Periyava Golden Quotes-391

album1_16

பரோபகாரம் நம் மதத்தில் சொல்லப்படவில்லை என்ற தப்பான பிரசாரத்தை நம்பக் கூடாது. குழந்தையாக இருக்கிறபோதே ‘ஸுபாஷிதம்’, ‘நீதி சாஸ்திரம்’ என்றெல்லாம் சொல்லிக் கொடுப்பார்கள். அதிலேயே பரோபகாரத்தைப் பற்றிய அநேக போதனையிருக்கிறது. ‘பரோபகாரார்த்தம் இதம் சரீரம்’ — ‘உலகத் தொண்டு பண்ணவே இந்த உடம்பு வாய்த்திருக்கிறது’ என்று அப்போதே கற்றுக் கொடுத்து விடுவார்கள். இன்னொன்றும் சொல்வதுண்டு, ‘பரோபகாராய ஸதாம் விபூதய:’ — ‘நன்மைகளின் ஸகல சக்திகளும், உடைமைகளும் பரோபகாரத்துக்காகவே ஏற்பட்டவைதான்’ என்று அர்த்தம். இதை இரண்டு விதத்தில் சொல்லி இளமனஸில் ஆழமாகப் பதிப்பிப்பார்கள். ஒன்று: பிறருக்குப் பிரயோஜனமாவதற்குத்தான் மரம் பழுக்கிறது; பிறருக்குப் பிரயோஜனமாவதற்குத்தான் ஆறுகள் ஜலத்தைச் சுமந்து ஓடுகின்றன; பிறருக்குப் பயனாவதற்கேதான் பசுக்கள் பால் கொடுக்கின்றன. அப்படியே இந்த மநுஷ்ய காயம் ஏற்பட்டிருப்பதும் பிறருக்கு உதவும் பொருட்டே. இன்னொன்று: இப்போது சொன்னதையே இன்னும் கொஞ்சம் நயத்தோடு சொல்வது – மரம் தன் பழத்தைத் தானே சாப்பிட்டுக் கொள்வதில்லை — ஆறு தன் ஜலத்தைத் தானே குடித்துக் கொள்வதில்லை — மேகம் தன் மழையாலுண்டாகிற பயிரைத் தானே சாப்பிடுவதில்லை .இதேபோல ஸஜ்ஜனங்களின் (நல்லோரின்) எல்லாத் திறமைகளும், செல்வமும் பரோபகாரத்திற்குத்தான். படிக்கிற காலத்திலேயே, “உன்னை சாச்வதமாக உயிர் வாழ்கிற தேவ ஜாதியாக நினைத்துக் கொண்டு கல்வியையும் பொருளையும் நிறுத்தாமல் மேலே மேலே ஸம்பாதித்துக்கொண்டே போ” என்று சொல்லிக் கொடுத்துவிட்டு, அதே மூச்சில், அந்த ஸ்லோகத்திலேயே, “தர்மம் பண்ணுவதில் மட்டும் அப்புறம் என்று ஒத்திப்போடாமல், எப்போதும் யமன் உன் தலை மயிரைப் பிடித்து இழுத்துக் கொண்டேயிருக்கிறான் என்று நினைத்து, உடனுக்குடனே பண்ணிவிடு” என்று சொல்லிக் கொடுத்தார்கள். – ஜகத்குரு ஸ்ரீசந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் அருள்மொழிகள்

We should not believe the misleading propaganda that our religion did not preach philanthropy. Verses of “Subhashitham” and “Needhi Saastram” used to be taught in childhood itself – these verses contain many messages on the virtue of charity. “Paropakaaraartham Edham Sareeram” – that this body has taken birth only to perform service to others is one such message. Another message used to say “Paropakaaraa Sadhaam Vibhoothayaha” – the powers and manifestations of all good things on this earth is only for the purpose of philanthropy. Two versions of this message used to be taught to the children, to be ingrained in them deeply. The first one stated that the trees bear fruits to feed others, rivers carry water to be useful to people, cows secrete milk only to benefit the needy and similarly this human birth has taken place only to help the others. Another version conveys the same message in a more poetic manner. The tree never consumes the fruits it bears, the river does not drink the water it carries, rain clouds do not consume the food materials it helps generate and similarly the skill and wealth of the good people is directed only towards helping the others. The ancient teachings cautioned one not to put an end to education and earning thinking that one is a living embodiment of the divine light; one should continue to earn more and more. In the same breath, the teachings warned one not to postpone performance of charity but do it immediately thinking that Yama Dharma Raja (God of Death) is always pulling one by the hair (in other words, death is imminent). – Jagadguru Sri Chandrasekharendra Saraswathi Swamigal



Categories: Deivathin Kural, Golden Quotes

Tags:

4 replies

  1. Hara Hara Sanakara Jaya Jaya Sankara. Janakiraman. Nagapattinam.

  2. Dear sir – which section of deivathin kural does periyava talk about learning and earning more? Thank you

  3. पिबन्ति नद्यः स्वयमेव नाम्भः स्वयं न खादन्ति फलानि वृक्षाः।
    नादन्ति स्वस्यं खलु वारिवाहाः परोपकाराय सतां विभूतयः॥
    pibanti nadyaḥ svayameva nāmbhaḥ svayaṁ na khādanti phalāni vṛkṣāḥ|
    nādanti svasyaṁ khalu vārivāhāḥ paropakārāya satāṁ vibhūtayaḥ||
    The rivers don’t drink their waters themselves; the trees don’t eat their own fruits.
    The clouds do not eat the crops they have watered; in the same way, the wealth of the good people are for helping others (they don’t consume their own wealth)
    Alternate version:
    रत्नाकरः किं करोति स्वरत्नैः
    विन्ध्याचलः किं करिभिः करोति
    श्रीखन्ण्डकण्डैः मलयाचलः किं
    परोपकाराय सतां विभूतयः
    http://sanskritpearls.blogspot.com/2010/07/july-22nd.html

    परोपकाराय फलन्ति वृक्षाः परोपकाराय वहन्ति नद्यः।
    परोपकाराय दुहन्ति गावः परोपकारार्थमिदम् शरीरम्॥
    paropakārāya phalanti vṛkṣāḥ paropakārāya vahanti nadyaḥ|
    paropakārāya duhanti gāvaḥ paropakārārthamidam śarīram||
    “Trees give fruits for others; Rivers [too] flow for [the benefit of] others;
    Cows give milk for helping others; [Similarly] this body of ours is also for helping others.”

    अजरामरवत् प्राज्ञो विद्यामर्थं च साधयेत्।
    गृहीत इव केशेषु मृत्युना धर्मम् आचरेत्॥
    ajarāmaravat prājño vidyāmarthaṁ ca sādhayet|
    gṛhīta iva keśeṣu mṛtyunā dharmam ācaret||
    The learned should acquire knowledge and wealth, as though there is no death or old age.
    But, they should follow dharma as though, they have been gripped by Death by the hair!

Leave a Reply

%d bloggers like this: