Periyava Golden Quotes-416

album1_46

மாதா பிதாக்களை ஸோஷியல் ஸர்வீஸ் மாதிரி விஷயங்களில் ஒருத்தனால் சாந்தமாக எடுத்துச் சொல்லிக் ‘கன்வின்ஸ்’ பண்ண முடியவில்லை என்றால் அப்போது அவர்களிடம் சண்டைக்குப் போகப்படாது. அவர்களை மீறியும் செய்யக்கூடாது. சாஸ்த்ரப்படி மாதா பிதா வாக்ய பரிபாலனத்துக்கு அப்புறந்தான் எந்த தர்மமும். அதனால் அவர்கள் தப்பாகச் சொன்னாலும் அவர்களுக்குத் தெளிவு தரவேண்டுமென்று பகவானைப் பிரார்த்திக்க வேண்டுமே தவிர மீறிச் செய்யக்கூடாது. அதன் பாபமோ புண்யமோ அவர்களைச் சேர்ந்தது என்று விட்டுவிட வேண்டும். இப்போது இந்த நிமிஷம், இந்த மாதா பிதாக்களின் கஷ்டத்தைப் பார்த்ததில் இப்படித்தான் கொஞ்சம் கடுமையாகவே சொல்லத் தோன்றுகிறது. – ஜகத்குரு ஸ்ரீசந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் அருள்மொழிகள்

According to our scriptures, any charity comes only after strict obedience to the instructions of one’s parents. So, if a person is not able to convince his parents in matters of performing social service, he should pray to Bhagawan to enlighten his parents. On no account, he should disobey them. Whatever be the consequences of this action, right or wrong, shall belong to the parents. I am forced to make such a harsh statement now, seeing the plight of these parents, who came to me.  – Jagadguru Sri Chandrasekharendra Saraswathi Swamigal



Categories: Deivathin Kural, Golden Quotes

Tags:

Leave a Reply

%d bloggers like this: