Sri Periyava Mahimai Newsletter-Feb 28 2008

album1_13

 

Jaya Jaya Sankara Hara Hara Sankara – Sri Periyava as ‘Tri Moorthy’ and ‘Chakrapani’ in this newsletter from Sri Pradosha Mama Gruham!!

Anantha Jaya Jaya Sankara to our sathsang seva volunteer for the Tamizh typing and translation. Ram Ram

வாயினால் உன்னைப் பரவிடும் அடியேன் படுதுயர் களைவாய் பாசுபதா பரஞ்சுடரே!

ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ பெரியவாளின் மகிமை (28-02-2008)

                                                    “அங்கேயும் த்ரிமூர்த்தி இங்கேயும் அதுதானே”

–  நன்றி மஹா பெரியவாள் தரிசன அனுபவங்கள்

சாட்சாத் சர்வேஸ்வரரே ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ மஹா பெரியவாளெனும் ஞானியாய் சுகபிரம்மரிஷியின் யோக மேன்மையோடு மிக எளிமையாய் நம்மிடையே திருஅவதாரம் செய்து தன் பரமகாருண்யத்தை நமக்கெல்லாம் பொழிந்தருளுகிறார்.

தன்னை எப்போதுமே ஒரு சாமான்ய சந்நியாசியாகவே உலகோருத்து மறைத்து காட்டி வந்த போதிலும், ஒரு சில பக்தர்களுக்கு பேரனுக்கிரஹமாக தன் உண்மை சொரூபத்தை வெளிக்காட்டியருளிய சந்தர்பங்களும் நிகழ்ந்துள்ளன.

பொள்ளாச்சி ஜெயலட்சுமி அம்மாள் எனும் பக்தையும் அப்படி ஒரு பாக்யம் பெற்ற நிகழ்ச்சியை கூறுகிறார்.

ஒரு சமயம் ஸ்ரீ பெரியவா திருவானைக்காவில் அருளிக் கொண்டிருந்தபோது இவரும், கணவருமாக மகானை தரிசிக்கச் சென்றிருந்தார். பெரியவாளை தரிசித்துவிட்டு இருவரும் தஞ்சாவூருக்கு செல்வதாக இருந்தனர்.

மறுநாள் சோமவார அமாவாசை, ஆகவே அரசமர பிரதட்சிணம் செய்ய தஞ்சாவூரில் இருக்க வேண்டுமென்பது அவர்கள் திட்டமாக இருந்தது.

ஸ்ரீ பெரியவா பக்தர்களை ஒவ்வொருவராய் ஆசீர்வதித்து பிரசாதம் கொடுத்தனுப்புவார். ஆனால் இவர்கள் இருவரும் சென்று நின்றபோது மட்டும் இவர்களின் பிரார்த்தனையை தன் திருச்செவியில் விழாததுபோல் இருந்துவிடுவார். இவர்கள் முறை வந்ததும் உள்ளே எழுந்து சென்றுவிடுவார். இப்படியே காத்திருந்து மறுபடியும் க்யூவில் போனபோதும் இவர்கள் முன்னாடிவரைக்கும் பிரசாதம் கொடுத்துவிட்டு இவர்கள் நெருங்கியதும் உள்ளே போய்விட்டார்.

அன்று முழுவதுமே ஸ்ரீ பெரியவா இவர்களை பார்க்கவோ, இவர்களின் பிரார்த்தனையை காதில் வாங்கவோ இடம் கொடுக்காததில் தம்பதியினருக்கு சற்றே ஏமாற்றம். இருந்தாலும் சாட்சாத் பரமேஸ்வரரின் இச்செய்கைக்கு ஏதோ அர்த்தம் இருக்கவேண்டும் என்ற நம்பிக்கையில் அங்கேயே அன்று இரவு தங்கும்படியாகிவிட்டது.

சோமவார பிரதட்சணத்திற்கு தஞ்சாவூர் போக முடியவில்லையே என்று லேசான கோபத்துடன் அந்த பக்தை அன்றிரவு தன் கணவரோடு திருவானைக்காவிலிலேயே தங்கிட நேர்ந்தது.

மறுநாள் காலை ஸ்ரீ பெரியவாளின் விஸ்வரூப தரிசனம் கிடைக்கப் பெற்றனர். ஸ்ரீ மகான் அதற்குப்பிறகு ஒரு மணி ஜபம் செய்வதற்காக மேனா எனும் பல்லக்கிற்குள் அமர்ந்தபடி “முக்கால் மணி நேரம் கழித்து, நான் ஜபம் செய்துக் கொண்டிருக்கும் போதே, மேனாவை கொள்ளிடக் கரைக்கு கொண்டு செல்ல ஏற்பாடு செய்யுங்கள்” என்று மடத்து காரியதரிசியிடம் உத்தரவிட்டுவிட்டு ஜபம் செய்ய மேனாவின் கதவை சாத்திக் கொண்டுவிட்டார்கள்.

ஜெயலட்சுமி அம்மாளுக்கு அரசமர பிரதட்சிணம் அன்று செய்யமுடியவில்லையே, ஸ்ரீ பெரியவாளையாவது பிரதட்சிணம் செய்யலாமென்று மனதில் தோன்றியது. அது போலவே ஜபம் செய்யும் யோகி அமர்ந்திருந்த மேனாவை வலம்வர தொடங்கினார். ஸ்ரீ பெரியவா சொல்லியிருந்த முக்கால் மணி நேரமும் பக்தைக்கு மேனா பெரியவாளை பிரதட்சிணம் செய்த பாக்யம் கிட்டியது.

பின்பு, ஸ்ரீ பெரியவாளோடு மேனா கொள்ளிட கரைக்கு கிளம்பிற்று. இவர்களும் உடன் சென்று கொள்ளிடத்திலேயே ஸ்நானம் செய்தனர்.

ஸ்ரீ பெரியவா அனுஷ்டானம் செய்ய உட்கார்ந்ததும் பக்தையை கூப்பிட்டார் “எவ்வளவு பிரதட்சிணம் செய்தாய்?” என்றார். ஜெயலட்சுமி அம்மாளுக்கு திகைப்பாகி போனது, நேற்று முழுவதும் தாங்கள் வந்ததையோ, சொல்வதையோ பொருட்படுத்தாமல் திருநாடகமாடிய தெய்வத்திற்கு, மேனாவை சுற்றி தாங்கள் பிரதட்சிணம் செய்தது மட்டும் எப்படி தெரிந்திருக்கிறது என்ற வியப்பு மேலிட்டது.

“தொண்ணூறு” என்று தான் பிரதட்சிணம் செய்த எண்ணிக்கையை ஸ்ரீ பெரியவாளிடம் கூறியபோது, பாக்கி பிரதட்சிணங்களையும் முடிக்கச் சொல்லி ஸ்ரீ பெரியவா உத்தரவிட்டருளினார்.

சாட்சாத் பரமேஸ்வரரே இப்படி உத்தரவிட்டதில் அந்த பெரும்பாக்யத்தை உணர்ந்து ஸ்ரீ பெரியவாளை மீண்டும் வலம்வந்து குறிப்பிட்ட எண்ணிக்கையை பூர்த்தி செய்தனர்.

பிரதட்சிணம் முடிந்ததும் ஜெயலட்சுமி அம்மாளை கூப்பிட்ட ஸ்ரீ பெரியவா “என்ன சுலோகம் சொல்லிக் கொண்டு பிரதட்சிணம் செஞ்சே” என்றார்.

அதற்கு இவர் “குரு பிரம்மா, குரு விஷ்ணு, குரு தேவோ மஹேஸ்வர:” என்று சொல்லிண்டே பிரதட்சிணம் செய்தேன்” என்றார்.

அப்போது ஸ்ரீ பெரியவா கேட்ட அடுத்த கேள்வியில் ஒரு பெரிய தெய்வ ரகசியம் வெளிபடுவதாய் அமைந்தது.

“அஸ்வத்த பிரதட்சணத்தின் போது என்ன சுலோகம் சொல்வாய்?” என்று ஸ்ரீ பெரியவா கேட்பாரென்று பக்தை சிறிதும் எதிர்பார்க்கவில்லை. தான் சோமவார அமாவாசை அரசமர பிரதட்சிணம் கிடைக்கவில்லையே என்று மனதிற்குள் ஆதங்கத்தோடு ஸ்ரீ பெரியவாளை பிரதட்சிணம் செய்து முடிந்திருக்க, அதை பற்றி அறிவேன் என்பதுபோன்று அரச மரத்தை சுற்றும் போது என்ன சுலோகம் சொல்வாய் என்றல்லவா ஸ்ரீ பெரியவா கேட்கிறார்? ஆச்சர்யமும், ஆனந்தமுமாக ஜெயலட்சுமி அம்மாள் பதில் சொன்னார்.

“அஸ்வத்த பிரதட்சிணத்தின் போது மூலதோ பிரம்மரூபாய, மத்யதோ விஷ்ணு ரூபிணே, அக்ரத: சிவ ரூபாய வ்ருக்ஷராஜாய தே நம; என்று சொல்லிண்டு சுத்துவேன்” என்று மகானிடம் கூறினாள்.

அப்போது ஸ்ரீ பெரியவாளின் திருவாக்கு இப்படி வெளிப்பட்டது.

“அந்த சுலோகத்திலும் த்ரிமுர்த்தி; இங்கேயும் அதுதானே” என்று ஸ்ரீ பெரியவாளெனும் மாபெரும் தெய்வம் சொன்ன மாத்திரத்திலேயே ஜெயலட்சுமி அம்மாளுக்கு மெய்சிலிர்த்தது.

தான் ஏங்கிய அரசமர பிரதட்சிணத்தில் பிரம்மா, விஷ்ணு, சிவன் என்ற மும்மூர்த்திகளும் அடக்கம் என்று அந்த சுலோகம் சொல்வதையே, சத்குருவாய் காட்சிதரும் பரப்பிரம்ம சொரூபமான ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ மஹா பெரியவாளெனும் மும்மூர்த்திக்கும் பொருந்தும் என்றல்லவா மகானின் திருவாக்கு மெய்பித்துவிட்டது.

“அங்கேயும் த்ரிமூர்த்தி இங்கேயும் அதுதானே” என்று தன் அபார கருணையால் தன்னையே சூட்சமமாக வெளிப்படுத்தியல்லவா இப்பெருந்தெய்வம் அனுக்ரஹித்துள்ளது.  இப்பேற்பட்ட பாக்யம் வேறு யாருக்கு கிட்டும்?

இந்த மாபெரும் தெய்வ ரகசியத்தை உணர்ந்துவிட்ட பாக்யசாலியாய் இந்த பக்தை அதற்குப்பிறகு சோமவார அமாவாசையன்று ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ பெரியவாளை மட்டுமே பிரதட்சிணம் செய்வதென்று நியமம் மேற்கொண்டுவிட்டதாக ஆனந்திக்கிறார்.

இனிமே எல்லாம் வெளிச்சம்தான்

ஸ்ரீ வேங்கடாசலம் என்ற வைணவ அன்பருக்கு சங்கரரான ஸ்ரீ பெரியவா அவர் வணங்கும் சக்ரபாணியாக காட்சியருளியுள்ளார்.

ஒரு முறை வேங்கடாசலம் திருவையாவூர் ஏழுமலையான் கோயிலில் சிரவணதீப தரிசனம் செய்துவிட்டு ஸ்ரீ பெரியவாளை தரிசிக்க அந்த மாலை சென்றார். அச்சமயம் ஸ்ரீ பெரியவா சற்று ஓய்வாக இருந்த நேரம்.

இவர் போய் தரிசிக்க நின்றபோது “நீ எங்கிருந்து வரே” என்று பெரியவா கேட்டார்.

“திருவையாவூர் ஏழுமலையான் கோயிலில் சிரவண தீபம். அங்கேர்ந்து வரேன்” என்றார் இவர். இப்படி சொன்ன பக்தரை ஸ்ரீ பெரியவா ஏனோ ஊடுருவுவதைப் போல் நோக்கினார். வேங்கடாசலத்துக்கு ஏதோ மனதிற்குள் உறுத்தியது. அப்படியே கரைந்து போவது போலானார். பேச முயன்றார். நா எழவில்லை, நெஞ்சு தழுதழுத்தது.

குற்ற உணர்வோடு ஸ்ரீ பெரியவாளிடம் முறையிட்டார் “எங்க குடும்பத்திலே ரொம்ப நாளா சிரவண தீபம், பூஜை, சந்தர்ப்பனை எல்லாம் நடந்தது. ஆனா இப்போ குடும்பத்திலே எல்லாரும் பிரிஞ்சு போயிட்டதாலே நடத்த முடியலே. மனசுக்கு கஷ்டமா இருக்கு…குத்தம் செய்யறாமாதிரி இருக்கு…ஆத்திலே இதனாலே வெளிச்சம் இல்லாம போயிட்டாப்போல இருக்கு” என்றார்.

ஸ்ரீ பெரியவாளெனும் தெய்வமே தன்னை தன் தீர்க்கமான பார்வையால் உள்ளேயிருந்த உணர்வை வெளியே கொட்ட செய்தது போல இவருக்கு தோன்றியது.

உடனே ஸ்ரீ பெரியவாளெனும் தாயன்பரின் ஆறுதல் கிடைத்தது. ஸ்ரீ பெரியவா அங்கிருந்த சிஷ்யரை கூப்பிட்டு எதோ சொல்ல, அவர் உள்ளே சென்று சற்று நேரத்தில் பெரிய அகல்விளக்கில் நெய் ஊற்றி, திரி போட்டு ஏற்றிக் கொண்டு வந்து ஸ்ரீ பெரியவாளின் எதிரில் வைத்தார்.

ஸ்ரீ பெரியவா எழுந்து கையில் தண்டத்தை ஏந்தி அந்த விளக்கை வலம் வந்தார். பின் விளக்கினை மகான் வணங்கினார்.

வேங்கடாசலம் திகைத்துநிற்க, ஸ்ரீ பெரியவா இவரை பார்த்து “சேவிச்சுக்கோ…சிரவண தீபம் போட்டாச்சு! இனிமே எல்லாம் வெளிச்சம்தான்” என்று அருளமுதமாக பொழிந்தார்.

வேங்கடாசலத்தால் உணர்ச்சியை கட்டுப்படுத்த இயலாமல் போனது. கண்களில் நீர் பெருக ஸ்ரீ பெரியவா காட்டிய சிரவணதீபத்தை வணங்கி நிமிர்ந்தார்.

அப்போது வேங்கடாசலத்திற்கு ஸ்ரீ பெரியவள், சங்கரராக தெரியவில்லை.

“அங்கே சங்கரரை காணவில்லை சக்ரபாணியை தரிசித்தேன்” என்கிறார் அந்த பக்தர். அசிரத்தை காரணமாக ஆசார அனுஷ்டானங்களை விட்டுவிடக் கூடாது…தன்னால் முயன்ற அளவில் கட்டாயம் கடைபிடித்து செய்யவேண்டுமென்ற பெரிய அறிவுரையை ஸ்ரீ பெரியவா தனக்கருளிய அதே சமயம், தானே ஏழுமலையான், தானே சக்ரபாணி என்பதையும் மிக எளிமையாக ஆணித்தரமாக காட்டிவிட்டதாக வேங்கடாசலம் அனுபவித்து மகிழ்கிறார்.

இப்படி எல்லாமுமாகிய பெருந்தெய்வம், மகா எளிமையோடு நமக்கெல்லாம் அருளிய ஸ்ரீ பெரியவாளெனும் தூய உருவில் காத்திருக்க, நாம் கொள்ளும் பூர்ண பக்தி நமக்கெல்லாம் அந்த பேரனுக்கிரஹத்தால் சகல ஐஸ்வர்யங்களும், சகல மங்களத்துடன் நல்வாழ்வும் அருளும் என்பது சத்தியமல்லவா!

– கருணை தொடர்ந்து பெருகும் (பாடுவர் பசிதீர்ப்பாய் பரவுவார் பிணிகளைவாய் – சுந்தரமூர்த்தி சுவாமி தேவாரம்)

_________________________________________________________________________________

Translation

Vaayinaal unnai paravidum adiyen Paduthuyar kalaivaai paashupathaa paranchudare!

Sri Sri Sri Maha Periyava Mahimai! (28-02-2008)

“Trimurthi there and same here too”

Sakshat Parameshwara Himself incarnated as Sri Sri Sri Maha Periyava, who has all the greatness as Sri Sukha Brahmarishi, is showering His blessings to all of us.

Even though Sri Periyava was trying to hide his supernatural qualities by acting like a normal sanyasi, there were instances where some of the devotees experienced the true identity of Sri Periyava.

Pollachi Jayalakshmi Ammal explains an experience where she saw the true identity of Sri Periyava. Once when Sri Periyava was camping in Tiruvanaikoil, she along with her husband went for darshan. They had planned to go to Thanjavur after having Sri Periyava’s darshan.

Since the next day was Somavara (Monday) Amavasya, they had decided to do be in Thanjavur for doing circumambulation (pradakshinam) to Peepal tree.

Sri Periyava kept blessing everyone and gave them prasadam. But, when Jayalakshmi Ammal and her husband’s turn came, Sri Periyava would act as if He did not listen to their prayers and also walk inside without responding. This happened again and again just when their turn came in the queue. They were disappointed that Sri Periyava did not listen to their prayers or bless them. But, they realized that this act of Sakshat Parameshwara must have some significance and stayed there that night. Even though Jayalakshmi Ammal was upset that she was unable to go to Thanjavur for Somavara pradakshinam, she still stayed there in Tiruvanaikoil along with her husband.

Next day morning, they both had Viswaroopa darshan. Then, Sri Periyava went inside his mena (palanquin) to do 1 hour japam. After getting inside, he instructed Sri Matam manager, “After 45 minutes, while I am doing my japam, make arrangements to take this mena to Kollidam river bank” and closed the doors.

Jayalakshmi Ammal thought of doing pradakshinam to Sri Periyava as she was unable to do pradakshinam for Peepal tree on that day. So, she started doing pradakshinam to the mena where Sri Periyava was doing His japam. She had the fortune of doing pradakshinam for those 45 minutes before they took the mena to river bank.

Then, Sri Periyava’s mena reached the river bank. They also walked along with them and took bath in the river. After Sri Periyava sat for His anushtanam, called Jayalakshmi Ammal and asked, “How many pradakshinams did you do?” She was stunned to hear that question as Sri Periyava did not listen to their prayers yesterday and also was surprised on how come Sri Periyava knew that she did pradakshinam.

When she replied, “Ninety”, Sri Periyava instructed her to complete the remaining pradakshinams. As Sakshat Parameshwara Himself ordered that way, she happily completed the remaining count by circumambulating Sri Periyava.

After she completed, Sri Periyava asked, “Which slokam were you chanting while you did pradakshinam?” She replied, “Did pradakshinam by chanting, “Guru Brahma, Guru Vishnu, Guru Devo Maheshwara:”

With Sri Periyava’s next question, it was evident that a great spiritual secret is getting unveiled. She did not expect that Sri Periyava would ask her “While doing Aswaththa pradakshinam, which slokam would you chant?” When she was feeling worried that she was unable to do pradakshinam to Peepal tree, as if Sri Periyava knew what she was thinking, this question surprised her. With astonishment, she responded to Mahan, “While doing aswaththa pradakshinam, would circumambulate by chanting “Moolatho Brahma roopaaya, Madhyatho Vishnu roopine, agratha: Shiva roopaya Vruksharaajaaya the nama:”

Then, when Sri Periyava started saying, “In that sloka also Trimurthi; and the same here too”, Jayalakshmi Ammal got goose bumps. Sri Periyava’s words indeed proved that Trimurtis Brahma, Vishnu and Shiva who were present in the Peepal tree (as that sloka explained) is applicable to Sadguru Sri Sri Sri Maha Periyava, paramabrahma swaroopam.

“Trimurthi there and same here too” by saying so, Sri Periyava blessed her by revealing His identity, a divine secret. After realizing this secret, she happily explains that she made it a practice to only do pradakshinam to Sri Periyava during every Somavara Amavasya, from then on.

“From now on, everything would be good”

For Sri Venkatachalam, a vaishnavite devotee, Sri Periyava gave darshan as Chakrapani. Once, Sri Venkatachalam, after having darshan of Sravana Deeapam at Ezhumalaiyaan Temple in Tiruvaiyaavoor, came for Sri Periyava’s darshan that evening. Sri Periyava was taking rest at that time.

When he went and stood before Sri Periyava for darshan, Sri Periyava asked, “Where are you coming from?”

He responded, “There was Sravana Deepam at Tiruvaiyaavoor Ezhumalaiyaan Temple. I am coming from there.” After he replied, Sri Periyava looked with His penetrating eyes. Sri Venkatachalam felt something is happening within him. He tried to talk but he was unable to continue talking.

With guilt, he pleaded to Sri Periyava, “In our family, we used to do Sravana Deepam, Pooja and Sandharpanai. Since we all got separated, we are unable to continue that. I feel very bad and also feel that we are committing a sin. Because of this, there is no light (happiness) in our life”. After that, he felt that Sri Periyava with His penetrating looks made him confess everything on that day.

Immediately, Sri Periyava called one of His assistants and within minutes, the assistant came with a big lamp, ghee and wick in it and kept it in front of Sri Periyava. Then, Sri Periyava took his dandam in His hand, circumambulated that lamp and prayed there.

When Sri Venkatachalam stood there with surprise, Sri Periyava told him, “Sravana Deepam is done…prostrate…everything will be good from now” and showered His blessings. Sri Venkatachalam was unable to control his emotions; he stood there with tears of joy praying Sri Periyava who showed him Sravana Deepam. At that time, Sri Periyava was not visible as Sankarar to Sri Venkatachalam.

“I did not see Sankarar there; saw Chakrapani” told Sri Venkatachalam. Along with guiding Sri Venkatachalam that he should not discontinue his religious practices at any cost, Sri Periyava also showed him that He is none other than Ezhumalaiyaan; He is none other than Chakrapani.

When Sri Periyava is waiting to shower His blessings on us, isn’t it true that with our true bhakti to Sri Periyava, we would all prosperity, wealth and good life by His grace!!

  • Grace will continue to flow.

(paaduvar pasi theerppai paravuvaar pinikalaivaai) Sundaramoorthy Swami Thevaram

 

feb-2008-1 feb-2008-2

feb-2008-3

 

feb-2008-4



Categories: Devotee Experiences

Tags:

3 replies

  1. ஸ்ரீ பெரியவா சரணம் Sri Periyava Saranam

  2. Maha Periyava paatham saranam

  3. Sath Guruvey Saranam Saranam. Pahi Pahi. Janakiraman. Nagapattinam.

Leave a Reply to MahesCancel reply

Discover more from Sage of Kanchi

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading