“ஊர்க் குழந்தையை ஊட்டி வளர்த்தால் தன் குழந்தை தானே வளரும்” என்று அடிக்கடி quote பண்ணித்தான் இருக்கிறேன். அதாவது உன் குழந்தையைப் பட்டினி போட்டுவிட்டாவது போய் ஊர்க் குழந்தையை ஸவரக்ஷணை பண்ணு என்று சொல்லித்தான் வந்திருக்கிறேன். அப்படிப் பழமொழி இருப்பதும் வாஸ்தவம். ஸத்யமாக இல்லாத ஒன்று பழமொழியாக ஆகிறதில்லை. ஆனால் இந்தப் பழமொழி ரொம்ப உசந்த நிலையில், தொண்டு மனப்பான்மையில் அப்படியே ஊறிப் போனவர்களைக் குறித்து ஏற்பட்டிருக்க வேண்டும். அவர்கள் மனஸறிந்து தன் குழந்தையைக் கதற விட்டுவிட்டு ஊர்க் குழந்தையைச் சீராட்டினார்களென்று அர்த்தமில்லை. பரோபகாரத்தில் அவர்களுக்குள்ள தீவிர உணர்ச்சி வேகம் அவர்களை இப்படி அடித்துக் கொண்டு போயிருக்கிறது. பக்தி வெறியில் ஒவ்வொரு நாயன்மார் லோக தர்மங்களுக்கு விரோதமாகக்கூடப் பண்ணவில்லையா? அப்படி இதுவும் ஒரு பரவச நிலையில் பண்ணுவது. அப்படி இவர்கள் தங்களுக்கு அதீதமான ஒரு சக்தியின் கீழ் ஊரிலே உள்ள அநாதைக் குழந்தைகளின் நலனுக்கே தங்களை அர்ப்பணம் பண்ணிக் கொண்டபோது, ஈஸ்வர பிரஸாதமாக வீட்டிலே இவர்களுடைய குழந்தைகள் கவனிப்பு இல்லாமலே (அல்லது ஈஸ்வரனின் கவனிப்பிலேயே) நன்றாக வளர்ந்திருக்கும். இது ஸாதாரணமாக லோகத்திலிருக்கப்பட்டவர்களுக்கு ‘எக்ஸாம்பிள்’ ஆகாது. அதாவது ஸோஷல் ஸர்வீஸ் செய்கிறோமென்று தங்களைத் தாங்களே ஏமாற்றிக் கொண்டு விடக்கூடாது. – ஜகத்குரு ஸ்ரீசந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் அருள்மொழிகள்
I used to quote the old proverb which states that when one takes care of somebody else’s child, his or her own child will be automatically taken care of. In other words, I have suggested that one should go and tend to the stranger’s child even if one’s own child is starving. Any proverb certainly has truth behind it and it must be so with this proverb also. But this must have been applicable to those persons who had been immersed in their philanthropic quest, unmindful of themselves. The proverb does not mean that they left their children starving and screaming and went about their philanthropic duties. It talks of those persons who lost in the flood of philanthropic urge, forgot even their families. We may recall so many Naayanmaars (Siva Bhakthas) who in the ecstasy of devotion acted in a manner contrary to the accepted norms of the world. Similarly, in a flood of compassion these people had taken care of the welfare of the orphans of this world, even forgetful of the needs of their own children, but by the Grace of Eswara, their children were taken care of. Such exceptional people cannot be the examples the others have to follow. What I mean to say is we should not cheat ourselves in the name of social service. – Jagadguru Sri Chandrasekharendra Saraswathi Swamigal
Categories: Deivathin Kural, Golden Quotes
Leave a Reply