I got this from Vignesh’s studio’s website long back but never posted here. This poem is also can be seen by adishtanam in a cut-out. I know they wrote it for their website. Not sure who wrote this – but a simple and powerful one.
Categories: Devotee Experiences
நினைவில் உன்னையே பூஜிக்க வேண்டும்
அறிவை உன்னை சுற்றி வளர்க்க வேண்டும்
பார்வைகள் உன்னை எங்கெங்கும் காண வேண்டும்
உயிர் மூச்சாக உன்னையே சுவாசிக்க வேண்டும்
வார்த்தைகள் உன்னையே போற்ற வேண்டும்
சர்வ ஸ்வரங்களில் உன்னை ரசிக்க வேண்டும்
பக்தியில் உன் சர்வத்தை அறிய வேண்டும்
அன்பின் உச்சியில் உன்னை உணர வேண்டும்
உன் சேவை பசியில் மனம் துடிக்க வேண்டும்
அதற்க்காகவே பல முறை பிறக்க வேண்டும்
ஒவ்வொரு நடை உன்னுடனேயே நடக்க வேண்டும்
உன் பாதையில் எப்பொழுதும் செல்ல வேண்டும்
உச்சியிலிருந்து உள்ளம் வரை உனக்கே அர்ப்பணம்
சர்வமய சம்பூரண சமர்ப்பணம்