Sri Periyava Mahimai Newsletter – Feb 1 2008

album2_88

Jaya Jaya Sankara Hara Hara Sankara – Newsletter from Sri Pradosha Mama Gruham. Periyava’s magic in the first and lessons in second incident where one should not buy ‘Silk clothes’ (also dark brown sarees as koorai pudavai) has been beautifully illustrated through this incident.

Anantha Jaya Jaya Sankara to our sathsang seva volunteer for the Tamizh typing and translation. Ram Ram

வாயினால் உன்னைப் பரவிடும் அடியேன் படுதுயர் களைவாய் பாசுபதா பரஞ்சுடரே!

ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ பெரியவாளின் மகிமை (01-02-2008)


“அருமருந்து”

பிரம்மஞானியாம் சுகமுனிவரின் தவசீலத்தோடு நம்மிடையே அருளும் ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ மஹா பெரியவா அந்த சாட்சாத் பரமேஸ்வரரின் திரு அவதாரமே என்ற மேருண்மை பல பக்தர்களின் அனுபவ பாக்யமாகின்றது.

ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ மஹாபெரிவாளின் அருகாமையை பல வருட காலங்கள் அனுபவித்த பாக்யசாலியும், சர்வேஸ்வரருக்கு கைங்கர்யம் செய்யும் பேரருள் கிட்டியவருமான ஸ்ரீ பாலு மாமா அவர்களின் அனுபவங்கள் மெய்சிலிர்க்கச் செய்கின்றன.

ஸ்ரீ பெரியவாளெனும் வைத்தியநாதரிடம் உடல் நிலை சரியில்லாததை முறையிட்டு வரும் பக்தர்கள் ஏராளம், ஸ்ரீ மகானிடம் திரு செவியில் விழவேண்டுமென்று நினைத்த க்ஷணத்திலேயே அவர்களின் உபாதையோ அல்லது உறவினர்களின் மோசமான நிலையோ பரிபூர்ண குணமடைந்துவிடுமென்பது திண்ணமே.

அப்படி ஒரு பக்தர் தன் உறவினர் ஒருவர் சிலநாட்களாக “கோமா” எனும் மிக தீவிர பாதிப்பிற்கு உள்ளாகி, எல்லா மருத்துவர்களும் கைவிரித்துவிட்ட நிலையில் இந்த மாபெரும் தெய்வத்திடம் சரணாகதமிட்டு அழுது நிற்கிறார். தானே ஈஸ்வரர் என்று ஒரு போதும் வெளிகாட்டிக் கொள்ளாத அவதார ரகசியத்தை காப்பாற்றும் புனிதராய் ஸ்ரீ பெரியவா அந்த பக்தரிடம் தேனம்பாக்கம் கோயிலை நாடுமாறு அருட் கட்டளையிடுகிறார்.

“தேனம்பாக்கம் கோயிலுக்கு போய் விபூதி பிரசாதம் கொடுத்தா வாங்கிண்டு வா” என்ற பெரியவாளின் வழிகாட்டலோடு பக்தர் அங்கே செல்கிறார்.

அங்கே கோயிலுக்கு சென்றவருக்கோ ஏமாற்றம், சன்னதி மூடியிருக்க. ஸ்ரீ பெரியவா சொன்னது போல விபூதி பிரசாதம் கொடுக்க குருக்கள் யாரும் அங்கில்லை. சற்றே மனதளர்வோடு பக்தர் திரும்பவும் வந்து ஸ்ரீ பெரியவாளிடம் நிற்கிறார்.

“சரி சுத்தி பிரகாரத்தில் யாரவது விபூதி குங்கும பிரசாதத்தை போட்டுட்டு போயிருந்தா அதை எடுத்துண்டு வா” என்று மறுபடியும் உத்தரவாகிறது.

சோதனையாக எப்போதும் எல்லா கோயில்களிலும் சுற்றிலும் தூண்களிலோ, விளக்கேற்றும் மாடங்களிலோ சிந்தியிருக்கும் பிரசாதம் இந்த பக்தர் தேடும்போது சுத்தமாக காணாதது விந்தையே!

இது விந்தை என்றால் இந்த விந்தையை உண்டாக்கிவிட்டு எங்கோ உட்கார்ந்திருக்கும் ஈஸ்வரரான ஸ்ரீ பெரியவா இதனால் காட்டப்போகும் விந்தை பெரியதாகத்தானே அமையும்!

திரும்பவும் பக்தரின் முறையீட்டிற்கு ஸ்ரீ பெரியவாளின் திருவருள் இப்படி வெளிப்பட்டது.

“சரி! போகட்டும் அந்த கோயில் பிரகாரத்திலே இருக்கிற மண்ணை கொஞ்சம் எடுத்துண்டு வா” என்று புதிராக அருள் கட்டளையிடுகிறார்.

அப்படியே போய் கொண்டுவந்த கோயிலின் மண் ஸ்ரீ பெரியவாளின் முன் வைக்கப்படுகிறது. சாட்சாத் ஈஸ்வரத்துவம் இப்போது வெளிப்பட ஆரம்பிக்கிறது.

தன் திருக்கரங்களால் அந்த கோயில் மண்ணை தன்னிடம் நகர்த்திய ஸ்ரீ பெரியவா அந்த மண்ணை ஸ்பரிசித்து மெல்ல குழப்பது போல அதற்கு மேன்மையூட்டுவதுபோல புனித விரல்களால் இரண்டு மூன்று சுற்றாக தேய்த்துக் கொண்டிருக்கிறார். இப்படி அந்த மண்ணை திருமண்ணாக்கிய தெய்வம் அதை நகர்த்தியருளி அங்கு நின்றுக் கொண்டிருந்த ஸ்ரீ பாலுவிடம்.

“நீ இதை எடுத்துண்டுபோய் அவர்கிட்டே சேர்த்துடு” என்று திருவாய் மொழிகிறார்.

ஸ்ரீ பாலுவும் மகானின் உத்தரவை ஏற்று நோயாளி படுத்திருக்கும் மருத்துவமனைக்கு புறப்படுகிறார்.

போகும்போது ஸ்ரீ பாலுவிற்கு பலவிதமான கவலைகள் கோமாவில் படுத்திருக்கும் பக்தரை அத்தனை சுலபமாக போய் பார்த்துவிட முடியுமா அவரோ தீவிரசிகிச்சை அறையில் பாதுகாப்புடன் இருப்பார். கண்ட நேரத்தில் பார்க்கவோ, இப்படி கொண்டுபோகும் மண்ணை அவருக்கு இட்டுவிட சம்மதிப்பதோ கட்டாயம் மறுக்கக் கூடியதாகத்தான் இருக்கும். பின்னே எப்படி சேர்க்கலாம் என்றெல்லாம் குழம்பியபடி ஸ்ரீ பாலு அங்கு சென்றார்.

ஆனால் அந்த பெரிய மருத்துவமனையில் அவர் நுழைந்ததும் எந்த தடையுமின்றி அனுமதி கிடைத்தது. கோமாவில் படுத்திருந்தவரை அந்த பிரத்யேக அறையில் இவர் போய்பார்த்தபோது அங்கே அந்த அதிசயம் நேர்ந்தது.

பிரக்ஞயே இல்லாமல் படுத்திருப்பவரின் தலைமாட்டில் ஸ்ரீ பெரியவா பிரசாதத்தை வைத்துவிட்டோ, சுயநினைவின்றி படுத்திருப்பவரின் நெற்றியில் அவரை உணராத நிலையில் திருமண்ணை இட்டு விட்டோதான் வரமுடியுமென்று நினைத்து ஸ்ரீ பாலு அந்த அறையில் நுழைந்தபோதுதான் அந்த எதிர்பாராதது நிகழ்ந்தது.

நினைவே இல்லாமல் கண்மூடிய நிலையிலிருந்தவரிடம் ஸ்ரீ பாலு நுழைந்ததும் மெலிதான அசைவு காணப்பட்டது. இதை எதிர்பார்த்து காத்திருந்தவர்போல அவருடைய கைகள் “விலுக்” கென்று நீட்டப்பட்டு ஸ்ரீ பெரியவாளின் பிரசாதத்தை கொடு என்பதுபோல கை ஏந்தியது. “பெரியவா பிரசாதமா? கொடுங்கோ” என்று வாய் திறந்தே கேட்டது போலிருந்தது.

ஸ்ரீ பாலுவிற்கு சற்றே திடுக்கிட்டிருக்கக்கூடும். கோமாவில் இருப்பவர் திடுதிப்பென்று கை நீட்டிய அதிசயத்தை உடனே நம்பமுடியாதவராய் ஸ்ரீ பெரியவாளெனும் தெய்வ அனுக்ரஹ மேன்மைக்கு இதெல்லாம் சாத்யமே என்று எண்ணம் தொடர்ந்ததில் சற்றே சகஜநிலைக்கு வந்தார். பிரசாதத்தை சேர்பித்துவிட்டு ஸ்ரீ பெரியவாளிடம் வந்து நடந்தவைகளை சொல்லி நின்றார். தன் மேன்மையை சற்றும் வெளிகாட்டாத மேன்மையோடு ஸ்ரீ பெரியவா பாலுவிடம், “சரி இன்னும் மூணு நாலு நீயே கொண்டுபோய் அவர்கிட்டே இதே இதை சேத்துட்டு வா” என்றார்.

அவ்வாறே ஸ்ரீ பாலு அந்த அன்பருக்கு தொடர்ந்து மூன்று நாட்களுக்கு ஸ்ரீ பெரியவாளின் அருமருந்தை சேர்த்துவிட்டு வந்தார். அந்த பெரிய மருத்துவமனையின் டாக்டர்கள் எல்லோரும் வியக்கும் வகையில் அந்த பெரும்பாக்யசாலியான அன்பர் “கோமா” நிலையிலிருந்து விடுபட்டு சாதாரண நிலைக்கு வந்துவிட்டார் என்பதை சொல்லவும் வேண்டுமோ?

ஸ்ரீ பெரியவாளின் அபார மகிமை சொல்லில் அடங்காததன்றோ!

மாயம் செய்யும் மகாதேவன்

அதே போல் ஸ்ரீ பாலு அவர்கள் அனுபவித்த மற்றொரு விசேஷ அனுபவம்!

அம்மாவும் பெண்ணுமாக ஸ்ரீ பெரியவாளின் தரிசனத்திற்காக வந்து நிற்கிறார்கள். ஒரு தட்டில் மஞ்சள், குங்குமம், தேங்காய், வெற்றிலை,பாக்கு, புஷ்பம் அதற்குமேல் திருமாங்கல்யம் என்று அத பெண்ணுக்கு கல்யாணம் என்பதை கட்டியம் கூறும் மங்கள வஸ்துக்களை எடுத்து வைக்கின்றனர். அதற்கு பக்கத்தில் கூரை புடவையையும் அம்மா எடுத்து வைக்கிறார்.

பட்டுபுடவை என்பதை ஸ்ரீ பெரியவா, ஜீவராசிகளின் இம்சை மற்றும் தேவையற்ற ஆடம்பரம் என்றவகையில் தன பெருங்கருணையினால் பக்தர்களை தவிர்க்கும்படி அறிவுரை வழங்குவதும், அப்படி ஆசீர்வாதத்திற்கு கொண்டு வருவதை விரும்பாததும் பலரும் அறிந்ததே!

அப்படியிருந்தும் அறியாமையால் அந்த அம்மா தட்டில் அந்த அரக்கு நிற பட்டு புடவையையும் வைத்து ஸ்ரீ பெரியவாளின் ஆசீர்வாதத்திற்காக காத்திருந்தார்.

ஸ்ரீ பாலுவிற்கு இது ஒப்புதலாக படவில்லை. ஸ்ரீ பெரியவா சிறிதும் ஏற்றுக்கொள்ளாத பட்டுபுடவை அந்த தட்டில் வைத்து ஸ்ரீ பெரியவா ஆசீக்காக சமர்பிக்கப்படுவதை அவர் மனம் வேதனையோடு பார்த்தது. உடனே செயல்பட்டவராய் அந்த புடவையை நகர்த்திவைத்துவிட்டு மற்ற மங்கள திரவியங்களை மட்டும் ஸ்ரீ பெரியவா ஆசிக்காக நகர்த்தினார்.

ஸ்ரீ பெரியவா உள்ளே இருந்தார். இங்கே வெளியே ஸ்ரீ பாலுவிடம் அந்த அம்மா சற்றே கடினமாக வாக்குவாதம் செய்ய ஆரம்பித்து விட்டார். ஆசீர்வாதத்திற்காக கொண்டு வந்த கூரை புடவையை இப்படி நிராகரிப்பதுபோல் நகர்த்தி வைத்ததில் தன் ஆதங்கத்தை வெளிப்படுத்தும் வகையில் அந்த அம்மாவின் சம்பாஷனை சூடாயிற்று.

கருணா மூர்த்தியான ஸ்ரீ பெரியவா இதை கேட்டு வெளியே வந்து தரிசனம் .ஈந்தார். நடந்ததை கேட்டபடி அமர்ந்த மகான் தன்னிடம் வைக்கப்பட்டிருந்த தட்டை பார்த்து “ஆமாம் புடவையை நகர்த்திதான் வைக்கணும்” என்று தானும் ஸ்ரீ பாலுவின் அபிப்பிராயத்திற்கு ஒத்துபோவதுபோல கூறினார்.

ஆனால் பேரருள் பெருந்தெய்வம் எப்போதுமே பக்தர்களின் மனம் லேசாககூட நோகும்படியாக எதையும் செய்து யாரும் அறிந்தாரில்லை. அதனால் ஸ்ரீ பாலு அவர்களோ ஸ்ரீ பெரியவாள் இப்படி நிர்தாட்சிண்யமாக புடவையை நகர்த்தியே தீரவேண்டும் என்று சொல்வதில் சற்றே வியப்புற்றார்.

ஸ்ரீ பெரியவா நம்பிக்கையை வீணாக்கவில்லை. அவரிடம் ஒரு குச்சியை கொண்டுவரச் சொன்னார். ஒதுக்கி வைக்கப்பட்ட பட்டு புடவையை அந்த குச்சியால் மடிப்பை விரிக்க, அந்த விரிப்பில் அங்கே கூடியிருந்த பக்தர்கள் அச்சமுறும் வகையில் ஒரு பெரிய கருந்தேளும் இரண்டு குட்டி தேள்களும் காணப்பட்டன.

அந்த பெண்மணிக்கு இதை பார்த்ததும் நடுங்கிபோனது. கடையிலிருந்து வாங்கிவந்து இந்த நேரம்வரை தன் கையில் வைத்திருந்த புடவையில் இப்படி விஷஜந்து இருந்திருக்கிறதே….இதனால் எந்த பாதிப்பும் ஏற்படாமல் ஸ்ரீ பெரியவாளின் பெருங்கருணையல்லவா காப்பாற்றியுள்ளது என்று அப்பெண்மணி நினைத்திருக்கலாம்.

“இதனால்தான் ஒதுக்கச் சொன்னேன்” என்பது போல் ஸ்ரீ பெரியவா அந்த ஜீவராசிகளை இம்சிக்காமல் சாணி தண்ணியை தெளித்து விட்டுவிடும்படி கூறினார். அப்படியே செய்யப்பட்டது.

பிறகு அந்த பரமகாருண்ய தெய்வம் “இந்த கலர் புடவை வேண்டாம். கூரை புடவை அரக்கிலே இருக்கக்கூடாது. அந்த கடையிலே கொண்டு கொடுத்துட்டு வேற மஞ்சளோ, மங்களமான கலரோ வாங்கிக்கோ…இங்கே நடந்ததையெல்லாம் கடைக்காரனிடம் சொல்ல வேண்டாம்” என்று உத்தரவிட்டு தன் அனுக்ரஹத்தை வழங்கி அனுப்பினார்.

உண்மையில் அந்த புடவையில் விஷ ஜந்துக்கள் இருந்து அந்த அற்ப விஷயத்தை ஸ்ரீ பெரியவா தன் ஞான திருஷ்டியால் உணர்ந்தார் என்று எண்ணுவது பேதமை என்று படுகிறது. கைங்கர்யம் செய்யும் ஸ்ரீ பாலு தன் சார்பாக அந்த புடவையை ஒதுக்கிவைத்த செயலை அங்கீகரிக்கும் அதே சமயம் அதன் காரணம் வேறு என்பது போல் ஒரு மாயை பெண்மணிக்கு உண்டாக்கவும், தான் மறுக்கும் பட்டு துணிகள் கடும் விஷத்திற்கு சமமானவை என்று புரிய வைப்பதற்கும் இப்படி திடீரென்று அந்த ஜீவராசிகளை அங்கே க்ஷணநேரம் சிருஷ்டித்து அதிசயம் புரிந்திருக்க வேண்டுமென்பதுபோல் ஸ்ரீ பெரியவாளின் மேன்மை வெளிப்படுகிறது.

இப்பேற்பட்ட பரமகருணாமூர்த்தியிடம் நாம் கொள்ளும் பக்தி நமக்கெல்லாம் பூரண சௌபாக்கியங்களையும் அருளவல்லதென்பது தெளிவாகிறதன்றோ!

– கருணை தொடர்ந்து பெருகும் (பாடுவர் பசிதீர்ப்பாய் பரவுவார் பிணிகளைவாய் – சுந்தரமூர்த்தி சுவாமி தேவாரம்)

________________________________________________________________________________

Vaayinaal unnai paravidum adiyen 
Paduthuyar kalaivaai paashupathaa paranchudare!
                                             Sri Sri Sri Maha Periyava Mahimai!  (01-02-2008)

“Divine Medicine (Elixir)”

The truth that Sri Sri Sri Maha Periyava, who is amongst with us with the greatness of Brahmarishi Sukha Muni, is an incarnation of Sakshat Parameshwara is evident through lot of devotees’ experiences.

Experiences of Sri Balu Mama, who was blessed to serve Sri Sri Sri Maha Periyava for many years, gives us goose-bumps. Many devotees who were not physically feeling well, used to come to Sri Sri Sri Maha Periyava and cry for help and blessings. It is true that their health will be perfectly alright just at the moment they think about conveying their plight to Sri Periyava, who is none other than Sri Vaidyanatha.

Once, a devotee came to Sri Periyava and was crying for help that one of his relatives is in coma stage and also all the doctors have confirmed that they will not be able to do anything. Sri Periyava, who is very particular in not revealing the secret of His incarnation, ordered the devotee to go to Thenambakkam Temple.

“Go to Thenambakkam Temple; collect if they Vibuthi prasadam and come back” told Sri Periyava and the devotee went to the temple. But the devotee was disappointed to see that the sannidhi was closed and priests were not there to give Vibuthi prasadam. With disappointment, the devotee came back to Sri Periyava and stood there.

“OK, around the praakaram, if someone had put Vibuthi or Kumkumam prasadam, go get that” ordered Sri Periyava again. It was so surprising that the devotee was unable to find any prasadam around the praakaram on that day. If this event was surprising and astonishing, it is true that the surprise that Sri Periyava is going to create through this event is going to be even bigger.

When the devotee came back again, Sri Periyava ordered, “OK, leave it. Go get the sand from that temple praakaram.” Devotee brought sand from temple praakaram and kept in front of Sri Periyava. Now, slowly Sri Periyava’s eeswarathvam (supernatural power) started revealing.

Sri Periyava took that sand near Him and with His holy fingers, kept touching that sand as if to give power to it. After a while, slowly Sri Periyava gave that to Sri Balu Mama and told, “Go and give this to him (referring the patient).”

Sri Balu Mama also started to hospital, obeying Sri Periyava’s orders. But, Sri Balu Mama had lot of questions in his mind that whether the hospital authorities would allow him near that patient, who is in coma state inside ICU. Also, he was thinking whether they would allow to keep sand near the patient. With all these doubts, he reached the hospital.

But, when Sri Balu Mama reached there, he got permission to enter without any trouble. When he entered the private room and went near the patient, this miracle happened. Sri Balu Mama entered that room with a thought to keep Sri Periyava’s prasadam near that patient and come back. But, that is when the miracle happened in front of Sri Balu Mama.

Immediately after Sri Balu Mama entered the room, slowly the patient started showing some movements in his body. As if the patient was waiting for Sri Periyava’s prasadam, his hands came out suddenly asking for prasadam. Sri Balu Mama felt like the patient would open his mouth and ask “Is it Sri Periyava’s prasadam? Please give it”.

Sri Balu Mama was astonished. After a while, since Mama knew that these miracles can happen with Sri Periyava’s grace, he came back to normal state. He gave the prasadam, came back to Sri Periyava and narrated the whole incident. But, Sri Periyava, who is very particular in not revealing His supernatural powers told, “OK, you go to hospital for the next two to three days and give the prasadam to the patient.

Sri Balu Mama, as per Sri Periyava’s orders went to the hospital for the next three days with prasadam. Much to the astonishment of all the doctors in that hospital, should we even have to say that the patient came out coma state and became very normal?

No one can explain Sri Periyava’s Mahimai!!!

Magical (miraculous) Mahadeva!!

This is another unique incident that Sri Balu Mama experienced.

Once a female devotee along with her daughter came for Sri Periyava’s darshan. They had turmeric, kumkumam, and coconut, beetle leaves, flowers and along with that they also had Thiru- Mangalyam which made it evident that the girl was getting married. They also had saree (koora pudavai) in that plate.

It was known that Sri Periyava always advises everyone to avoid silk sarees as it involves hurting living beings and as it is also unnecessary show-off. Even then, this female devotee, due to ignorance, got a red silk saree and kept it for Sri Periyava’s blessings.

But, Sri Balu Mama could not accept it. He looked that plate with lot of mental pain as they had kept a silk saree for Sri Periyava’s blessings. He immediately separated that saree from other things and kept only the remaining things for Sri Periyava’s blessings. Sri Periyava was staying inside the room. Outside, that female devotee started having a heated discussion with Sri Balu Mama. She was disappointed when the saree was not kept for Sri Periyava’s blessings.

Hearing this discussion, Sri Periyava came out for giving darshan to His devotees. When Sri Periyava sat down, as if agreeing to what Sri Balu Mama told, “Yes, that saree needs to be kept separate.”

But, since everyone knows that Sri Periyava would never make any devotee feel bad, Sri Balu Mama was astonished to hear those words from Sri Periyava.

Sri Periyava did not disappoint anyone. He ordered to bring a stick. Using that stick, when Sri Periyava opened that saree, there was a big scorpion along with two small scorpions in that saree. When that female devotee saw it, she was so terrified. She started thinking how come a scorpion be there in that saree, which she just got it from a store. She also thought that only because of Sri Periyava’s grace, they were protected from those scorpions.

“That’s why I asked to keep it separate” told Sri Periyava and also ordered not to kill those scorpions. Then, Sri Periyava, with His kind words ordered, “Do not have the saree in this color. Koora pudavai (saree for wedding) should not be in maroon color. Return it in the same shop and get a different color, may be Yellow or some auspicious color. No need to tell the shopkeeper about this incident.”

We would be ignorant if we just think that Sri Periyava with His supernatural powers foresaw that the scorpions were there in that saree and protected them from that. To support Sri Balu Mama’s act, which was what Sri Periyava always advised, He created a miracle there within minutes to let that devotee understand the advice.

It is clearly evident that with our true bhakti to Sri Periyava, we would get prosperity, wealth and good life by His grace!!

Grace will continue to flow.

(paaduvar pasi theerppai paravuvaar pinikalaivaai)

  • Sundaramoorthy Swami Thevaramfeb-1-2008

feb-2-2008

feb-3-2008

 

feb-4-2008



Categories: Devotee Experiences

Tags:

4 replies

  1. ஸ்ரீ பெரியவா சரணம் Sri Periyava Saranam

  2. Jaya Jaya Sankara Hara Hara Sankara.subha leelai of Sri Maha Periyava/ Janakiraman. Nagapattinam

  3. ஸ்ரீமஹா பெரியவா பொற்பாதங்களுக்கு எங்கள் நமஸ்காரங்கள்

  4. What to say of never ending grace!

    God moves in a mysterious way
    His wonders to perform;
    He plants His footsteps in the sea
    And rides upon the storm.

    Deep in unfathomable mines
    Of never failing skill
    He treasures up His bright designs
    And works His sov’reign will.

    Judge not the Lord by feeble sense,
    But trust Him for His grace;
    Behind a frowning providence
    He hides a smiling face.

    Blind unbelief is sure to err
    And scan His work in vain;
    God is His own interpreter,
    And He will make it plain.

    -William Cowper, 1774

Leave a Reply

%d bloggers like this: