Sri Mahaswami Shatpadhi by Saanu Puthiran

We know Sri Suresh as a very structured Tamil poet and we have seen several of his poems here in the blog. However, I did not know his strength in Sanskrit. He has done a great job there as well in this shatpadhi. Although I am the least qualified person to comment on Sanskrit, it reads/sounds very nice. Great job Suresh. Keep writing and keep sharing!

Thanks to Smt Geetha Kalyan for rendering this very nicely in the audio.

Periyava Charanam.

2016-06-16-PHOTO-00000065

 

பெரியவா சரணம்

Lyric: Saanu Puthiran
Voice: Geetha Kalyan

எல்லாம் வல்ல பரம்பொருளாகிய மஹாப்ரபு, காஞ்சிப் பொக்கிஷம், கலியுகத் தெய்வம் ஸ்ரீமஹாஸ்வாமிகளுடைய கருணையாலே அடியேனுடைய ஆழ்மனதிலே பிறப்பெடுத்த இந்த ஸ்ரீ மஹாஸ்வாமி ஷட்பதி3 ஸ்லோகத்தை, அனுஷத் திருநாளான இன்றைய பொழுதிலே உங்கள் அனைவருக்குமாக பகிர்வதில் மஹா ஆனந்தம் அடைகின்றேன்.

“ஆத்மா ஒன்று தான்; அது பல பிறப்பினை எடுப்பது விதிப்பயனாலே “என்பது சத்தியம்.

அவ்வண்ணமாக, ப்ரார்த்தனை ஒன்று தான்; பற்பல மஹான்களுடைய க்ருதிகளாலேயும், அனுக்ரஹத்தாலேயும், குருவருளாலேயும் ஒரு ஸ்லோகமாக இங்கே பிறப்பெடுத்துள்ளது என்பதாகவே கருதுகிறேன். அதுவே சத்தியமும் கூட!

எந்த ஒரு பாடலானாலும் சரி; கானமானாலும் சரி; இது பொருந்தும்! சரி தானே?

அப்படியாக இந்த் ஸ்லோகத்தை எழுத அருளிய அனைத்து மஹான்களுக்கும் நமஸ்காரம் செய்து, அனுஷ தினமான இன்று ஸ்ரீசரணாளின் கமலபாதங்களை த்யானித்துப் போற்றி சமர்ப்பிக்கின்றேன்.

எல்லோருக்கும் இருக்கும்படியான தர்மமான பிரார்த்தனைகள் அனைத்தையும் இந்த ஸ்துதி பலன் கிட்டச் செய்ய அனுக்ரஹம் செய்யவேண்டி ஸ்ரீஸ்ரீஸ்ரீ காஞ்சி காமகோடி பீடத்தின் குருமஹாரத்திணங்கள் அனைவரையும் ப்ரார்த்திக்கின்றேன்.

ஸ்ரீ குருப்யோ நம:

ஸ்ரீமஹாஸ்வாமி ஷட்பதி3 ஸ்லோகம்
– சாணு புத்திரன் –

ஓம்….!

கீ3தா வாக்ய ப்ரசாராய
கமலபாத3 ஸ்வரூபிணே
ஸந்யாஸாஶ்ரம ஶிகராய
ஶங்கராச்சார்ய தே நம: (1)

(கீதை வாக்கியத்தின் சாரத்தை அனைவருக்கும் எடுத்துரைத்து ப்ரசாரம் பண்ணியவரும், தாமரை போன்ற திருவடியை உடைய விஷ்ணு ஸ்வரூபியும், ஸந்யாஸாச்ரமத்தின் தர்மங்களை அனுஷ்டிப்பவர்களில் சிகரமாக, உச்சித்திலகமாக திகழ்பவருமான ஹே! சங்கராசார்ய ஸ்வாமின், உமக்கு நமஸ்காரம்! )

ஶிவ:ஶக்தயாதி3 தே3வாய
ஸமஸ்த ஜீவ நிவாஸினே
ஸர்வ பாபஹரம் வந்தே
ஸர்வக்ஞாய நமோஸ்து தே. (2)

(சிவனும் சக்தியும் இணைந்த ஆதி தேவனும், அனைத்து உயிரினங்களிலும் வாசம் செய்பவரும், ஜனசமூஹத்தின் அனைத்து பாபங்களையும் போக்கடிக்கக்கூடிய, எல்லாமுணர்ந்த ஸர்வக்ஞருக்கு நமஸ்காரம்! )

ஸர்வலோக ஶரண்யாய
சஞ்சலக்ளேஶ நாஶினே
அனுராதா3 ஸுஜாதாய
ஸ்வாமிநாதா4ய தே நம: (3)

(உலகத்தோர் அனைவருக்கும் தஞ்சம் அருள்பவரும், அனைவரது மனங்களிலும் உள்ள சஞ்சலங்களையும் துயரங்களையும் அகற்றுபவரும், அனுராதா நக்ஷத்தரத்தில் உதித்தவருமான ஸ்வாமிநாதனுக்கு நமஸ்காரம்! )

ப4க்த ஜனா: ஸுபூஜிதாய
ஸ்வத3ர்ம பாலனாய ச
ஸர்வ த3ர்ம போஷகாய
ஶசி ஶேகர நமோஸ்து தே. (4)

(பக்த ஜனங்களால் நன்கு பூஜிக்கப்படுபவரும், தனது ஆச்ரமத்துக்குண்டான தர்மங்களை நன்கு அனுஷ்டிப்பதுடன் அனைத்து தர்மங்களையும் போஷித்தவருமான, சசிசேகரனுக்கு நமஸ்காரம்! )

ப்ரார்த்தனா மாத்ர ஸுலபா3ய
ஶரணாகத வத்ஸலா
ஸர்வஜீவ மோக்ஷதா3ய
ஶங்கராய தே நம: (5)

(பக்தர்களின் ப்ரார்த்தனைகளுக்கே ஸுலபமாக அகப்படுபவரும், தஞ்சமென்று அண்டினோர்க்கு கருணை பொழிபவரும், அனைத்து ஜீவராசிகளுக்கும் மோக்ஷத்தை அருள்பவருமான ஶ்ரீசங்கரருக்கு நமஸ்காரம்.! )

நம: காமாக்ஷி ரூபாய
நம: ஶம்பு4: ஸ்வரூபிணே
நம: காஞ்சீ நிவாஸாய
நமஸ்தே கு3ருமூர்த்தயே! (6)

(காமாக்ஷிரூபருக்கு நமஸ்காரம்! சம்பு ஸ்வரூபிக்கு நமஸ்காரம்! காஞ்சியில் வஸிப்பவருக்கு நமஸ்காரம்! குருமூர்த்திக்கு நமஸ்காரம்! )

பெரியவா சரணம் ! பெரியவா சரணம் ! ஸ்ரீ மஹாபெரியவா அபயம்!

– சுபமஸ்து –

இந்த ஸ்லோகத்தில் 3, 4 என்ற இலக்கங்கள் அதற்கு முந்தைய எழுத்தின் ச்அமஸ்க்ருத ஸ்வரத்தினைக் குறிப்பதாகும்.



Categories: Bookshelf

7 replies

  1. I am blessed to read this Spokane.

  2. Hara Hara Shankara !!! Jaya Jaya Shankara!!!

  3. Dhanyosmi ! Anugraheethosmi! SRI GURUBHYO NAMAHA!

  4. Jaya Jaya Sankara Hara Hara Sankara. Janakiraman. Nagapattinam. Pahi Pahi Sri Maha Prabho.

  5. பெரியவா சரணம். அவர் அருளால் அவர் தாள் வணங்குகிறோம்!

  6. Shatpathi Stotram on Maha Periyava, simple yet deeply devotional, easy to memorise and chant daily to seek Their Blessings (Sri Sankara Guru Parampara) in an abundant measure.Guruve Saranam, Thrimurthy Saranam. Hari Aum.

  7. arumai .. maha periyava saranam.

Leave a Reply

%d bloggers like this: