Jaya Jaya Sankara Hara Hara Sankara – How much should one fast? After debating on various points and references from Adi Aacharyal and Bhagawan Sri Krishna, Sri Periyava categorically stresses on the importance of Ekadasi upavasam.
Many Jaya Jaya Sankara to our sathsang seva volunteer Shri. ST Ravikumar for the translation. Ram Ram
ஆசார்யாள், கண்ணனின் மிதவாதம்
இதற்கு ஆசார்யாள் ரொம்பவும் ஃபிலஸாஃபிகலாக பாஷ்யம் செய்துவிட்டார். “சாப்பாடு இல்லாமலிருப்பதென்றால் போஜன நிவ்ருத்தி என்று அர்த்தமில்லை. வெறுமே போஜனத்தை விட்டால் பிராணன்தான் போகுமே தவிர ஆத்ம ஞானம் வந்துவிடாது. அதனால் இங்கே ‘அசனம்’ (சாப்பாடு) என்று சொன்னது ஆசையநுபோகங்களைத்தான். காம நுகர்ச்சியை விடுமாறே இந்த மந்திரம் சொல்கிறது” என்று பாஷ்யம் பண்ணியிருக்கிறார்.
ஆனால் இம்மாதிரி ஆசை அற்று போவதற்கும் பட்டினி கிட்டினி கிடந்து வ்ரத உபவாஸமிருப்பது உதவத்தான் செய்கிறது. அதுவும் ஆசார்யாளுக்குத் தெரியாததில்லை. நம் மதத்தை மற்ற மதங்கள் அடித்துக் கொண்டுபோக இருந்தபோது மீட்டுக் கொடுத்தது அவர்தான். ஞான மார்க்கம் என்று த்யான விசாராதிகள் பண்ணுவதை மட்டுந்தான் அவர் மீட்டு ரக்ஷித்துத் தந்தார் என்றில்லை. நம்முடைய பூஜா பத்ததிகள், கோயில், குளம், உத்ஸவம், பண்டிகை, வ்ரதம் எல்லாவற்றுக்குமே புனர்ஜீவன் தந்தவர் அவர்தான். அதனால் இன்றைக்கு நாம் ஏகாதசி வ்ரதம் என்று ஒன்று இருக்கிறோமென்றால் அதற்குக் காரணமே அவர்தான். புராணானாம் ஆலயம் என்பதாக ஸகல புராணங்களுக்குமே உறைவிடமாக இருந்த ஆசார்யாள், புராணங்கள் தலைமேல் வைத்துக் கொண்டாடும் ஏகாதசி வ்ரதத்தை அவசியமில்லாதது என்று சொல்லவே மாட்டார்.
இங்கே அவர் சொல்வது என்னவென்றால், ஏகாதசி மாதிரி பக்ஷத்துக்கு ஒருநாள் சுத்தப் பட்டினி போடுவதையல்ல. “இனிமேலே சாப்பிடுவதேயில்லை” என்று உண்ணாவிரதம் இருந்து ஸாதனை பண்ணுவதைத் தான் சொல்கிறார். அந்த மாதிரி ஒரே தீவிரமாகப் போகிறதில் ஒன்றும் பிரயோஜனமில்லை. அவ்வப்போது ஒருவேளை, அல்லது ஒரே ஒரு நாள் பட்டினி போடுவது என்பது ‘நேச்ச’ருக்கே அநுகூலமாக இருப்பது. ஒரேயடியாக ‘சாகிற மட்டும் உண்ணாவிரதம்’ என்றால் அது ‘நேச்ச’ரை எதிர்த்துக்கொண்டு போவதாகும். அப்போது ‘நேச்ச’ரும் பழி வாங்கும். உடம்பைச் சித்ரவதை பண்ணும். அந்த வதையை நினைத்துக் கொண்டு அதைச் சமாளிக்க யத்தனிப்பதிலேயேதான் மனஸ் போகுமே தவிர, ஸாதனா லக்ஷ்யத்தில் ஈடுபட்டு நிற்காது. இம்மாதிரி தன்னைத்தானே க்ரூரமாக வ்ருத்திக் கொள்கிற வழிகளை ஆசார்யாள் ஒப்புக் கொள்ளாததால்தான் இப்படிச் சொல்கிறார்.
கிருஷ்ண பரமாத்மாவும் எக்ஸ்ட்ரீம்களை வேண்டாம் என்றுதான் சொல்கிறார். ‘நாத்யச்நதஸ்து யோகோஸ்தி ந சைகாந்தம் அநச்நத: … யுக்தாஹார … ஸ்ய யோகோ பவதி து:கஹா – பெருந்தீனி தின்கிறவனுக்கும் யோகம் வராது, ஒரேயடியாகப் பட்டினி கிடக்கிறவனுக்கும் யோகம் வராது, யுக்தமான அளவு மிதமாய் சாப்பிடுகிறவனுக்கே யோகம் ஸித்தித்துத் துக்கத்தைப் போக்கும்” என்கிறார்*. ஒரேயடியாகப் பல நாள் சேர்ந்தாற்போல் உண்ணாவிரதம் கிடப்பது நம் சாஸ்த்ர ஸம்மதமல்ல. அது ஒரே ஓய்ச்சலில் கொண்டுவிட்டு, மனஸையும் சுத்தி பண்ணுவதற்குப் பதில் ஒரேயடியாகப் பலஹீனமாக்கிப் பைத்தியத்திலோ ஸ்மரணை தப்புவதிலோதான் கொண்டுவிடும். பகவத் ஸ்மரணையில் ஸ்டெடியாக நிற்கப் பண்ணாது. ஆனால் சாஸ்த்ரங்களில் சொன்னாற்போல் அவ்வப்போது ஒருபொழுதும், பதினைந்து நாளுக்கு ஒருமுறை சுத்தோபவாஸமும் இருப்பது மனஸை சுத்தமாக்கி, திவ்ய ஸ்மரணத்தில் பலப்படுத்தி நிறுத்தி வைக்கும்.
ரொம்பவும் தீவிரமாகவும், ‘forced’ ஆகவும் [வலுக்கட்டாயமாகவும்] உபவாஸாதிகளை அநுஷ்டித்தால் எல்லாம் சிதறிப் பிரயோஜனமில்லாமல் போய்விடும்; அதனால் gradual-ஆக (படிப்படியாக)ப் போக வேண்டும் என்பதுதான் நம் ஆசார்யாள், கீதாசார்யனான பகவான் இவர்களின் அபிப்ராயம். அவர்கள் சொன்ன context-ல் அடியோடு நிராகரிப்பது போல அழுத்திச் சொல்லும்படியாகிவிட்டது.
அதியாகப் போகக்கூடாது என்பதாலேயே போஜன நிவ்ருத்தியால் ப்ரயோஜனமில்லை என்று கொஞ்சம் அடித்தே ஆசார்யாள் சொல்லிவிட்டார்.
‘பூணூல் ஒருத்தனை பிராம்மணனாக்கி விடவில்லை; ஒழுக்கம்தான் அப்படி ஆக்குகிறது ‘என்று சொன்னால், உடனே உபநயன ஸம்ஸ்காரத்தை நிறுத்தி விட வேண்டும் என்று அர்த்தம் பண்ணிக்கொள்வதா? ஒன்று சிலாக்யமானது, ஆனால் அதைவிட சிலாக்யமாக இன்னொன்று இருக்கிறது என்றால் அப்போது இரண்டாவதை வலியுறுத்துவதற்காக முதலாவதைக் கழித்துக் கட்டுவது போல exaggerate பண்ணியே பேசுவது வழக்கம். ‘பாயின்ட்’ நன்றாக நம் மனஸில் தைப்பதற்காக இப்படிச் சொல்கிறது. பிராம்மணனுக்குப் பூணூல் முக்யமானாலும், அதைவிட ஒழுக்கம் முக்யம் என்பதை வலியுறுத்துவதற்காகத்தான் பூணூலே வேண்டாம், ஒழுக்கம் போதும் என்பது. திருக்குறளில் ஆயிரம் யாகத்தைவிட ஒரு பிராணிக்குக்கூட ஹிம்ஸை செய்யாமலிருப்பது உசத்தி என்று சொல்லியிருப்பதும் இப்படித்தான்1 கீதையில் இனனோரிடத்திலும் ஒரு ஆசாரத்தின் முக்யத்வத்தை வலியுறுத்துவதற்காகவே இன்னொரு ஆசாரத்தை மட்டம் தட்டிக் கழித்துக் கட்டிப் பேசியிருக்கிறார். ‘அக்னியை விட்டு விட்டதால் ஒருத்தன் ஸந்நியாஸி இல்லை; கர்மாவை விட்டுவிட்டதால் ஒருத்தன் ஸந்நியாஸி இல்லை; என்று அங்கே (பகவான்) சொல்கிறார்:
ஸ ஸந்ந்யாஸீ ச யோகீ ச ந நிரக்நிர் ந சாக்ரிய:2
ஸந்நியாஸிக்கு அக்னி ஹோத்ரம், ஒளபாஸனம், யஜ்ஞம் முதலான அக்னிகார்யம் எதுவும் கிடையாது. அவனுக்கு மற்ற பூஜை முதலான கர்மாக்களும், ஸமூஹக் கடமைகளுங்கூடக் கிடையாது. இது ஸகல சாஸ்திரங்களாலும் ஏற்படுத்தப்பட்ட ஸந்நியாஸாச்ரம தர்மமாகும். அப்படியிருக்க ‘நிரக்னி’ (அக்னியை விட்டவன், ‘அக்ரியன்’ (கர்மா இல்லாதவன்) என்பதால் ஒருத்தன் ஸந்நியாஸி ஆகிவிடமாட்டானென்றால் எப்படி ஸரியாகும்?
இதற்கு ச்லோகத்தின் இன்னொரு வரியை, இதற்கு முந்தி வருகிற முதல் வரியைப் பார்க்க வேண்டும். அதிலே, “அநாச்ரித: கர்ம பலம் கார்யம் கர்ம கரோதி ய:” என்கிறார். தானாக எந்தக் கார்யம் வந்து வாய்த்தாலும் அதைத் ‘தான் பண்ணுகிறோம்’ என்ற உணர்ச்சியில்லாமல் பண்ணிக் கொண்டு, அந்தக் கர்மாவின் பலனைக் கொஞ்சங்கூடக் கருதாமல் இருப்பதுதான் உண்மையான ஸந்நியாஸ லக்ஷணம் என்பது பகவான் அபிப்ராயம். அதைத்தான் இந்த வரியில் சொல்லியிருக்கிறார். இப்படிக் கர்ம பலனில் அனாச்ரிதனாக இருந்துகொண்டு, எவன் வாய்த்த கர்மாவைப் பண்ணுகிறானோ ‘அப்படிப் பட்டவனே ஸந்நியாஸி அவனே யோகி – “ஸ ஸந்ந்யாஸீ ச யோகீ ச” என்று முத்தாய்ப்பு வைத்துவிட்டு, அப்புறந்தான் அதற்கு இன்னம் வலுக்கொடுப்பதற்காக, “ந நிரக்நிர் ந சாக்ரிய:” — நெருப்பை விட்டவனோ கர்மாவை விட்டவனோ இல்லை”என்கிறார்.
இதற்கு சரியாக அர்த்தம் பண்ணிக் கொண்டால், “ஸந்நியாஸ ஆச்ரமத்திலிருக்கிற ஒருவன் வெறுமே ‘நெருப்பை விட்டேன், கர்மாவை விட்டேன்’ என்று சொல்லிக்கொண்டே சொந்தப் பலனை உத்தேசித்து வேலைகள் பண்ணிக் கொண்டிருந்தால் அது ஸந்நியாஸமே இல்லை” என்று பகவான் சொல்வதாகவே ஆகும். இவன் அக்னியை விடத்தான் வேண்டும். தான் கர்த்தா என்ற எண்ணத்தோடு கர்மா செய்வதை விடத்தான் வேண்டும்; ஆனாலும் இதைவிட முக்யம் பலனை எதிர்பார்க்காமல் பட்டுக் கொள்ளாமல் வாய்த்த கர்மாவைப் பண்ண வேண்டும் என்பதே அர்த்தம்.
உபநிஷத்திலே சொல்லியிருக்கிற “அநாசகேன” என்பதற்கு “போஜனத்தை விட்டு விட்டு” என்றும் அர்த்தந்தான். ஆனால் அதைவிட முக்யமான அர்த்தம் “இந்த்ரிய இச்சைகளைப் பூர்த்தி பண்ணிக் கொள்வதை விட்டுவிட்டு” என்பதேயாகும். இந்த அபிப்ராயத்துக்கு அழுத்தங் கொடுப்பதற்காகவே ஆசார்யாள், “போஜனத்தை விடுவது இங்கே தாத்பரியமில்லை” என்கிறார்.
அவ்வப்போது ஆஹாரத்தை நிறுத்துவது சரீரத்துக்கும் நல்லது. மனஸுக்கும் நல்லது.
ஆஹார நியமங்களில் இதனால்தான் ஸத்வ போஜனம் என்று சாப்பிடத்தக்கதான உணவு முறையை வைத்ததோடு, அந்த ஸத்வ போஜனமுமில்லாத பட்டினி தினங்களாக வ்ரத உபவாஸங்களையும் சொல்லியிருக்கிறது.
* பகவத்கீதை – 6.16-17
- ” தெய்வத்தின் குரல்”முதல் பகுதியில் “பரோபகாரம்“என்ற உரையும், இரண்டாம் பகுதியில் “வேதம்”என்ற உரையில் “ஜீவஹிம்ஸை செய்யலாமா?“என்ற உட்பிரிவும் பார்க்க.
- கீதை – 6.1
__________________________________________________________________________
Moderate arguments (Midhavadam) of Acharyal and Krishna
Acharyal has commented on this (Fasting) very philosophically. He has stated that “Not to be eating” does not mean abstaining from eating food and that not eating would only result in death and not give the superior knowledge (Atma jnana). Therefore, ‘Achanam’ (food) here only denotes, desires in pleasures. He has explained that this mantra says that one should give up lust or desires.
But this observing of austerities like starving, fasting, etc., definitely helps in removing such desires also. It is not that Acharyal does know that. He was the one who rescued our religion, when it was being overpowered by other religions. It is not that he rescued and protected only the path of superior knowledge, practiced by meditating monks. He is the one who gave a new life to all our customs like Pooja, Temples, Tanks, Temple festivals (Utsavam), domestic festivals, austerities, etc. Therefore, if we are observing an austerity called Ekadasi today, he is the person, who is the reason for it. Being called the ‘temple of all sacred texts’ – he being the repository of all sacred texts, he would never say that Ekadasi fasting is not necessary, when all the sacred texts prescribe that very highly.
Here, what he is referring to is not observing fast once in a fortnight like Ekadasi, but about performing feats of fasting forever. There is no use in doing such extreme things. To go without food, once in a day every fifteen days, is beneficial to the ‘nature’ itself. Extreme things like ‘fasting unto death’ is going against ‘nature’. In such situations, nature will also extract its revenge. It will torment the body. Mind will be engaged only in thinking about the pain being felt and how to overcome that and not on the objective of spiritual meditation. Since Acharyal does not approve of such self-inflicting crude methods, he is saying like this.
Lord Krishna also says that such extremities are not required. He says, ‘Nathyachnadhasthu Yogosthi Na Saikantham Anachnadha:….Yukthahara….Sya Yogo Bhavathi Dukhaha’ – ‘It will not be possible for a person who eats excessively, to do yoga. Person who is starving all the time, also cannot do yoga. Yoga will be possible and relieve him of his sorrows, only to the person who eats moderately’. Our sastras do not approve of fasting for days together. It will only lead to tiredness and instead of purifying the mind, will weaken it and lead to either lunacy or losing memory. It will not help in fixing the mind steadily on Bhagawan. But observing complete fast as prescribed in the sacred texts, one time in a day, one day in a fortnight, would purify the mind and strengthen concentrating on the divine.
If extreme or forced fastings are observed, everything will get scattered and prove to be useless. Therefore, it is the opinion of Acharya and the Lord Krishna, the Geethacharya, to proceed gradually. Owing to the context, they gave the impression of strongly rejecting it.
With a view that it should not go to extremes, Acharyal had said that there was no use in fasting.
If it is said, “Wearing the sacred thread does not make a person Brahmin but only the discipline that makes him’, should we understand that the entire Upanayana ceremony should be abolished immediately? Something is excellent. But if there is another thing which is still better, to emphasise on the second, it is always a practice to exaggerate by downgrading the first one. It is said that way to ensure that the point penetrates well in our minds. Only to convey that although wearing the sacred thread is important and it is more important to observe the discipline, it has been said that there is no need for wearing the sacred thread but to follow discipline. In this vein only, in Thirukkural, it is said that it is much better not to hurt one animal than to be performing thousand holy sacrifices. In the same way, in Gita also, in one place, to emphasise on the importance of one code of conduct, another one has been spoken lowly. Bhagawan says (in Gita), ‘simply because a person has relinquished fire, he does not become a sanyasi (anchorite); or a person forsaking activity, does not make him a sanyasi: ‘Sa Sanyasi cha Yogi cha Na Niragnir Na sakhriya:2 . For a sanyasi, things like offering sacrifices to God of Fire (Agni hothra, Aupasana, Yajna) etc., are not applicable. He does not have duties like doing puja, responsibility to the society etc., also. This is the code of conduct for sanyasis, laid down by all sacred texts. If that is so, how will it be correct to say that simply because a person has relinquished fire, he does not become a sanyasi (anchorite); or a person forsaking activity, does not make him a sanyasi:’?
For this, one needs to see the other sentence in the verse, the sentence that comes before this. In that He says, “Anachrithaha: Karma Phalam Karyam Karma Karodhi yaha:”. It is the opinion of Bhagawan that the true characteristic of an anchorite is to do any activity, which are his duties, without the feeling that he is doing it and continue to do it without considering the fruits out of it at all. That is what he says in this sentence. After saying, that it the person who does his duties without expecting any benefit out of it, is a true sanyasi and a yogi, – “Sa Sanyasi cha Yogi Sa’, then to reinforce the point further, he says that “Na Niragnir Na Sakhriya:” – simply because a person has relinquished fire, he does not become a sanyasi (anchorite); or a person forsaking activity, does not make him a sanyasi”.
If we understand this correctly, Bhagawan is conveying that there is no use if a person who is in the hermitage (Sanyasa life), says that he has stopped offerings to fire, stopped doing activities etc., but going about doing the activities with an eye on the benefits for himself out of the endeavour. It only means that, he has to forsake fire. He has to do his duties not thinking that he is himself doing it. However, it is more important that he should be doing it without any expectations on the benefits.
It is true that ‘Anasakhena’ in the Upanishads also means ‘giving up eating’. But the more important meaning is ‘giving up the desire to fulfil the sensory pleasures’. To lend emphasis to this meaning only Acharya has said that ‘here, the intent is not giving up eating’.
To stop eating now and then is good for the body as well as for the mind.
That is why the rules of eating have prescribed the system of eating natural, moderate (satva) food and also earmarked some days of austere fasting without even that food.
1 Bhagawad Gita 6.16-17
2.Please refer the essay “Paropakaram (benevolence)” in the first part of “Deivathin Kural” and paragraph on “Jeeva himsai seyyalama? (Can we harm lives?) in the essay on “Vedam (Vedas)” in the second part.
3 Gita – 6.1
Categories: Deivathin Kural
Leave a Reply