Jaya Jaya Sankara Hara Hara Sankara – How does both Baaryai and Bartha (Husband & Wife) both get Punniyam if Baaryai leaves Bartha and goes to Yathra? The ultimate authority answers to this tricky question.
Many Jaya Jaya Sankara to our sathsang seva volunteer Smt. Bharathi Shankar for the translation.
மஹா பெரியவர் – எஸ். ரமணி அண்ணா
கணவனைவிட்டு விட்டு மனைவி மட்டும் யாத்திரை போகலாமா ?
பல வருடங்களுக்கு முன், ஸ்ரீ காஞ்சி மடத்தில் மஹா ஸ்வாமிகளை நமஸ்கரித்து எழுந்தனர் ஒரு இளம் வைதீகத் தம்பதி. அந்த இளம் வைதீகருக்கு சுமார் 25 வயதிருக்கும். அவர் மனைவிக்கு 20 இருக்கலாம்.
வேறு ஒரு பக்தரிடம் உரையாடிக் கொண்டிருந்த ஆச்சார்யாள், அதை நிறுத்தி விட்டு அந்த தம்பதியை நிமிர்ந்து பார்த்தார்.அவர் முகத்தில் மகிழ்ச்சி பரவியது.
பெரியவா உற்சாகத்துடன், “ஏண்டாப்பா, நீ மதுரை சேஷு கனபாடிகளோட புள்ளையாண்டான் ரகுநாதன் தானே ? ஆனா…இப்போ உன்னை நான் அப்டி கேக்கக் கூடாது. ஏன்னா…இப்போ நீ ரகுநாத சாஸ்த்ரிகள் ஆயிட்டே! மதுரை ப்ராந்தியதுலே ஒங்கப்பா மாதிரி எல்லோருக்கும் தெரிஞ்சவனாகவும் ஆயிட்டே” என்று கேட்டு விட்டுத் தொடர்ந்தார்.
“இவ ஒன் ஆம்படையாள் (மனைவின்னு) தெரியறது. இவ திருச்சிராப்பள்ளி வைத்யநாத கனபாடிகளோட பேத்தி, சுப்ரமணிய வாத்தியாரின் ஏக புத்ரி. நான் சொல்லறது சரி தானே? போன வருஷம் ஒங்க கல்யாணப் பத்திரிக்கையை எடுத்துண்டு ஒங்க அப்பா கனபாடிகளும், மாமனார் சுப்ரமணிய வாத்தியாரும் மடத்து ஆசீர்வாதத்துக்காக வந்திருந்தாளே. அப்போ நீயும் வந்து நமஸ்காரம் பண்ணினே இல்லியா..சரி..சரி! இப்போ தம்பதி ஒத்துமையோட சௌக்கியமா இருக்கேளோனோ ?”
ஸ்வாமிகள் உரிமையோடு கேட்டு முடித்தார்.
உடனே ரகுநாத சாஸ்திரிகள், “ரொம்ப சௌக்கியமா இருக்கோம் பெரியவா, ஒங்க அனுக்ரஹத்திலே” என்று கை கூப்பிச் சொன்னார்.
பெரியவா விடவில்லை. “நீ சொல்லிப்டே. உன் ஆம்படையா வாயே திறக்கலையே” என்று சிரித்தார்.
உடனே அந்த இளம் மனைவி சுதாரித்துக் கொண்டு, “எம் பேரு அலமேலு பெரியவா…சந்தோஷமாத் தான் இருக்கோம்…,சந்தோஷமாத் தான் இருக்கோம்” என்று சொன்னாலும், அவள் குரலில் இழையோடிய வருத்தத்தை கண நேரத்தில் புரிந்து கொண்டார் ஸ்வாமிகள்.
“இல்லேம்மா, நீ ஏதோ மன வருத்ததோடு இருக்கேங்கறதை உன் குரல் சொல்லறதே? என்ன…சொல்லு…சொல்லு” என்று அன்பாக விசாரித்தார் ஸ்வாமிகள்.
“அதெல்லாம் ஒண்ணுமில்லை பெரியவா” சமாளித்தாள் அலமேலு.
“இல்லே…இல்லே! உன் குரல் சொல்றதே…நீ ஏதோ வருத்தத்துலே இருக்கேங்கறதை. என்ன விஷயம் சொல்லு” கனிவுடன் கேட்டார் ஸ்வாமிகள்.
அலமேலு தயக்கியபடியே,”பெரியவா, நா ரொம்ப தெய்வ பக்தி உள்ளவள். பால்யத்தில்
இருந்தே சாஸ்திர சம்பிர தாயங்கள்ளே பூரண நம்பிக்கை உண்டு.கல்யாணத்துக்கு முன்னாடி நெறைய க்ஷேத்ராடனம் எங்க குடும்பத்தோடு, வேண்டியவாளோடு
போயிருக்கேன். அது நேக்கு ரொம்பப் பிடிக்கும்.
இப்போ இவரோடு கல்யாணமாகி ஒரு வருஷமாறது. அதுக்கப்புறம் ஒரு இடம் போகலே பெரியவா. அது தான் வருத்தம் என்று முடிப்பதற்குள், “ஏன்..ஏன் போக முடியலே ?” என்று இடை மறித்தார் ஸ்வாமிகள்.
அலமேலு தயங்கியபடியே, “விவாஹதுக்குப் பிறகு நான் தன்னிச்சையா தீர்த்த யாத்திரை போக முடியாதோலியோ பெரியவா! பர்த்தாவும் (கணவனும்) கூட வந்தாத் தானே யாத்ரா பலன் கிடைக்கும் ? ரெண்டு மூணு தடவை கூப்பிட்டேன். வரமாட்டேன்கறார்” என்று விவரித்தவள், கண்ணீர் விட்டு அழ ஆரம்பித்து விட்டாள்.
விஷயத்தைப் புரிந்து கொண்ட ஆச்சார்யாள், “அழப்படாது..அழப்படாது!” என்று சமாதானப் படுத்திவிட்டு, “என்ன ரகுநாத சாஸ்த்ரீகளே, ஆம்படயாளை இப்படி கண் கலங்க விடலாமோ ? நல்ல விஷயம் தானே சொல்லறா ? தீர்த்த யாத்திரை, க்ஷேத்ராடனம் கூப்பிட்டா போயிட்டு வர வேண்டியது தானே ? அதுல என்ன சிரமம் ?” என்று புருவங்களை உயர்த்திக் கேட்டார்.
இளைஞர் ரகுநாத சாஸ்திரிகள் மீண்டும் ஒரு தடவை பெரியவாளை நமஸ்கரித்து எழுந்து பவ்யமாகச் சொன்னார், “அவ சொல்லறதும் ஞாயம் தான் பெரியவா. ஆனா, ரெண்டு மாசத்துக்கு ஒரு தடவை…பத்து நாளுக்குக் குறையாம மத்தவாளோட சேர்ந்து வட தேச க்ஷேத்ரங்களுக்கு யாத்திரை போயிட்டு வரணும்கறா. ஆகிற காரியமா அது பெரியவா? ”
“ஏன் போயிட்டுத்தான் வாயேன்.ஆம்படயா தானே அன்போட கூப்பிடறா” இது ஸ்வாமிகள்.
உடனே ரகுநாத சாஸ்திரிகள் குரல் தழுதழுக்க,”பெரியவாளுக்கு எல்லாம் தெரியும்.நா வைதீகத்தை வ்ருதியா (தொழிலா) வெச்சுண்டுருக்கேன். அப்பாவுக்கும் ஒடம்பு முடியலே. அவர் பார்த்துடுண்டு இருந்ததை எல்லாம் இப்போ நா பாக்கறேன். வ்ருதியை விட்டுட்டு, ரெண்டு மாசத்துக்கு ஒரு தரம் பத்து பதினஞ்சு நாள் நான் எப்படி இவளோட யாத்திரை போக முடியும் பெரியவா ? நீங்களே சொல்லுங்கோ” என்று முடித்தார்.
சற்று நேரம் மௌனமாக இருந்த பெரியவா, பிறகு சிரித்துக் கொண்டே, “ஓஹோ! இந்த விஷயத்துலே என்னை சரியான மத்யஸ்தம் பண்ணி வெக்க சொல்லி கேக்க வந்தேளாக்கும் ?” என்று கூறி விட்டு தொடர்ந்தார், “அலமேலு சொல்லறதும் ஞாயம் தான். அவளுக்கு பக்தியுடன் தீர்த்த யாத்திரை போறத்லே ஒரு ருசி இருக்கு. கல்யாணம் ஆனப்புறம் பர்தாவுடன் (கணவனுடன்) போனத் தான் ‘யாத்ரா பலன்’ கிட்டும்கறதையும் தெரிஞ்சு வெச்சுண்டிருக்கா. ஆனா, நீ சொல்றதிலேயும் நியாயம் இருக்கு. நோக்கு வருத்தி வைதீகம். மாசம் முப்பது நாளும் ஜோலி சரியா இருக்கும். ரெண்டு மாசத்துக்கு ஒரு தடவை ஆம்படயாளுடன் தீர்த்த யாத்திரை போறது ரொம்ப ரொம்ப சிரமம். என்ன பண்ணறது ?”
“நீங்க தான் ஒரு மார்க்கம் சொல்லணும் பெரியவா…”இருவரும் கோரஸாக ஸ்வாமிகளைப் பிராத்தித்தனர். ஸ்வாமிகள் சற்று நேரம் யோசனை பண்ணியபடியே அமர்ந்திருந்தார். என்ன சொல்லப் போகிறாரோ என அங்கிருந்த அனைவரும் ஆவலுடன் காத்திருந்தனர்.
ஆச்சார்யாள் பேச ஆரம்பித்தார்.
“அலமேலு! ரெண்டு மாசத்துக்கு ஒரு தரம் தீர்த்த யாத்ரா போகணும்க்கரதுலே நீ தீவிரமா இருக்கே.அதுலேயும், பர்த்தாவும் கூட வந்தாத் தான் யாத்ரா புண்ய பலன் கிடைக்கும்கற தர்ம சாஸ்திரத்தையும் தெரிஞ்சு வெச்சுண்டிருக்கே. வைதீகத்தை தொழிலா வச்சுண்டு இருக்கறதாலே, யாத்ரைக்கு உன் கூட அவர் வர்றது ரொம்ப சிரமம்க்றார். ஒரு காரியம் பண்ணுங்கோ…”ஆச்சார்யாள் முடிப்பதற்குள், “அனுக்ரகிக்கணும் பெரியவா” என்றனர் தம்பதி.
ஸ்வாமிகள் சற்று நிமிர்ந்து உட்கார்ந்து கொண்டு, “ஒரு மார்க்கம் சொல்றேன். கேளு அலமேலு. நீ எப்ப தீர்த்த யாத்ரைக்குப் கிளம்பினாலும், பொறப்படறதுக்கு முன்னாடி, ஆத்துக்காரரை கிழக்கே பார்த்து நிக்கச் சொல்லி நமஸ்காரம் பண்ணி பிரார்த்தனை பண்ணு. நீ என்ன பண்ணறே ரகுநாத சாஸ்திரிகளே, உன்னோட மேல் அங்க வஸ்திரத்தை எடுத்து ஆம்படையா கையிலே கொடுத்து, “இது நா உன் கூட தீர்த்த யாத்திரை வர்றதுக்கு சமானமானது. க்ஷேமமா போயிட்டு வா”னு ஆசீர்வாதம் பண்ணி அனுப்பு. தம்பதியா யாத்திரை போன புண்ணியமும் கிடைக்கும்…ஒத்தருக்கும் மன சிரமமும் இருக்காது. என்ன சந்தோஷம் தானே ?” என்று கனிவுடன் கேட்டு பிரசாதம் அளித்தார்.
மஹா பெரியவாள் சொன்ன இந்த பதிலால் இளம் தம்பதிக்குப் பரம சந்தோஷம். பெரியவாளை நமஸ்கரித்து ஆனந்தக் கண்ணீர் சொரிந்தனர்.
இதைப் பார்த்துக் கொண்டிருந்த அனைவரும் பெரியவாளின் சமயோசிதமான இந்த அனுக்ரஹத்தை கேட்டு, வியந்து மகிழ்ந்தனர்.
___________________________________________________________________________________
Maha Periyava – Sri S. Ramani Anna
Can A Wife Go Alone For Pilgrimage,Leaving Her Husband Behind?
Many years ago, a young Vaidhiga couple came to the Mutt and prostrated before Periyava. The young Vaidhigar (priest) must be around twenty five years old. His wife might be twenty years.
Periyava, who was conversing with another Baktha, stopped abruptly and looked up the couple. Happiness spread on His face.
Periyava asked with excitement,” Aren’t you Raghunathan, son of Madurai Seshu Ganapadigal? But I shouldn’t ask you that way now. Because you have become Raghunatha Sastrigal now. You have become popular like your father in Madurai region,” saying thus He continued to speak.
“I can understand that this is your wife. She is the granddaughter of Thiruchirappalli Vaidhyanatha Ganapadigal and the only daughter of Subramanya Sastry. .Am I right? Last year, your father Ganapadigal and your father in law Subramanya Sastry had come here with your wedding invitation, seeking my blessings. You too had come along with them and bowed to me right? Ok, now are you both living happily with a good understanding?”
Swamy enquired with a rightful intimacy.
At once Raghunatha Sastry replied with folded hands,” We are doing fine Periyava. With your blessings.”
But Periyava didn’t leave it there. “You have said so. But your wife is not opening her mouth at all,” He questioned laughingly.
Immediately, the young wife collected herself and said,” My name is Alamelu Periyava. We are happy only, happy only.” Though she tried to speak normally, Periyava detected the underlying sorrow in her voice within a fraction of a second.
“No child. But your voice tells me something is bothering you. What is it, tell me , tell me,” Periya enquired affectionately.
“There is nothing like that Periyava,” Alamelu tried to manage.
“No no, your voice clearly shows your inner disturbance, Come out with it,” Periyava insisted in a merciful tone.
Alamelu started to speak with much hesitation. “ It’s like this Periyava. Right from my childhood, I have been very pious, with a staunch belief in our Sastras and Sampradayas. Before marriage, I used to go on a lot of pilgrimages with my family and close relatives. I like it very much to do so. Now it’s been a year since my marriage with him. After marriage, I’m not able to visit a single place Periyava. That is my grievance….. ,”
Periyava interrupted her before she could finish and asked anxiously,”Why? Why couldn’t you go now?”
Alamelu replied hesitantly, “ After marriage I couldn’t go for pilgrimages as a single, on my own Periyava. I can reap the Yatra Palan ( full benefits of a pilgrimage ) only if I’m accompanied by my husband. But he doesn’t come however much I request him,” she burst into tears while explaining.
Acharyal, who understood the situation clearly, pacified her by saying, “Now don’t cry don’t cry,” and turned to her husband and said,” What is this Raghunatha Sastry? Is it fair to let your wife cry like this? Isn’t she asking you for a good deed? If she wants to go on a pilgrimage, why don’t you accompany her? What is the difficulty in it ?” Periya raised his eyebrows and questioned.
The young Raghunatha Sastry prostrated before Periyava again and said with all politeness, ”What she says is true and fair Periyava. But she wants to visit north Indian pilgrim centres with others for ten days, every two months. Is it possible thing to do Periyava?”
“ Why, what’s wrong in it and why don’t you go? After all it’s your wife who is calling you affectionately.”
Immediately Raghunatha Sastry started to speak in a faltering voice, “Periyava knows everything. I’m having Vaidhigam as my livelihood. My father is also not doing good. I’m looking after his affairs too. Leaving behind my occupation, how can I undertake a pilgrimage every two months Periyava?”
Periyava, who was silent for sometime, said with a smile,” Oh, so you both have come here, expecting me to hear your case and offer a solution right,” and continued to speak, “ There is a point in what Alamelu says too. She has a taste for going on pilgrimages with Bakthi. She has also gained knowledge about the Sastra that she can derive the Yatra Palan only if she is accompanied by her husband. But you have a point too in saying that it is impossible to accompany her, having Vaidhigam as your livelihood, in which all thirty days in a month will be hectic with a busy schedule. Going on a pilgrimage every two months with your wife will be very very difficult. What to do?”
“Only you have to find us a way Periyava,” both prayed in a chorus. Swamigal was sitting in deep thinking for some time. Everybody was waiting eagerly to listen to what He was going to say.
Acharyal started to speak.
“Alamelu, you are bent upon going on a Yatra every two months. And you are also aware of the Dharma Sastra that you will get the Yatra Punya Palan in full only if your husband accompanies you to the Yatra. But he finds it difficult to accompany you with his Vaidhiga duties. You both do one thing,” before Acharyal could finish, the couple prayed aloud,” Bless us with a solution Periyava.”
Swamigal straightened up a bit and said,” I suggest a way out for this. Listen Alamelu, whenever you start for a Yatra, before leaving the house, you ask your husband to stand facing the East and do a Namaskaram to him and pray. You Raghunatha Sastry, you take your upper Angavasthram and place it in your wife’s hands and bless her saying,” This is equivalent to my accompanying you in the Yatra. Have a safe journey,” and send her for the Yatra. By this, you will have the effect of going to the Yatra together and get the Punyam, as well as there will not be any disturbance at heart for both of you. Are you happy now?” He questioned affectionately and gave them Prasadham.
The young couple was elated beyond words and they both fell at His feet shedding tears of joy.
All those who were witnessing this incident were awed by His intelligent blessing and felt extremely happy.
Categories: Devotee Experiences
Who is there to give rulings like this.
We PRAY to MAHASWAMIGAL TO COME IN SOME BHAKTHAS DREAM AND CONTIUE TO GUIDE US ALL FOREVER.
Jaya Jaya Sankara Hara Hara Sankara. Janakiraman.Nagapattinam
Please, clarify , what if the husband has to go leaving behind the wife? No ‘palan’?
what is the pariharam for in such cases?
Dharma Sastras says whatever Punniyam Bartha (husband) does 50% or a certain % goes to his Baryai (wife) by default. However the above incident explains the converse. So there is no need for any Parigharam. Ram Ram
Same applies to husband also as I understood from few Pravachanams by great scholars. If husband happens to go Theerta Yatra without Dharmapatni for any reason, he may take her blouse (or some of her cloth) and should be on the left shoulder until the Yatra visit completes. This is only an emergency alternative and not to be followed as regular. Please correct me, if I am wrong!
Amazing! Could someone elders in the blog let me know if we could follow this as suggested by Mahaperiyava at times when we face the same situation like Alamelu amma? Or is it specific to this incident?! Mahaperiyava thunai.
Thank you. Regards Arthi
When Maha Periva says something, it is for Loka Kalyanam purpose only. One cannot just take this is granted and send their wife or husband alone all the time. This is only an emergency alternative and not to be followed as regular. Going together to holy places is always advisable.