்ணபக்ஷப் பிரதமையன்று பதினாலு கவளம், அதற்கு மறுதினமான த்விதியை பதின்மூன்று கவளம் என்று இப்படியே குறைத்துக்கொண்டே போய் அமாவாஸ்யையன்று முழுப்பட்டினி கிடக்க வேண்டும்; அப்புறம் மறுதினமான சுக்லபக்ஷப் பிரதமையன்று ஒரு கவளம், த்விதியைக்கு இரண்டு கவளம் என்று ஏற்றிக் கொண்டே போய் பௌர்ணமியில் பதினைந்து கவளம் என்று முடிக்க வேண்டும்.
கோதுமை எப்படியிருக்கிறது? ஊகமுள் மாதிரி சிறுத்து ஆரம்பிக்கிறது. நடுவிலே பெருத்து மறுபடி சிறுத்து முடிகிறது. இதேபோல் சாந்த்ராயண நியமத்தை சுக்லபக்ஷப் பிரதமையில் ஆரம்பித்து, அன்றைக்கு ஒரே ஒரு கவளம் போஜனம் செய்யவேண்டும். அப்புறம் ஒவ்வொரு திதிக்கும் ஒவ்வொரு கவளம் கூட்டிக்கொண்டே போக வேண்டும்.பௌர்ணமியன்று பதினைந்து கவளமாகும். அதற்கு மறுநாளிலிருந்து கிருஷ்ணபக்ஷம் பூராவும் ஒவ்வொரு கவளமாகக் குறைத்துக் கொண்டே வந்து அமாவாஸ்யையன்று சுத்த உபவாஸத்துடன் முடிக்க வேண்டும்.
சாந்த்ராயணத்தில் முழுப்பட்டினி கிடக்கும் நாள் தவிர மற்ற தினங்களில் ஒரே வேளைதான் சாப்பிட வேண்டும் – அன்றைக்கு எத்தனைக் கவளமோ அந்தக் கணக்குப்படி.
விரதங்களைப் பொதுஜனங்கள் ‘ஒரு பொழுது’ என்பார்கள். அநேகமாக பகலில், அன்னம் சேர்த்துக் கொண்டு சாப்பிடுவதையும் இரவில் இட்லி, தோசை போன்வற்றைச் சாப்பிடுவதையும் வ்ரதாநுஷ்டானமாக நினைக்கிறார்கள். சாஸ்திரப் பிரகாரம், அன்னத்துக்கு பதில் இப்படி வயிறு நிறைய, நல்ல புஷ்டியுள்ள இட்லி, தோசை இத்யாதிகளைச் சாப்பிடுவது உபவாஸமாகாது. “பல (ஆ) ஹாரம்” என்று அதில் சொல்லியிருக்கிறபடி வெறும் பழங்களை மட்டும் சாப்பிடுவதுதான் நிஜமான உபவாஸம்.
_______________________________________________________________________________
Festivals, (Pious) Observances; Significance of Ekadasi
Along with identifying certain festivals with the Divine, some pious observances are also prescribed. Festival means, we wear new clothes and ornaments, adorn Bhagawan with grand costumes and jewels, perform puja and enjoy a feast with six different tastes, as Prasad, after offering to Bhagawan. Pious observances (Vratas) are, when new clothes, ornaments and tasty food are not had, unlike festivals such as Bhogi or Deepavali, and not eating even the normal quantity of food and observing fast as a restriction and performing poojas. There are several Vratas like Krithikai vrata, Shashti vrata, Chathurthi vrata, Rishi Panjami vrata, Pradhosha vrata, Somavara vrata, Sravana vrata, Bhayo vrata etc., apart from Ekadasi, which should be observed universally. In all the religions, both feasting and fasting are there.
While in all other Vratas, it is permitted to take food once after performing the puja, only in Ekadasi, complete fasting is prescribed.
Vratas other than Ekadasi, are talked about in Epics, Scriptures and traditional doctrines. Vaishnavites do not observe the ones mentioned in the Shiva related scriptures. Saivites do not observe the ones mentioned in the Vaishnava books. Only Ekadasi is mentioned in not only the scriptures applicable to particular sects but in the dharmic sacred books commonly applicable to all people who can be called as Hindus. That is why, I said that Ekadasi Vrata has to be observed by all the people.
There is a story in the Padma Purana which says that when Lord Vishnu was in slumber and an asura was troubling the world, a force emanated from his body, in a feminine form, killed the asura and returned to Him. Waking up, the lord gave the feminine form the name, Ekadasi and established this austerity. Since the day in which Lord Maha Vishnu took the form of Koorma, Dhanvantari, and Mohini and facilitated churning of ambrosia in the ocean of milk and gave it, was Ekadasi, we generally consider that the Vrata is associated with Maha Vishnu. However Saivites claim that it has been prescribed to fast on that day because it was poison which came forth first when ambrosia was being extracted by the churning and that was consumed by Lord Shiva.
In this way, the fact that observance of Ekadasi fasting has been prescribed by the Dharma Shasthras (Hindu treatises on Dharma), not only to suit both Vaishnavites and Saivites but also for anyone born as a Hindu and who may have any preferred deity or belong to any religion, indicates its significance.
Let me talk about the days of fasting prescribed in the Dharma Sasthras. One should observe complete fasting on the Ekadasi day that comes once in every Paksha (fortnight). On Sundays, Amavasya (new moon) and Pournami (full moon), should eat only during day time and observe fast in the night. On every eighth (Ashtami) and fourteenth day (Chathurdasi) of a Paksha, one should observe fast during the day and take food only in the night.
It is prescribed to observe complete fast on Ram Navami, Gokulashtami, Shivarathri etc. However, this is being observed as per rules only in the case of Shivarathri and on the other two days, food is taken after observing fast till the time of performing the puja (Since Krishna Jayanthi is celebrated in the night, refreshments are taken (wherein lots of variety of confectionaries get included).
The practice of observing fast on Thursdays (Guruvara Vrata) is in vogue.
In south, what is being practiced more than anything else, is the Saturday Vrata. Many people follow the practice of not eating the night meal (on Saturdays). This Vrata is observed in the name of Lord Venkataramana. In tune with “Kalou Venkatanayaka:”, (Lord of the seven hills is the Deity for Kaliyuga), observing fasting in his name is widely practiced, although it is not prescribed in the sacred texts (Sastras).
Similarly, Somavara Vrata (fasting on Mondays) is also quite prevalent among Saivites and Smarthas. In the north, everyone observes the Monday fast, without any distinction as Saivite and Vaishnavite. That is why, when there was famine (food shortage), Lal Bahadhur Shasthri had advocated that everyone should observe this Monday fasting. Holding government banquets on Monday nights was also stopped.
From this prescription of observing one time food on Mondays even by Government, a new fact has emerged that apart from the benefits listed out by sacred texts for observance of fasting, it has got a role in mitigating the food security problem also. If everyone observes the fasting prescribed in the sacred texts, there will be surplus food, which can be exported and we can even earn lot of (foreign) exchange.
There is a Vrata called, Chandrayana. Although the principle of our religion does not encourage tormenting the body, certain practices have been prescribed in the sacred texts for those people who are unable to obtain purity of mind despite lot of efforts and for those who feel that the reason for their suffering more than others, is their karma of their previous births and therefore, wish to get rid of them. This is called, “Krcchra” (penance). It has also been prescribed that for those who would not be able to bear the suffering this way, should chant Gayathri Japa, so many thousand times, as a substitute (‘Krcchra pradinidhi’). Since this ‘substitute’ has been mentioned, we have gone to the extent of offering ‘substitute’ to this substitute and another substitute to that substitute and started to equate offering of a cow (Gho Dhanam) to krcchram and further, giving only the cost of the cow as fee (Dakshina) and gradually reducing even that fee, to a ridiculous level of saying that krcchram has been observed if only ‘kalana’ (25 paise), is given as fee. Chandrayana vrata has been established for getting rid of one’s sins. Chandrayanam is having food in measures corresponding to the day of the waning and waxing moon.
Depending on the lunar day (thithi) when this is commenced, one can be comically called as ‘Katterumbu Chandrayana’ and the other as ‘Godhumai Chandrayana’ (Wheat Chandrayana). How does a black ant look like? Its starts with an expanded head, while its middle portion is thinner and again the end part is expanded. Similarly in the Chandrayana which is commenced on a full moon day, food of 15 morsels should be eaten. On the next day, Krishna paksha prathamai (first day of waning moon), 14 morsels should be taken. Then the next day, Dwithiyai, 13 morsels, thus gradually reducing to observing complete fast on new moon day, (Amavasya). Then on the next day of Sukla paksha prathamai (first day of the waxing moon), only one morsel should be eaten, second day, two and gradually increasing and completing to 15 morsels on full moon day (Pournami).
How does wheat look? It starts very sharp like a thorn. It is expanded in the middle and ends narrow again. Similarly when the Chandrayana practice is commenced on Sukla Paksha first day, one morsel of food should be taken. For each passing day, it gets increased by one and on full moon day (pournami), it will be 15 morsels of food. From the next day, when Krishna paksha starts, a measure is decreased for every passing day, concluding with complete fast on new moon day (Amavasya).
In Chandrayana, other than the day on which complete fasting is observed, only one time food should be taken on all days, as per the number of measures applicable to that day.
Vratas are generally referred to as ‘one pozhuthu’ (one time) by people. People think that they are observing Vrata, if food is eaten only once during the day and refreshments like idly, dosa are taken in the night. As per Sastras, eating such rich food, stomach full, as a substitute to meals does not amount to observing fast. As suggested in them (Sastras), “Phal (A) haram”, eating only fruits is the real observance of Üpavas’.
Categories: Deivathin Kural
Leave a Reply