வியாஸர் பதினெட்டு புராணங்களையும் பண்ணி முடித்தபின் சிஷ்யர்கள் அவற்றின் ஸாராம்சத்தை ஒன்றிரண்டு ச்லோகங்களில், ஸுலபமாக நினைவில் வைத்துக் கொள்ளும்படியாகச் சுருக்கித் தரும்படிப் பிரார்த்தித்தார்களாம். உடனே அவர் “ஒன்றிரண்டு ச்லோகம் எதற்கு? இந்தப் பதினெட்டுப் புராணம் மட்டுமின்றி மொத்தமிருக்கிற கோடிப் புஸ்தகங்களின் ஸாரத்தையும் அரை ச்லோகத்திலேயே சொல்கிறேன்”, “ச்லோகார்தேந ப்ரவக்ஷ்யாமி யதுக்தம் க்ரந்தகோடிஷு |” என்று ஒரு ச்லோகத்தின் முதல் பாதியாகச் சொல்லிவிட்டு மற்ற பாதியில் அந்த ஸாரமான தத்துவத்தைச் சொன்னாராம்:
”பரோபகார: புண்யாய பாபாய பரபீடநம் ||”
இருக்கிற அத்தனை கோடி மத சாஸ்திர புஸ்தகங்களுக்கும் உயிர் நிலையான தத்வம் என்னவென்றால், “புண்யம் ஸம்பாதிக்க வேண்டுமானால் பரோபகாரம் பண்ணு; பாபத்தை மூட்டை கட்டிக் கொள்வதனால் மற்ற ஜீவன்களுக்குக் கஷ்டத்தைக் கொடு” என்பதுதான் – என்று இதற்கு அர்த்தம்.
பாபம் எது என்று தெரிந்து கொண்டு அதை விலக்குவதற்கும், புண்யம் எது என்று தெரிந்து கொண்டு அதைப் பண்ணுவதற்குந்தான் மதம் என்பதே இருக்கிறது. இங்கே நம் மதத்துக்கு முக்யமான மூல புருஷர்களில் முதன்மையாயிருக்கிற வ்யாஸாசார்யாள் பர உபகாரம் தான் புண்யம், பர அபகாரம்தான் பாபம் என்று சொல்கிறாரென்றால், அதற்கப்புறம் நம் மதத்தில் பரோபகாரத்துக்கு இடமுண்டா என்ற வாதத்துக்கே இடமில்லை. – ஜகத்குரு ஸ்ரீசந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் அருள்மொழிகள்
After Sage Vyasa finished compiling the 18 puranas, his disciples requested him to compose a shloka or two which will contain the quintessence of the 18 puranaas and which will be easier to keep in memory. Vyasa stated that only half a shloka was required to present the essence not only of the eighteen puranaas but also the one crore other works available in the world. “Shlokaarthena Pravakshyaami Yadhuktham Granthakoteeshu” thus stating one half of the shloka, in the other half he revealed that succinct philosophy – “Paropakaara Punnyaaya Paapaaya Parapeetanam”. It meant the the essence of all religious and other spiritual works is that if one seeks to earn Punya or goodwill one should perform philanthropy and if one wants to be burdened with sin, one should cause sufferings to other beings. Religion is there to make us understand the distinction between Paapaa and Punyaa and reject the former and embrace the latter. Here Shri Vyaasaachaarya, one of the pillars of our religion states helping the others is Punnyam and harming the others is Paapam. Now can anybody state that our religion is not philanthropic? – Jagadguru Sri Chandrasekharendra Saraswathi Swamigal
Categories: Deivathin Kural, Golden Quotes
Hara Haraa Sankara Jaya Jaya Sankara. Janakiraman, Nagapattinam