Eight sovereign gold chain for your granddaughter?

rettai-vadam-periyava-and-paatti

Jaya Jaya Sankara Hara Hara Sankara – What an incident from Shri Ramani Anna’s book Sri Maha Periyavar!! This was published in Sakthi Vitakan in 2007 as well in as our blog in 2011. Link HERE. Publishing here with Tamizh typing and English translation for all of us to enjoy. Ram Ram

Many Jaya Jaya Sankara to our sathsang seva volunteer Shri M. Venkataraman for the translation. Ram Ram

                                                    ஜெய ஜெய சங்கர ஹர ஹர சங்கர !

                                                 மஹா பெரியவர் – எஸ். ரமணி அண்ணா

 

ரெட்ட வடத்துல எட்டு பவுன் சங்கிலி போடணுமா ?

பல வருஷங்களுக்கு முன்பு, ஒரு நாள் விடியற் காலை. லேசாக மழை பெய்து கொண்டிருந்தது. காஞ்சி ஸ்ரீ சங்கர மடத்தில் ஏகாந்தமாக அமர்திருந்தார் மஹா பெரியவர். தரிசனத்துக்கு வந்திருந்த பக்தர்கள் தரிசித்துச் சென்ற பின் அறைக்குச் செல்வதற்காக எழுந்தார் ஸ்வாமிகள். அப்போது வயதான ஒரு பாட்டியும், இளம் வயது பெண் ஒருத்தியும் வேக வேகமாக ஓடி வந்து,  பெரியவாளை நமஸ்கரித்து எழுந்தனர்.

சற்றுஅவர்களைக் கூர்ந்து நோக்கிய ஸ்வாமிகள், மீண்டும் அப்படியே அமர்ந்து விட்டார்.சந்தோஷம் தவழ, “அடேடே,  மீனாட்சி பாட்டியா ? என்ன அதிசயமா காலை வேளைல வந்திருக்கே ? பக்கத்துல யாரு? ஒன் பேத்தியா…பேரென்ன?” என்று வினவினார் ஸ்வாமிகள்.

மீனாக்ஷி பாட்டி, “பெரியவா, நான் எத்தனையோ வருஷமா மடத்துக்கு வந்து ஒங்களை தரிசனம் பண்ணிண்டு இருக்கேன். இதுவரைக்கும் ஸ்வாமிகள் கிட்டே என்னை பத்தி தெரிவிச்சுண்டதில்லை..அதுக்கான சந்தர்ப்பம் வரலை. ஆனா, இப்ப வந்துருக்கு. இதோ நிக்கறாளே.இவ என் பொண்ணு வயத்துப் பேத்தி. இந்த ஊர்லே பிறந்ததாலே காமாஷினு பேரு வெச்சுருக்கு. நேக்கு ஒரே பொண்ணு..அவளும் பன்னெண்டு வருஷத்துக்கு முன்னாலே, இவளை என்கிட்டே விட்டுட்டு கண்ணை மூடிட்டா. அவளுக்கு முன்னாலே அவ புருஷன் மாரடைப்புலே போய் சேர்ந்துட்டான்.

“அதுலேர்ந்து இவலே வெச்சுண்டு அல்லாடிண்டிருக்கேன். பள்ளிக்கூடத்தில் சேர்த்து படிக்க வெச்சேன். படிப்பு ஏறலை. அஞ்சாம் கிளாசோடு நிறுத்தியாச்சு. வயசு பதினஞ்சு ஆறது…இவளை ஒருத்தன் கிட்டே புடுச்சு குடுத்துட்டா எங்கடமை விட்டுது” என்று சொல்லி முடித்தாள்.

பொறுமையுடன் கேட்டுக் கொண்டிருந்த ஆச்சார்யாள், “நித்யம் கார்த்தாலே பத்து பத்தரை மணி சுமாருக்கு சந்திரமௌலீஸ்வர பூஜைக்கு புஷ்பம் கொண்டு வர நீ, இன்னிக்கு விடிய காலம்பற வந்து நிக்கிறத பார்த்த உடனேயே ஏதோ விசேஷத்தோடே தான் வந்து இருக்கேங்கறதை புரிஞ்சுண்டேன். சரி..என்ன சமாச்சாரம்?” என்று பளிச் என்று கேட்டார் ஸ்வாமிகள்.

முதலில் தயங்கிய மீனாக்ஷி பாட்டி மெல்ல சொல்ல ஆரம்பித்தாள். “ஒண்ணுமில்லை பெரியவா. இவளுக்கு ஏதாப்புலே ஓர் வரன் வந்திருக்கு. பையனும் இந்த ஊர் தான். பள்ளிக்கூட வாத்தியார். அறுவது ரூபா சம்பளமாம். நல்ல குடும்பம். பிக்கல் பிடுங்கல் இல்லை. ரெண்டு பேர் ஜாதகமும் நன்னா பொருந்தி இருக்குனு சொல்றா. எப்படியாவது இத நீங்க தான் நடத்தி வெக்கணும் பெரியவா..”என்று நமஸ்கரித்து எழுந்தாள் பாட்டி.

உடனே ஆச்சார்யாள் சற்று உஷ்ணமான குரலில், “என்னது? கல்யாணத்த நா நடத்தி வெக்கறதாவது…என்ன பேசற நீ..” என்று கடிந்து கொண்டார். அடுத்த சில வினாடிகளிலேயே சாந்தமாகி, “சரி..நா என்ன பண்ணனுமுன்னு எதிர்பார்கிறே?” என்றார்.

பாட்டி சந்தோஷத்தோடு, “ஒண்ணுமில்லை பெரியவா, இவ கல்யாணத்துக்காக அப்டி இப்டின்னு ஐயாயிரம் ரூபா சேர்த்து வெச்சுருக்கேன். அதுல கல்யாணத்த நடத்தி முடிச்சுடுவேன். ஆனா, அந்த புள்ளையாண்டானோட அம்மா, ‘பாட்டி. நீங்க என்ன பண்ணுவேளோ, ஏது பண்ணுவேளோ…ஒங்க பேத்தி கழுத்துலே எட்டு பவுன் ரட்ட (இரட்டை) வட சங்கிலி ஒண்ணு போட்டே ஆகணும்னு கண்டிஷனா சொல்லிபிட்டா. பவுன்லே நகை நட்டுன்னு என் …வருமானத்திலே இவளுக்கு பெரிசா ஏதும் பண்ணி வைக்க முடியலை. தலா ஒரு பவுன்ல இவ ரெண்டு கைக்கு  மாத்திரம் வளையல் பண்ணி வெச்சுருக்கேன்… அதான் என்னால முடிஞ்சது.  நா எட்டு பவுன் ரட்ட வட சங்கிலிக்கு எங்க போவேன் பெரியவா ! நீங்கதான்… என்று முடிப்பதற்குள் ஸ்வாமிகள் ‘ரெட்ட வட சங்கிலிய எட்டு பவுன்லே பண்ணி போடணும்னு சொல்லறியா சொல்லு !” என்று சற்று கோபத்துடனேயே கேட்டார்.

உடனே மீனாட்சி பாட்டி, ஸ்வாமிகளை நமஸ்காரம் பண்ணி எழுந்து, கன்னத்தில் போட்டுக் கொண்டு, அபச்சாரம் ‥…அபச்சாரம்‥பெரியவா. நா அப்படி சொல்ல வரலே. ஒங்கள தரிசனம் பண்றதுக்கு நித்யம் எத்தனையோ பணக்கார பெரிய மனுஷாள் லாம் வராளே .. அவா யார் கிட்டேயாவது  நீங்க கை காட்டி விட்டு இந்த எட்டு பவன் ரெட்ட வட சங்கிலிய பூர்த்தி  பண்ணி தரச் சொல்லக் கூடாதா? என்று ஏக்கத்தோடு கேட்டாள்.

தரிசனத்துக்காக வர பெரிய மனுஷா கிட்டே கை காட்டி விடறதாவது! அப்படியெல்லா‥கேக்கற வழக்கமில்லே. நீ வேணும்னா ஒன் சக்திக்கு தகுந்த மாதிரி, எட்டு பாத்து பவுன் கேக்காத எடமா பார்த்துக்கோ! அதான் நல்லது என்று சொல்லி எழுந்து விட்டார் ஸ்வாமிகள்.

உடனே மீனாட்சி பாட்டி பதற்றத்தோடு, பெரியவா அப்டி சொல்லிப்டு போகக் கூடாதுனு பிரார்த்திக்கிறேன். இப்ப பார்த்திருக்கறது ரொம்ப நல்ல எடம் பெரியவா. பையன் தங்கமான குணம். அவா ஆத்துலே ரெண்டு  பொண்களுக்கு கல்யாணம் பண்ணிக் கொடுக்கறச்சே எட்டெட்டு பவுன்ல ரட்ட வடச்சங்கிலி போட்டு தான் அனுப்பிச்சாளாம் ‥. அதனால வர்ற மாட்டுப்பொண்னு ‥ரட்ட வடத்தோட வரணுமுன்னு ஆசை․படறா… வேற ஒண்ணுமில்லை பெரியவா. நீங்கதான் இதுக்கு வழி காட்டணும்..! என்று கெஞ்சினாள்.

எழுந்து விட்ட ஆச்சார்யாள் மீண்டும் கீழே அமர்ந்தார்.  சற்று நேரம் யோசனையில் ஆழந்தார்.  பிறகு, கருணையோடு பேச ஆரம்பிதார்.  நா ஒரு கார்யம் சொல்றேன்… பண்றயா?

கண்டிப்பா பண்றேன். என்ன பண்ணனும்னு சொல்லுங்கோ என்று பரபரத்தாள்.

உடனே ஆச்சார்யாள், ‘‘ஓம் பேத்தியை அழச்சிண்டு அஞ்சு நாளைக்கு  காமாக்ஷி அம்மன் கோயிலுக்கு போ. ரெண்டு பேருமா சேர்ந்து, ‘எட்டு பவுன்ல ரட்ட வட சங்கிலி போட்டு கல்யாணம் ஜாம் ஜாம்னு நடக்கணும் ‥… நீதாண் அம்மா நடத்தி வைக்கணும்னு பிரார்த்திச்சுண்டு ரெண்டு பேருமா சந்நிதியை அஞ்சு பிரதட்சிணம் பண்ணுங்கோ.

அம்பாளுக்கு முன்னாடி அஞ்சு தடவை நமஸ்காரம் பண்ணிட்டு கிளம்புங்கோ.  இப்டிஅஞ்சு நாளக்கு பண்ணுங்கோ .. ஒன் மனசுலே நெனச்சிண்ருக்கற படியே காமாக்ஷி நடத்தி வெப்பா ! என்று சிரித்துக் கொண்டே அனுக்ரகித்தார்.

நமஸ்காரம் பண்ணி எழுந்த மீனாக்ஷி பாட்டி, “அதென்ன பெரியவா..எல்லாமே அஞ்சு அஞ்சா சொல்லறேளே! அப்படிப் பண்ணா பேத்தி காமாட்சிக்கு அம்பாள் காமாட்சி கல்யாணத்தை நடத்தி வெச்சுடுவா தானே! ” என்று ஆர்வத்தோடு கேட்டாள்.

உடனே மஹா ஸ்வாமிகள், ‘பஞ்சனு நானா சொல்லலை. அம்பாளுக்கு, ‘பஞ்சஸயோபசாரிணி’ னு ஒரு பெயர் உண்டு. அஞ்சஞ்சா பண்ணற உபச்சாரதுலே சந்தோஷப்பட்டு அனுக்ருஹம் பண்றவ அவ. அததான் சொன்னேனே தவிர, வேற ஒண்ணுமில்லை! ” என்று சிரித்துக் கொண்டே சொன்னார்.

‘இத நான் எப்ப ஆரம்பிக்கட்டும் பெரியவா?” என்று பிராத்தித்தாள் பாட்டி.

ஸ்வாமிகள் சிரித்துக் கொண்டே, “சுபஸ்ய சீக்ரஹனு சொல்லி இருக்கு.  இன்னிக்கு வெள்ளி கிழமை. ஏன், இன்னைக்கே ஆரம்பிச்சுடேன் !” என உத்தரவு கொடுத்தார். “சரி பெரியவா. அப்படியே பண்ணறேன்” என்று சொல்லி பேத்தியுடன் நகர்ந்தார். பெரியவா எழுந்து உள்ளே சென்று விட்டார்.

பேத்தியுடன் காமாக்ஷி அம்மன் கோயிலை நோக்கி நடந்தாள் பாட்டி. வெள்ளி கிழமை ஆதலால் கோயிலில் ஏகக் கூட்டம். அன்னை காமாக்ஷி அன்று விசேஷ அலங்காரத்தில் ஜொலித்தாள். இருவரும் கண்ணை மூடி பெரியவா சொன்னது போலவே பிராத்தித்துக் கொண்டனர். பேத்தியின் நக்ஷதரத்திற்கு ஒரு அர்ச்சனை செய்து பிரசாதம் வாங்கிக் கொண்டாள் பாட்டி.

பிறகு பேத்தியும் பாட்டியும் அம்மனிடம், ‘எட்டு பவன் ரெட்ட வட சங்கிலியை ப்ராத்தித்தபடி ஐந்து ப்ரதக்ஷினம் வந்தனர். பிறகு நம்பிக்கையுடன் வீடு திரும்பினர். சனிக் கிழமை காலையில் பேத்தியை அழைத்துக் கொண்டு வீட்டை விட்டு புறப்பட்ட மீனாக்ஷி பாட்டி, பாரிஜாத புஷ்பங்களை சேகரித்துக் கொண்டு சங்கர மேடம் நோக்கி விரைந்தாள். மடத்தில் ஏகக் கூட்டம். மீனாக்ஷி பாட்டி இருபது, முப்பது பக்தர்களுக்கு பின்னால் பேத்தியுடன் நின்று இருந்தாள். பாட்டிக்கு முன்னால் நின்று இருந்தவர் தனக்கு அருகில் இருந்தவரிடம் சொல்லி கொண்டிருந்த விஷயம்  பாட்டியின் காதில் விழுந்தது. அவர், “இன்னிக்கு அனுஷ நக்ஷத்திரம், பெரியவாளோட நக்ஷத்திரமாம். அதனால் ஸ்வாமிகள் இன்னிக்கு மௌன விரதம். யாரோடையும்  பேச மாட்டாராம்! முக தரிசனம் மட்டும் தான் என்று விசாரப்பட்டுக் கொண்டார்.

மீனாக்ஷி பாட்டிக்கு கவலை தொற்றிக் கொண்டது. ‘இன்னிக்கும் பெரியவாளைப் பார்த்து எட்டு பவுன் ரெட்ட வட சங்கிலியைப் பத்தி ஞாபகப்படுத்தலாம்னு நெனைச்சுண்டு இருந்தேனே. அது இப்போது முடியாது போல் இருக்கே? ” என்று கவலைப்பட்டாள். பெரியவா அமர்திருந்த இடத்தை நெருங்கிய இருவரும் ஸ்வாமிகளை நமஸ்கரித்து எழுந்தனர். எந்த ஒரு சலனமும் அன்றி அப்படியே அமர்ந்து இருந்தது அந்தப் பரப் ப்ரஹ்மம். ‘எட்டு பவுன் ரெட்ட வட சங்கிலியை’ குறித்து சட் என்று வாய் திறந்து ஏதும் சொல்லி விட மாட்டாரா என்று ஏங்கினாள் பாட்டி. மஹா ஸ்வாமிகளுக்கு பணி விடை செய்து கொண்டிருந்தவர் சற்று கடுமையாக, “பாட்டி, நகருங்கோ.. நகருங்கோ !  பெரியவா இன்னிக்கு மௌன விரதம். பேச மாட்டார். பின்னாலே எத்தனை பேர் காத்திண்டு இருக்கா பாருங்கோ” என்று விரட்டினார்.

காமாக்ஷி அம்மன் கோயிலை நோக்கி பேத்தியுடன் நடையக் கட்டினாள் பாட்டி. அன்றைக்கும் காமாக்ஷி அம்மன் சன்னதியில் பெரியவா கூறியபடி பஞ்சசங்கியுபசாரத்தை அர்ப்பணித்து வீடு திரும்பினர் இருவரும். அடுத்தடுத்து ஞாயிறு, திங்கள் இரு நாட்களும் மஹா ஸ்வாமிகள் மௌன விரதம் மேற் கொண்டார். இரு நாட்களும் மடத்துக்கு போய் பெரியவாளை தரிசனம் மட்டும் செய்து விட்டு திரும்பினர் பாட்டியும் பேத்தியும். பாட்டி ரொம்ப கவலைப் பட்டாள். ‘பெரியவா சொன்ன பிரகாரம் அஞ்சுல நாலு நாள் பூர்த்தி ஆயுடுத்தே.  ஒண்ணுமே நடக்கலியே…அம்மா காமாக்ஷி கண் திறந்து பார்ப்பாளா, மாட்டாளா?’ என்று தனக்கு தானே அங்கலாய்த்துக் கொண்டாள்.

செவ்வாய்க் கிழமை விடிந்தது. அன்று காஞ்சி ஸ்ரீ சங்கர மடம் மிகவும் கல கலப்பாக இருந்தது. ஆரணியில் இருந்து வந்திருந்த பஜனை கோஷ்டி ஒன்று மடத்தை பக்திப் பரவசத்தில் ஆழ்த்திக் கொண்டிருந்தது.

ஆச்சார்யாள் வழக்கமான இடத்தில் வந்து உட்கார்ந்தார். அன்றைய தினம் பெரியவா முகத்தில் அப்படி ஒரு மகா தேஜஸ்! இன்று மௌனம் கலைத்து விட்டார் ஸ்வாமிகள். பெரியவாளை தரிசிக்க ஏகக் கூட்டம். வரிசையில் வந்த ஒரு நடுத்தர வயது மாமி, முகத்தில் மகிழ்ச்சி பொங்க ஸ்வாமிகளுக்கு முன் வந்து நமஸ்கரித்து எழுந்தாள். அந்த அம்மா முகத்தில் அப்படி ஒரு குதூகலம். தான் கொண்டு வந்திருந்த பெரிய ரஸ்தாளி வாழை தார், மட்டை தேங்காய்கள், சாத்துக்குடி, ஆரஞ்சு, பூசணி, மொந்தன் வாழைக்காய் வகையறாக்களை ஆசாரியளுக்கு முன் சமர்ப்பித்து விட்டு, மீண்டும் ஒரு தடவை நமஸ்கரித்தாள்.

எதிரில் இருந்த பதார்த்தங்களை நோட்டம் விட்ட ஸ்வாமிகள் சிரித்துக் கொண்டார். பிறகு கண்களை இடுக்கி கொண்டு அந்த அம்மாவையே கூர்ந்து நோக்கியவர், “நீ நீடாமங்கலம் மிராசுதார் கணேச ஐயர்யோட ஆம்படையா (மனைவி) அம்புஜம் தானே? ரெண்டு மாசத்துக்கு முன்னாடி வந்திருந்தே…ஏதோ சொல்லி துக்க பட்டுண்டே. இப்போ சந்தோஷமா பெரிய வாழைத் தாரோட நீ வந்து இருக்கறதைப் பார்த்தா காமாக்ஷி கிருபையிலே அவை எல்லாம் நிவர்த்தி ஆயிருக்கும்னு படறது.  சரி தானே?” என்று கேட்டார்.

அம்புஜம் அம்மா மீண்டும் ஒரு முறை ஸ்வாமிகளை நமஸ்கரித்து விட்டு, “வாஸ்தவம் தான் பெரியவா. மூணு வருஷமா எங்க ஒரே பொண்ணு மைதிலியை அவ புக்காத்துலே தள்ளி வெச்சுருந்தா. ரெண்டு மாசத்துக்கு முன்னாடி ஒங்க கிட்டே வந்து இந்த அவலத்த சொல்லி அழுதேன். நீங்க தான் இந்த ஊர் காமாஷி அம்மன் கோயில்லே அஞ்சு நாளைக்கு, அஞ்சு ப்ரடக்க்ஷினம், அஞ்சு நமஸ்காரம் பண்ணி, அபிஷேக ஆராதனையும் பண்ண சொன்னேள்.

சிரத்தையா பூர்த்தி பண்ணி விட்டு போனேன். என்ன ஆச்சர்யம் பாருங்கோ…பதினஞ்சு நாளைக்கு முன்னாடி டாட்டா ஸ்டீல்லே வேலை பார்க்கற எம் மாப்பிள்ளை ராதா கிருஷ்ணனே திடிர்னு வந்து மைதிலிய அழைச்சுண்டு போய்ட்டார். எல்லாம் அந்த காமாஷி கிருபையும், ஒங்க அனுக்ரஹமும் தான் பெரியவா !” என்று ஆனந்தக் கண்ணீர் மல்கக் கூறினாள்.

உடனே பெரியவா, “பேஷ்.. பேஷ்…ரொம்ப சந்தோஷம். தம்பதி க்ஷேமமா இருக்கட்டும். ஆமா..இவ்வளவு பெரிய வாழை தாரா இருக்கே. எங்க புடிச்சே. பிரம்மாண்டமா இருக்கே?” என்று கேட்டு விட்டு இடி இடி என்று சிரித்தார். அம்புஜம் அம்மா சிரித்துக் கொண்டே, ” இது நம்ம சொந்த வாழைப் படுகைல வெளைஞ்சது பெரியவா! அதான் அது பெரிய தாரா இருக்கு !” என்று பவ்யமாக பதில் சொன்னாள்.

ஸ்வாமிகள் மகிழ்வோடு, “சரி…சரி. ஓம் பொண்ணு, மாப்பிள்ளையை திருப்பியும் அம்மா காமாக்ஷி தான் சேர்த்து வெச்சு இருக்கா. அதனாலே நீ இந்த பெரிய வாழை தார எடுத்துண்டு போய் அவளுக்கு அர்ப்பணம் பண்ணிட்டு அங்க வர பக்தாளுக்கு விநியோகம் பண்ணிடு!” என்று கட்டளை இட்டார்.

உடனே அம்புஜம் அம்மாள், “இல்லே பெரியவா..இது இந்த சந்நிதானத்துலேயே இருக்கட்டும். அம்பாளுக்கு அர்ப்பணிக்க இதே மாதிரி இன்னொரு வாழை தார் கொண்டு வந்திருக்கேன். பெரியவா..நா உத்தரவு வாங்கிண்டு அம்பாளை தரிசனம் பண்ணிட்டு, பிரார்த்தனையை பூர்த்தி பண்ணி விட்டு வந்துடறேன்” என்று நமஸ்கரித்தாள்.

“பேஷா! பிரார்த்தனையை முடிச்சுண்டு வந்து மத்யானம் நீ மடத்துலே சாப்டுட்டு தான் ஊருக்கு திரும்பணும்….ஞாபகம் வெச்சுக்கோ !” என்று உத்தரவு கொடுத்தார் ஸ்வாமிகள்.

அன்று காமாக்ஷி அம்மன் கோவிலில் அவ்வளவாக கூட்டம் இல்லை. காலை 11 மணி. வழக்கத்தை விட நேரம் ஆகி விட்டதால், பேத்தியுடன் கோவிலை நோக்கி வேகமாக நடையை கட்டினால் பாட்டி.  கோவில் வாசலில் தட்டு வியாபாரம் செய்கிற கடைக்கு முன் நின்ற பாட்டி, பேத்தியிடம், “அடியே காமாக்ஷி! இன்னிக்கு பூர்த்தி நாள்டி. அதனாலே எல்லாத்தையும் ஆச்சார்யாள் சொன்னபடி அஞ்சு அஞ்சா பண்ணிடுவோம். நீ என்ன பண்றே…அர்ச்சனைக்கு அஞ்சு தேங்கா, அஞ்சு ஜோடி வாழைப் பழம், வெத்தலை பாக்குன்னு எல்லாமே அஞ்சஞ்சா வாங்கிண்டு ஓடி வா பார்ப்போம் !” என்று காசைக் கொடுத்தாள்.

பாட்டி சொன்ன படியே வாங்கி வந்தால் பேத்தி. அம்பாளுக்கு அர்ச்சனை பண்ணி, கண்களில் நீர் மல்க பிராத்தித்துக் கொண்டாள் பாட்டி. ‘அம்மா காமாக்ஷி. ஒன்னதான்டியாம்மா பூரணமா நம்பிண்டு இருக்கேன். ஒன்னையும் ஸ்வாமிகளையும் விட்டா வேற கதி நேக்கு இல்லடி அம்மா. நீ தான் எப்படி ஆவது அந்த எட்டு பவுன் ரெட்ட வட சங்கிலியை ஏற்பாடு பண்ணி தந்து பேத்தி கல்யாணத்தை நல்ல படியா முடிச்சு வெக்கணும்…” பாட்டி விசும்ப, பேத்தியும் விசும்பினாள். பாட்டி முன் செல்ல, பேத்தி பின் தொடர இருவரும் பிரகார வலத்தை ஆரம்பித்தனர். நான்காவது ப்ரதக்ஷினம். வடக்கு பிரகாரத்தில் வலம் வந்து கொண்டிருந்தனர் இருவரும்.

“பாட்டி…பாட்டி…பாட்டி…!” பேத்தியின் உயர்ந்த குரலை கேட்டு திரும்பிப் பார்த்த பாட்டி, ஆத்திரத்தோடு, “ஏன் இப்படி கத்தறே! என்ன பறி போய்டுத்து நோக்கு?” என்று கடு கடுத்தாள்.

“ஒண்ணும் பறி போகலை பாட்டி. கெடைச்சிருக்கு! இங்கே ஓரமா வாயேன். காட்டறேன் !” என்று சொல்லி பாட்டியை ஓரமாக அழைத்துப் போய் தன வலக் கையை திறந்து காண்பித்தாள் பேத்தி. அதில் முகப்புடன் கூடிய அறுந்த இரட்டை வட பவுன் சங்கிலி ! “ஏதுடி இது ?” – பாட்டி ஆச்சர்யத்தோடு கேட்டாள். பேத்தி, “நோக்கு பின்னாலே குனிஞ்சுண்டே வந்துண்டு இருந்தேனா…அப்போ ஓரமா கிடந்த இந்த சங்கிலி கண்ணுலே பட்டுது… அப்படியே லபக்குனு எடுத்துண்டுட்டேன். ஒருத்தரும் பார்க்கலே! இது அறுந்து இருக்கே பாட்டி..பவுனா…முலாம் பூசினதானு பாரேன் !” என்றாள்.

அதை கையில் வாங்கி தோராயமாக அனுமானித்த பாட்டி, “பவுனாதான் இருக்கணும்னு தோண்றதுடி காமாக்ஷி ! எட்டு…எட்டரை பவுன் இருக்கும்னு நினைக்கிறேன். இது பெரியவா கிருபையிலே காமாட்சியே நமக்கு அனுக்கிரகம் பண்ணி இருக்கா. சரி..சரி..வா. வெளியிலே போகலாம் முதல்லே!” என்று சொல்லியபடியே அதை தன் புடவை தலைப்பு நுனியில் முடிந்து கொண்டு, வேக வேகமாக வெளியே வந்து விட்டாள். அன்று ப்ரதக்ஷினத்தில்  ‘பஞ்சசங்கியுபசாரத்தை’  (5 முறை வலம் வருவதை) மறந்து விட்டாள். மதியம் 1  மணி. ஆச்சார்யாளை தரிசிக்க மடத்தில் நான்கோ அல்லது ஐந்து பேரோ  காத்திருந்தனர்.

பேத்தியுடம் வந்த மீனாக்ஷி பாட்டி ஸ்வாமிகளை நமஸ்கரித்து எழுந்தாள். பாட்டியை பார்த்த ஸ்வாமிகள் சிரித்தார். ஸ்வாமிகளிடம் பவுன் சங்கிலி கண்டெடுத்த விஷயத்தை சொல்லலாமா…வேண்டாமா என்று குழம்பினாள்.

அதற்குள் ஸ்வாமிகளே முந்திக் கொண்டு, “இன்னியோட நோக்கு காமாக்ஷி அம்மன் கோயிலே பஞ்சசங்கியுபசார பிரதக்ஷினம் கிரமமா பூர்த்தி ஆகி இருக்கணும். ஆனா ஒன் பேத்தி கையிலே கெடைச்ச ஒரு வஸ்துவாலே அது பூர்த்தி ஆகாம போய்டுத்து ! அந்த சந்தோஷம்…நாலு ப்ரதக்ஷினதுக்கு மேலே ஒன்ன பண்ண விடலை. காமாக்ஷி பூரணமா அனுக்கிரகம் பண்ணிப்டதா நெனைச்சுண்டு வேகமா வந்துட்டே. என்ன, நா சொல்லறது சரி தானே ?” என எதார்த்தமாக கேட்டார்.

பாட்டிக்கு தூக்கி வாரி போட்டது. மென்று விழுங்கினாள். கை கால் ஓட வில்லை. “ஸ்வாமிகள் என்னை தப்பா எடுத்துடுண்டுடப்படாது. பேத்தி கையிலே அது கெடைச்ச ஒடனே, அம்பாளே அப் பிரகாரத்துலே போட்டு பேத்திய எடுத்துக்க சொல்லி இருக்கானு நெனைசுண்டுட் டேன். அந்த சந்தோஷத்திலே இன்னொரு ப்ரதக்ஷினம் பண்றதையும் மறந்துட்டேன்” என்று தயங்கி தயங்கி சொன்னாள்.

உடனே பெரியவா, “அத மட்டும் மறந்துட்டியே ஒழிய, அந்த வஸ்துவ எடுத்துண்டு போய் காசுக் கடை ராசு பத்தர் கிட்டே எடை போடறதுக்கோ..அறுந்ததை பத்த வக்கறதுக்கோ மறக்கலியே நீ ?” என்று சற்று கடுமையாகவே கேட்டு விட்டு, “அது போகட்டும்…எடை போட்டியே…சரியா எட்டு இருந்ததோலியோ ?” என முத்தாய்ப்பு வைத்தார்.

கிடு கிடுத்து போய் விட்டனர் பாட்டியும் பேத்தியும் ! நீங்க சொன்னதெல்லாம் சத்தியம் பெரியவா!” என்றாள் பாட்டி.

ஸ்வாமிகள் அமைதியாகக் கேட்டார். “நியாயமா சொல்லு. அந்த பதார்த்தம் யாருக்கு சொந்தம் ?”

“அம்பாள் காமாக்ஷிக்கு.”

“நீயே சொல்லு…அத ரகசியமா எடுத்து ஒன் பொடவ தலபுலே முடிஞ்சுக்கலாமா ?” “தப்பு தான் தப்பு தான்! என்னை மன்னிக்கணும். தெரியாம அப்படி பண்ணிட்டேன்” என்று மிகவும் வருத்தப் பட்ட பாட்டி, அந்த ரெட்ட வட சங்கிலியை எடுத்து, கை நடுங்க ஸ்வாமிகளுக்கு முன்பு இருந்த பித்தளை தாம்பாளத்தில் வைத்தாள். சிரித்தார் ஸ்வாமிகள். இப்போது மணி 2 . மீனாக்ஷி பாட்டியையும், பேத்தியையும் எதிரில் அமரச் சொன்னார் ஸ்வாமிகள். அப்போது காலையில் புறப்பட்டுச் சென்ற நீடாமங்கலம் கணேச ஐயரின் தர்ம பத்தினி அம்புஜம் அம்மாள், சோகமே உருவாக திரும்பி வந்து ஆசாரியாளை நமஸ்கரித்து எழுந்தாள். பொல பொலவென்று கண்களில் நீர் வழிந்தது. இதைப் பார்த்த ஸ்வாமிகள், “அடடா.. எதுக்கம்மா கண் கலங்கறே ? என்ன நடந்தது ?” என்று வாத்சல்யத்துடன் வினவினார். உடனே அம்புஜம் அம்மாள் கண்களை துடைத்துக் கொண்டே, “வேற ஒண்ணுமில்லை பெரியவா. ரெண்டு மாசத்துக்கு முன்னாடி ஒங்க உத்தரவுப் படி காமாக்ஷி அம்மன் கோவில்லே அஞ்சு நாள் சேவை பண்றச்சே, ‘பிரிஞ்சு இருக்கிற எம் பொண்ணையும் மாப்பிள்ளையையும் ஒண்ணா சேர்த்து வெச்சியானா, என் கழுத்திலே போட்டுண்டு இருக்கிற எட்டு பவுன் ரெட்ட வட சங்கிலியை நோக்கு அர்ப்பணம் பண்றேன்னு” அம்பாள் கிட்டே மனப் பூர்வமா ப்ரார்த்திச்சுண்டேன்.

தம்பதிய ஒண்ணா சேர்த்து வெச்சுட்டா அம்பாள்கிட்டே வேண்டிண்டபடி அந்த ரெட்ட வடத்த சேர்த்துடலோமுனு கார்த்தால கோயிலுக்கு போனேன். அந்த செயின் கழுத்துலே இருந்து நழுவி எங்கேயோ விழுந்துடுத்து. போன இடத்தில் எல்லாம் தேடித் பார்த்துட்டேன். ஒரு எடத்திலேயும் கிடைகல்லே…இப்ப என்ன பண்ணுவேன் பெரியவா !” என்று புலம்ப ஆரம்பித்து விட்டாள். ஸ்வாமிகள், மீனாக்ஷி பாட்டியின் பக்கம் தன் பார்வையை திருப்பி, அர்த்த புஷ்டியுடன் பார்த்தார். ஸ்வாமிகளை அப்படியே நமஸ்கரித்து விட்டு, விருட்டென்று எழுந்தாள் பாட்டி.

பெரியவாளுக்கு முன் பித்தளை தாம்பாளத்தில் இருந்த ரெட்ட வட பவுன் சங்கிலியை கையில் எடுத்தாள். மகிழ்ச்சியுடன், “அம்மா அம்புஜம்…நீ தவற விட்ட ரெட்ட வடம் இதுவா பாரு ?” என்று காண்பித்தாள். அதைக் கையில் வாங்கிப் பார்த்த அம்புஜம் அம்மாள், “இதே தான்…இதே தான்…பாட்டி, இது எப்படி இங்கே வந்தது ? ஆச்சர்யமா இருக்கே !” என்று வியந்தாள். நடந்த விஷயங்கள் அனைத்தையும் ஒரே மூச்சில் சொல்லி முடித்தாள் பாட்டி.

மீனாக்ஷி பாட்டியை கட்டி அணைத்துக் கொண்ட அம்புஜம் அம்மாள், “பாட்டி, நீங்க கவலையே படாதீங்கோ. ஆச்சர்யாளுக்கு முன்னாடி ஒங்க கிட்டே இத தெரிவிச்சுக்கறேன். எட்டு பவுன்லே ஒங்க பேத்திக்கு புதுசா ரெட்ட வட சங்கிலி போட்டுக் கல்யாணம் ஜாம் ஜாம்னு நடக்கும். நா கழுத்திலே போட்டுண்டு இருந்த இந்த ரெட்ட வடத்த தான் அம்பாளுக்கு அர்ப்பணிக்கறதா வேண்டிண்டு இருக்கேன். இன்னிக்கு சாயந்திரமே ஒங்களையும், பேத்தி காமாக்ஷியையும் இந்த ஊர் நகைக் கடைக்கு அழைச்சுண்டு போய், எட்டு பவுன் ரெட்ட வட சங்கிலி ஒண்ணு வாங்கி தரேன். அதோட கல்யாண செலவுக்காக ஐயாயிரம் ரூபாயும் தரேன்” என்று ஆறுதல் அளிந்தாள்.

ஸ்வாமிகள் இந்த காட்சியை ப்ரத்யக்ஷ காமாக்ஷியாக அமர்ந்து பார்த்துக் கொண்டிருந்தார். அனனவரும் ஆச்சார்யாளை நமஸ்கரித்து எழுந்தனர். ஆச்சார்யாள், மீனாக்ஷி பாட்டியைப் பார்த்து, “இன்னிக்கு நீயும் ஒன்  பேத்தியும் கோயிலிலே அஞ்சு பிரதக்ஷினம் பண்ணலே ! சாயந்திரமா போய் அஞ்சு ப்ரதக்ஷினம், அஞ்சு நமஸ்காரம் பண்ணி அம்பாளை பார்த்துட்டு வாங்கோ !” என்று விடை கொடுத்தார். மீனாக்ஷி பாட்டியும் அவள் பேத்தியும் அப்போது அடைந்த சந்தோஷத்தையும் சிலிர்ப்பையும் வார்த்தைகளில் சொல்லி விட முடியாது.

__________________________________________________________________________________

Retta vadathula ettu pavun sangili podanumaa?

Maha Periyavar – S Ramani Anna


Many years ago, it was raining one early morning. Maha Periyavar was sitting alone in Kanchi Sri Sankara Matam. After giving darshan to bakthas, Swamigal got up to go to his quarters. At that time an elderly woman came running, accompanied by a young girl and did namaskaram to Periyavar.

Swamigal looked at the visitors and then sat down. With happiness, Swamigal asked “Is it Meenakshi Paati (Paati means elderly woman in Tamizh)? How come you have come early in the morning? Who is accompanying you? Is it your granddaughter? What is her name?”

Meenakshi Paati said “Periyavaa, I have been coming to Sri Matam for many years to have your darshan. Till now I did not get an opportunity to talk to you about myself. But such a need has come now. I have only one daughter. This girl is my granddaughter. Since she was born in this town she was named Kamakshi. My daughter passed away twelve years ago. Even before that my son-in-law died of heart attack. Hence I Have been struggling to bring her up. I enrolled her in a school but she was poor in studies. Hence she has left school after fifth class. Now she is fifteen years old. If I can get her married off, my responsibility will be over.”

Periyavar patiently listened to her and then asked “You daily bring flowers at 10.30 AM for Chandramouliswara Pooja. Since you have come early this morning, I have understood that you come with a purpose. What is the matter?”

Hesitantly Meenakshi Paati said “Periyavaa, I have received a marriage proposal. The groom is a school teacher in this town. He earns a good salary of Rs 60 per month. He is from a good family and the horoscopes are matching well. I pray to Periyavaa to arrange to conduct this marriage.”

Slightly annoyed Periyavar asked “What are you saying? You want me to conduct the marriage?” In a few seconds Periyavar calmed down and asked “What do you expect me to do?”

With relief Paati said “Periyavaa, I have saved Rs 5,000 for her marriage and I can conduct the marriage within this amount. But groom’s mother is demanding that I should gift the bride one ettu pavun rettai vada gold chain. With my meagre income I have managed to buy only 2 gold bangles for her. How will I get ettu pavun gold chain?”

Before she could complete, Periyavar asked with anger “Are you asking me to get eight pavun gold chain for your granddaughter?”

Immediately Meenakshi Paati prostrated in front of Periyavar and said “Abachaaram, I am not asking Periyavaa to buy a gold chain. Many rich devotees come for your darshan every day. I only request you to ask one of those devotees to help me.”

Periyavar said “I don’t ask devotees for such financial help. I suggest that you look for an alliance within your means. That will be good for you.” Swamigal got up.

With anxiety Meenakshi Paati said “I pray that Periyavaa should not say so. This alliance is a good one. The groom is an excellent boy. They had purchased ettu pavun gold chain for the marriage of two daughters in their family. Hence the groom’s mother wants the same for the bride. Periyavaa should show me a way.”

Periyavar sat down thoughtfully. He started speaking with compassion “Will you do as I tell you?”

Paati anxiously said “I will definitely do what you advise.”

Periyavar said “Go to Kamakshi temple with your granddaughter for five days. Both of you should pray to Goddess that she should help you to buy one ettu pavun gold chain and bless you to organize the marriage in a grand manner. Then do five pradhakshinams and five namaskarams. If you pray like this for five days Kamakshi will fulfill your desire.” Periyavar blessed her with a smile.

Meenakshi Paati did namaskaram to Periyavar and eagerly asked “Periyavaa, you are asking me to do everything five times. If I do all this will Ambaal Kamakshi arrange for wedding of my granddaughter Kamakshi?

With a smile, Maha Swamigal said “I am not saying five times. Panchasa upasaarini is another name of Ambaal. She gets pleased by offerings made in multiples of five and blesses devotees. Hence I suggested so.”

Paati asked “When do I start this prayer?”

Swamigal smiled and said “Scriptures say – Subasya seekraha – Since today is Friday, please start today.” Paati agreed and left with her granddaughter and Periyavar went inside Sri Matam.

Paati went to Kamakshi Amman temple with her granddaughter. Being a Friday the temple was very crowded. Goddess was shining in a special alankaaram. Paati did an Archana for her granddaughter and then both of them prayed as advised by Periyavar. After doing five pradhakshinams both of them went home with hope. On Saturday Meenakshi paati collected paarijaatha flowers and went to Sri Matam with her granddaughter. Sri Matam was crowded and about 30 devotees were waiting ahead of Paati for darshan. Paati overheard someone saying “Today is Anusha nakshatram – Periyavar’s star. So Periyavar is observing mouna viradham. He will not speak to anyone and we can only get his visual darshan.”

Hearing this Paati was worried. She was hoping to remind Periyavar about rettta vadam gold chain but it appeared that it would not be possible. When she did namaskaram to Periyavar he remained silent. Employees of Sri Matam told Paati to move as several devotees were waiting behind her for darshan.

Paati went with her granddaughter to Kamakshi temple and did Pancha sankhiya upachaaram and then went home. Periyavar continued his mouna viradham on Sunday and Monday also. On these days also Paati went to Sri Matam and did namaskaram to Periyavar. She was lamenting to herself “I have done Pooja for four days as instructed by Periyavaa. But there is no development. Will Kamakshi bless me or not?”

Tuesday came. Kanchi Sankara Matam was very lively. A Bhajan group from Aarani was enchanting all visitors with their bhajans. Periyavar came and sat in his regular place. On that day Periyavar’s face showed Maha Tejas and Periyavar had broken his mouna viradham. A large crowd was waiting for Periyavar’s darshan. One middle aged lady came to do namaskaram to Periyavar with lot of happiness in her face. She offered a large bunch of rasthali banana, coconuts, orange, mondhan banana, pumpkin etc. and did namaskaram to Swamigal.

Periyavar looked at the offerings and the lady and asked “Are you Ambujam, wife of Needamangalam Ganesa Iyer? You came two months ago with some worries. Now that you look happy, have all your problems been solved by blessings of Kamakshi?”

Ambujam did namaskaram to Periyavar again and with tears in her eyes said “Yes Periyavaa. My daughter Mythili was separated from her husband for three years due to some misunderstanding. I came and cried to you two months ago. You advised me to do Pooja, pradhakshinam with five namaskaram for five days to Kamakshi. I performed these with sincerity. Fifteen days ago my son-in-law Radhakrishnan, who works for TATA Steel, came and took Mythili to live with her.”

Periyavar said “Good, I am happy. Let the couple live happily. You have brought such a large bunch of bananas. Where did you get such a large bunch?” Saying so Periyavaa laughed out loud. Ambujam smilingly said “This banana was grown in our estate and hence it is large.”

Periyavaa said “Kamakshi has united your daughter and son-in-law. So you take this bunch and offer it to her and then distribute to devotees who come to the temple.” Ambujam Ammal said “No Periyavaa. I have brought another large bunch of bananas for the temple. So I want to leave this bunch in Sri Matam. With your permission I will proceed to Kamakshi temple to complete my prarthana.”

Periyavaa said “Go to temple to complete your prarthana but come back to Sri Matam, have lunch and then proceed to your home.”

On that day there was not much crowd in Kamakshi Amman temple. Since it was already 11 AM, Meenakshi Paati rushed to the temple along with her granddaughter. Meenakshi Paati told her granddaughter that today is the last day of prarthana as advised by Periyavaa and asked her to buy five sets of vethilai, coconut, banana etc. They did archanai to Ambaal and Paati received prasadam with tears in her eyes. Paati said “Oh mother Kamakshi, I am depending only on you. There is no other support to me other than you and Periyavaa. I pray to you to somehow arrange for a rettai vadam gold chain and organize the wedding of my granddaughter in a good manner.” Both of them were crying. They started pradhakshinam of the temple. When they were in the north prakaram doing the fourth pradhakshinam, Kamakshi called out “Paati, Paati.” With annoyance Meenakshi Paati asked “Why are you shouting? Have you lost anything?”

Kamakshi said “Paati, I have not lost anything. I found something and I want to show it to you” and opened her hand. She had a rettai vadam gold chain in her hand. Paati was surprised and asked “Where did you get this?” Kamakshi said “I was walking right behind you. I saw this chain lying in a corner and I picked it up. No one saw it. Since it is broken is it likely to be made of Gold or just Gold plated?”

Meenakshi Paati took the chain in her hand, examined it and said “It looks like Gold only. It may weigh about eight pavun. With blessings of Periyavaa, Goddess Kamakshi has blessed us with this. Let us go out.” With the chain she came out of the temple forgetting to do 5th pradhakshinam. It was around 1 PM and few people were waiting to have darshan of Periyavar.

When Meenakshi Paati and Kamakshi did namaskaram to Periyavar he smiled. Paati was wondering if she should tell Periyavar about the chain that she found. Before she could decide, Periyavar said “Today is the fifth day of your prayer. But because of something found by your granddaughter you could not complete five pradhakshinams. In your happiness you did four pradhakshinams only. Assuming that Kamakshi has blessed you, both of you came back in a hurry. Am I correct?”

Paati was stunned and she could not say anything. Hesitantly she said “Periyavaa should not mistake me. When my granddaughter found the chain, I thought that Goddess Kamakshi had placed it in the prakaram and asked my granddaughter to take it. In my happiness I forgot to complete the fifth pradhakshinam.”

Little firmly Periyavar said “While you forgot to do fifth pradhakshinam, you did not forget to go to a goldsmith to weigh the chain and fix it where it was broken. Tell me, did it weigh eight pavun?”

Both grandmother and granddaughter were shaken. Paati said “Whatever Periyavaa said is the truth.”

Calmly Periyavaa asked “Tell me honestly, to whom does this chain belong?”

“To Ambaal Kamakshi.”

“Tell me, is it right to take it and hide it in your sari?

With lot of regret Paati said “It is a mistake. Periyavaa should forgive me. I did it out of ignorance.” She placed the gold chain in the plate in front of Periyavar, who smiled. He asked them to sit in his presence. It was about 2 PM.

Ambujam Ammal, wife of Needamangalam Ganesa Iyer, came and did namaskaram to Periyavaa crying. With concern Swamigal asked “What happened? Why are you crying?”

She said “Two months ago when I did five day seva in Kamakshi Amman temple I prayed to Goddess that if she united my daughter with her husband, I will offer my ettu pavun gold chain to temple. Now that Ambaal has fulfilled my prayer, I went to the temple to offer my gold chain. But the chain has fallen on the way and I am not able to find it anywhere. What can I do?”

Periyavar just looked at Meenakshi Paati. She got up, did namaskaram to Periyavar, picked up the gold chain which she had placed in front of Periyavar and asked Ambujam “Is this the gold chain that you are searching for?”

Ambujam Ammal examined it and said with surprise “Paati, this is my chain. How did it come here?” Meenakshi Paati explained everything that had happened.

Ambujam Ammal embraced Meenakshi Paati and said “Paati, don’t worry. In the presence of Periyavaa I am giving this commitment. I have to offer this gold chain to Goddess, but this evening I will take you and your granddaughter to a jeweler’s shop and I will buy one ettu pavun rettai vadam chain for Kamakshi. I will also give you Rs 5,000 to conduct the wedding.”

Swamigal was observing this incident like living Goddess Kamakshi. Everyone did namaskaram to Periyavar. He told Meenakshi Paati “Today you and your granddaughter did not complete the fifth pradhakshinam in Kamakshi temple. In the evening please do five pradhakshinams, five namaskarams and have darshan of Kamakshi.” No words can describe the happiness and excitement felt by Meenakshi Paati and Kamakshi.



Categories: Devotee Experiences

Tags:

6 replies

  1. He is Mahaperiayavaa who reads everything in one’s mind and guides so that dharma on any account is established.
    Jaya Jaya Sankara

  2. http://wp.me/p82sv0-6E Neem Karoli Baba : Miracle Monk who knew everything

  3. Mahaperiavaa is karunamoorthy. Sakshat Parameswaran. Hara Hara Shankara Jaya Jaya Shankara.

  4. Jaya Jaya Sankara Hara Hara Sankara. It is by the grace of Sri Maha Periyava Good things have happened in two families, They are really blessed..Seek the blessings of Sri Maha Periyava. Janakiraman. Nagapattinam.

  5. By the Grace of Sri Maha Periavaa I had read this earlier also and told the incidence to my wife and other relatives. His Compassion and Grace to all make one to prostrate before Him as Goddess Kamakshi in human form. Tears trickle down my cheeks every time I read this. Hara Hara Sankara, Jaya Jaya Sankara.

  6. No words to say. Tears roll down

Leave a Reply

%d bloggers like this: